14 April 2014

கிறுக்கலும் கீதமும்-3

தனிமரத்தின் அன்பு உறவுகள்
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
http://www.thanimaram.org/2012/10/2.html// முன்னம் கீறல்!!

உன்னை நினைக்காமல் பிரார்த்திக்கின்றேன்
நீ நலமாக நீடுழிவாழ வேண்டும் என்று !
நீயோ என் நினைவே நந்தி போல
 இடையில் வரக்கூடாது என்று!
நிலாவையும் தூற்றுகின்றாய் !!
என் நினைவோ உன்னோடுதான்
தூறத்து மின்னல் போல.!!!



//
காதல் தந்த பூவில் காயம் பட்டது
என் இதயம்.
காயவில்லை அதன் அடியில்
கை வைத்த உன் அண்ணாவின்
கத்திக் காயம்!
//
கையில் தந்த பூப்போல்
காளை இவனிடமும் காதல்ப் பூ
இன்னும் கண்ணீர் வடிக்கின்றது காதலியே !!
அருகில் இருக்கும் மரத்திடம் கேள்
அதுவும் தனிமரமோ கவிதை பேச!
/
அலைகள் போல நீ  இருந்தாலும்!
உதித்த  நிலவாக
எப்போதும் உன்  நடைப்பாதை
 கரை மோதல்கள் ,
நெஞ்சிலும் நீ!
கடல் கடந்தாலும்
நீ தான் வென் மதியாக மீண்டும் அங்கே!
//
//உருகிப்போவேன் பூப்போல் என்று
உன்னைப் பார்க்கும் வரை
உணரவில்லை .
இன்று உதிர்கின்றேன்
நீ என்னைப் பிரிந்த பின்!
 நீயும் ஒரு பூவோ !!


//
ரோஜாக்கள் போல இருவரும்
இணைந்து இருந்த அந்த இளமைக்காலம் !
இன்று நீயில்லாமல் சருகான இதயம்
 இன்னும் அழுகின்றது
நீர்த்தொட்டியில்!

12 April 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..16


அரசியல்  அறியாதவன் தனிமரம்  அன்பு நண்பனுக்காக அலைகடல் கடந்து
ஆசையில் எழுதுகின்றேன் ஒரு தொடர் !நட்பின் வேண்டுதலில் அதுவே என் பணி! ஐயா நான் ஒரு கைநாட்டு!
இனி........./ 
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
மக்களுக்கு செய்த சேவை இத்துடன் போதும் இனி எனக்கு ஓய்வு தேவை என்று ஒதுங்கக் கூட விரும்பாத  ஒரு துறை இருக்கும் என்றால் அது அரசியலில் மட்டும் தான் .

ஒருவனுக்கு ஆட்சிபீடம் ஏறும் போதைக்குள் புகுந்து விட்டாள் பின் மீளுவது இயலாத காரியம் திராவிடதின் கொள்கை நீட்சி  போல.


! இந்த ஊரிலும் மாகாண ஆட்சி கடந்து மக்களுக்காக சேவை என்று மத்திய ஆட்சியான இலங்கை பாராளுமன்றம்  போகும் சிறுபாண்மை மக்களின் நன்மதிப்பு பெற்ற எத்தனையோ உறுப்பினர்கள்?

 இந்த ஊர் வளர்ச்சிக்கு என்ன செய்து இருப்பார்கள் ?,

எல்லாம் வெள்ளை யானை தான் மக்களுக்கு சேவை என்று வெளிக்கிட்டு மக்களையே மந்தை போல நினைத்து மயக்கும் இந்த போதைக்கு சில தலைவர்கள் என்ற பதவி மட்டும் தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல அரசியல் வியாபாரமாகிவிட்டது.

 இங்கு எல்லாம் சாரயக்கடை திறக்கமட்டும் மத்திய அரசு உதவியது என்பார்கள் தங்களின் பலவீனம் சிறுபாண்மையென்று இன்னொரு சப்பைக்கட்டு.  இனவாத ஊதாரி ஊடகத்தில் இதையும் கூட பூடகமாகச் சொல்லுவார்கள் எங்க ஜானாதிபதிக்கு இது எல்லாம் கவனத்துக்கு கொண்டு வரவில்லை என்று  பெரும்பாண்மைக்கு சாமரம் வீசியபடி .

தெரியாமத்தான் கேக்கின்றேன் நண்பா இதிகாச பரதன் ஆட்சியில் பற்றில்லாத  பணிபுரிய வேண்டும் என்றுதான் அன்று ராமனின் தம்பி பாதுகையுடன் பட்டொளி வீசீனான்.

 இன்று இந்த ஊரில் என்ன இருக்கு ??ஜாதிக்கு ஒரு தலைவர் அவருக்கு பிடித்த நபர்கள் பொது வேட்பாளர்கள் .அதுவும் காசு இருந்தால் அரசியல் வியாபாரிகள். தத்தம் ஜாதிக்கு அரச  கரும கோட்டாவில் வேலைவாய்ப்பு.

 இதன் மூலம் குண்டர்  படை போல ஒரு பக்கம் இன்னொரு கவசம் போல நற்பணிமன்றம் என்ற போர்வையில் துதி பாடிகள். வாக்குச் சேர்க்கும் வங்குரோத்து அரசியலில் அபிமஞ்ஜூ போல சித்தத்தில் மாஜாலாம் எல்லாம் அறிந்தவர்கள் .

 சாமானிய தோட்டத் தொழிலாளர்   தயவில் பாராளுமன்றம் போகும் நம்மவர்களின் நிலைக்கு ஏற்ப!  எப்போதும் ஆட்சியில் பங்கு .

அதுக்கு ஏற்ற அரச பதவி என்று அடகு வைக்கும் கலாச்சாரம் எப்போது மாறும்?? அப்பையாக்களும் ,சூலாயுதங்களும் செய்ய முடியாத அபிவிருத்தியை அதிகம் மக்கள் விருப்பு வாக்கு நேர்மையில்  பெறாத இவர்கள் போல !



பொது நோக்கில் இந்த ஊரை அபிவிருத்தி செய்யும் காலம் எப்போது வரும் ?,

எங்கள் வாக்கின் பலத்தில் ஆட்சியில் அமர்ந்து பணம் ,பட்டம், பதவி ,பெற்று எங்களை மேய்க்கும் இவர்களுக்கு அடிமையாக இருப்பதை விட இனவாதக்கட்சிகளின் வேட்பாளர்களாக  பாராளுமன்றம் போவதே மேல் !

 நம்ம  நாட்டில் தான் மச்சான் எப்போதும் எங்கும் இன அரசியலைப்  புகுத்தி இந்த வளமான தேசத்தை  இப்படி குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல  ! இத்தனை காலங்கள்!

தங்களின் சுஜத்திற்காக இனவாதம் பேசும் நம்மவர்கள் எல்லாம் தம் பிள்ளைகளின் வாழ்க்கை மட்டும் முன்னேற்றக் கல்வியை ஆங்கிலமொழி என்றும் ,அத்தோடு சிங்களத்தையும் அப்பளுக்கற்ற முறையில் கற்க வைத்துவிட்டு அன்றாடம் தினக்கூலியானவர்களை மட்டும் அதிகம் தாய்மொழி என்ற தாரகத்தை .

மகுடி ஊதி தந்தை போல பாட்டுக்கட்டி ,பாதை எங்கும் உணர்ச்சிக்கவி பாடி உயிர் போகவைத்துவிட்டு உல்லாசமாக கடிதம் எழுதுவதும் அறிக்கை விடுவதும் என ஆயிரம் கதையளக்கும் .

இந்த முன்னேற்றம் பேசும் முகங்களை முதலில் இந்தியன் தாத்தா போல இடுப்பில் குத்தணும். இதன் மூலம்  இந்த ஊர் இன்னும் வளமாகும் என்று நினைக்கும் உங்க அப்பாவை உன் ஆசைக்காக அரசியல்வாதியிடம் அடிமைப்பட்டு சம்மந்தம் பேச சம்மதிக்க வைக்கலாம்  பூவே உனக்காக  போல  என்று நினைக்கின்றாயா பரதன்.??

 அப்படி ஒரு எண்ணம் சொல்லத் துடிக்குது மனசு போல இருந்தால் சின்ன ஜமீன் போல இப்பவே சீரழித்துவிடு!


 இல்லையோ நீயும் கறுப்பு ரோஜா போல ஆகிவிடுவாய் !