13 July 2014

தாலிக்கு மாலை கோர்த்தோர்!

வணக்கம் வலை உறவுகளே !


எல்லோரும் நலம் தானே??

தாலியோடு தனிமரம் போல தவிக்கின்றேன் என்ற தொடர் தொடங்கி நீண்ட அறுவையின் பின் முடித்துவிட்டு எங்கே தனிமரம் ஓடிவிட்டது என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது நினைத்தாலே இனிக்கும் என்பது போல:)))!


  தொடர் எழுதும் ஆசையில் சில தொடர் என் பாணியில் எழுதிப்ப்பார்த்தேன் தனிமரம் வலையில்  :)) அந்த வகையில் இந்தத்தொடரையும்  பாராட்டி ஊக்கம் தந்த உறவுகள் பல இந்த வலையுலகில்  !


. மறுதாரம்  ஆதரிக்கின்றாயா என்றும் ?எதிர்க்கின்றாயா என்றும் என் நட்பு வட்டத்தில் தோன்றிய முரண்பாட்டை?, பொதுவெளியில் அரசியல்; சினிமா ஆழ்ந்து படித்த நூல்களின் துணையோடு வலையில் ஏற்றிய ஆத்ம திருப்தி கண்டேன்.


 அதுக்கான பின்னூட்டம் இட்டு முதல் இடம் பிடித்த வலைப்புயல் தனபாலன் சாருக்கு முதல்மரியாதை நன்றிகள்!



அதே போல இன்னொருவர் யோகா ஐயா இடையில் இருவரும் சில அங்கத்தினை சேர்த்தே படித்துவிட்டு பாராட்டியதுக்கு பாமரன் தனிமரத்தின் நன்றிகள் .




இவர்களைத்தொடர்ந்து இடையிடையே ரூபன், டாக்டர் முருகாணந்தம் ஐயா. கில்லர்ஜி தேவகோட்டை,இமா,நாஞ்சில் மனோ ,கலை, சொக்கன் ஐயா.இமா,மாதேவி,அதிரா,புலவர் இராமனுஜம்,கரந்தை ஜெயக்குமார்,துரை செல்வராஜீ,அஞ்சலின், பாரதிதாசன்,சீராளன்,ஆத்மா,சீனி,காற்றில் என் கீதம்,மூங்கில் காற்று முரளீதரன்,தளீர் சுரேஷ், முத்தரசு,ஒண்ணும் தெரியாதவன் இலியாஸ்,..அம்பாள்டியாள்  அக்காள் ! கிரேஸ், கஸ்தூரி மயிலன்  இத்தனை உள்ளங்களின் அன்பான பின்னூட்டத்துக்கு இதயம் கனிந்த நன்றிகள்.


 .இந்த தொடரை முகநூலில் லைக்செய்த முகநூல் நண்பர்கள் எல்லோருக்கும் என்னை இணைத்து இருக்கும் எல்லா முகநூல் குழுமங்களுக்கும் நன்றிகள்.


இந்த தொடரை எழுத கருக்களம் தந்த என் நண்பனுக்கு என் நன்றிகள்.



 என் சிந்தனைகளை சீர்படுத்தி என்னோடு பயணிக்கும் இன்னொரு உறவான இந்த ஐபோனுக்கும் நன்றிகள்:)))


படிக்காத தனிமரத்தின் எழுத்துப்பிழைகளைத் திருத்திய என் மனைவிக்கு இன்னொரு நன்றிகள்!

.தொடரின் இடையில் கவிதை எழுத இடம் கொடுத்த இமையும் இசையும் லங்காசிறி  எப்  எம்,இணையராகம் தமிழ்ழருவி ,புரட்சி எப் எம் வானொலிகளுக்கும் தனிமரம் நேசனின் நன்றிகள் .

தொடரின் நாயகி பெயரினை தேர்வு செய்த தமிழ்ழருவி அறிவிப்பாளினி சாந்திக்கு என் நன்றிகள்!

இன்னும் என்னையும், என் பகிர்வுகளையும் ஊக்கிவிக்கும் எல்லா உறவுகளுக்கும் என் இதயம் நிறைந்த பாதகாணிக்கை நன்றிகள். இனியும் தொடர் எழுதும் ஆசை தொடரும் என்றால்! தனிமரம் வலையில் மீண்டும் வசந்தம் வீசும்! அதுவரை  தனிப்பதிவுகளுடன் சந்திக்கும் ஆசையோடு தொடரில் இதுவரை தனிமரம்இப்போது  தோப்பு தனயன்  என் மகன் அன்பு வாரிசு   பிரியனின் ஐயா சிவநேசன் தியாகராஜாவின் நன்றிக்ளும் வாழ்த்துக்களும்!


 இந்தப்பாடலுடன்! மீண்டும் சந்திப்போம் நேரம் கிடைக்கும் போது!




யாரையும் மறந்து இருந்தால் மன்னிச்சும் கோபம் படுத்தி இருந்தால் திட்டியும் என்னையும் ஏனோ வலையில் உறவு ஆக்கியதுக்கு மொத்த நன்றிகள்§

7 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி... நன்றி...

இன்னுமொரு இனிய தொடரை (மனம் கவரும் பாடல்களோடு) விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்... தங்களின் துணைவியார் அவர்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

Unknown said...

ஹ!ஹ!!ஹா!!! பிரியனின் ஐயா சிவநேசன் தியாகராஜாவி ற்கு வாழ்த்துக்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

அடுத்தத் தொடரினை எதிர்பார்க்கின்றேன் நண்பரே
நன்றி
வாழ்த்துக்கள்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

பரந்து பட்ட உள்ளம் கண்டு நானும் மகிழ்வுற்றேன்..தங்களுக்கு உறுதுணையாக இருந்த தங்களின் மனைவிக்கு பாராட்டுக்கள். இன்னும் தொடரை எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துக்கள்....

மகனோடு கொஞ்சம் விளையாடி மகிழ்ந்து மனதின் கவலைகளை இறக்கி வைத்து விட்டு வாருங்கள் நண்பா...

KILLERGEE Devakottai said...


அடுத்த தொடரைத்தொடர வாழ்த்துக்கள் தனிமரமே...
எனக்கும் நன்றி சொல்லியுள்ளீர்கள் அதற்க்கும் நன்றி எனதுபெயர் கில்லர்கிரி அல்ல கில்லர்ஜி
நேரமிருப்பின் எனது ''ஹிந்தமிழ்'' AND ''கடவுளும் கொலையாளியும்'' காண்க... நன்றி.

மகிழ்நிறை said...

தங்களது தளம் வலைச்சரத்தில் இன்று அறிமுகமாகி உள்ளது.//http://blogintamil.blogspot.in/2014/07/around-the-world.html// நன்றி