31 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-32

தோல்வியின் போது தோள் கொடுக்காத 
தேர் போன்ற உலகம் வெற்றியின் பின்னே வரவேற்பு என்று
 வெற்றியுடன் மீண்டும் வரும்போது 
வெற்றிக்களிப்பை பங்கிட்டு தனதாக்கின்றது. 
தோல்வியின் போது துவண்டுபோகாமல் இருக்க நம்பிக்கையுடன் 
தோளைத்தட்டிக்கொடுத்த உறவுகள் 
தொலைவில் நின்று நிறைவான சந்தோஸம் காணும் 
இதுதான் இந்த உலக நியதி மச்சான் !

நீ இலங்கை மீண்டும் போகும் இன்றைய நாள் உன் வாழ்வில் மீண்டும் ஒளிபிறக்கப்போகுது மச்சான் , இன்னும் சில மணித்தியாளத்தில் கட்டுநாயக்காவில் இருந்து வெளியேறிதுடன் வெளியார் வரவேற்புப்பகுதியில் பாரு எல்லாம் தெரியும் மச்சான் பாபு .

என்னடா சொல்லுகின்றாய் சேகர் ?மூன்று வருடகள் கடந்த பின்  நீயே நேரில் பார்க்கப்போறாய் எனக்கு வேலைக்கு போக நேரமாச்சு .உனக்குத் தான்  இப்ப வெளிநாட்டு வாழ்க்கை நன்கு புரியுமே இங்கு வயிற்றுவலி என்றாலும் வாய்விட்டுச் சொல்லாம வேலைக்குப் போனால் தான் அன்றாடம் நம் பிழைப்பு நல்லா இருக்கும் .

அக்கரையில் இருந்து வெளிநாட்டு வாழ்க்கை ஜாலி என்று சொல்லுவோருக்கு எங்க புரியும் நாம் இழக்கும் வாழ்க்கையும். வாலிபமும் என்றுவிட்டு தொடர்பை துண்டித்தான் சேகர் .

ம்ம்ம் ..சரிடா சேகர் கொழும்பு போனதும் தொடர்பில் வாரன்!

சிந்தனையைக் கிளறிவிடுவதில் இந்த நினைப்பு அதிகம் தொல்லை தருமாம் அதுபோல 
மூன்றுவருடம் அரபுலகத்தில் தனியார் நிறுவனத்தின் பல்பொருள் அங்காடியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்துவிட்டு நாடு செல்லக்காத்து இருக்கும் நண்பன் பாபுவுக்கு ஸ்கைப்பில் சொன்னான் சேகர் !

மேற்பார்வையாளராக வேலை ,நான் பார்த்தவேலை என்னவோ குளிர்சாதனம் பூட்டிய பல்பொருள் அங்காடிக்கடையில்தான் வெளியில் தான் உடலை கருவாடு போல காயப்போடும் வெப்பம் புதிய மொழி ,புதிய, புதிய நண்பர்கள் .இறுக்கமான கட்டுப்பாடுகள் இந்த நாட்டில் .நம்நாட்டில் உடன் பிறந்தவார்களுக்கு சுபகாரியம் என்றாலும் ,உறவுகளுக்கு அவமங்களகாரியம் என்றாலும், தொலைபேசி அழைப்பில் தான் நம்உலகம். இன்பம் ,துன்பம் எல்லாம் இந்த் தொலைபேசி இப்போது ,ஸ்கைப் அத்துடன் .முகநூல் என இன்னும் ,சிலதை  பகிரமுடியும் அதுக்கும் இணைப்பு கிடைத்தால் தான் சாத்தியம்.

 இந்த ஊருக்கும் நம் ஊருக்கு வித்தியாசங்கள் பல .என்னதான் குவைத்நாட்டு டினார்  பெறுமதி நம் தேசத்தில் அதிகம் என்றாலும் அதுக்காக நாம் இழக்கும் ஆசாபாசங்கள் அதனைவிடப் பெரிது.

 என்ன செய்வது இனவாதநாட்டில் ஒன்றை இழந்தால் தான் ஒன்றைப்பெற முடியும் என்ற நிலை .

மூன்றுவருட அரபுலக வாழ்க்கை பல விடயத்தை சுயமாக சிந்திக்க  கற்றுத்தந்து இருக்கின்றது இனி வெளிநாடு என்று வெளிக்கிடுவது இல்லை.

 நம்மூரில்  என் உழைப்பிலும், நண்பனின் தயவிலும் ,நான் படித்த அரபுலக அனுபவத்திலும் இருந்தும் தனித்தொழில் தொடங்குவது தான் என் இலட்சியம்.

 என்னை நம்பி என் உறவுகள்கூட ஆயிரம் ரூபாய் கூடத்தராத நிலையில் லட்சங்களைக்கொடுத்து  நான் உடனே அரபுலகம் போகும் வரை தொடர்பில் இருந்தானே ?எப்போதும் தொலைவில் இருந்தானே சேகர் அவன் பெறுமதி என்ன என்று தெரியாமல் இருந்துவிட்டேன் .

இனி அவனின் கடனை ஈரோவில் கொடுத்து அடைத்தாலும் அந்த நம்பிக்கையான நட்புக்கு என்ன கைமாறு செய்வேன்.

 நான் உயிரோடு உயிராக படம் போல காதலித்தவளே என்னை விட்டு பிரிந்த போதும் .



என் கூட இருந்து என்னை வழிநடத்திய வழிப்போக்கன் சேகர் விற்பனைப்பிரதிநிதி என்றாலும் எனக்கு அவனும் ஒரு குருதான்!

அவன் போகும் ஆன்மீக பாதையில் அவனோடு என்றாவது ஒருநாள் அடிபணிந்து போகணும் இது நட்பு என்பதைக்கடந்து குருசிஸ்யன் போல.

 ஆனால் என்னால் அவன் போல கோபத்தில் திட்டவும் ,பிடிவாதம் பிடிக்கவும் ,முக்கிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் எத்தனை பெரிய முகநூல் குழுமம் என்றாலும் எதிர்த்துவிட்டு விலகிச் செல்லும் தனி ஒருவன் போல  இருக்க முடியாது அது என் பலவீனம்.

அவனை விட்டுப்போகமுடியாது .இதுவும் ஒரு ஜால்ரா கருணாநிதியை விட்டுப்பிரியாத அன்பழகன் போலத்தான் !

என்றாலும் இந்த சேகரின் பின்னே அரபுலகம் வந்த பின் என் பல நண்பர்களையும் ,தலைவர் சொல்லிவிட்டார் கட்சியைவிட்டு வெளியேறுங்கள்  கட்சி உறவுகளே என் கருத்தில் உடன்பாடு இல்லாத கழக கண்மணிகளே இனி உங்கள் முடிவு  என்றாலும் என்ற  அது எனக்கு வருத்தம் இல்லை நான் மலையும் கடப்பேன் எந்தநிலையிலும் என்று அதிகாரதொனியில் அவ்ன் க்ருத்து இட்டால்  அவன் சிலமுகநூலில் என்னை வம்பில் மாட்டிவிட்டாலும் இன்றும் சேகரின் , நேசிப்புக்கு முன் இந்த புதிய நட்புக்கள் முகத்துடன் கிட்ட நெருங்க முடியாது !சிந்தனை மீள் கட்டுநாயக்கா அண்மித்துவிட்ட நிலையில் இன்னும் சில நிமிடத்தில் தரையிறங்கும் சிறிலாங்கா ஏர்லைன்ஸ் அறிவிப்பு கேட்டு நிஜய உலகுக்கு வந்தான் பாபு! சொர்க்கமே என்றாலும் அது நம்மூருக்கு ஈடாகாது ராஜா இசை சேகருக்கு எப்போதும் ஒரு போதைதான் வாசிப்பு போல  அவன் தந்த பல ஒலிநாடக்கள்  இப்ப வீட்டில் இருக்கோ தெரியாது!`ம்ம்ம்




தொடரும்...

29 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-31


பொருளாதார வீழ்ச்சியும் தொடரும் வேலை வாய்ப்பின்மையும் வீழ்ந்து போகும் திவீர இனவாத முன்னெடுப்பும் இலங்கையில் வறுமைக்கோட்டுக்குள் வாழ்பவர்கள்  இனியும் குடித்தனம் நடத்தமுடியாது என்ற சிந்தனையின் வெளிப்பாட்டில் நெளிநாட்டுக்கு வேலை என்று போகும் அவல நிலைக்கு காரணம் தூரநோக்கற்ற மூவின அரசியல்வாதிகளின் இனவாத வெறியின் வெற்றுக்கோஸங்கள் என்றால் மிகையில்லை !

வீட்டில் அடுப்பு எரியவேண்டி அரபுலகம் செல்லும் பணிப்பெண்களும் அன்றாட உடல் ,உள தினக்கூலி வேலை என்று ஆண்களும் அரபுலகம் சென்ற பின் அங்கு அல்லல் உறும் வாழ்க்கைப்போராட்டங்களை எல்லாம் அதிர்ச்சிசெய்திகளாக, அன்பவங்களாக  ,கேட்டாளும் ,பார்த்தாலும் அரபுலகத்தாரின் பணத்துக்கு இருக்கும் மதிப்பு இந்த பாழப்போன உயிருக்கு இல்லை என்பதை பலதேசம் பார்த்த இந்த சாஹானா அப்பாவியின் மரணம் கூட மாற்றவில்லை மான்புமிகு மந்திரிகளின் மனதை!

 இதையெல்லாம் தொடர்ந்து நாளிதழலில் எழுத வேண்டிய கரங்கள் எல்லாம் இலியானவின் இடை பற்றி தமிழிலும் ,

இனவாத சிந்தனையை இறைக்கும் இந்த சிறுகூட்டத்தினரை!

 இன்றைய தலைப்பில் தலைவாபோல எழுதும் இனவாத சிங்களநாளேடுகளின் நாட்டாமைத்தனத்தையும் என்ன என்று சொல்லுவது .

இவர்கள் தான் இந்த நாட்டுக்கு நல்லதைச் சொல்லும் நடுநிலையாளர்களா? நான் அறியேன் கண்ணுக்கு எட்டியதூரம் வரை விடியல் இல்லை என்பதைச் சொல்வது போல வெளிநாட்டுக்கு போக காத்திருக்கும் அப்பாவிகள் பலரைப்பார்க்கும் போது !


தோட்டத்துறையின் நம்நிலையை எண்ணி என்ன செய்வது என்ற நினைபில் காத்திருந்தான் கட்டுநாயக்கா விமாணநிலையத்தில் கதவு எண்-7 வழியாக வெளியேறி சிரிலங்கன் எயார்லனைன்ஸ் உடாக குவைத் நாட்டுக்கு செல்வதுக்கு பாபு !

இன்னும் சிலநிமிடத்தில் கதவு திறக்கப்படும் என்ற அறிவிப்பு மனதில் இன்னும் சிலநிமிடத்தில் ஆட்சி பறிபோகும் என்ற  ஜனாதிபதியின் நிலைபோல படபடப்பை கொடுத்தது!


இந்த இரண்டுநாளுக்குள் எத்தனை மாற்றம் ஒரு நாள் முதல்வன் போல திடீர் என்று நாளையே நீங்கள் போகலாம் என்ற காதரின் உதவி அரபுலகம் செல்வதுக்காக துருதமாக பணம் அனுப்பிய சேகரின் அன்பு.

 திடீர் என்று வெளிநாடு போறேன் என்றதும் திகைத்துப்போன தந்தை ,மகன் திருந்தக்கிடைத்த சந்தர்ப்பம் என்ற தாயின் நினைப்பு ,அண்ணாவுக்கு நல்ல வாழ்வுகிடைத்துவிட்டது இனி என் படிப்புக்கு கவலையில்லை என்ற சங்கவி ,நல்ல வாய்ப்பு தொலைக்காதீங்க அண்ணா என்ற தம்பி விமலன் ,எல்லாரையும் அலைபேசியில் ஆட்டிவிக்கும் பாம்பாட்டி வித்தை  போல எல்லாரையும் உரிமையோடு ஆட்டிவிக்கத் தெரிந்த நண்பன் சேகர் என எதையும் நினைச்சுப்பார்க்க முடியுது இல்லை .

என்ன இருந்தாலும் என் ஒரு அழைப்புக்கோ, செய்திப்பதிவுக்கோ கூட பதில் தராமல் இருக்கும் மிரூனாவை நினைக்கும் போதுதான்!

 காதலைக் கடந்து கோபம் வருகின்றது நேரில் பார்க்க முடியாமல் வேலை மாரி எப்படி துணிந்து வவுனியா போனால்?
 எதுவுமே தெரியல இந்தப்பெண்களே எல்லாம் மோசம்தான்!

துளசியின் என் மீது மோகப் பொய்க்கு இருக்கும் மரியாதை உயிருக்கு உயிராக நேசிக்கும் எனக்கு இல்லையே ?அவள் என்னை விரும்புவது நான் அறியவில்லை. அன்று வத்தளையில் பார்ட்டிக்கு வந்தபின் ஒன்றாகப்போனோம் .மிருனாவை மட்டக்குளியில் விட்டுவிட்டு துளசியை அவளின் விடுதியில் சேர்த்துவிட்டு நிதானத்துடன் தான் என் அறைக்கு வந்தேன்.

 இடையில் தன்னிடம் எல்லைமீறி நடக்க முயன்றான் என்று என் மிரூனாவிடம் சொல்லியதை வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் பேதை போல என்னையும் அப்படி நினைத்துவிட்டாளே மிரூனா ?என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு கைபேசியின் அழைப்பு சிந்தனையை குழைத்தது !

ஹாலே என்ன மச்சான் பிளைட் ரெடியா, என்று மறுமுனையில் மீண்டும் சேகர்.

 இந்த இரண்டுநாளில் இவனின் அழைப்புக்கள் எல்லாம் இடைவிடாத இசைபோல இருக்கு இல்லை மச்சான் இன்னும் 5 நிமிடம் தான் இருக்கு வெளியேற குடியகழ்வு கடந்து ஏறும் நிலையில் காத்து இருக்கின்றேன் .

ஓக்கேடா சந்தோஸமாக் போ எதையும் நினைச்சு துஸ்ரக்கனவு போல மனசைக்குழப்பிக்காத  மீண்டும்  குவைத் போய்ச்சேர்ந்த பின்  நேரம் கிடைக்கும் போது பேசு என்னோடு பாபு!

நன்றிடா மச்சான் சேகர் !
உனக்கு எப்படி மறுஉதவி செய்யப்போறன் என்று தெரியல ?
என்னக்கு உதவி தேவைப்பாட்டள் நிச்சயம் கேட்கின்றேன் .ஆனால் எந்த நிலையிலும் மிரூனாவை கைவிடாத.

 அதுதான் நீ எனக்குச் செய்யும் பிரதி உபகாரம்  .

அவளைப்பற்றி மட்டும் பேசாத மச்சான் .என் உயிரே என்னுள்னிருந்து விலகும் நொடி போல அவள் தந்த வலிகள் அதிகம்டா.

 இந்த நாட்டைவிட்டுப்போகும் என்னை வழியணுப்பக்கூட வரவில்லை அதிகபட்சம் ஒரு கைபேசி அழைப்பில் கூட வாழ்த்தியிருக்கலாம் .நீ வெளிநாட்டில் இருந்து எத்தனை தரம் பேசிவிட்டாய் அவள் உள்நாட்டில் இருந்து ஒரு வார்த்தை ஒரு குறுஞ்செய்தி அவளை மறக்கணும் இனி!


இல்லை மச்சான் எல்லாம் உனக்கு நேரம் வரும்போது சிலதைச் சொல்லுகின்றேன் முதலில் நல்ல படியாக குவைத் போய்ச் சேர்!

தொடரும்!