சுற்றிவரும் பூமியில் சுற்றுலாக்கள் மனதிற்கு புத்துணர்ச்சியும், புதிய சிந்தனையையும், சீண்டிச் செல்லும் உணர்வை. பார்த்து ரசிக்க வேண்டும் .
சுற்றுலாவை மேம்படுத்த வேண்டிய நம்நாட்டில். யுத்தம் மேம்படுத்தும் இனவாதிகள் நாட்டை செழுமை ஆக்குவதைவிட சிறுமையாக்கும் கொடுமையை புத்தன் பெயரால் செய்வது தான் ஆட்சியில் இருபோர் கையாளும் தந்திரம்
.புத்தனுக்கும் பலநாடு இருக்கு முதன்மையான மதம் சார்ந்த பட்டியலில். அப்படியான நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று
."தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் 10 நூற்றாண்டில் இருந்து மதத்தொடர்பு இருக்கு என்று லங்கா ராணியில் அருளர் சொல்வார் வரலாற்றை"
.
தாய்லாந்து தேசம் ஒரு இயற்கையின் கொடையை நன்கு கைவரப்பெற்ற மக்களைப் பெற்ற மகராசி. மலைகள் ,கடல்,விவசாய நிலம் என எப்போதும் நினைத்தாலே ஒரு சுகம் .
இந்த நாட்டுக்காலநிலை இதம்தரும். இயற்கையான இடத்தை கொண்ட இந்த நாட்டை ஊடகம் அதிகம் விபச்சாரப் பக்கம் அதிகம் பிரபல்யம் ஆக்குவது வேதனையானது.
இதனை பதிவுலகில் ஒரு சகபதிவாளிகூட பதிவு செய்து இருக்கின்றா.
அன்று சேகர் எங்களை அழைத்துச் சென்றது. ஹாட்சாய் என்ற நகருக்கு !
மதியம் என்றால் தாய்லாந்து சாப்பாடு வெள்ளைச் சோறும் அரைப்பதத்தில் எண்ணெய்யில் பிரட்டின முட்டை கூடவே கெக்கரிக்காய் சேர்த்து கோழிக்கறி என சாப்பிட்ட போது .உணரவில்லை இனி வரும் நாட்கள் சோறு நம் தேசத்தைப்போல சுவையாக கிடைக்காமல் போகும் என்று.
வந்து போகும் இந்த உலகில் கூடவந்தவர்கள், இடையில் சேர்ந்தவர்கள் இறுதியில் உதறிவிட்டுப்போவதும், உடன் வருவதும் உண்மையான பக்குவத்தைக் கொடுக்கும் பலருக்கு படிப்பினையாக அப்படித்தான் சேகர்.
ரயிலில் பயணத்தில் வரும் சகபயணிபோல தன் தரிப்பிடம் வந்ததும் இறக்கிச் செல்லும் வழிகாட்டி வேலையை முடித்துவிட்டு சேகர் அண்ணா போய் விட்டார் ஹாட்சாயில் இருந்து. அதன் பின் வந்தவர் கடிதங்கள் வினியோகிக்க பிரிப்பது போல எங்களை நட்சத்திரவிடுதியில் மூன்று அறையில் பிரித்துவிட்டார்கள் .புதிதாக பதவிக்கு வந்த ஜனாதிபதி போல பலபலப்பில் இருந்த மலேசிய நாட்டு ஓட்டியான குமார். எல்லாரும் தமிழ் பேசினாலும் ஒவ்வொரு இடமும் தனித்துவம் இருக்கு பேச்சு வழக்கில். யாழ் தமிழ்,மலையகத்தமிழ்,கிழக்குமாகாண த்தமிழ் கொழும்புத் தமிழ்,நீர்கொழும்புத் தமிழ் என பல இருக்கும் நாட்டில் மலேசியத்தமிழ் இன்னொரு வகை . மலாய்மொழியும் கலந்து வரும் தமிழ் அதனைப் பேசும் குமார் அண்ணாவை மறக்க முடியாது நாம். வாழ்க்கையில் சிலரை வழிப்பாதையில் மறக்க முடியாத முகங்களை கடவுள் அனுப்பி வைப்பார் உறவு கடந்து என்பது நிஜம் என்று ஆன்மீகம் நம்ப வைத்தநிலையும் இந்த குமார் வடிவத்தில் தான்.. ஹாட்சாயில் பகல்பொழுதைக்கழித்த பின் மாலைப்பொழுதில் இன்னொரு சிறிய வாகனத்தில் நம் ஊர் தட்டிவன் போல போன இடம் தான்! சாங்கலா(sangkhla) தொடரும் பயணம் உருகிய வண்ணம்!!!!!!!! .