இசையின் ஸ்வரங்கள் புரியாதவர்கள் ,இசையை ஒரு சத்தம் என்பார்கள் .இனிமையான இசைக்கோர்ப்பு என்பது இந்த இசை உயிரின் அடி நாதம் .அது போல இசையை அபஸ்வரம் ஆக்கினால் அழகியல் அடியோடு கெட்டுவிடும். அபயஸ்வரம் மீட்டுவது போல அது போலத்தான் இயல்பில் ஈழத்தில் இனவாதம் மீட்டிய அத்துமீறலில் இலங்கையின் பல இருப்பிடங்களில் இருக்கவும் முடியாமல், இந்த உயிர் வாழ இடம்பெயர்ந்தோரின் இதயத்தில் இருக்கும் இசைக்கப்படாத சத்தம் பலது . !
இசையை ஜீவனாக ரசிக்கும் உயிர்களின் உணர்வுகள் இடம்பெயர்ந்து ,இழந்த சொத்துக்கள் ,உறவுகள் என இதுவும் கடந்து ,அகதியாக அலைகடல் கடந்து அகதியானவர்கள் இதயத்தின் இசைகள் எல்லாம் இன்னும் இந்தியாவின் காதில் மட்டும் நுழையவில்லைப்போலும் !
இரும்பால் ஆன செவி போலும் ஆட்சியின் அரசியல் கொள்கை வகுப்போரிடம்.
இலங்கை இனவாத அவலம் கேளாத இந்தத் திறத்தில் ஆலோசனைக்குழுவும் அவசர வருகையும், அவசியமா மச்சான் சிவா ?என்றான் தன் நட்பிடம் சேகர்.
அது 1999 இன் பிற்பகுதி அன்று இரவோடு இரவாக இரட்டைப் பெரியகுளத்தைக்கடக்கும் இறுதி நேரக்கெடுவில் இருந்து இனியும் இந்த ஊரைப்பார்போமா ?இனி எந்த ஊரில் விற்பனைப்பிரதிநிதி வேலை மாற்றிக்கொடுப்பார்கள் ? பல்தேசியக்கம்பனியில் ?
வவுனியாவில் இருந்து போன பின் நாங்களும் பரதேசி போலத்தான் ஆவோம்!முன்னர் இந்த ஊர் பலர் .வந்தோம்!
என்றாலும் நான் இந்த ஊர்க்காரன் இங்கு எல்லாம் எப்படி இராணுவக்கெடுபிடிக்குள்ளும் இருந்தோம் சிவா !
ஓம் சேகர் இனி அது ஒரு கனக்காலம் என்று நினைக்க வேண்டியது தான் என்றான் சிவா.
பல இடத்தில் பிறந்தவர்களையும் கழுத்துப்பட்டியும் கையில் ஒரு போனும் என பகட்டில் சினிமாவில் நடிக்கும் மோகத்தில் கவர்ச்சிப்புயலில் வருவது போல பலர் என்றாலும் வந்தாலும் விற்பனைப்பிரதிநிதி என்று நடிப்புத் திறமை இருந்தால் தான் நின்று நிலைக்கலாம் போல இந்த விற்பனைப்பிரதிநிதி வேலையில் நின்று பிடிக்கலாம் !
சினிமாவில் போல இல்லாமல் அறிந்தவர்களிடம் இமேச் பார்க்காமல் பேசுவது போல தன் விற்பனைப்பிரதிநிதி ஆட்களிடம் இயல்பாக நட்பாவது சேகரின் இயல்பு .
இந்த இராணுவக்கட்டுப்பாட்டின் அதிகாரத்தை ஆட்டிப்பார்க்கும் தமிழரின் இணையற்ற தலைவரின் கட்டளை பாக்ஸில் பறந்து வந்தது வவுனியா பட்டினசபைக்கு .பார்த்தவர்கள் படைத்தளபதியிடம் காட்ட பரவியது பறவைக்காய்ச்சல் போல இன்னும் இரண்டு நாளுக்குள் இந்த ஊரில் இருப்போர் எல்லாம் இடம் பெயருங்கள் இனி வரும் நாட்கள் இங்கே வெடிக்கும் இந்த மண் நம் சொந்த மண் இதை மீட்கும் இன்னொரு ஓயாத அலை விரைவில் என்ற அறிவுப்புச் செய்தி அந்த செய்தி கண்டவர்கள் ,பார்த்தவர்கள் பழகியர்களிடம் எல்லாம் பாதிச்சமிக்கையில் பாதுகாப்புப்படையினரின் திடீர் படைக்குவிப்பையும் கடந்து பல செவிக்கதை போலவே செய்தி கலவரப்படுத்தியது உண்மையில் பொதுமக்களிடம்.

அது கேளாத ஆட்சியான பொதுஜனஜக்கியமக்கள் முன்னனியின் ஆட்சிக்கட்டில் அப்போது கொழும்பில் ஆட்சி மாற்றம் வேண்டி நடந்து கொண்டு இருந்தது பந்தயக்குதிரை அடுத்தகட்சியில் இருப்போரை ஆளுக்கு பலபெட்டி கொடுத்தால் ஆளும் வாக்கு நம்பிடம் என்று .
அனால் வவுனியா மக்கள் அடுத்த ரயில் ஓடுமா இரட்டைப்பெரியகுளம் கடந்து இல்லை இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் போவோமா?? இந்தியா போவோமா கடல் வழியாக என்ற நிலை .
காற்றில் வரும் கீதம் போல சேகரின் அலைபேசிக்கு இறுதியாக அழைத்தார் பண்டார.
நீ இன்னும் வெளிக்கிடவில்லையா?
நான் மேலதிகாரி மட்டுமா உற்ற உறவு போலத்தானே உன்னுடன் பழகுவது ஐராங்கனியிடம் முதலில் நீ பேசு !
தொடர்பு துண்டிக்கப்படவில்லை .வெளியில் சொல்ல முடியாத நாகரிமற்ற வார்த்தைகள் செவியில் விழுவதை இடைநிறுத்த இனவாத ஆட்சி செய்ததுதொலைத்தொடர்புகளை துண்டித்தது மட்டுமே இனவாதம் முதலில் நிறுத்துவது மக்களிடம் உண்மைச்செய்தி வெளியில் போகாவண்ணம் தணிக்கை மட்டுமே!

தொடரும்!
12 comments :
இரும்பால் ஆன மனதும்...
தொடர்கிறேன்...!
இரும்பால் ஆன மனதும்...
தொடர்கிறேன்...!வாங்க தனபாலன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நிஜம் தான் நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.
ஹூம்!தொடரட்டும் நேசன்,தொடருவோம்.
இந்த நாதாரி மேனன் படத்தை போட்டு ரத்த கொதிப்பை உண்டாகுரீங்களே...!
இரும்பால் ஆன மனதும்...
தொடர்கிறேன்...!
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காமல் இருப்பது வேதனைக்குரியது.
முன் பகுதிகளை படிக்கவில்லை. அதையும் படித்து விடுகிறேன்.
தொடரும்...
எதிர்பார்ப்புடன் தொடர்கிறோம்...
ஹூம்!தொடரட்டும் நேசன்,தொடருவோம்.//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.
இந்த நாதாரி மேனன் படத்தை போட்டு ரத்த கொதிப்பை உண்டாகுரீங்களே...!//அவரும் என்.கே நாராயணனும் செய்யும் அரசியல் லீலை இன்னும் கொதிக்கு அண்ணாச்சி! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
இரும்பால் ஆன மனதும்...
தொடர்கிறேன்...!//ம்ம் நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காமல் இருப்பது வேதனைக்குரியது. //ம்ம் நிஜம் தான் ஐயா!
முன் பகுதிகளை படிக்கவில்லை. அதையும் படித்து விடுகிறேன்.//நன்றி முரளிதரன் சார் படித்து கருத்தினைச்சொல்லுங்கள்.
14 July 2013 18:34 Delete
தொடரும்...
எதிர்பார்ப்புடன் தொடர்கிறோம்...
14 July 2013 23:15 Delete//நன்றி சங்கவி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!
Post a Comment