12 May 2013

அந்தநாள் ஞாபகம்--12


வணக்கம் உறவுகளே நலமா?
அந்தநாள் ஞாபகம் ஊடாக சாமானிய வழிப்போக்கன் தனிமரத்தின் கடந்த கால நினைவுகளில் திரையரங்குகளில் திகைத்து ,திளைத்து ,தித்தித்த எண்ணங்களை சுமந்து பதிவு செய்யும் ஆசையில்!

 மலரும் இந்த தொடரில் இன்று மருதானை சென்றல் திரையரங்கில்  இருந்து பார்த்த இந்தப்படம் ஒரு மொக்கைப்படம்!

 என்றாலும் மருதானை சூழல் இன்னொரு உலகம் மூவின மக்கள் வாழ்ந்தாலும், அதிகம் இஸ்லாமிய உறவுகளும் ,சிங்களமக்களும், அதிகம் வாழும் பிரதேசம் அதில் தமிழ் மக்கள் சில தீவு அதிலும் இந்த  மருதானை அதிகம் அரபுலகத்துக்கு ஆட்களை அனுப்பும் முகவர்களின் கூடாரம் என்றால் மிகையாகாது ஒரு புறம் என்றால் !

இன்னொரு புறம் இதன் பகுதியான பஞ்சுகாவத்தை இத்துத்துப்போன இரும்பு முதல் புதிய வகை இரும்பு உபகரணம் வாகனப்பொருள் தேடும் இடம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே !


குடு மன்னர்கள் வாகனத்தின் பாகத்தைத் திருடும் கூட்டம் இருக்கும் பகுதி இந்த ஏரியாஅந்த ஏரியாவிலும் அடியேன் விற்பனைப்பிரதிநிதியாக அலைந்த காலங்கள் மனதில் வசந்தகாலம் தான். !


சென்றலில் அதிகம் ஆங்கிலச்சினிமா தான்  காட்சிப்படுத்தப்படும் முன்னர் அந்த வரலாற்றை மாற்றிய படம் இது என்பது அதன் வரலாற்றுக்குறிப்பில் பொன் எழுத்தில் தீட்ட வேண்டிய கவிதை என்றால் !மிகையில்லை காரணம் இந்தப்பட இயக்குனர் ஆர்.இரவிசங்கர் ஒரு கவிஞர் என்றுதான் எனக்கு முதல் அறிமுகம் பின் விக்ரமனின் சீடர் என்பதை கடந்து பின் குமுதம் வார இதழில் எழுதும் ஒரு நிருபர் என்பது பலர் அறிந்த ஒன்று !

இவரோடு திரைபடத்துறைக்கு வந்தவர்கள் மூத்தவர் பழனிபாரதி முதல் யுகபாரதி வரை இன்று கானமல் போபவர்களும் ,திடிர் திடீர் வருகையுடன் ஒத்துவராத நிலையும் நல்ல பாடல் ரசிகளுக்கு இழப்பு எனலாம்!


என்றாலும் எனக்கு இந்த ரவிசங்கர் பிடிக்கும் மறைந்த கருப்பையா மூப்பனார்  ஐயாவுக்கும் இவர் கவிதை பிடிக்கும் அதுவும் காதலர்களுக்கு அதிகம் பிடிக்கும்ம் "ரோஜாப்பூ சின்ன ரோஜாப்பூ "இவரின் கற்பனை என்று முன்னர் ஒரு வாரசஞ்சிகை பேட்டி கூறியதாக ஒரு நினைவு !

அதுகடந்து இந்தப்படத்தில் மனோஜ் பாத்திரம் மீது இருக்கும் கழிவிரக்கம்  எனக்கும் ஏனோ பிடிக்கும்


அந்நாட்களில் இலங்கையில் பல  பண்பளைகளில் இந்தப்பாடல் ஒலிக்காத நிகழ்ச்சி இல்லை எனலாம்!தபால் அட்டையில் பாடல்கேட்போரின் மனதில் பொறாமை தந்த தொலைபேசியில் கேட்டபாடல் நிகழ்ச்சியும் பின் அதன் விரிவாக்கம் பாக்ஸ்சில்(தொலைநகல்)  கேட்பாடல் என்ற தகுதி எல்லாம் இலங்கை பண்பலைகள்(fm )பலதுக்கு இருக்கும் வரலாறு என்பது பல வானொலி நேயர்கள் அறிவார்கள்

இப்போது தந்தியில்லா அழைப்பு (skipe) யுகத்திலும் இந்தப்பாடல் மறக்க முடியாது  எனக்கு அதிகம் பிடித்த இந்தப்பாடல் .. நதியில் மீன்கள் நீந்தும்மா அதில் நதிக்கு ஒரு வலியும் இல்லை அம்மா என்ற இவரின் கற்பனை அதிகம் பிடிக்கும்!அந்தப்படத்துக்கு பின் இவரின் புதிய பாடல்கள் என் பார்வைக்கும் செவிக்கும் இன்றும்கிடைக்கவில்லை.இந்தப்பாடலையும் ரசிங்கள்! சிற்பியின் இசை இப்போது வருவது இல்லை அவரின் புதிய தகவல் முடிந்தால் பின்னூட்டத்தில் தாருங்கள்§
இந்த உன்னிமேனன் அவர்களையும் நேரில் கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் ஒரு இசைநிகழ்ச்சியில் நேரில் பார்த்தும் ஒரு சந்தோஸம் எனலாம்!ம்ம்

10 May 2013

இப்படி ஒரு கடிதம்!ம்ம்ம்ம்


வசந்தகாலத்தில் உன் இதய
 வாசல் வந்தேனா!
வடிவானவள் ! !!

வருவாளா?
வழிப்பயணமாக வாழ்க்கையில்
விருப்புடன் என்றேனா!

விழியில் வந்தேனா?
வலியைத் தந்தேனா?
வடிவாக கேளுங்கள் 
வாழ்கையில் ஒன்று சேர்வோம் என்று வழிகேட்டேனா ?
வளர்த்தவர்களிடம்!


வாய்ப்பு இல்லை என்று வாய்மொழி விட்டாயோ 
வடிவானவளே??
வசந்தகாலத்தில் தொலைந்தேனா?
வாடித்திரிவேன் வாழத்தெரியாதவன்!
வீழ்ந்து போவேன் என்று வீற்றிருந்தாயா??

விண்ணைத்தாண்டாதவன் விடுதலை வேண்டிய நாட்டில் இருந்து
விட்டில் பூச்சியாக 
வீதியில் நிற்பான் என்று நினைத்தாயோ??
வீறுகொண்டு கடல் தாண்டி வெண்பனித் தேசம் கண்டு கால்வரும் போதெல்லாம் என் !
வாசலில் வந்துவிடாதே ?
விழியில் வலி என்று
வடிவைவிட இதய வடிவில் என் அருமை தோழி ஏற்றிவிட்டாள் இதய தீபம்
இப்போது இனிய இல்லறம்
தூற்றிவிடாதே !


வாழ்வோம் இனி வடிவாக 
வந்து வாழ்த்து முடிந்தாள் முகம் பார்த்து
வரும் போது உருகாதே!
வலி(வழி) கடந்தவன்!
வாழ்கின்றேன் எங்கோ!ம்ம்ம்


//
முஸ்கி-----இது மாத்தியோசி என்று சொன்ன ஒரு நட்புக்கு பதில்!ஹீ நான் தனிமரம் வெட்டிப்பயல் விற்பனைப்பிரதிநிதி அப்போது! ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இப்போது ஒரு குடும்பஸ்த்தன்!