Showing posts with label உருகும் பிரெஞ்சுக்காதலி. Show all posts
Showing posts with label உருகும் பிரெஞ்சுக்காதலி. Show all posts

04 September 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -12

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும் வெளியில் இருப்போரிடம் தொட்டலங்கா என்றால் கிராண்டபாஸ் பக்கம் ஒரு எண்ணம் மனதில் வரும். திருட்டும் விழிநிலை மக்களும் எல்லா சமுகச் சிக்கலும் சங்கமிக்கும் களனி ஆற்றின் மறுகரை (கறை). அதே போல வனத்தமுல்ல முல்லேரியா கொலன்னாவ என்று ஒவ்வொரு பக்கமும் கொழும்பு வாசிகள் ஆயிரம் கதை சொல்வார்கள் மக்கள் குழுவைப்பற்றி. அப்படித்தான் சாங்கலா கிராமம் ஒரு தூங்கா நகரம், மாலையில் தட்டிவான் சுமந்து சென்றது ஒரு நட்சத்திர விடுதிக்கு.

சாங்கலா கிராமம் மலேசியாவின் நூழைவாசலுக்கு அண்மையில் தாய்லாந்தின் எல்லையின் இறுதி முடிவு. பகலில் தூங்கும் இந்த நகரம் இரவில் இந்திரலோகம். கை வலி கால் வலிக்கு பிடிப்பு வைத்தியம் பார்க்கும் தாய்லாந்து வாசிகள் (massage) ஆட்டமா, தேரோட்டமா என்று இளமையில் ஆடிமகிழ களியாட்ட விடுதிகள் (dico). கிண்ணத்தில் தேன் சுமந்து தண்ணீர்த்தொட்டி தேடிவந்த கண்ணூக்குட்டி. சோமபானம் பருகியவன் பாடல் சுவை சேர்க்க விரும்பினால் இசைமீட்டலாம். சங்கீத குயிலோடு சேர்ந்து பாடும் இசைக்கலவை நிலையம் (karoki), காமம் என்பதுக்கும் மோகம் என்பதுக்கும் தேகம் றொம்ப முக்கியம் என்ற வைரமுத்து பாடல்போல என்னைத் தருவேன் உன்னிடம் விரும்பியது போல தாய்லாந்து நாணயம் கொடுத்தால் கட்டில் சுகம் தரும் நங்கைக்கள் என வீதி எங்கும் மடைபரப்பிய விடுதிகள்.




அரச அனுமதி இருக்கின்றது இந்த நாட்டில் என்பதே புதுமையான விடயம். இதுவரை தெரியவில்லை, இலங்கையில் இருக்கும் போது உலக அறிவு இப்படிச் சிலருக்கு எங்களோடு வந்தவர்களுக்கு. வார இறுதியில் அயல்நாட்டில் இருந்து வந்து அகம் மகிழும் அயல்நாட்டுவாசிகள் அதிகம் இருக்கும். இந்த ஊரில் குமாரின் வரவுக்கு காத்திருந்த ராஜா ஓட்டி எங்களை தனித்தனித்தீவாக பிரிக்கும் வேலையில் காத்திருந்தான். 
இனியும் பயணம் தொடரும் என்ற போது 18 பேரில் 10 பேருடன் குமார் மலேசிய போக தயாரன போது இது வரை சேர்ந்து வந்த ஜீவனையும் என்னையும் இருதுருவங்கள் ஆக்கிவிட்டார்கள்.

“மச்சான் என்னையும் கூட்டிப்போறார் குமார், எப்படியாவது போய்ச்சேர்ந்து விடுவம். நீ கலைப்படாத இங்க உன்னைப்பிரிய கவலையாக இருக்கு. ஒண்டா வேலையில் சேர்ந்து இருந்தோம் அதன் பரிசு 2 வருட சிறை வாழ்வு இந்த நகரம் வரை கூட வந்த நட்பு இடையில் போகுது என்றா? ”

வாழ்க்கையில் ஓடும் நதி போல இருக்கணும் நட்பு. வருவதும் போவதும் ஒரு கப்பல் போல கப்பல் தரைதட்டும் வரை தான் பயணிகள். அதன் பின் கப்பல் ஒரு காவிமட்டும்தான் கவலையைவிட்டு நீ போ, இடையில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் நாட்டுக்கு போ சேகர் அண்ணா போல ஒழிந்து இருக்காத, உன்னை நம்பி வீட்டில் பொறுப்பு இருக்கு இந்தா குறிப்பில் இனி நீ தான் பயணம் அனுபவத்தைச் சொல்ல வேண்டும். உனக்கு பைத்தியம் ராகுல் போல எழுதிக்கொண்டு எலி தான் போகக்காணவில்லை விளக்குமாற்றைக் காவிக்கொண்டு போனதாம். 

ம்ம் போகும் வழியில் நீ பார்த்த காட்சிகள் மற்றவர்களுக்கு அனுபவமாக இருக்கும் ஜீவன். சந்தர்ப்பம் வரும் போது எழுதினால் பிற்காலத்தில் உனக்கு என்ன தெரியும் என்று யாராவது கேட்டால்! பதில் இதில் இருக்கு என்று சொல்ல முடியும் மச்சான். நீ எழுதிவை ராகுலிடம் கொடுத்தால் அவன் இன்னும் கற்பனை சேர்த்து கதையாக்குவான். போடா அவன் இப்ப அறிவிப்பில் சேர்ந்து இருப்பான் இனி எழுதுவது சாத்தியம் இல்லை சாலிக்காவை கரைச்சல் கொடுத்து சகோதர மொழியில் எல்லைக் கிராமக் கதை எழுதிக்கொண்டு போய் எரிக்கரையில் அவமானப்பட்டது மறந்து போச்சோ உனக்கு ரவி. 


முகம் முக்கியம் இல்லை, கருத்து முக்கியம் என்றால் யாராவது அவனுக்கு உதவுவார்கள் கவலயைவிடு ஜீவன். இப்ப அவன் தேர்வில் தேறி அறிவிப்பில் சேர்ந்து இருப்பான் என நானும் நம்புகின்றேன். நானும் தான் அவன் கனவு இலட்சியம் அதுதானே விற்பனைப் பிரதிநிதி எல்லாம் இரண்டாம் பட்சம் என்றுதானே வானொலி நிலையத்தோடு சுற்றிக்கொண்டு இருந்தான்! ம்ம் நண்பன் நல்லா இருந்தால் சந்தோஸம் தானே மச்சான். 

ஓம் ஓம் அன்று இரவு ஜீவனும் போய்விட்டான் மலேசியாவுக்கு. குமாரோடு நாங்கள் 8 பேர் எங்களில் நாமல் இன்னும் இருவர் அவர்களும் யாழ்வாசிகள். 4 பேர் ஒரு அறையிலும் இன்னும் ஒரு அறையில் 4 பேரும் ஆக 8 பேருக்கும் காவல் இருந்தார் ராஜா! அறையில் தொலைக்காட்சி இருக்கு படம் பார்க்கலாம் யாரும் வெளியில் போகக்கூடாது. உங்க கடவுச் சீட்டு எல்லாம் என்னிடம் தாங்க உங்களை மலேசியாவுக்கு கூட்டிக்கொண்டு போக ஏற்பாடு செய்யணும் வாங்கிக்கொண்டு போன ராஜா எங்களுக்கும் சாப்பாடு வாங்கிக்கொண்டு வந்தான்.

ராஜா ஒரு சபலப் பேர்வழி. அவனோடு சேர்ந்து கொண்டான். நாமல்! தொடரும்.....

01 September 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -11

சுற்றிவரும் பூமியில் சுற்றுலாக்கள் மனதிற்கு புத்துணர்ச்சியும், புதிய சிந்தனையையும், சீண்டிச் செல்லும் உணர்வை. பார்த்து ரசிக்க வேண்டும் .

சுற்றுலாவை மேம்படுத்த வேண்டிய நம்நாட்டில். யுத்தம் மேம்படுத்தும் இனவாதிகள் நாட்டை செழுமை ஆக்குவதைவிட சிறுமையாக்கும் கொடுமையை புத்தன் பெயரால் செய்வது தான் ஆட்சியில் இருபோர் கையாளும் தந்திரம்


.புத்தனுக்கும் பலநாடு இருக்கு முதன்மையான மதம் சார்ந்த பட்டியலில். அப்படியான நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று

."தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் 10 நூற்றாண்டில் இருந்து மதத்தொடர்பு இருக்கு என்று லங்கா ராணியில் அருளர் சொல்வார் வரலாற்றை"

.
தாய்லாந்து தேசம் ஒரு இயற்கையின் கொடையை நன்கு கைவரப்பெற்ற மக்களைப் பெற்ற மகராசி. மலைகள் ,கடல்,விவசாய நிலம் என எப்போதும் நினைத்தாலே ஒரு சுகம் .

இந்த நாட்டுக்காலநிலை இதம்தரும். இயற்கையான இடத்தை கொண்ட இந்த நாட்டை ஊடகம் அதிகம் விபச்சாரப் பக்கம் அதிகம் பிரபல்யம் ஆக்குவது வேதனையானது.
இதனை பதிவுலகில் ஒரு சகபதிவாளிகூட பதிவு செய்து இருக்கின்றா.

அன்று சேகர் எங்களை அழைத்துச் சென்றது. ஹாட்சாய் என்ற நகருக்கு !

மதியம் என்றால் தாய்லாந்து சாப்பாடு வெள்ளைச் சோறும் அரைப்பதத்தில் எண்ணெய்யில் பிரட்டின முட்டை கூடவே கெக்கரிக்காய் சேர்த்து கோழிக்கறி என சாப்பிட்ட போது .உணரவில்லை இனி வரும் நாட்கள் சோறு நம் தேசத்தைப்போல சுவையாக கிடைக்காமல் போகும் என்று.

வந்து போகும் இந்த உலகில் கூடவந்தவர்கள், இடையில் சேர்ந்தவர்கள் இறுதியில் உதறிவிட்டுப்போவதும், உடன் வருவதும் உண்மையான பக்குவத்தைக் கொடுக்கும் பலருக்கு படிப்பினையாக அப்படித்தான் சேகர்.

ரயிலில் பயணத்தில் வரும் சகபயணிபோல தன் தரிப்பிடம் வந்ததும் இறக்கிச் செல்லும் வழிகாட்டி வேலையை முடித்துவிட்டு சேகர் அண்ணா போய் விட்டார் ஹாட்சாயில் இருந்து. அதன் பின் வந்தவர் கடிதங்கள் வினியோகிக்க பிரிப்பது போல எங்களை நட்சத்திரவிடுதியில் மூன்று அறையில் பிரித்துவிட்டார்கள் .புதிதாக பதவிக்கு வந்த ஜனாதிபதி போல பலபலப்பில் இருந்த மலேசிய நாட்டு ஓட்டியான குமார். எல்லாரும் தமிழ் பேசினாலும் ஒவ்வொரு இடமும் தனித்துவம் இருக்கு பேச்சு வழக்கில். யாழ் தமிழ்,மலையகத்தமிழ்,கிழக்குமாகாண த்தமிழ் கொழும்புத் தமிழ்,நீர்கொழும்புத் தமிழ் என பல இருக்கும் நாட்டில் மலேசியத்தமிழ் இன்னொரு வகை . மலாய்மொழியும் கலந்து வரும் தமிழ் அதனைப் பேசும் குமார் அண்ணாவை மறக்க முடியாது நாம். வாழ்க்கையில் சிலரை வழிப்பாதையில் மறக்க முடியாத முகங்களை கடவுள் அனுப்பி வைப்பார் உறவு கடந்து என்பது நிஜம் என்று ஆன்மீகம் நம்ப வைத்தநிலையும் இந்த குமார் வடிவத்தில் தான்..
ஹாட்சாயில் பகல்பொழுதைக்கழித்த பின் மாலைப்பொழுதில் இன்னொரு சிறிய வாகனத்தில் நம் ஊர் தட்டிவன் போல  போன இடம் தான்! சாங்கலா(sangkhla)  தொடரும் பயணம் உருகிய வண்ணம்!!!!!!!! .

30 August 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -10

தூதுக்குழு அனுப்புகின்றோம்,விசாரணை செய்கின்றோம்,ஆராய்கின்றோம் என்று அறிக்கை சமர்ப்பிக்கும் அடுத்த கட்சியில் இருந்து வந்தவரும் !

உண்ணாவிரதம் இருக்கின்றேன் என்று உலகிற்கு படம் காட்டும் தலைவர்.அவரினதும் ,அவர் குடும்பத்து தொலைக்காட்சியும் காட்டாத கதைகள் பல இருக்கு ஈழத்தவன் வாழ்வில் நிஜமுகம் காட்ட.

அது எல்லாம் நித்தியானந்தா போல வசூல் ஆகாது .

அதுதான் அகதிகள் கப்பல் உண்ணாவிரதம் எல்லாம் காட்சிப்படுத்த மாட்டார்கள் .தமிழர்களுக்கு.

அகதி என்றால் ?அ--உயிர்!

கதி என்றால் _நிற்கதி =உயிர் நிற்கதி என்று எங்கோ படித்த ஞாபகம் .

நித்தியானந்தா ஆச்சிரமத்தில் இல்லை.

இது எல்லாம் வியாபார உலகம் என்று ஒத்து ஊதுவோருக்கு உண்மை தெரிய வேண்டும் .

ஈழத்தவன் வரலாறு இனியும் இருட்டடைப்பு செய்யும் காலம் இல்லை .நவீன இலத்திரணியல் பரவிக்கிடக்கும் பூமி.

நித்தியானந்தாவை ஆபாசமாக நள்ளிரவில் காட்சிப்படுத்த முடியும் என்றால்.

ஏன் தாய்லாந்து என்றால் முகம் சுழிக்க வேண்டும் ?

சேகரும் தாய்லாந்து வாசி மங்கையுடன் தான் சல்லாபிக்கவில்லை சம்சாரியாக வாழ்கின்றான்.

அன்று என்னோடு பேச்சுக்கொடுத்தான்.

ரவி வெளிநாட்டுக்கு வெளிக்கிட்டன் .ஊரில் எப்படி கடவுச்சீட்டு எடுப்பது என்றே கொழும்பு வந்த பின் தான் தெரியும். அந்தளவுக்கு எங்கள் நாட்டுக்கல்வித்திட்டம் தெளிவான விடயங்கள் இல்லாத அரசகருமங்கள். காசு கொடுத்து பாஸ்போட் எடுத்து தாய்லாந்துக்கு உல்லாசவிசாவில் வந்தேன்.!

ஓட்டியாக வந்தவன் என் பையில் ஓட்டி வைத்த பொருட்கள் எனக்குத் தெரியாது.

நானும் வெளிநாட்டு ஆசையில் உயிர் தப்பினால் போதும் என்று வந்துவிட்டேன் .உள்ளே இறங்கிய பின் தான் தெரிஞ்சது என் பையில் போதைப்பொருள் வைத்தவிடயம்.

பிறகு என்ன தாய்லாந்து சிறைவாழ்க்கை என்னையும் ,இவனையும் (சுவா)சேர்த்துவிட்டது.

அண்ணவைப் பார்க்க வந்த இவன் (சுவா ) தங்கை தாய்லாந்துவாசி .இரக்கப்பட்டாள் என் மீது.

இப்ப ஒரு மகன் எங்களுக்கு.

இந்த ஓட்டி வேலையும் ஒரு வியாபாரம் தான் .தாய்லாந்து மொழி தெரிந்தால் அதிகம் சம்பாதிக்க முடியும்.

காசு கொடுத்தால் சிறையில் இருந்து கூட சில்மிசம் செய்ய்யலாம் .

இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கொண்டு போன போது. சுவா காசு கொடுத்து என்னை இங்கேயே தங்கவைத்துவிட்டான்.

இங்க காசு வீசி எறிந்தால் தருணம் பார்த்து தப்பிவிடலாம்.

என்றாலும் எனக்கு உயிர்பாதுகாப்புக் கொடுத்த நாடு தாய்லாந்து. அதுதான் !நான் இங்கேயே செட்டில் ஆகிவிட்டேன்.


என்னைப் பார்த்தவிடயம் யாரிடமும் சொல்ல வேண்டாம் ரவி.

நிச்சயம் சொல்லமாட்டன் சேகர் அண்ணா.

இப்ப நாங்கள் எங்க போறம் ?எப்ப போய்ச்சேருவம் ஐரோப்பா?

எனக்கு வேலை உங்களை எல்லாம் ஹாட்சாயில் சேர்ப்பது மட்டும் தான் .

அதன் பிறகு மற்ற ஓட்டிபொறுப்பு .

ஓ அப்படியா?

ஹாட்சாய் எங்க இருக்கு ?hat-yai

அது மலேசியாவுக்கு அருகில் இருக்கும் நகரம் .

இரண்டு நாட்டுக்கும் இடையில் எல்லைப்பாதைக்கு அன்மித்த நகரம்.

அப்ப இனி நீங்க கூட வரமாட்டீங்களா ?

இல்லை உனக்கு மட்டும் என் கைபேசி எண் தருகின்றேன் .ஏதாவது அவசரம் என்றால். கதை .

எப்ப போய்ச் சேருவோம் ?

நாளை மாலையில் ஹாட்சாயில் இருப்போம் .

பஸ் தொடர்ந்து ஓடும் ஜோசிக்கத் தேவையில்லை ரவி.

நித்திரை வந்தால் நித்திரைகொள்.

இல்லை சேகர் அண்ணா .

இப்ப எல்லாம் நித்திரை நேரம் கெட்டுப்போச்சு .

ஏன் ?

அது எல்லாம் விதி இரண்டு வருட இருட்டறை வாழ்க்கையில் நித்திரை சிதறிப்போச்சு !
ம்ம் எனக்கும் ,ஜீவனுக்கும் .

!ம்ம் எங்க நாட்டில் யுத்தம் வந்தபின் எத்தனைகதைகள் பலரின் வாழ்வில்.


நடக்கும் விதியின் வழியில் போவோம்.

அதுவும் சரிதான் சேகர் அண்ணா.

நான் நித்திரை கொள்ளமாட்டன் முன்னால் மச்சான் கூட கதைக்கப்போறன் .சரி அண்ணா.

இரவின் ஒளியில் தாய்லாந்து வீதிகள் மனதில் சூரியன் வானொலியில் நேற்றைய காற்று நிகழ்ச்சி போல சுகம் தரும்.

டேய் ஜீவன் நித்திரை பிறகும் கொள்ளமுடியும்.

இந்த வீதிகளைப்பாருடா !

யாழ்ப்பாணத்தில் இப்படி இருந்தால் ,வவுனியாவில் இருந்தால் ,எப்படி இருக்கும் வேலை செய்ய .

கிரவல் ரோட்டில் ஓடியே முதுகுவலி வந்துவிடும் அவஸ்த்தை .

டேய் நித்திரைகொள்பவனை எழுப்பி ஏண்டா உயிர் வாங்குகின்றாய் ?

இனவாதம் இருக்கும் வரை ரோட்டும் போடமாட்டாங்க ,மனுசர்களை நிம்மதியா இருக்கவும் விடமாட்டாங்க .

விசர் கனவு காணாமல் இப்படியே பார்த்து ஏக்கம் கொண்டு இரு.

எனக்கு எதுவும் தேவையில்லை இப்ப நித்திரை கொள்ளவிடு

.சரி நீ படு நான் இந்த வீதிகளில் சாலிக்காவோடு கனவில் டூயட் பாடப்போறன்!
தொடரும்.

27 August 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -09

அகதிகளுக்கான உயர்ஸ்தானிகள் ஆலயம்,அகதிகள் புணர்வாழ்வு ,வெளிநாட்டு அமைச்சு எல்லாம் என்ன அறிக்கை விட்டாலும்.

யுத்தம் தந்த பாடத்தில் உயிரைக்காவிக்கொண்டு உள்நாட்டைவிட்டு ஐரோப்பாவுக்கும் ,ஆஸ்ரேலியாவுக்கும்,கனடாவுக்கும் போகப்போறன் என்று பயணமுகவரிடம் பணம் கொடுத்துவிட்டு பாதிவாழ்வு தொலைத்தவர்கள் முகம் பேசமறுக்கின்றோம் பொதுவில்!

பட்டப்படிப்பு படித்தவன் ஆமி பிடிப்பான் என்ற பயத்தில் காணியும் ,வீடும் வித்து மூதத்தவன் ஒரு பொடியன் உயிர்வாழட்டும் என்று தாய்நாட்டைவிட்டு ஓட்டி அனுப்பின தாய்.

என்ற பிள்ளை வெளிநாட்டுக்குப் போனவன் இதுவரை ஒரு தகவல் இல்லை .என்ற கடவுளே" நீ கல்நெஞ்சுக்காரன் என்று புலம்பும் தாய் கண்ணீர் புரியுமா ?பயணமுகவர்களுக்கு .

இல்லை தான் பயணமுகவரிடம் ஏமாந்துவிட்டேன் என்று தன் உறவுகளிடன் உண்மை சொல்ல முடியாத தாழ்வு மனம் படைத்தவன். முகம் தொலைந்தவர்கள் பட்டியலில் இருக்கும் நிலை பேசமறுக்கின்றது ஊடகம்.

.நடிகருக்கு பால் ஊத்தும் கூட்டம் எல்லாம் பக்கத்துவீட்டுப் பொடியன் சேர்ந்து படித்தவன். இப்போது உயிரோடு இருக்கின்றானா ?என்பதைக் கூட சிந்திக்கும் மனம் இல்லை.

காலம் யுத்தம் மூலம் தந்தது மனதினை வக்கிரம் ஆக்கும் வார்த்தைகளும் ,ஒடிப்போகும் கிளுகிளு செய்தியும் சொல்லும் இணையத்தையும் அன்றி வேற என்ன???

ராகுல் காந்திக்கும் ஜமேக்கா காதலியும் சாட்டில் சல்லாபிக்கின்றார்களா ?என்றும் நாமலும் அசினும் பிசினில் என்று போடும் ஊடகம்.

சொந்த நாட்டில் இருக்கமுடியாத நிலையில் வெளிநாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஈழத்துக்குடிமக்கள் தவிக்கும் தாய்லாந்தில்,மலேசியாவில்,ஆப்பிரிக்க நாடுகளில் அதுவும் கெமரூன் நாடுகளில் பயணமுகவர் மூலம் ஐரோப்பா போக,கனடா போக என காத்திருந்து கதறியவர்கள் கதை எல்லாம் மகுடம் ஏறாது திரட்டியில் .


ஆனால் முகம் தொலைந்தவர்கள் மனம் நொந்தவர்கள் ,மனப்பிறல்வு எல்லாம் பேசமறுக்கும் அரசியல் விமர்சர்கள்.

ஒரு கணனிகிடைத்தால் அடுத்த யுத்தம் வரும் என்று சங்கூதும் சானக்கியர்களும், அதிகாரசபை என்று ஆலவட்டம் பிடிப்பவர்களும் முதலில் இந்த ஏதிலிகளை கரை சேர்ப்பார்களா ?? தீர்வுத்திட்டம் கேட்கும் குரல்கள் எல்லாம் இவர்களுக்கும் தீர்வு சொல்வார்களா ?
செடில்க்காவடி தூக்கும் அயல்நாட்டு ஊடகம் எல்லாம் அகதியின் வலி என்ன சூப்பர் சிங்கரில் அழுவது மட்டும் தானா ? ஒப்பாரியாக சிறையில் இருந்தும் சித்திரவதையும் பார்த்திருந்தால் புரிந்து இருக்கும் புலம்பெயர ஈழத்தவன் பட்டவலிகள். இது எல்லாம் புரியாது இத்தாலியில் இருந்து இந்திரா குடும்பத்துக்கு வந்த காதலிக்கு,! . அப்படித்தான் அன்று எங்களுக்கு ஓட்டியாக தாய்லாந்து வாசி சகிதம் அவருக்கு உதவிக்கு வந்தவர் . சேகர். யாழ்ப்பாணம் ஆமியின் கட்டுப்பாட்டில் விழுந்த வருடத்தில் வெளிநாட்டுக்கு போகப் போனார் எங்கள் கிராமத்தில் இருந்து. அவரை 2001 இல் இப்படி ஓட்டியாக சந்திப்பேன் என்று நானும் நினைக்கவில்லை . ஜீவன் யாழ்தேவியில் தூங்குவது போல காலை நீட்டித் தூங்கிய்போது சேகர் முன் கதை கொடுத்தேன். சேகர் அண்ணா எப்படி இந்த ஓட்டிவேலைக்கு வந்தீங்க ?ஊரில் உங்க அம்மா எத்தனையிடம் எல்லாம் தேடுவா . ஏன் இப்படி தோற்றம் எல்லாம் மாற்றி? என்னாச்சு ?சொல்ல விரும்பினால் சொல்லுங்க! ரவிக்கு என்னைத் தெரிந்து இருக்கின்றதே . ம்ம் எப்படி மறக்க முடியும் கிளாலிக்கடல் ஒன்றாகத்தானே தாண்டிவந்தோம் . என்ன சொல்ல வாழ்க்கைப்பாதையே வெளிநாட்டுக்கு வெளிக்கிட்டு மாறிப்போச்சு. எனக்கே என்ன நடந்தது என்று தெரியவில்லை.!!!  தொடரும்...................

25 August 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -08

புலப்பெயர்தல் ,புலம்பெயர் இலக்கியம் என்று அதிகம் பேசப்பட்டது 1990 இன் பிற்பகுதியில். வெளிநாடு என்ற சொல்லை தவிர்த்து. தனித்துவம் மிக்கதாக இந்த வார்த்தையை முன்னீடு செய்தவர்களில் ஒருவர் எஸ்.பொ அதன் தாக்கம் வாதங்கள் ,பிரதிவாதங்கள் எல்லாம் தாயகத்தில் மல்லிகை ஜீவா,செங்கை ஆழியான் ,செ.யோகநாதன் என முட்டி மோதியது காலத்தால் மறக்க முடியாது ஏடுகளில்.

அனல் கக்கிய வார்த்தைகள் எல்லாம் சொல்ல மறந்த கதையில்லை. ஆனால் சொல்லாத கதைகள் பலதைச் சொல்லும் புலம்பெயர் சமூகம்.

காரணம் சுதந்திரம் என்ன என்பதை அனுபவிக்கும் போது இருட்டடைப்பும் ,வாய்ப்பூட்டும் ,துப்பாக்கி முனையில் மூச்சுக்காற்று போய் விடும் என்ற பயமும் ,மார்ச்சியம் என்றும் நாட்டுப்பற்றும் சொல்லிக்கொண்டு இனவாதம் உயிர் எடுக்கும் பிணம் விழும் நாட்டில் இல்லாத சுதந்திர தேசத்தில் சுதந்திரமான விடயங்களை பேசக்கூடிய சூழலில் வாழ்தல் என்பது வரலாற்றில் வாழ்தல் எஸ்.பொ போல சேமிக்க வேண்டிய நூல்.

அது போல சொல்லாத விடயங்கள் சொல்லுவது எழுத்தாணி பிடிபோர் கடமை..வலிகள் அழுவது /ஒப்பாரி என்றால் நான் அதுகடந்து வந்தவன்.


மரம் பட்டுப்போனாலும் மரத்தின் வேரில் ஈரம் இருக்கும். அன்பில் கிளறிப்பாருங்கள் அடியில் ஜீவன் இருக்கும் .

"டேய் என்ன எழுதுகின்றாய் ரவி .தூக்கம் வருகின்றது படுக்கப்போறன் "

"நீ படு ஜீவன் எனக்கு இந்த தாய்லாந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம் இரவில் .அப்படி ஒரு அழகு"

ம்ம் ஏன் தாய்லாந்து மங்கைகளும் அழகுதான் மச்சான்.

அதுசரி உனக்கு முதுகில் ஆமி அடித்தாலும் மூளையில் அடிக்கவில்லை என்னதுக்கு என்று தெரியுமா ?

மூளையில்லை உனக்கு என்று அவனுங்களுக்கும் தெரியும் போல.ஹீ ஹீ

போட லூசு விசர்க்கதை கதைக்கின்றாய்.!!!

உனக்கு நெஞ்சு முடியில் தீபம் ஏற்றியவன் கைவிரலில், தங்க மோதிரம் போடவில்லை. எஸ்லோன் பைப்பில் சாமரம் வீசவில்லை,ஆணி புடுங்கும் சுத்தி வைத்து கைநகவிரல் மீது நர்த்தனம் ஆடவில்லை ,சப்பாத்துக்காலினால் மொழிக்கட்டில் மிதியடி மிதிக்கவில்லை .உண்மை சொல்லு குண்டு எப்படி வந்தது என்று அதுதான் இந்த பஸ்சில் கூட எழுதுகின்றாய் நாட்குறிப்பு ரவி!.

மச்சான் எழுதிவைப்பம் யார்கையில் சேரும் போதும் சரி இப்படி ஒரு அனுபவமா என்று படிக்கட்டும் வழிப்போக்கன் என் உயிர் இல்லாவிட்டாலும்.

கவலைப்படாத சிறையில் இருந்து வெளியில் விட்ட கடவுள் நம்மை தெருவில் அநாதைப்பிணம் போல விடமாட்டார் .


போதிமரத்தில் சரி ஒரு இடம் தருவார்.

அதுவும் சரிதான் மச்சான் ரவி.

ஜீவன் கடவுள் என்னையும் உன்னையும் ஏன் ஒரே ஊரில் பிறக்கவைத்தார்? ஒரே வேலையில் சேரவைத்தார் எல்லாம் விதிப்பயன்.


நீ சிறையில் பாண் சாப்பிட்டிய இல்லைவரும் பேப்பர்களில் ,
பணபடித்தாயா ?இப்படிப் பேசுகின்றாய் .

விதி என்று!

விதிதான் உன்னையும், என்னையும் தாய்லாந்து வீதியில் இப்படி ஓடும் பஸ்சில் கதைபேசவைக்குது.

ஜீவன் .இந்த நேரம் சாலிக்கா இருந்தால் எப்படி இருக்கும்.

அடச்சீ! என்னைப்பக்கத்தில் வைத்துக்கொண்டோ டூயட் பாடுவாய்!
ஏன் அவளோடு பக்கத்தில் இருந்து படம் பார்த்த நீ பேசாத நல்லவன் போல .என்னையும் அவளையும் குறுகுறு என்றே பார்த்து எங்க ரெண்டு பேரையும் கொஞ்சம் கொஞ்சிப்பேச விடாத துரோகிடா நீ . வீட்டில் இருந்து பேசு அது என்ன சினிமா அரங்கில் வந்து பேசுவது. நான் படம் பார்க்கும் போது நீங்க என்னை இம்சை செய்தால் எப்படி இருக்கும் . பொறாமைடா உனக்கு நீ நித்திரைகொள் ஜீவன் அப்படித்தான் அன்று இருந்தான் .!!! தொடரும்!!!! பண-வேதம் ஓதுவது போல சகோதரமொழி  சிங்களத்தில்.

24 August 2012

உருகும் பிரெஞ்சுக்காரி -07

"தான் ஆடவில்லையம்மா தசையாடுது அது தந்தை என்றும் மகன் என்றும் சதிராடுது "

என்று கவியரசர் பாட்டில் வரும் வார்த்தை எத்தனை துயரமானது என்று யார் பார்த்தோம்???

இன்றும் காணாமல் போன மகனை,மகளை,பேரனை,பேர்த்தியை தன் உறவைத் தேடி காவல் நிலையமும் ,மக்கள் குறை தீர்க்கும் குழுவிடமும்,மனித உரிமைக்குழு என்றும் அலையும் குடும்பங்கள் நம்நாட்டில் இரண்டு பக்கத்திலும் இருக்கின்றது .


இது எல்லாம் சின்னத்திரையில் அடுப்படியில் .பட்டுப்சாரியில் பல நகைபோட்டு வரும் பாத்திரம் போல இல்லை. இந்த மக்கள் முகம் அழது அழுது வீங்கிய கண்கள் ஆயிரம் கதை சொல்லும் !

.வெளிநாட்டில் ராஜவாழ்க்கை வாழ்கின்றாய் என்று முகநூலில் நெஞ்சில் குத்துவோருக்கு புரியாது கடல்கடந்தவர்கள் .காத்தாலை விமானம் ஏறி மாலையில் ஐரோப்பா வந்ததில்லை அரச தலைவர் போல.

அகதியாக அலைந்து வந்தவர்கள் .!

"நேற்றும் என் கனவில் வந்தான் ஐயா என்ற அம்மா என்று "

என் பிள்ளை என்று காவல்நிலையத்திலும் ,மனித உரிமை ஆணைக்குழுவிலும் அழும் கண்ணீர் நீலிக்கண்ணீர் இல்லை சின்னத்திரைபோல நிஜக் கண்ணீர்.!!

பெற்றபிள்ளைகள் பாசம் இனவாத போருக்குத் தெரியாது. இனவாதம் வாய்ப்பூட்டுப்போட்டகதைகள் பல .


இனவாதம் போராளிடம் அதிகமாக மனிதவழு இழப்பை சந்திக்கும் போது இராணுவக்கட்டுப்பாட்டு ஊடகங்கள் உண்மையான இழப்பைச் சொல்லாது !!


பெட்டியில் வந்த உயிர்கள் எத்தனை என்றால் ஆயிரம் என்றாலும் நூற்றில் சொல்லிய கதை வெளியில் பல ஊதுகுழல் ஊடகம் ஊதிச் சொல்லும் மோதலில் படையின் இழப்பு இத்தனையாம். என்றுவிட்டு இனவாதம் வென்றுவிடும் என்று வேதம் ஓதும் .


வந்த உடல்களை அனுராதபுரம்,மன்னார்,முன்னரங்கம் தாண்டிக்குளம் பகுதியில் இரவோடு இரவாக சாம்பல் ஆக்கிய கதையை வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு நெஞ்சு பொறுக்காமல் சொன்ன காரணத்துக்கு துப்பாக்கி நீதி கிடைக்க காத்திருந்த போது!

கண்ணீல் கலர் வண்ணம் தலையில் முடிவண்ணம் மாற்றி முகம் மாற்றி வந்தவன் தான் நாமல் !

இவனை நான் மன்னாரில் விற்பனைப் பிரதிநிதியாக இருந்தபோது நேரில் பார்த்தேன். ஒரு அதிகாரியான ஒரு தரத்தில்.

அம்மையார் காலத்தில்!ம்ம் மகாசிவாரத்திரிக்கு கேதீஸ்வரம் போய் பாலாவியில் நீராடவும் தேவை இவரின் பாதுகாப்பு ஒப்புதல் அனுமதி.முதலில் அவர் அனுப்பும் பட்டியல் பின் தர அதிகாரி தீர்மானிப்பார் என்ற நிலை ஒருகாலத்தில் !ம்ம் .

காலம் மனங்களை யுத்தம் செதுக்கும் ஒருத்தனை என்பதா ?இல்லை இனவாதம் சிதைக்கும் என்பதா ?

பாலாவியில் என்னோடு தீர்த்தம் ஆடியவன் பிரெஞ்சுக்காதலியை சந்திக்கும் சூழல்வரும் என்று நான் கூட நினைக்கவில்லை .ஜீவனுடன் ஏற்பட்ட நட்புநிமித்தம் .

கலிகாலம் என்பதா ?ம்ம் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் கோபம் கடந்து கேட்கவேண்டும் .மரங்கள் செழிக்கும் போது இலை,கொப்பு என சேர்ந்து சிரிக்கும். உறவுகள் பட்டுப்போனால் !மரங்கள் காய்ந்த விறகு என வேர்களில் பச்சத்தண்ணீர் ஊற்றியவர்கள்விட வெண்நீர் ஊற்றியவர்கள் அதிகம் .


இது புரியாமல் வெளிநாடு போன நீ ஆணவம் பிடித்தவன் அடங்க மறுக்கின்றாய் என்றால் ?எப்படி ??
அன்று தாய்லாந்தில் நாமலை அடையாலம் கண்டுகொண்டாலும், உள்பயத்துடன் தான் எங்கலோடு பயணித்தான் . தாய்லாந்து நகரின் பாங்கொக் நட்சத்திரவிடுதியில் இருந்து தாய்லாந்தின் இன்னொரு நகரான ஹாட்சாய் போன அன்று இரவு ! .அந்த இரவில் தாய்லாந்து வாசிகூட இன்னொரு முகம் நம்மவர் முகம் முன்னர் பார்த்த முகம்! தொடரும்... கொப்பு - மரத்தின் கிழை/வாது!

20 August 2012

உருகும் பிரெஞ்சுக்காரி -06

வழிநடத்துதல் .ஒரு பொறுப்பான செயல் எல்லாராலும் இது முடியாத காரியம் .

அரசியலில் தாய்மொழிக்கொள்கை கொண்டுவந்த பண்டாராநாயக்க தமிழ்மொழி அரச பாவனையை சீரழித்தது போல இருக்கக்கக்கூடாது வழிநடத்தல்.


கைகாட்டுவதைவிட கைத்தடியாக இருப்பது ஆன்மீக வழிநடத்தலில் பொறுப்பான காரியம்.

அப்படித்தான் அன்று அதிகாலையில் தாய்லாந்தில் விடியப்போகின்றது என்ற நினைப்பில் நாட்டை விட்டு வெளியேறிவர்கள்.ஜீவனும், ரவியும் .

ஐரோப்பா போகின்றோம் என்று தெரியும் எங்கே ?எப்படி ?என்று எதுவும் தெரியாமல்தான் வழிநடத்தி வந்த பிரயான முகவர் நகுலன் சகிதம் .தாய்லாந்தில் உள்நுழைந்தனர்.

.தாய்லாந்து தேசம் ஒரு அழகியபூமி. அன்பு மக்களின் உபசரிப்பு, கும்பிட்டு வரவேற்கும் உல்லாசபுரி

ஈழத்தின் வரலாற்றில் இந்த தேசம் பின்னால் சில தடங்களைப் பதிவு செய்து இருக்கின்றது ஏடுகளில்.ஆனால் சில பல இதயங்களில் மறக்கமுடியாத தேசம்.

.பிரயானிகள் வாசல் ஊடாக ரவியும் ,ஜீவனும் வெளியேறிய போது !நகுலன் இன்னும் பலரையும் அழைத்து வந்தார்.

பிரயான முகவர்கள் பலர் பல வழிகளில் பலரை ஒன்று சேர்த்து ஒருவரிடம் கையளித்து.குறிப்பிட்ட நபர்களை ஐரோப்பாவில் சேர்க்கச் சொல்லும் வழிமுறைக்கு ஒருவர் வழிகாட்டியாக வருவார்.

அவரை ஓட்டி என்று ஒரு வார்த்தையை குறியீட்டாக பயன்படுத்துவார்கள் .மலேசியத்தமிழில் .

இது ஒரு சிறப்பான வார்த்தை .

இன்னும் ஒரு இடத்தில் இதைச் சொல்லுவான் ஜீவன் என்பதை இப்போதைக்கு சொல்லிவைக்கின்றேன் ஆண்டாள் கூற்றைப்போல.

எல்லாருக்கும் இந்தப்பயணம் மனவலிகள் தரும் என்று அன்று தோன்றவில்லை 18 பேர் வெளியில் வந்த போது.
 நகுலன் எங்களை அழைத்து வந்தது நட்சத்திரவிடுதிக்கு. "இந்தா பாருங்கோ என் வேலை உங்களை இங்கு கொண்டுவந்து சேர்ப்பது மட்டும்தான் . இனி இன்னொரு நண்பர் தான் பொறுப்பு . உங்கள் பயணம் வெற்றியாக இருக்க என் வாழ்த்துக்கள் . யார் யார் அதிகமான டொலர் கொண்டந்தவர்கள் காசு எல்லாம் தாங்கோ நான் இங்க இருக்கும் நண்பருக்கு கொடுக்க வேண்டும் .. மிச்சம் போனபின் அங்கே கொடுங்கோ. எப்போதும் அவசரமும் பதட்டமும் இந்த பயணங்களில் இருக்கக்கூடாது. புதியவர்கள் சகபயனாளியோடு மனம்விட்டுப் பேசவேண்டும். ஊரில் எந்த இடம். கடைசியில் இருந்த இடம். போகும் நிலை எல்லாம். மெளனமாக இருந்தால் வெளிநாடு போய்விடலாம் என்ற எண்ணம் சில உயிர்கள் அனாதைப் பிணங்களாகப் போக காரணம் ஆகிவிடும் . அதைக் களைவது நட்பு ரீதியான சந்திப்புத்தான். சந்திக்கும் போது ஒளிவு மறைவு இல்லாமல் பேசவேண்டும்.வெளிநாட்டுக்கு பயணமுகவர் மூலம் வரும் போது . விற்பனை.வியாபாரத் தொழில் என்பதால் ஜீவனும் ரவியும் பேசுவது அரட்டை அரங்கம் போல... அன்று நகுலன் கூட வந்தவர்களில் யாழ்குடா நாட்டின் பல பாகத்தில் இருந்தும் வந்தவர்கள் .அதிகம் . இரண்டு திருகோணமலை நண்பர்கள் .சிலர் முன்னர் பலதடவை தாய்லாந்து வந்து பிரயாணம் கைகூடாத நிலையில் திரும்பியிருந்தவர்களும் அடக்கம். வேடிக்கை உலகில் விநோதங்கள் அதிகம் அதில் .! யுத்தம் என்ற அரக்கன் தமிழ்மீது போர் முரசு கொட்ட அந்த முரசுகொட்டும் முகமாக இருக்கும் இராணுவம் கொலைவெறியோடு அலையும் . ஆனால் இராணுவத்தில் சேர்ந்த பின் போர்களத்தின் நிஜங்கள் புரிந்துகொண்டால் புறமுகிட்டு ஓடுவது கோழை என்று புறநானூறு சொல்லும். என்றாலும் ஓடிவாரது உயிர் தப்ப. அப்படி எங்களோடு பயணித்த ஒரு இராணுவச் சிப்பாய் தான் நாமல்! நாமல் தமிழ் பேசுவான் சிறப்பாக தமிழ் பெயரில்தான் நாட்டைவிட்டு வந்தான் எங்களுடன்!

17 August 2012

உருகும் பிரெஞ்சுக்காரி -05

நாவுக்கரசர் சிறையில் இருந்து தேவாரம் பாடினார்!

ஆனால் நம்ம ஈழத்து யுத்தம். எத்தனை அப்பாவிகளை போராட்டத்துக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தில் சம்மந்தம் இல்லாமல் சிறையில் வாடுகின்றார்கள்

.சிறைநிறைப்புப் போராட்டம் என்றும் சிறை எனக்கு ஓய்வு அறை என்று அறிக்கைவிடும் தமிழ்த் தலைவர் என்று சொல்லும் குறளோவியம் தீட்டியவர் அறிவாரா ?

நம் தேசத்தில் எத்தனை விட்டில் பூச்சிகள் பயங்கரவாதம் என்ற போலியான குற்றச்சாட்டில் வாழ்வையும் ,வாலிபத்தையும் தொலைத்து விட்டு விழி மூடியளுவதை .
அடிக்கடி அடுத்த நாடுகளுக்கு அறிக்கைவிட்டும் அன்னக்காவடி எடுக்கும் எம் சாக்கடை விற்பனர்கள் .
இன்னும் பாராளமன்ற கதிரையில் ஒட்டியிருக்கும் பூச்சி மூட்டைகள் இன்னும் எத்தனை நாள் அப்பாவிகளை வெற்று வாக்குறுதி கொடுத்து விடியலைநோக்கிய திசையை காட்டாமல் போவார்கள்,? சிறையில் உண்ணாவிரதம் ,சிறையில் கைகலப்பு ,என்று செய்தி தரும் ஊடகங்கள் இந்தச் சிறைகளில் வாடும் சந்தேகத்தின் பெயரில் பிடிப்பட்டு சிறைகளில் இருக்கும் சந்ததி பற்றி பேசமறுக்கின்றது . ஊடக சுதந்திரம் இல்லை என்று சொல்லிக்கொண்டு நடிகையின் முந்தானையில் குளிர்காயும் நிலை ஒரு புறம் என்றால். இலக்கியத்தில் பதிவு செய்ய வேண்டியவர்கள், ஈழத்துத்து இலக்கியத்தை செளுமை செய்ய வேண்டியவர்கள் .வாசகர்கள் சரியில்லை என்று இன்னும் வருந்துவதை என்ன சொல்லுவது. சிறையில் வாடும் பலரிடம் பல கதை இருக்கும் .அப்பாவி மலையக மாந்தர்கள் எல்லாம் தமிழனாக பிறந்த பாவத்துக்கு அநியாயமாக சந்தேகம் மற்றும் உடந்தையாக இருந்தார்கள் என்று வாடும் நிலை பேசமறுக்கும் புலம்பெயர்குழுக்கள் அறிக்கைப்போர் செய்கின்றார்கள். வடகிழக்கில் சந்தேகம் தந்த பரிசு சகோதரமொழி தெரியாமலும் ,பொருளாதார வசதி இல்லாமலும் சிறையில் சீரழியும் கதையை பேசமறுக்கின்றோம் புலம்பெயர் புதிய தலைமுறையிடம் . ஆனால் அவனை சிறையில் போடணும் இவனை சிறைப்பிடிக்கணும் என்று அவலக்குரல் கொடுப்பவர்கள் எல்லாம் முதலில் இந்த பாதுகாப்பு குந்தகம் என்று பொய்க்குற்றச்சாட்டில் சிறையில் இருப்பவர்களை மீட்டு எடுக்கும் வழி காட்ட வேண்டும்.
இரண்டு வருட சிறை வாழ்க்கையை வெளியில் சொன்னால் வெட்கம் என்று நான் நினைக்க மாட்டன் .கோடியில் சீதனம் வாங்கும் சமுகத்தில் வந்த மகனாக. தன் மகன் சிறையில் இருக்கின்றான் என்று ஏங்கும் பல குடும்பத்தின் துயரம் தெரிய வேண்டும் பலருக்கு. சொல்ல வேண்டியவர்கள் மெளனம் காப்பது இனியும் கூடாது . எனக்கு இனவெறியில்லை இல்லை தனிநபர் பொருளாதாரம் விடுதலை காணவேண்டித்தான் தனியார் துறையில் வேலைக்குச் சேர்ந்தேன். வாலிபமும் சுதந்திரமும் ஜாலியான சினேகமும் என்னையும் சாலிக்காவுடன் சிங்களத்து சின்னக்குயிலே வசந்த ராகம் பாடவா என்று எல்லைக்கிராமம் மதவாச்சியில் சிந்து பாடிய காலம் எல்லாம் நானும் ஒரு சாமானியன் ..
ராஜபக்ச குடும்பத்தில் ஒரு தமிழன் மருமகன் ஆகும் போது ஏன் ?!நான் எல்லைப்படையில் இருந்தவள் கூட காதல் போர்களம் காணக்கூடாது . எல்லையில் இருப்பவளுக்கும் இதயம் துடிக்கும் காதல் மொழி பேசினால் ! என் துரதிஸ்ரம் அவள் குண்டு வெடிப்பில் உயிர் துறந்தாள். அன்பளிப்பு என்றுகாசுகேட்டு கொடுக்காத நிலையில் பொலிஸ் உதவியோடு இராணுவம் குண்டு இருந்தது வானில் என்று சோடித்த கரங்களில் இருந்து. இனியும் இந்த நாட்டில் நீதிமன்றம் நிலையான விடுதலை தருமா ?என்ற நிலையில் பிணையில் வந்த என்னை இன்னொரு நாட்டுக்கு அனுப்ப உதவியர் ஒரு சகோதரமொழி அதிகாரி . அன்று நானும், ஜீவனும் கட்டுநாயக்கா விமானநிலையம் ஊடாக தாய் விமானத்தில் எறிய பின்னிரவை மறக்க முடியாது.
அன்று தான் பின்லாடனை தேடி அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் முதல் போர் தொடுத்த இரவு .எங்கள் நட்பிலும் போர் வந்தது பின்கதவு வழியால் நாட்டைவிட்டு போவதால். .யாருக்கும் சொல்ல முடியாது உயிர் வாழவேண்டும். சகோதரிகளுடன் பிறந்தவன் ,மூத்தவன் உழைத்து சேர்ந்த காசு எல்லாம் நீதிமன்ற செலவுக்கு கரைந்து போன வலி புரியாது . வெளிநாட்டுக்குப் போனதில் சிரித்துக்கொண்டு படத்தில் இருக்கின்றான் என்பவர்கள் இன்று . அன்று எல்லாம் ஒரு நாள்கூட வந்து சிறையில் பார்க்கவில்லை. எதிர்பார்த்து இருந்த நேரத்தில் . ஆபத்துக்கு என் தாய்க்கு உதவிக்கரம் நீட்டவில்லை உறவுகள். எங்கோ பிறந்த சாலிக்காவின் அப்பா தான் எங்களுக்கு உதவியாக இருந்தார். அவள் தம்பிதான் எனக்கும் ஜீவனுக்கும் சாப்பாடு கொண்டுவருவான் சிறப்பு நாளில் சிறைக்கு. அதனால் தான் சிங்களவனை வெட்டணும் ,கொத்தணும் என்று சொல்லுபவர்கள் மீது கோபம் வருகின்றது . இனவாதிகளை எதுவும் செய்யுங்கோ சாதாரன அப்பாவிகளும் ,விடுதலைக்கு ஆதரவுக்குரல் கொடுப்போரையும் சிங்களவன் என்ற வட்டத்துக்கு மட்டும் வருவதை நாம் பிரித்து அறியத் தெரிந்து கொள்ள எல்லா வெளிநாட்டு வாசிகளாலும் முடியாது. எல்லா இனத்திலும் இனவாதிகள் இருக்கின்றார்கள். வெளிப்படையாக சில அரசியல்வாதிகள் காட்டுகின்றார்கள் பலர் ஆதரிக்கின்றார்கள் வாய் மூடி. அதுதான் அரசியல் இந்த அரசியல் .எனக்கு வேண்டாம் என்றுதான் நானும் எங்கள் நிறுவனத்தை விட்டு ஓடிவந்தது. எனக்கு உதவியதுக்கு சாலிக்காவின் தம்பி அடைந்த துயர் பலருக்குத் தெரியாது. .வன்னி மண் இரட்டைப்பெரியகுளம் கடந்து மதவாச்சி வரை ஊர்ந்து வரும் வாகனத்தில் பயணித்தால் வரும் நுனா ,வாகை மரங்களின் முதுகில் பல கதையிருக்கும். சகோதரமொழி நங்கைகளின் ஏக்கம் காதல் என நீளும் மரங்கள் எழுதிய கதைகள் எல்லாம் ஏரிக்கரை ஊடகம் தூக்கி வீசினாலும். சமதர்மம் என்று சொல்லிவிட்டு இனவாதம் பேசும் நிலையில் யாராவது வழிப்போக்கர்கள் எழுதுவார்கள் நம் கதையை எதிர்காலத்தில் .என்னடா மச்சான் ரவி என்ன எழுதுகின்றாய் .நீயும் ராகுலுடன் சேர்ந்து நாட்குறிப்பு தொடங்கிவிட்டாய் போல? ம் சிறையில் இருந்தகாலத்தில் எதுவும் எழுதவில்லையே ஜீவன் !ம்ம் விமானம் டேக் ஓவர் ஆகின்றது. கொஞ்சம் நித்திரை கொள்வம் தாய்லாந்து போய் யோசிப்போம் !

09 August 2012

உருகும் பிரெஞ்சுக்காரி -04

புலம்பெயர்ந்துவிட்டான். வெளிநாட்டில் நல்லாக செட்டில் ஆகிவிட்டான் என்றும் சொல்லும் உறவுகள்.

அகதியாக என்று சொல்லும் தாயக உறவுகள் எல்லாம் அறியாது.

அகதியாக இந்த ஐரோப்பிய தேசம் வந்து சேர இடையில் பட்ட அவலங்கள்.

எத்தனையோ இலக்கியம் வாழும் இந்த உலகில் அகதியாக அலைந்தவன்கள் கதையை அழகாய் சொல்லும் நாவல் உயரப்பறக்கும் காகங்கள் என்றாலும் அதில் மேன்போக்காக வந்து போகும் அகதி விடயம் .

என்றாலும் இந்த அகதி என்ற முத்திரையை முகத்தில் தாங்க முகம் தொலைந்தவர்கள் பற்றி ஆராய்ந்தால் எத்தனை அவலத்தை ஈழத்து சந்ததி கண்டு வந்தது என்று இன்னும் உண்மையுடன் ஒரு வார்த்தை தன்னும் அடுத்த சந்ததிக்கு தெரியாமல் இருக்கும் பல மூத்தவர்கள்.

தங்கள் குடும்பம் என்ற கோயிலில் மூலவராக இருக்கின்றார்கள் .

எங்கே உண்மையைச் சொல்ல முடியும் இலக்கியத்தில் இதை பதிவு செய்தால் இனி ஒருத்தனும் அகதி என்ற கப்பலில் வரமாட்டார்கள் !என்ற உண்மையைக்கூட பூசி மெழுகாக்குவது அசிங்கம் என்று தன்னை நினைத்து வெட்கப்படுவார்களோ ?என்ற அவநம்பிக்கையில்.

எனக்கு வெட்கம் இல்லை, ரோசம் இல்லை, சூடுசுறனை இல்லை ,உதவாக்கரை,

இலக்கியம் இருட்டடைப்பு செய்து வாசகர்களுக்கு உண்மை சொல்லாத மூத்த இலக்கியவாதிகள் போலவும் இல்லை நான்.

தளபதிக்கு பிறந்தநாள் விளம்பரமும் ,தல ஒரே உடுப்பை போட்டு நடப்பதே நடிப்பு மட்டுமா அவர் நடிப்பு  என்று கூறி நக்கல் ஊடே ஒருத்தன் பின் புலம் இல்லாமல் வெற்றியீட்டியதை  ஆதரிக்காமல் தந்தை நிழலில் வந்தவருக்கு  சப்பைக்கட்டு கட்டும் ரசிகரும் நான் இல்லை .

என் நாட்குறிப்பை எந்த விருப்பு, வெறுப்பும் கடந்து உண்மையில் இப்படி எல்லாம் நான் இருந்தேன் என்பதை என் தாத்தா என்றாவது புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கையில் தான் .

நான் என் நாட்குறிப்பை எழுதுவது.

தாத்தா பாசம் கிடைக்க இந்த ரவி போல யார் எங்க குடும்பத்தில் .

மூத்தவன் என்ற தலமையைத் தந்த தாத்தா யுத்தம் தந்த சாபத்தில் இருந்து பாதுகாத்து வடக்கில் ஒரு தீவில் இருந்து எங்க குடும்பம் எல்லாம் இடம்பெயர்ந்து வன்னி வந்த போது !

வன்னியில் என்னை இருக்க விடாமல் வவுனியா அனுப்பியதும் பாசம் தான்

.இந்த நேரத்தில் தான் 1999 செப்டம்பர் மாதம் மலையகத்தில் இருந்து ராகுல் வந்தான் விற்பனைப்பிரதிநிதியாக ஒரு பல்தேசியக்கம்பனிக்கு வவுனியா பகுதிக்கு.


அந்த மாவட்டப்பிரதிநிதியாக. சமகாலத்தில் வேற ஒரு கம்பனிக்கு பொறுப்பாக வவுனியாவில் என்னோடு இருந்தவன் தான் இன்று இங்கிருந்து பயணம் போன ஜீவனும் .

நாங்கள் எல்லாம் ஒரே இரவில்! தீவைக்கடந்தாலும் வன்னிபோன போதும் பிரியாத நட்பு சில ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் சேர்ந்தோம் வேலைத்தளத்தில் .

தனியார் துறை வேலையில் சேரும்போது வருடங்கள் அனுபவம் முப்பு அடிப்படையில் ராகுலும், ஜீவனும் எனக்கு தம்பிகள் .

.ஆனால் வயதில் ஒன்று!

எங்கள் கம்பனிச்சட்டங்களில் பிற வருமானம் ஈட்டுவது சட்டப்படி தவறு.

ஆனால் வியாபாரப்பரம்பரையில் வந்த இரத்தம் கம்பனிச்சட்டத்துக்கு வேலி தாண்டி கூட்டாளிகளாக வியாபாரம் செய்தோம்.

இரானுவக்கட்டுப்பாட்டுக்குள் இருந்து கட்டுப்பாட்டு இல்லாத பகுதிக்கு எங்கள் பொருட்களை அனுப்பவதில் பலர் போட்டி போட்டோம் .

இந்த வேலையில் தான் பாதுகாப்பு பச்சோந்திகள் கேட்டது கையூட்டல்.

கொடுத்தோம் கொடுத்தோம் உழைத்தோம் உழைத்தோம் !

உண்மையில் இரண்டு தொழில் செய்து களவு இல்லை என்பது மட்டும் நிஜம் .

பொய் சொல்வது ஒரு நிறுவனத்திற்கு மட்டும் .


வவுனியா வருவது என்றாள் உத்தரவு வாங்கி வரவேண்டும் என்பதால் சகோதரமொழி அதிகாரிகளுக்கு தண்ணீர்கட்டுவதில் நாங்கள் கில்லாடி.


அப்போது கைபேசி வரவில்லை பேஜர் மட்டும் தான் .

அதனால் இணைப்பு கிடைக்கவில்லை என்று சாட்டுச் சொல்ல முடியும் ஆனால் காவல் துறையின் விளக்கமறியலில் இருக்கும் போது பொய் சொல்ல முடியாது.


பேராசை பெருநட்டம் என்றாகிவிட்டது பெரும் வலியோடு வாகனத்தில் குண்டு இருந்தது என்று எடுத்த கரங்களுக்கு கொடுக்க முடியாது அந்தளவு தொகை என்றதைச் சொன்னதன் விளைவு பூட்டினார்கள் கைவிலங்கு .


போனது வவுனியா காவல் நிலையம் அங்கிருந்து அனுராதபுரம்.

அதுகடந்து மகசன் சிறை மண்டியிட்டபோது வந்து பார்த்தவர்கள் கேட்டது நீதிமன்றத்தில் 2 வருடம் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்காமல் எங்கள் பிள்ளைகளை பிணையாக விடுங்கள் என்று.

அரசியல் எங்கள் பின்புலமாக இருந்த படியால் சட்டம் வளைந்து கொடுக்க.

இரவோடு இரவாக இலங்கைத்தீவைவிட்டு வெளியேறிய பெயர்தான் இந்த ரவி!

,ஜீவன் என்னோடு கட்டுநாயக்காவூடாக தாய்லாந்தில் வந்து சேர்ந்தோம்.


மங்கோலியா குளிரில் மாண்டவர்களும் செங்கொஸ்லாவியா ஊடாக நடைவண்டியில் நடைப்பிணம், ஆனவர்களும், மொஸ்கோவில் மோட்சம் போனவர்கள் ,கதையை கம்பிகளின் ஊடாக பாரிஸ்குடும்பி சொன்னது போல வந்த துயரங்கள் சொன்னார்களா ?மூத்தவர்கள்?

என்று நான் அறியேன் !

ஆனால் எங்களோடு கடலில் போனவர்கள் முகம் கட்டாயம் ஞாபகம் வரும் .

எந்த செய்தியை கேட்கும் போது உருகும் பிரெஞ்சிக்காரி உண்மை சொல்லவில்லை என்கிறால்!

நடந்தது எல்லாம் சொன்னால் அசிங்கம் என்று நான் ஒதுங்க மாட்டன் எனக்கு !குடும்பம் ஜீவன் போல ஆலமரம் இல்லை நான் அனாதை !பாவம் சுமக்கின்றேன் ! தொடரும்!

07 August 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -3

நம்மவர்களை எங்களின் உணர்வுகளோடு சந்திக்க வேண்டும் என்றால் எல்லாரையும் ஆரியகுளம் சந்தியில் டியூசனுக்கு போனவர்கள் போல கியூவில் சந்திக்கும் இடம் தான் லாச்சப்பல் .

இங்கே நம்மவர்களின் அடுப்படி முதல் ஊரில் யார் வெள்ளைவான் கடத்திவிட்டது வரை கதையளக்கும் ஒரு பகுதி என்றால் .

இன்னொரு குழு டாக்குத்தர் படத்துக்கு பீரா ?பால் ?ஊத்துவது வரை அறிந்து கொள்ளமுடியும். ஒரு தேனீர்க்கோப்பையுடன் .

வாழ்க்கையில் ஒரு காலத்தில் சந்தியில் நின்றால் .உதவாக்கரை என்று திட்டினாலும் இங்கே இந்தச் சந்தியில் நின்றால் தான் ஏதாவது வேலை கிடைக்க வழி பிறக்கும் ,.

இல்லை தன்னைபோல ஒத்தசாயல் உள்ள விசா நபரைச்சரி சந்திக்கலாம்.

ஊரில் எப்படி சுதந்திரமாக இருந்திருப்பம் இஞ்ச வந்து சமரிக்கு காசு கொடுக்கவே இன்னொருத்தர் தயவில் வாழும் நிலை என நொந்து போகும் படலம் .ஒரு புறம் சிலர் என்றால்.

இன்னும் பல கதை இங்கு இருக்கும் ஹீரோவுக்கு பஞ்சு டயலாக் எழுதியும் ,வெளிநாட்டுப்படத்தைச் சுட்டுக்கதை தயாரிக்கும் இயக்குனர்களுக்கு எல்லாம் அங்காடித் தெரு போல ஆயிரம் கதை இங்கு இருக்கு. என்ன எல்லாம் அதிகம் புலம்பல் என்பதால் தீராநதிபோல இந்த கதைகள் எல்லாம் பலருக்கு பிடிக்காது .


நடிகையின் சதையையை மட்டும் நம்பி விசில் ஊதும் கூட்டத்துக்கு.

ஆனாலும் எங்களுக்கும் ஒரு காலம் வரும் நிச்சயம் நானும் குழுவாக ஒரு முழுநீளப்படம் செய்வேன் .அதற்கு முன்னோடியாக ஒரு குறும்படம் செய்வேன்.

அதுக்கு முதலில் விசா கிடைக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தான் சிவா.

என்ன மச்சான் சிவா விசில் படதின் விளம்பரத்தையே பார்த்துக்கொண்டு இருக்கின்றாய்?

போன வேலை என்னாச்சி ?
இந்தா காசு ரவி கொடுக்கச் சொன்னான்.

மெர்சி .

பிறகு தாரன் சதீஸ் அண்ணா அது ஜீவனோடு பார்த்துக்க .

ஐயோ அந்த சாமிகூட என்னால் இம்சைதாங்க முடியாது .

ஒரே அறிவுரையில் தொடங்கி
ஒரு வழிபண்ணிவிடுவார் குடும்பம் குடும்பம் என்று

.நான் உங்களிடம் வேண்டியது போல அசட்டிக்காசு வரத்தாரன்.

அதுசரி அவனிடம் கோல் பண்ணி யாழிலில் இருந்து மச்சான் மச்சான் காசு தா என்று இரவில் ஒப்பாரி வைக்கும் போது தெரியாது போல சாமி ஒரு இம்சை என்று.

ஊரில் இருந்து வெளிநாட்டுக்கு எடுத்துவிடு எடுத்துவிடு ஆமி பிரச்சனை/மாற்றுக்குழு பிரச்சனை என்று ஆளுக்கு ஆள் அவனை தூங்க விடாம விடாது துரத்தியது எல்லாம் எனக்கும் தெரியும் .

அவன் வீட்டில் தானே நானும் இப்ப இரண்டு வருடம் சமரிக்கு இருக்கின்றேன்.

உனக்கு அவனோட இருக்கத்தெரியல .

நீ எல்லாம் நாலு ஊரில் அடிபட்டு சாப்பாடு இல்லாம கொழும்பில் பாணும் பருப்பும் சாப்பிட்டால் தெரிஞ்சு இருக்கும்!

ம்ம்!  ஆன்மீகம் ஒரு தெளிவான பார்வை இருக்கணும் .

சும்மா வாய்க்கு வந்தமாதிரி பேச , எழுத இது ஒன்றும் அரசியல் இல்லை உணரணும் கடவுள் என்றால் என்ன என்று.

ஐயோ சதிஸ் அண்ணா ஜீவன் மச்சானோடு சேர்ந்து நீங்களும் ஆன்மீக அறுவல் கோஸ்டிசியில் சேர்ந்திட்டீர்கள் போல.

எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை வாழவேண்டிய காலத்தில் விரதம் ,யாத்திரை ,சாமி என்று உங்களையே ஏமாத்திக்கொண்டு . வயசு போனவர்கள் செய்த இந்த பித்தலாட்டம் இப்ப ஜீவனோடு சேர்ந்து உங்களுக்கும் தொற்றிவிட்டது. வடிவான பிரெஞ்சுக்காரியை விட்டுவிட்டு இப்ப ஊரில் கட்டப் போறார் ஒரு நாள் உருகும் போது தெரியும் வலி!
"நீங்கள் சரி தனியாக வீடு எடுத்து இருக்கப்பாருங்க. "அவரைவிட்டு . அது எனக்குத் தெரியும் தம்பி சிவா. உன்னை மாதிரி உதவி செய்து எடுத்தவன் கூட இருக்க முடியாமல் . நல்லா பொடியங்கள் கூடச் சேர்ந்து ஊர் சுற்றவும், அதிகம் இரைச்சலோடு பாட்டுப் போட்டு பக்கத்து வீட்டுக்காரனோடு சண்டை போட இது என்ன ஊரில் பத்துப்பரப்பில் தனிவீடா ? தொடர் மாடி வாழ்க்கை இங்கு அடுத்த வீட்டில் கொலைவிழுந்தாலும் சத்தம் வராமல் இருக்கணும் .
ஆனால் நீ சத்தம் போட்டு பாட்டுக்கேட்பதும் ,குடித்து கும்மாளம் போட்டால் கீழ்வீட்டுக்காரன் பொலிஸ் கூப்பிடுவான் மேல் மாடியில் இருப்பவர்களால் நாம் நிம்மதியாக நித்திரைகொள்ளமுடியாது என்று . பொலிஸ்வந்தால் முதல்க்கேள்வி விசா பார்க்கணும் ?என்று தானே. விசா இல்லாத பொடியங்களை வீட்டில் வைத்திருப்பது. நண்பர்கள், தெரிந்தவர்கள் என்பதால் இது எல்லாம் உனக்கு எங்க தெரியப் போகுது . உன் சுதந்திரம் முக்கியம் என்று ஜோசிக்கும் உன்னோட என்னத்தை பேசிப்பயன். அவன் காதல் உனக்கு ஒழுங்காத் தெரியாமல் எஸ்.பொன்னத்துரையை இருட்டடைப்பு செய்த யாழ் மேட்குக்குடி பேராசிரியர்கள் போல இப்படி பேசாத. குடும்பம் முக்கியம் காதலைவிட. ஜீவன் என்னை வெளிநாட்டுக்கு எடுத்துவிட்டான் என்றதிற்காக நான் ஜால்ரா அடிக்கவில்லை . அவன் நிலை உனக்குப் புரியாது கடவுள் சித்தம் எதுவோ அதுதான் நடக்கும். நான் வேலைக்கு இறங்கும் நேரம் ஆச்சு ஏதாவது அவசியம் என்றால் அழைப்பு எடு . சிவா!   தொடரும்........ /// மெர்சி- நன்றி சமரி - வாடகைக்கு இருப்பது பலருடன்/தனியாக  ! !

02 August 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -2

பாரிசில்  இருந்து உறவுகள் எல்லாரும் நாளை  சிங்கப்பூர் வருவினம்


நீ முன்னால் போய் அங்கே( சிங்கப்பூர்  )பாலன் வருவான் .அவனோடு எல்லா ஒழுங்கும் செய்.

தேவை என்றால் கோல் பண்ணு. மறந்திடாத கலியாண எழுத்துக்கொப்பி முக்கியம் எங்கட சம்பிராதாயத்தை விட சட்டப்பதிவு முக்கியம் பிரெஞ்சுக்காரனுக்கு..

மச்சாள் அழகில் மயங்கி எடுக்க வேண்டிய தஸ்தாவேஸ்களை மறந்திடாத. போடா நான் மயங்க நினைச்சா நம்ம விற்பனைப்பிரதிநிதி தொழிலில் எத்தனை பேரைப்பார்த்தோம். . பழைசை எல்லாம் கிளறாத வவுனியா ,கொழும்பு, மலையக வாழ்வு ,சிறையில் சில மாதங்கள் எல்லாம் பார்த்துத் தானே இனவாத பேய்களால் .நானும் நீயும் பாரிஸ்  வந்தோம்! சரிடா நான் போட்டுவாரன். .ஜீவன் போகும் எமிரேட்ஸ் விமானத்தின் உள்நுழைவு வரவேற்கின்றது பயணிகளை ..
இன்று போகும் ஜீவன் யார்? இவனுக்கும் ராகுலுக்கும் எப்படி தொடர்பு ? இல்ல அவனை அனுப்பி விட்டு காத்திருக்கும் நான் யார் ? நினைச்சுப்பார்த்தால் இந்த 31 வயதுக்குள் தான் ஈழத்தில் பிறந்த பாவத்துக்கு எத்தனை அனுபவத்தையும் யாசிப்பையும் இந்த மாயக்கண்ணன் ஊதிச் செல்கின்றான் ஒரு கீதைப் பாதையாக.!
இது எல்லாம் அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன் எழுதிய கவிஞன் எல்லாம் அறியாத ஒன்று. என்னடா ரவி போவம்` ஜீவன் தான் போயிட்டானே . ஒரு பியர் வாங்கு சதீஸ் . ரவி வட்டிக்கார முருகேசர் கள்ளுக்குடித்தாலும் வெளியில் தெரியாது. வெற்றிலை போட்டு மறைத்துவிடுவார் பேரன் பியர் டின் கையில். இதைப்பார்த்தா யாருடா உனக்கு பெண்கொடுப்பாங்க.? அது எல்லாம் ஊரில் சொல்லும் கதை இங்க விசாக்கார மாப்பிள்ளை என்றால் தாயகத்தில் இப்ப எந்தப்பெரிய கடைக்காரணும் ஓடி வருவாங்க நாடு இருக்கும் நிலையைப் பார்த்து. பார்த்தாய் தானே ஜீவனுக்கு எத்தனை டிமாண்ட் .உதவாக்கரை என்று திட்டிய மாமா முதல் உறவு வேண்டாம் என்று போன மாமா அதுமட்டுமா அவன் வேலை செய்த தனியார் துறை முதலாளி வரை. யாழிலில் மட்டும் இல்ல மச்சான் கொழும்பில் கூட அந்த முதலாளி மகராசன் பெரிய புள்ளி . அவர் தான் எங்களுக்கு முகவரியே பல்தேசிய கம்பனியில் விற்பனைப்பிரதி நிதி வேலைக்கு சேர உந்து சக்தி.. அவரே தன் அக்காள் மகளை கட்டு என்று கேட்டும் அவன் வேலை செய்த முதலாளி வீட்டில் மருமகன் ஆக மாட்டன் என்று விட்டு என் மச்சாளை கட்டுவது போல எனக்கும் ஒரு மச்சாள் இருக்கின்றாள் கவலைப்படாத நீ.
இப்ப என்ன? குடிக்கின்ற நான் என்ன குறைஞ்சா போயிட்டேன்?. வேலைக்களைப்புக்கு ஒரு பியர் குடிக்கின்றேன். நான் குடிச்சுப்போட்டு என்ன ரோட்டிலா கிடக்கின்றன்? பாரு பிரெஞ்சுக்காரன் எல்லாம் சாப்பிடும் போது ஒரு கப் வைன் எடுக்கின்றான். அதுசரி உன்னோட் கதைச்சு வெல்ல முடியாது . உன்கூட சேர்ந்து ஜீவனும் கெட்டான் நீ தான் நிசாவோடு அவனை சேர விடாமல் அவனுக்கு மூலச்சலவை செய்தது. அடப்போடா நான் என்ன செய்தன் வாழ்க்கையில் கலியாணம் காலா காலாத்தில் கட்டணும்` .
பார்க்கின்றாய் தானே ஊரைவிட்டு ஓடிவந்து குளிருக்குள்ளும் வெயிலிலும் வாடுறம் . 20மணித்தியாளம் நெருப்பில் உடன் பிறந்த கடனோட வந்தம் .எல்லாரையும் பொறுப்பு முடிச்சு திரும்பிப் பார்த்தால் கையில் பணமும் இல்லை தலையில் முடியும் இல்லை . இதோ இருப்பது இந்த தொப்பை வண்டிதான் . அதுசரி நீ பீரா வயித்துக்கு இறைச்சா பின்ன வண்டி வராமல் என்ன வரும். எனக்கு பின்னேரம் வேலை ரவி நான் போறன்.! நீ வீட்டை போ கடிதம் வந்தால் பார்த்து வை! ஜீவன் வர ஒரு மாதம் ஆகும் . . சதீஸ் வேலைக்கு போகும் போது அப்படியே சிவாக்கு ஒரு 100 ஈரோ கொடு நான் இரவு தாரன். !! ஜீவன் க/கில் சேர் சரி !தொடரும்