27 April 2016

யாசிக்கும் --- ஏ-தி-லி -8


 முன்னம் இங்கே-http://www.thanimaram.org/2016/04/7_25.html


உன் விழியில்
உலர்ந்த காதல்
உன்னை யாசித்து!
உருகி உன்னை பிரிந்து
உன்னோடு நடக்கும் இந்த
உன்னத நாள் போல இனி வருமா?,

                                     ( யாதவன் நாட்குறிப்பில்)

இனி....





விரும்பி ஆன்மீகத்தில்  தொண்டு செய்வதுக்கும் பேருக்கு பணி செய்வதுக்கும் இடையில் வித்தியாசம் அதிகம் இருக்கு! படித்த பட்டத்தாரி செய்ய முடியாத விடயத்தையும் சாமனிய அனுபவசாலி இயல்பாக சுமைபோல அன்றி சீக்கரம் செய்துமுடிப்பான் என்பது யாதார்த்தம். இதை எப்படிச்சொன்னால் புரியும் உனக்கு?,சிறப்புத்தேச்சி என்றா !இல்லை  உங்க பாட்டி செல்லம்மா  நம் தேசத்தில் இருந்து நடை நடையாக இடம் பெயர்ந்து ,அலைந்து, திரிந்து, பின் இன்று புலம்பெயர்ந்தாலும் இன்றும் நடப்பதுக்கு அஞ்சியதில்லை !

அவங்க தூக்கி ஓடியந்த பேரன்களில் நானும் இன்றும் நடப்பதுக்கு எந்த தயக்கமும் கொண்டதில்லை!  பாரிஸ்வாசி ஆனபோதும் மைடியர் மார்த்தாண்டன் போல  அல்ல !

ஆனால் நீ அவங்க நெஞ்சில் குழந்தையாக  தூங்கிய அன்றைய இருண்ட ஈழத்தின் காலத்திலும் சரி, இன்று பாரிஸ் சுதந்திர நங்கையாக வளர்ந்தாலும் நடக்க தயங்குகின்றாய்)))

 நீ நடந்தால் இதயம் பட ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி என்று பாட இன்று அந்த பாடகர் மூச்சுடன் இல்லை !

 இந்த ஜொல்லு சாமிக்கு அழகோ ?,

ஆமா தமிழில் எந்த அழகு,?அளகு?அலகு?, எனக்கு தமிழ்மொழி எழுத்து தகராறு ஆனால் பேச்சு மொழி அறிவேன்  !

என் போல உன்னால் பிரெஞ்சு எழுதமுடியுமா?,

 நிச்சயமாக முடியாது யாழினி !

 வா விரைவாக நடப்போம் ரயில் நிலையம் நோக்கி நான் வேலைக்கு போக வேண்டும்.


உன்னைப்போல படபட  என்று என்னால் நடக்க  முடியாது யாதவன் !

 தயவு செய்து இரு பஸ் வரும் வரை  மீண்டும் ரயில் நிலையம்  நோக்கி நடந்து  போக முடியாது யாதவன்.

 ரயிலுக்கு நேரமாச்சு படம் நீ பார்த்து இல்லை ஆனால் எனக்கு பஸ் வருகையைவிட ரயில் முக்கியம்.

 ஏன் இப்ப புதுசாக யாராவது பிரெஞ்சு/அரேபிய/ஆப்பிரிக்கா என  நண்பிகள் சிலரை ரயிலில் தேடிப்பிடித்து விட்டாயோ ,,

 ஹீ தேடினேன் வந்தது  என்று மந்தாரா போல ஒருத்தி வந்தால் இப்படிப் பாடலாம் ஆஸ் மலைக் காற்று வந்து என்று சொல்லுவேன் என்று நினைக்காத !இப்ப சினிமாப்பாட்டுக்கு தற்காலிக தடை இலங்கை அரச தணிக்கை போல ஆன்மீகத்தில் இருப்பதால்.

  இன்று  என் பாட்டி அலங்கார பூசைபார்த்து விட்டு வருவேன் என்று தன் இறுதி நேரத்திட்டம்  என் நினைப்பில் மண்ணாப்போச்சு! இலங்கை ஜனாதிபதியை சந்திக்க நினைத்த வடக்கு முதலமைச்சர் திடீர் சுகயீனத்தால் பின் தள்ளியது போல ஆகிவிட்டது.

நீயும் பாட்டியுடன் இருந்து பூசையைப் பார்த்து இருக்கலாமே,,? நல்ல பஜனை கலைகட்டும். ஆசைதான் ஆனால் விடிய நானும் தனியாக  வேலைக்கு 300 கிலோமீட்டர் கார் ஓட்டனும்.

  அதுவும் அதிகாலை குளிர் நித்திரை அதிகம் வரும்  உனக்கு என்ன ? சொல்லுவாய்!

அதுசரி அன்று நம்நாட்டில் இடம் பெயர்ந்த போது  நீ நித்திரை யாழினி!

அன்றும் சிறுவனாகவும்  பின் இன்றைய  பாரிஸ் வாலிபன் போலத்தான் பாட்டியின் கைபிடித்து பாட்டி சொல்லைத்தட்டதே என்பது போல அருகில் கைபிடித்து வந்தேன்!

அந்தக்காலம் எல்லாம் உனக்கு நினைவு இருக்காது! மூன்றாம்பிறை சிரிதேவி போல என்று சொல்லவா !இல்லை அமராவதி சங்கவி போல என்று சொல்லவா !இல்லை நினைவே ஒரு சங்கீதம் பட ராதா நிலை போல இது என்பதா??

 எப்படி யாதவன் வந்த சில மணித்தியாலத்தில் உங்க  குருசாமி சொல்லிய பணி எல்லாம் சீக்கரம் முடித்தாய்?,

 எனக்கு ஒரு சில நிமிடம்  துப்பரவுக்கருவி பிடிப்பதுக்கே உடல்களைக்கின்றது!  உன்னால் எப்படி 20 மணித்தியாலம் ஒருநாளில் தொடர்ந்து   பணி  புரிய முடிகின்றது,,?,சமையல் அதிகாரி , துப்பரவுப்பணி அதன் பின் ஆன்மீக தொண்டு என்று!

  அதுதான் நேரமுகாமைத்துவம்!

இது எல்லாம் உனக்கு தெரியுமா?, நான் உன்னிடம் சொன்னேனா  படிக்காதவன் என்று!

இல்லை நான் தான் தவறாக நினைத்துவிட்டேன்.எதைப்பற்றி யாழினி ?,எல்லாத்தையும் !



! என்ற அவளின் பெருமூச்சுக் காற்று படாத தூரத்தில் யாதவன் பஸ் வருகையை  எதிபார்த்த வண்ணம் பாதையை நோக்கினான்!

தொடரும்...






8 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தொடர்கிறேன் நண்பரே

Yarlpavanan said...


கதை நன்றாக அமைந்திருக்கிறது
தொடருங்கள், தொடருவோம்!

வலிப்போக்கன் said...

அருமை........

”தளிர் சுரேஷ்” said...

இடையில் சில பகுதிகள் விடுபட்டுவிட்டது! பழைய நடிகைகளை நினைவுக்கு கொண்டுவருகிறீர்கள்! தொடர்கிறேன்!

Thulasidharan V Thillaiakathu said...

நேசன் பழைய சினிமாக்களை, நடிகைகளை, காட்சிகளை எப்படி இவ்வளவு நினைவு வைத்திருக்கின்றீர்கள்!!! சரியான இடத்தில் பொருத்தி என்று அருமை...தொடர்கின்றோம்

KILLERGEE Devakottai said...

பகிர்வு நன்று தொடர்கிறேன் நண்பரே
தமிழ் மணம் 2

Ajai Sunilkar Joseph said...

அருமையான பகிர்வு...

Nagendra Bharathi said...

கவிதையும் காட்சியும் அருமை