06 June 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் ---35

வல்லரசுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் வளர்ச்சி காணாத நாடுகளின் மீது  தம் இருப்பினைத் தக்க வைக்க வடிகால சமாதான வடிவம் போடும் செயல்தான் சமூக அடிப்படைவசதியை அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேம்படுத்த இலவச நிதி ,அன்பளிப்பு என்ற வெற்றுக் காகித  வெள்ளை யானை கதை.



 .இலங்கையின் வடகிழக்கில் யுத்தம் நடப்பதால் அப்பகுதியில் செய்ய முடியாத செயல் பாடுகளை இறையாண்மையுள்ள பக்கம் பார்த்துச் செய்யுங்க எஜமான்களே என்று இவர்களின் குழுக்கூட்டத்தில் குனிந்து நிற்கும் அரசியல்வாதிகள் எல்லாம் கிடைக்கும் பணதினை எப்படி எல்லாம் பொதுப்பணிச்சேவை என்று புறாவை கூட்டில் அடைத்தார்கள் என்று ஆய்ந்து எழுதவேண்டிய ஊடகம் எல்லாம் அவர்களின் துதிபாடும் முகப்பு விளம்பரத்தினால் !வீழ்ந்து போய்விடும் விடயம் எல்லாம் இன்னும் பலர் இந்த நாட்டில் பேசுவது இல்லை.



 இலங்கையில் வெளிநாட்டுப்புலி என்று கொடிபிடிக்கும் கட்சிகளும் ,அரச சாராதா அமைப்புக்களில் தங்களின் ஒரு பொய் முகத்தை புனிதமானவர் மக்கள் சேவையன்றி அரசியல் இல்லை என்று அறிக்கைவிடுவதுடன் அடுத்த சந்திப்பு என்று ஏதாவது சமூக காப்பகத்தில் ஆயிரம் பேருக்கு குடிநீர் வசதியும்.  கல்விக்கூடங்களுக்கு.  சிறுதொகை கணனி அன்பளிப்பும். மற்றும் சமூக காப்பகங்களுக்கு வாகன அன்பளிப்பும். சேவையாளருக்கு நல் வழிகாட்டலும் என்று பத்திரிகைக்கு செய்தி கொடுக்கும் புனித எரில்  சொல்கையூம் /யாக்காசி /சுரேஸ் நம்பியார்,பன்கிமூன்  மான்களின் புழுகூ மூட்டைக்கு என்றுதான் விடிவு கிடைக்கும்!


 உண்மையில் தூய பொதுப்பணியில் தம்மை இணைத்துக் கொண்ட பல நல்ல உள்ளங்களையும்,  இந்த அரச சார்பு அமைப்புக்களும். அதன் தொண்டர்  சினிமா ரசிகர் போல ஜால்ரா  அல்லக்கைகளும். அவமதிப்பதும் .பாலியல் துஸ்பிரயோகம் என்று பல கதை கட்டுவதும் பத்திரிக்கையில் சந்தி சிரிப்பதும் பலராலும் படிக்கப்பட்டாலும் பார்த்தோம் என்பவர்களின் அடுத்த நிலை எல்லாம் இலங்கை ஏடுகள் எழுதுவதில்லை


. இனவாதி இவர் மட்டும் எந்த தேர்தல் என்றாலும் இந்த அரச சார அமைப்புகளும் ஏதோ அரசியலின் பின் சக்தி வெளிநாட்டுப்பணம்  புழங்கும் வெற்றிலையின் மாற்றுச்சுனாமி என்றும் பெரிய பெரிய குற்றச்சாட்டை வெற்றிலை போட்டு துப்பும் எச்சில் போல ஏடுகளைப்பார்த்து துப்பினாலும்!

 எழுது கோல்கள் எல்லாம் இது அரசியல் கறைகள் என்று அதிகம்  கிரிக்கட் போல அடுத்தத்துடுத்து செய்தி போடுவதுதில்லை!

சில குற்றச்சாட்டுக்களும் ,குத்தல்கள் எல்லாம் பொய் என்று நிராகரிக்கவும் முடியாது!

 பல பொது இடத்திலும் நல்லதும் ,கெட்டதும், இருப்பது மனித இயல்பு தான் அரசியலில் ஊழல் போல! நான் மக்களுக்கு என் காலத்தில் சேவையாக இதை எல்லாம் செய்கின்றேன் தம்பி பரதன் காமராஜார் போல ! இதில் ஆத்ம திருப்தி தான் என் சொத்து!

 இந்த காப்பகத்தில் சம்பளமாகவோ .இல்லை நன்கொடையாகவோ. நான் ஒரு சதம்கூட எடுப்பதில்லை.


 இந்த நிறுவனம் தொடர்ந்து இயங்க புலம்பெயர் தேசத்தின் உதவிகள் தேவை காலத்தின் காட்டாயம். நாட்டின் பொருளாதார நிலை நான் உனக்கு எழுத இது என்ன கருனாநிதி ஆளும்  மத்திய ஆட்சிக்கு மாநில  அரசு சார்பிள் மீனவர் தீர்வுக்கு  எழுதும்  கடிதம் போலவா??

 உன் அப்பா என்னோட அதிகம் நட்புப்பாராட்டி வாழ்கின்றவர். உன்னக்கு எப்படி எல்லாம்  இந்த அமைப்புக்கு செயல் வடிவம் கொடுக்க முடியுமோ ??இல்லை வழிகாட்ட முடியுமோ?, அதை என்னோடு சேர்ந்து செய் பணம் முக்கியம் இல்லை  என்று ரகுபதி ஐயா !

முதலில் என்னோடு தொலைபேசியில் பேசும் போது என்னிடம் அவர் மீதான எந்த அரசியல் எதிர்பார்ப்பும் இருக்கவில்லை.

நேரம் கிடைக்கும்  போதெல்லாம் அவரின் மின் அஞ்சலும் ,புகைப்படங்களும் அவரின் பரந்த சேவையை புலம்பெயர் தேசத்தின் வசதி வாய்ப்புக்களுடன் ஒப்பிடும் போது தான் உண்மையில் இந்த அமைப்பு ஒரு சுயநலம்மில்லாத சேவை மையம் என்பதையும் உணர்ந்துகொண்டேன்§


 அவருக்கு பக்க பலமாகி என்  பெயரினை சுயதம்பட்டம் அடிக்காமல் இந்த அமைப்பின் பினாமி  உறுப்பினர் போல இருப்பதினை   கஜபதி ஐயா அன்றி பணிபுரியும் அங்கத்தவர்கள் அறியாத செயல் !

அவரை நான் பெயர் சொல்லி அழைக்கும் உரிமையை அவரே தந்த விடயம் செயலாளர் பிரசாந்தி அறியமாட்டாள்!

 என் சமூக்கடமையை நண்பன் ஈசனிடமும் சொல்லியது இல்லை.

 இது என்ன அரசியல் வாழ்க்கையா,,??, எதிர்பார்ப்புடன்   எல்லாம் செய்ய.

 சமூக பொதுப்பணி என்பது வெள்ளை வேட்டிபோல இருக்க வேண்டும்  ஆனால் வேட்டி எல்லாம் கறைகள் இருப்பதே இன்றைய முதல்குடிமகன் முதல் அயல்வீடுவரை!


மக்கள் அவர்களின் பக்கம் என்று ஊடகம் உருவாக்கும் ஹீரோக்கள் உண்மையான கிராம மக்கள் தேவை அறிவார்களா!

தொடரும்....



 !

21 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன் நண்பரே

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

/// சமூக பொதுப்பணி என்பது வெள்ளை வேட்டிபோல இருக்க வேண்டும் /// அப்படிச் சொல்லுங்க...

Athisaya said...

புரியவேண்டிய உண்மை.எத்தனை பேருக்கு உறைக்கிறதோ??

Unknown said...

யதார்த்தத்தைப் புட்டுப்,புட்டு வைத்து தொடர்கிறது தொடர்,நன்று!!!

”தளிர் சுரேஷ்” said...

சமூகப்பணி வெள்ளை வேட்டிபோல இருக்க வேண்டும்! உண்மை நண்பா! அருமையாக சொன்னீர்கள்!

KILLERGEE Devakottai said...

உண்மையை உள்ளபடி சொல்லியவிதம் அருமை.
Killergee
www.killergee.blogspot.com

அம்பாளடியாள் said...

சலிக்காமல் இத் தொடரைத் தொடர்ந்தும் தரும் தங்களது உழைப்பிற்குத் தலை
வணங்குகின்றேன் சகோதரா ! வாழ்த்துக்கள் .

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் தொடருங்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

unmaiyanavan said...

மிகவும் எதார்த்தமாக உண்மையை பூட்டு வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் . தொடர்கிறேன்

Unknown said...

நான் புதியவன்;இனிதான் பழைய பதிவுகளைப் படிக்க வேண்டும்.

தனிமரம் said...

தொடர்கிறேன் நண்பரே// வாங்க கரந்தை ஐயா முதல் வருகைக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

சமூக பொதுப்பணி என்பது வெள்ளை வேட்டிபோல இருக்க வேண்டும் /// அப்படிச் சொல்லுங்க...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

புரியவேண்டிய உண்மை.எத்தனை பேருக்கு உறைக்கிறதோ??//நிஜம் தான் அதிசயா. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

யதார்த்தத்தைப் புட்டுப்,புட்டு வைத்து தொடர்கிறது தொடர்,நன்று!!!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

சமூகப்பணி வெள்ளை வேட்டிபோல இருக்க வேண்டும்! உண்மை நண்பா! அருமையாக சொன்னீர்கள்!//நன்றி சுரேஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

உண்மையை உள்ளபடி சொல்லியவிதம் அருமை.
Killergee//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் தேவக்கோட்டைகில்லர்கீ.

தனிமரம் said...

லிக்காமல் இத் தொடரைத் தொடர்ந்தும் தரும் தங்களது உழைப்பிற்குத் தலை
வணங்குகின்றேன் சகோதரா ! வாழ்த்துக்கள் // நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

வணக்கம்

மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் தொடருங்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

மிகவும் எதார்த்தமாக உண்மையை பூட்டு வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் . தொடர்கிறேன்//நன்றி சொக்கன் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நான் புதியவன்;இனிதான் பழைய பதிவுகளைப் படிக்க வேண்டும்.//நன்றி குப்பு முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.