12 May 2013

அந்தநாள் ஞாபகம்--12


வணக்கம் உறவுகளே நலமா?
அந்தநாள் ஞாபகம் ஊடாக சாமானிய வழிப்போக்கன் தனிமரத்தின் கடந்த கால நினைவுகளில் திரையரங்குகளில் திகைத்து ,திளைத்து ,தித்தித்த எண்ணங்களை சுமந்து பதிவு செய்யும் ஆசையில்!

 மலரும் இந்த தொடரில் இன்று மருதானை சென்றல் திரையரங்கில்  இருந்து பார்த்த இந்தப்படம் ஒரு மொக்கைப்படம்!

 என்றாலும் மருதானை சூழல் இன்னொரு உலகம் மூவின மக்கள் வாழ்ந்தாலும், அதிகம் இஸ்லாமிய உறவுகளும் ,சிங்களமக்களும், அதிகம் வாழும் பிரதேசம் அதில் தமிழ் மக்கள் சில தீவு அதிலும் இந்த  மருதானை அதிகம் அரபுலகத்துக்கு ஆட்களை அனுப்பும் முகவர்களின் கூடாரம் என்றால் மிகையாகாது ஒரு புறம் என்றால் !

இன்னொரு புறம் இதன் பகுதியான பஞ்சுகாவத்தை இத்துத்துப்போன இரும்பு முதல் புதிய வகை இரும்பு உபகரணம் வாகனப்பொருள் தேடும் இடம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே !


குடு மன்னர்கள் வாகனத்தின் பாகத்தைத் திருடும் கூட்டம் இருக்கும் பகுதி இந்த ஏரியாஅந்த ஏரியாவிலும் அடியேன் விற்பனைப்பிரதிநிதியாக அலைந்த காலங்கள் மனதில் வசந்தகாலம் தான். !


சென்றலில் அதிகம் ஆங்கிலச்சினிமா தான்  காட்சிப்படுத்தப்படும் முன்னர் அந்த வரலாற்றை மாற்றிய படம் இது என்பது அதன் வரலாற்றுக்குறிப்பில் பொன் எழுத்தில் தீட்ட வேண்டிய கவிதை என்றால் !மிகையில்லை காரணம் இந்தப்பட இயக்குனர் ஆர்.இரவிசங்கர் ஒரு கவிஞர் என்றுதான் எனக்கு முதல் அறிமுகம் பின் விக்ரமனின் சீடர் என்பதை கடந்து பின் குமுதம் வார இதழில் எழுதும் ஒரு நிருபர் என்பது பலர் அறிந்த ஒன்று !

இவரோடு திரைபடத்துறைக்கு வந்தவர்கள் மூத்தவர் பழனிபாரதி முதல் யுகபாரதி வரை இன்று கானமல் போபவர்களும் ,திடிர் திடீர் வருகையுடன் ஒத்துவராத நிலையும் நல்ல பாடல் ரசிகளுக்கு இழப்பு எனலாம்!


என்றாலும் எனக்கு இந்த ரவிசங்கர் பிடிக்கும் மறைந்த கருப்பையா மூப்பனார்  ஐயாவுக்கும் இவர் கவிதை பிடிக்கும் அதுவும் காதலர்களுக்கு அதிகம் பிடிக்கும்ம் "ரோஜாப்பூ சின்ன ரோஜாப்பூ "இவரின் கற்பனை என்று முன்னர் ஒரு வாரசஞ்சிகை பேட்டி கூறியதாக ஒரு நினைவு !

அதுகடந்து இந்தப்படத்தில் மனோஜ் பாத்திரம் மீது இருக்கும் கழிவிரக்கம்  எனக்கும் ஏனோ பிடிக்கும்


அந்நாட்களில் இலங்கையில் பல  பண்பளைகளில் இந்தப்பாடல் ஒலிக்காத நிகழ்ச்சி இல்லை எனலாம்!தபால் அட்டையில் பாடல்கேட்போரின் மனதில் பொறாமை தந்த தொலைபேசியில் கேட்டபாடல் நிகழ்ச்சியும் பின் அதன் விரிவாக்கம் பாக்ஸ்சில்(தொலைநகல்)  கேட்பாடல் என்ற தகுதி எல்லாம் இலங்கை பண்பலைகள்(fm )பலதுக்கு இருக்கும் வரலாறு என்பது பல வானொலி நேயர்கள் அறிவார்கள்

இப்போது தந்தியில்லா அழைப்பு (skipe) யுகத்திலும் இந்தப்பாடல் மறக்க முடியாது  எனக்கு அதிகம் பிடித்த இந்தப்பாடல் .. நதியில் மீன்கள் நீந்தும்மா அதில் நதிக்கு ஒரு வலியும் இல்லை அம்மா என்ற இவரின் கற்பனை அதிகம் பிடிக்கும்!அந்தப்படத்துக்கு பின் இவரின் புதிய பாடல்கள் என் பார்வைக்கும் செவிக்கும் இன்றும்கிடைக்கவில்லை.இந்தப்பாடலையும் ரசிங்கள்! சிற்பியின் இசை இப்போது வருவது இல்லை அவரின் புதிய தகவல் முடிந்தால் பின்னூட்டத்தில் தாருங்கள்§
இந்த உன்னிமேனன் அவர்களையும் நேரில் கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் ஒரு இசைநிகழ்ச்சியில் நேரில் பார்த்தும் ஒரு சந்தோஸம் எனலாம்!ம்ம்

19 comments :

MANO நாஞ்சில் மனோ said...

அற்புதமான இசையமைப்பாளரில் ஒருவர் சிற்பி, ஆனால் நம்மாளுங்கதான் அவரை மறந்துவிட்டார்கள் இல்லையா?

MANO நாஞ்சில் மனோ said...

அற்புதமான இசையமைப்பாளரில் ஒருவர் சிற்பி, ஆனால் நம்மாளுங்கதான் அவரை மறந்துவிட்டார்கள் இல்லையா?

திண்டுக்கல் தனபாலன் said...

மனதை தாலாட்டும் இனிமையான பாடல்...

மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்...
வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்...
தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்...
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்...

எங்கே அந்த வெண்ணிலா...?

Unknown said...

வணக்கம்,நேசன்!நலமா?///அருமையான ஞாபகப் பகிர்வு/பதிவு.மருதானை..............ஹி!ஹி!!ஹீ!!!!இப்போதும் அப்படியே தான் இருக்கிறதா என்று தெரியவில்லை.///சிற்பி........பெயருக்கு ஏற்றாற் போல் அழகிய அமைதியா இசைக்கு சொந்தக்காரர்.முழுங்கி விட்டார்கள்,பின் வந்த கொம்புகள்,ஹூம்!

Angel said...

எங்கே அந்த வெண்ணிலா பாடல் மிக அருமையான பாடல்
நினைவுகள் தாலாட்டுகிறது இனிய பாடல்களுடன் .
சிற்பி ..உள்ளத்தை அள்ளித்தா படமபாடல் கூட அவர்தானே இசை .

Anonymous said...

ரசித்தேன், சிரித்தேன். :)

Anonymous said...

ிற்பி ஓர் அற்புதமான இசையமைப்பாளர்.அவர் இசையமைத்த பாடல்களில் கல எனது பேவரிட்.
மருதானை அப்படியே தான் இருக்கின்றது.சென்றல் தியேட்டரைத் தான் எனக்கு தெரியவில்லை.சிலவேளை அதுதான் தற்போதைய சினிசிட்டியோ தெரியவில்லை

கரந்தை ஜெயக்குமார் said...

ரசித்தேன் அய்ய நன்றி

reverienreality said...

மலரும் நினைவுகள் தொடரட்டும் நேசரே ...அன்றே வந்தேன்..கமெண்ட் பெட்டி திறக்கவில்லை...

Unknown said...

இந்தப் பாடல் வெளிவந்த காலத்தில், காசெட்டில் பதிந்து கேட்ட ஞாபங்கள் தாலாட்டுகின்றன. குறிப்பாய் நான் உயர்தரம் படிக்கும் காலம் என்பது இன்னும் சிறப்பான அனுபவம்!

தனிமரம் said...

அற்புதமான இசையமைப்பாளரில் ஒருவர் சிற்பி, ஆனால் நம்மாளுங்கதான் அவரை மறந்துவிட்டார்கள் இல்லையா?//வாங்க மனோ அண்ணாச்சி முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!உண்மைதான் சிற்பியை கைவிட்டுவிட்டார்கள்§ம்ம்ம்ம்

தனிமரம் said...

மனதை தாலாட்டும் இனிமையான பாடல்...

மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்...
வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்...
தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்...
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்...

எங்கே அந்த வெண்ணிலா...?

12 May 2013 18:53 //நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம்,நேசன்!நலமா?///அருமையான ஞாபகப் பகிர்வு/பதிவு.மருதானை..............ஹி!ஹி!!ஹீ!!!!இப்போதும் அப்படியே தான் இருக்கிறதா என்று தெரியவில்லை.///சிற்பி........பெயருக்கு ஏற்றாற் போல் அழகிய அமைதியா இசைக்கு சொந்தக்காரர்.முழுங்கி விட்டார்கள்,பின் வந்த கொம்புகள்,ஹூம்!

12 May 2013 23:34 //வணக்கம் யோகா ஐயா நலம்.ம்ம் நானும் அறியேன் மருதானை நிலவரம்.ஏனோ சிற்பிக்கு அதிஸ்ட்ரம் கைகூடவில்லை. நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

எங்கே அந்த வெண்ணிலா பாடல் மிக அருமையான பாடல்
நினைவுகள் தாலாட்டுகிறது இனிய பாடல்களுடன் .!
ம்ம்ம்!
சிற்பி ..உள்ளத்தை அள்ளித்தா படப்பாடல் கூட அவர்தானே இசை !ஆம் அஞ்சலின் அவரின் இசையில்தான் அந்தப்படம் வெளிவந்தது.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்..

13 May 2013 06:31

தனிமரம் said...

ரசித்தேன், சிரித்தேன். :)//நன்றி இக்பால்செல்வன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ிற்பி ஓர் அற்புதமான இசையமைப்பாளர்.அவர் இசையமைத்த பாடல்களில் கல எனது பேவரிட்.!
ம்ம்!

மருதானை அப்படியே தான் இருக்கின்றது.!நன்றி தகவலுக்கு சகோ.

சென்றல் தியேட்டரைத் தான் எனக்கு தெரியவில்லை.ஓ அப்படியா சினிசிட்டியில் இருந்து புறக்கோட்டை(petta) போகும் வழியில் வரும் அருகில் புகையிரதநிலைய பண்டக்சாலை முன்னால்.ஹீ

சிலவேளை அதுதான் தற்போதைய சினிசிட்டியோ தெரியவில்லை!இல்லை சினிசிட்டி சமநேரத்தில் வந்துவிட்டது சகோ.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

13 May 2013 12:41

தனிமரம் said...

ரசித்தேன் அய்ய நன்றி

13 May 2013 18:14 //நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் கரந்தை ஐயா.

தனிமரம் said...

மலரும் நினைவுகள் தொடரட்டும் நேசரே ...அன்றே வந்தேன்..கமெண்ட் பெட்டி திறக்கவில்லை...//நன்றி ரெவெரி அண்ணாச்சி.வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இந்தப் பாடல் வெளிவந்த காலத்தில், காசெட்டில் பதிந்து கேட்ட ஞாபங்கள் தாலாட்டுகின்றன. குறிப்பாய் நான் உயர்தரம் படிக்கும் காலம் என்பது இன்னும் சிறப்பான அனுபவம்!//நன்றி சுரேந்திரகுமார் வருகைக்கும் கருத்துரைக்கும்.