27 April 2016

யாசிக்கும் --- ஏ-தி-லி -8


 முன்னம் இங்கே-http://www.thanimaram.org/2016/04/7_25.html


உன் விழியில்
உலர்ந்த காதல்
உன்னை யாசித்து!
உருகி உன்னை பிரிந்து
உன்னோடு நடக்கும் இந்த
உன்னத நாள் போல இனி வருமா?,

                                     ( யாதவன் நாட்குறிப்பில்)

இனி....





விரும்பி ஆன்மீகத்தில்  தொண்டு செய்வதுக்கும் பேருக்கு பணி செய்வதுக்கும் இடையில் வித்தியாசம் அதிகம் இருக்கு! படித்த பட்டத்தாரி செய்ய முடியாத விடயத்தையும் சாமனிய அனுபவசாலி இயல்பாக சுமைபோல அன்றி சீக்கரம் செய்துமுடிப்பான் என்பது யாதார்த்தம். இதை எப்படிச்சொன்னால் புரியும் உனக்கு?,சிறப்புத்தேச்சி என்றா !இல்லை  உங்க பாட்டி செல்லம்மா  நம் தேசத்தில் இருந்து நடை நடையாக இடம் பெயர்ந்து ,அலைந்து, திரிந்து, பின் இன்று புலம்பெயர்ந்தாலும் இன்றும் நடப்பதுக்கு அஞ்சியதில்லை !

அவங்க தூக்கி ஓடியந்த பேரன்களில் நானும் இன்றும் நடப்பதுக்கு எந்த தயக்கமும் கொண்டதில்லை!  பாரிஸ்வாசி ஆனபோதும் மைடியர் மார்த்தாண்டன் போல  அல்ல !

ஆனால் நீ அவங்க நெஞ்சில் குழந்தையாக  தூங்கிய அன்றைய இருண்ட ஈழத்தின் காலத்திலும் சரி, இன்று பாரிஸ் சுதந்திர நங்கையாக வளர்ந்தாலும் நடக்க தயங்குகின்றாய்)))

 நீ நடந்தால் இதயம் பட ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி என்று பாட இன்று அந்த பாடகர் மூச்சுடன் இல்லை !

 இந்த ஜொல்லு சாமிக்கு அழகோ ?,

ஆமா தமிழில் எந்த அழகு,?அளகு?அலகு?, எனக்கு தமிழ்மொழி எழுத்து தகராறு ஆனால் பேச்சு மொழி அறிவேன்  !

என் போல உன்னால் பிரெஞ்சு எழுதமுடியுமா?,

 நிச்சயமாக முடியாது யாழினி !

 வா விரைவாக நடப்போம் ரயில் நிலையம் நோக்கி நான் வேலைக்கு போக வேண்டும்.


உன்னைப்போல படபட  என்று என்னால் நடக்க  முடியாது யாதவன் !

 தயவு செய்து இரு பஸ் வரும் வரை  மீண்டும் ரயில் நிலையம்  நோக்கி நடந்து  போக முடியாது யாதவன்.

 ரயிலுக்கு நேரமாச்சு படம் நீ பார்த்து இல்லை ஆனால் எனக்கு பஸ் வருகையைவிட ரயில் முக்கியம்.

 ஏன் இப்ப புதுசாக யாராவது பிரெஞ்சு/அரேபிய/ஆப்பிரிக்கா என  நண்பிகள் சிலரை ரயிலில் தேடிப்பிடித்து விட்டாயோ ,,

 ஹீ தேடினேன் வந்தது  என்று மந்தாரா போல ஒருத்தி வந்தால் இப்படிப் பாடலாம் ஆஸ் மலைக் காற்று வந்து என்று சொல்லுவேன் என்று நினைக்காத !இப்ப சினிமாப்பாட்டுக்கு தற்காலிக தடை இலங்கை அரச தணிக்கை போல ஆன்மீகத்தில் இருப்பதால்.

  இன்று  என் பாட்டி அலங்கார பூசைபார்த்து விட்டு வருவேன் என்று தன் இறுதி நேரத்திட்டம்  என் நினைப்பில் மண்ணாப்போச்சு! இலங்கை ஜனாதிபதியை சந்திக்க நினைத்த வடக்கு முதலமைச்சர் திடீர் சுகயீனத்தால் பின் தள்ளியது போல ஆகிவிட்டது.

நீயும் பாட்டியுடன் இருந்து பூசையைப் பார்த்து இருக்கலாமே,,? நல்ல பஜனை கலைகட்டும். ஆசைதான் ஆனால் விடிய நானும் தனியாக  வேலைக்கு 300 கிலோமீட்டர் கார் ஓட்டனும்.

  அதுவும் அதிகாலை குளிர் நித்திரை அதிகம் வரும்  உனக்கு என்ன ? சொல்லுவாய்!

அதுசரி அன்று நம்நாட்டில் இடம் பெயர்ந்த போது  நீ நித்திரை யாழினி!

அன்றும் சிறுவனாகவும்  பின் இன்றைய  பாரிஸ் வாலிபன் போலத்தான் பாட்டியின் கைபிடித்து பாட்டி சொல்லைத்தட்டதே என்பது போல அருகில் கைபிடித்து வந்தேன்!

அந்தக்காலம் எல்லாம் உனக்கு நினைவு இருக்காது! மூன்றாம்பிறை சிரிதேவி போல என்று சொல்லவா !இல்லை அமராவதி சங்கவி போல என்று சொல்லவா !இல்லை நினைவே ஒரு சங்கீதம் பட ராதா நிலை போல இது என்பதா??

 எப்படி யாதவன் வந்த சில மணித்தியாலத்தில் உங்க  குருசாமி சொல்லிய பணி எல்லாம் சீக்கரம் முடித்தாய்?,

 எனக்கு ஒரு சில நிமிடம்  துப்பரவுக்கருவி பிடிப்பதுக்கே உடல்களைக்கின்றது!  உன்னால் எப்படி 20 மணித்தியாலம் ஒருநாளில் தொடர்ந்து   பணி  புரிய முடிகின்றது,,?,சமையல் அதிகாரி , துப்பரவுப்பணி அதன் பின் ஆன்மீக தொண்டு என்று!

  அதுதான் நேரமுகாமைத்துவம்!

இது எல்லாம் உனக்கு தெரியுமா?, நான் உன்னிடம் சொன்னேனா  படிக்காதவன் என்று!

இல்லை நான் தான் தவறாக நினைத்துவிட்டேன்.எதைப்பற்றி யாழினி ?,எல்லாத்தையும் !



! என்ற அவளின் பெருமூச்சுக் காற்று படாத தூரத்தில் யாதவன் பஸ் வருகையை  எதிபார்த்த வண்ணம் பாதையை நோக்கினான்!

தொடரும்...






25 April 2016

யா-சிக்கும்--- ஏ-தி-லி--7

முன்னர் யாசிப்பு இங்கே-http://www.thanimaram.org/2016/04/6.html

மனமும் உடலும் சிலிர்க்கின்றது!
மனதோடு மழைக்காலம் போல
மந்தார மாலையில்
மனம்  போன போக்கில் நீ
மறந்தவன் பின் வரும் இந்த நிமிடம்!
               ( யாதவன் நாட்குறிப்பில்)



காத்திருப்பு என்பது கவிதையாக சொல்ல வேண்டும் என்றால் வீரகாளி அம்மன் கோவில் விருச்சமரம் கூட என் பொறுமை சொல்லும் என்பதா? கதையாக சொல்ல இது என்ன கோகுலம் படம் பானுப்பிரியா நிலை போல அல்லது பூவே உனக்காக விக்ரமன் கதை போலவா! இல்லை இன்னும் விடுதலைவரும் என்று விடுதலைக்கனவுக்கு விரும்பியும், விரும்பாமலும் போய் சிறைக்கம்பிகள் பின்னே சிந்தும் கண்ணீருக்கும் வலிகள் உண்டு காத்திருப்பின் நிலை சொல்ல !!

அவசர உலகில் காத்து இருப்பது என்பது தமிழ்த்தலைவர்களுக்கு சாத்திய மாகலாம் தங்கள் வாரிசுகள் சுகமாக வெளிநாடுகளில் வாழ்வதாள்! ஆனால் ஒரு வாலிபனுக்கு கலியாணச்சந்தையில் காலம் எல்லாம் நீ வேண்டும் என்று காதலுடன்  காத்திருப்பது என்பது எத்தனை அவஸ்த்தை என்பது பொதுவெளியில் பலருக்கும் புரியாத உளவியல் போராட்டம்!

.பொறுப்புக்கள் சுமந்து; கடமைகள் முடிந்து கலியாண கனவு தோன்றும் போது தலையில் இருந்த பொன்முடி  களவாடப்பட்டுருக்கும் அதிவேக சமையல் அறையின் வெப்பத்தால் அது அமைதிப்படை  சத்தியராஜ் அம்மவாசை போல!

அடுத்த வீட்டு தம்பிக்கும் கலியாணம் முடிவாச்சாம் !நீ எப்ப  கலியாணம் கட்டப்போறாய் ,,என்று இன்று போன கலியாணவீட்டிலும் உன்னைப்பற்றித்தான் பருவத்தே பயிர் செய்யனும் ஒழுக்க விதிமுறை ஓதல்கள் என்று  பேச்சு!

 நீயோ மலைக்குப்போறன் என்று எங்கள் பேச்சையும் கேட்பதில்லை !பெற்றவளின் பேச்சையும் கேட்பதில்லை .


உன்னால் பொது இடங்களுக்கு போக முடியவில்லை! உன் வருமானத்தை வாங்கிப்பதுக்கின்றோம்மாம் பானாபத்திரிக்கைச்செய்தி போல என்றல்லவா இருக்கு நம் நிலை! .

இது எல்லாம் உனக்கு தெரியாதா?, இதுவரை உன்னிடம் 5 ஈரோகூட உரிமையுடன் கடன் வாங்கியதில்லை என்று உனக்கு மட்டும் தெரியும் நிஜம் !என்று உடன் பிறப்புக்களின் ஓயாத புலம்பல் எல்லாம் தெரியாமல் போகுமோ காத்திருக்கும் போது?,


 வார்த்தைகளின் சதுரங்க வேட்டை ? அவசரக்குடுக்கை என்று உள்குத்து போட்டால் நான் என்ன செய்வேன் யாழினி ?,


ஒருவனின் இயல்பை மாற்ற முடியுமா?, அப்படி வழி இருந்தால் சொல்லித் தரலாமே சொல்லித்தரவா மஜா பாடல்போல?வார்த்தையாள் சுடுவது என்றால் நானும் அதிகம் சுடுவேன் பன்றித்துண்டு வத்தல் போல அதுமட்டுமா! கிரேப் போல கல்லில் சுடவும் முடியும் என்று உன்னிடம் சொல்ல மனம் துள்ளினாலும்!

 ஏன் உன் சந்தோஷ நாட்களில் அக்கினிசுவாலை வீசுவான் என்று நெஞ்சோடு குமுறும் என் நிலை எல்லாம் உனக்கு புரியாது!

உன் பார்வையில் நான் மோஷமான ஆண்! கட்டில் சுகத்துக்கு அலையும் நெற்றிக்கண் ரஜனி போல  காதல் பற்றி தெரியாத ஆவரம்பூ பட வினித் போல .

ஆனால் சாமி என்று இந்த வழியில் போக காரணம் உன் காதல் என்ற உண்மை சொன்னால் தென்றல் சுடும் படம் போல !

இன்று நீ இப்படி அழகாய்  என்னோடு   அருகில் வருவதைப் பார்க்கும் போது என்னருகில் நீ இருந்தால் படம் போலத்தான் நல்லாட்சியில் இணைந்த பெருங்கட்சிகள் போல என்று எல்லாம் மனம் எண்ணும் !



ஆனால் உனக்கு  புரியுமா??காதல் என்றாலே அகதியின் யாசகம்  குடியேற்றம் பெற இன்னொரு வழி என்று நினைக்கும் உன் போன்றோரின் சிந்தனைக்கு அகதியாக உள்ளே வரும் இந்த நாட்டு இயல்பு எல்லாம் கடிதம், கவிதை என்று எழுத இது பொக்கிஷம் படம் அல்ல!

 ஆனாலும் லவ்டுடே படம் இயக்கிய பாலசேகரன் ]போல செருப்பால் அடிக்க அவர் இப்ப சினிமாவில் இல்லாது போனாலும் அவர் போல நச்  என்று சொல்ல ஆள் இல்லை! என்ன யாதவன் உள்குத்து ஊமையாச்சோ?, சொல்லாமலே லிவிஸ்ரன் போல இல்லை  யாழினி!

ஆமா யாதவன் எப்படி உன்னால் எப்போதும் வசூல்ராஜா பிரகாஸ் ராஜ் போல சிரிக்க முடியுது![[ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கின்றாய் என்ற
 காலம் எல்லாம் இறந்தகாலம் அழுகை என்றால்அதையும் கடந்து வந்தவன் இவன் இது திமிர் அல்ல தன்நம்பிக்கை!









நிகழ்காலம் சிரிப்பு ஒன்றே மூலதனம் நானும் ஒரு வழிகாட்டி !

தொடரும்.....