04 July 2014

தாலியோடு தனிமரம் போல தவிக்கின்றேன் --மாங்கல்யம் சுபம்!

வாழ்வியலின் தத்துவங்களை வடிவாகச்சொல்லித்தரும் ஆசான் போன்ற வழிகாட்டிதான் இல்லற வாழ்க்கை என்ற அமைப்பு!

 இதில் கலந்து போய் குடும்பம் என்ற கூட்டினில் அடைந்து காலச்சக்கரத்தில் சித்தம், சுயம், சபலம், எல்லாம் தெளிந்து  ஆன்மா வீடேட்டற்றம் காணும் வழியை நம் இதிகாசம் எல்லாம் நீக்கமற நிஜங்கள் சொல்லி இருக்கும் செயல் பொய்யான பித்தலாட்டம் இல்லை!

.இல்லறம் வெறுத்து இறைவனடி சேரும் வரம் எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை தனிமரம்  போன்ற விவேகானந்தர் போல 


மோடி முதல் பிரெஞ்சுவா ஹோலண்ட் வரை இல்லறத்தின் இன்னல்களை இன்றும் பேசாமல் இருக்கும் சங்கதி எல்லாம் இந்த மானிட இல்லற வாழ்க்கையின் தனித்தொடர்கள்



.

.இல்லறம் கடந்து சிதம்பரத்தில் அப்பாச்சாமியானவர்கள் கதை எல்லாம் தனிமனித வாழ்வின் எச்சங்கள்!

 நீ என்ன நினைக்கின்றாய் என்று நான் அறிய மாட்டேன் ஜீவனி! ஆனால் என் வாழ்க்கைக்கு ஒரு முடிவு உன் பதிலில் இருக்கு.


 இப்ப சொல்லு என் தோழில் சாய்ந்து "என்னைத்தாலாட்டும் சங்கீதம் நீ என்பதா"

 இல்லை ஆசையில் ஒர் கடிதம் கெளசல்யா போலவா?,  தாலியோடு காத்து இருக்கின்றேன் தனிமரமாக!


 பரதன் என்னால் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் இரவெல்லாம் தூக்கம் கெட்டு சிந்தை கலங்கிய நிலை !

"நீ அறியாய் ஆனாலும் இன்னும் இருக்கின்றேன் என்பது போல மனசு எல்லாம் இடையில் வந்து போன ராம்குமார் நினைப்பு என் வாழ்க்கையில் ஒரு புள்ளி"

 அது பெரும்புள்ளி பாபு போலவோ என்று எண்ணித்தவிக்கின்றேன்.


 என் மீதான் உன் காதலைப்புரிஞ்சுக்க முடிகின்றது.
 ஆனால் இல்லறத்தில் இணையும் நிலை சாத்தியமா?

 நான் இன்றே கலியாணம் என்று  சொல்லவில்லையே!

 ஜீவனி முதலில் என் காத்திருப்புக்கு முடிவைச் சொல்லு .


நான் மீண்டும் பாரிஸ் போய் வசந்த காலத்தின் இன்னொரு நல்லநாளில் வாசல் தேடி வருகின்றேன் .


அதுவரை விழியில் வலி தந்தவனே என்று போனில் புதிர் போடு!

 முகநூலில் கண்ணா உன்னைத்தேடுகின்றேன் என்று பாட்டுப்போடு பார்த்து பார்த்து கண்கள் பூத்து இருப்பேன் என்று புகைப்படக்காட்சி பகிர்!


  ஹீ!!

பரதன்  உனக்கு எப்போதும் கற்பனைக்கொழுப்பு அதிமடா என்று ஜீவனி பரதனின் கைபிடித்து கிள்ளிய போது பாய்ஸ் பட பாடல் "ஆலே ஆலே ஒவ்வொரு பற்களிலும்சிரித்தேன் "என்று பாட நினைத்தான் பரதன்!

 .அந்த நேரத்தில். ஜீவனி உன்னைக்கட்டிக்கவா தொட்டுக்கவா என்று விக்ரம் படப்பாடல் போல பாட நினைத்தாள் !


 ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம் வர!

 ஆமா பரதன் நம் கதை தனிமரம் அறியுமோ ??




 பாரிஸ் வெட்டிப்பயலக்கு தெரியாமல் நான் பதுளை  வரவில்லை. என் நட்பு வட்டதில் அவனும் இன்னொரு நிழல் போல!

 அடப்பாவி அவனை நம்பாத  நம்கதையும் எழுதிவிடுவான் !



ஹீ அவன் எழுதினாலும் எனக்கு கவலையில்லை ஜீவனி. நாம் சேர்ந்தே பயணிப்போம் இனி பிரெஞ்சு நோக்கி.


 .உன் பாதையில் ஒரு நிழல்த்தடம் போல 
உன்னைதொடரும் ஒரு ஜீவன் நான் இனி
 உன்னில் இருந்து பிரியமாட்டேன்
 உன்னோடு என் பயணம் இணைந்தே !
உன் விழியில் என் பாடல்!
உன் நட்புக்கும் பிடித்த பாடல் எதுவாக இருக்கும்!
உன் தோளில் நானும் சாய்ந்து 
உன்னோடு பாடும் பாடல் இது




சுபம்........! 



வாழ்க்க வளமுடன்!



 வாழ்த்தும் நாம் தனிமரக்குடும்பம் வலையில்!



5 comments :

ஒன்னும் தெரியாதவன் said...

சூப்பரப்பு

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! எத்தனை பாடல்கள்...!!!

”தளிர் சுரேஷ்” said...

சுபமான முடிவிற்கு வாழ்த்துக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் நண்பரே

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2