முன்னம் ஏதிலி கதை இங்கேhttp://www.thanimaram.org/2016/05/10.html
இனி...
காதலிக்கும் போது ஆண்கள் எல்லாம் காலை முதல் மாலை வரை தமிழ்ப்பட புதுக்காட்சிக்கு வெட்டியாக காத்திருப்பது போல காதலிக்கும் போது ரயில்வே தரிப்பிடத்திலும் !பார்த்தேன் ரசித்தேன் படம் போல பஸ் தரிப்பிடத்திலும் !காதல்தினம் படம் போல பூங்காவிலும் காத்து இருக்கும் ஆண்கள்! கலியாணம் முடித்ததும் காதலை மறந்து போகும் கால மாற்றம் தான் என்ன?,
எனக்கு இது புரியவில்லை யாதவன் .!
எனக்காக முன்னர் நீ எப்படி எல்லாம் என் கவனைத்தை உன் மேல் திருப்ப லவ்டுடே ஹீரோ போல லோ லோ என்று அலைந்து இருப்பாய்! என் பின்னால் உனக்காக பிறந்தேன் படம் போல ! ஆனால் இன்று 15 நிமிடம் தாமதம் பணிக்கு என்பதில் உன் பதட்டம் என்னை சங்கடப்படுத்துகின்றது !ஊழல்குற்றவாளிகள் கூட நல்லாட்சி அரசில் அமைச்சர் பதவி ஏற்றது போல [[[
.எதுக்கும் !சிரித்து மயக்காத!! உன் சிரிப்புன் பின் இருக்கும் அழகைகூட என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது யாதவன்!!
இந்தளவு தெளிவாக பேசும் நீ ஏன் என் காதலை அலட்சியம் செய்தாய் ?யாழினி ,,
என் அந்த நேர சிந்தனை எல்லாம் படிப்பின் மீதும், எதிர்கால திட்டத்தின் மீதுமே குறியாக இருந்தது.
அப்ப நான் எல்லாம் திட்டமில்லாமல் வெட்டியாக ஊர்சுற்றும் துள்ளித்திரிந்த காலம் பட ஹீரோக்கள் போலவா இருந்தேன் !எனக்கு தெரியல ,உன்னைப்புரிஞ்சுக்க முயற்ச்சி செய்யல என்று நினைக்காத!
ஆனால் உனக்கும், என் அப்பாவுக்கும் சாஸ்த்திரத்தில் வரும் கேதுவும், ராகுவும் போல எட்டாம் பொருத்தம் என்றும் என்பதால் தான் கொஞ்சம் தயங்கினேன்§
))) ஏன் சிரிக்கின்றாய் .இல்லை நீ பிரெஞ்சில் சுதந்திர நங்கை என்று நினைத்தேன்! நீ இன்னும் இலங்கை சிறைக்கைதிகள் போல விடுதலை பொறாத அவலை என்று நினைக்கும் போது கூத்தணி அரசியல் நினைத்து சிரிப்பதா /அழுவதா என்பது போல இருக்கு உன் நிலையும்!
உண்மையில் உங்க அப்பா மீது இன்றும் வருத்தமில்லை! ஏன் தெரியுமா ,?.,எந்த தந்தையும் உங்க மகளை எனக்கு கட்டிவையுங்க இந்த உலகில் உங்களைவிட சந்தோஸமாக வாழ்நாள் எல்லாம் பொக்கிஷம் போல பாதுகாப்பேன் என்று சொல்லும் காதல் நாயகனுக்கு பச்சைக்கொடி காட்டியதில்லை! காதலுக்கு மரியாதை படம் போல !!
அவர் பார்வையில் என் ஏதிலி வாழ்க்கை பிடிக்காமல் போய் இருக்கலாம்!!
அது அவரின் தவறனா பார்வை! ஆனால் நீ ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் நண்டு பட ஹீரோ போல கட்டினால் யாதவனை அன்றி வேற யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என்று.
. நீ அப்படி சொல்லவில்லையே அன்று!
காலம் கடந்த முகநூல் திருமண வாழ்து போல இப்ப வந்து எல்லாம் என்மேல் குற்றம் என்று சொல்கின்றாயே?,
நான் செய்த தப்பு என்ன யாழினி?,,
யாசிக்கும் ஏதிலி என்று உன் நிலைதான்!
ஏன் சுயம் இழந்தாய்?, ஏன் பிரெஞ்சு நாட்டுக்கு வந்தாய்!
ஏன் பிரெஞ்சு வராமல் வேற நாட்டில் அகதியாக வாழ்ந்து இருக்கலாமே! நம் குடும்பம் சந்தி சிரிக்க நீதானே காரணம்!
நீ உன் நட்பு வெட்டிப்பயல் தனிமரம் மீது கைகாட்டலாம்! ஆனால் கட்சித்தலைவர் நினைத்தால் மாகாண முதல் அமைச்சர் மீது சுமுகமாக பிரச்சனையை தீர்த்து இருக்கலாம் போல இல்லாமல் அடுத்த கட்டம் முடிவு எடுத்தது நீதானே யாதவன்!சொந்தம் 16 படப்பாடல் போல
அந்த மாயா என்னைவிட அழகா ?,எப்படி அவள் உன் சிந்தனையை மாற்றினால் !சினேஹாவைவிட அழகாய் இருப்பாளா இல்லை சதிலீலாவதி பட கோவை சரளா போலவா,,?,இல்லை
இனவாத அரசை காப்பாற்ற எடுத்த முடிவு போலத்தான் நீயும் உன் குடும்பத்தை மட்டும் தானே சிந்த்தித்தாய்! இது உங்களுக்கு எப்போதும் வியாபாரம் தானே!
தொடரும்.....
5 comments :
வேதனை வரிகள்
தொடர்கிறேன் நண்பரே
தம +1
அரசியல் ,சினிமா இவற்றை கலந்து கதை எழுதுவதற்கு உங்களை தவிர வேறு யாராலும் முடியாது நன்றிகள் பகிர்வுக்கு....
உரையாடல் அமைப்பு சிறப்பு. தொடர்கிறேன்.
அரசியல் சினிமா உவமைகள் அருமை
தெரியாத அனுபவம்.. புரிந்து கொண்டேன்..
Post a Comment