16 June 2017

சிலிர்க்கின்றேன்))))

 பிரெஞ்சுதேசத்தில் வரும் வாரம்  முதல் வசந்தகாலம் தொடங்கப்போகின்றது. 21/6/மக்களும் இசைவிழாவுக்கு (fête    De la musique ) http://www.thanimaram.com/2011/06/blog-post_21.htmlதயாராகிக்கொண்டு  இருக்கின்றார்கள் .

இவ்வாரமே அதிக வெப்பம் தொடங்கி விட்ட நிலையில் மக்கள்கள் பூங்காக்களிலும் ,நீரோடைகளிலும் பொழுதினை போக்கும் காட்சியை காணும் போது மனதில் அழகான பணித்துளியே என்று  துள்ளி எழுகின்றது .

உண்மையில் பாரிஸ் மக்கள் இயற்க்கை நேசம்மிக்கவர்கள். பாரிஸ் அழகை பகலில் இரசிப்பதைவிட பின்னிரவில்  ரசிப்பது இன்னும் அழகாய் இருக்கும் .பாரம்பரிய கலைகளை இன்னும் பராமரிப்பதில் இவர்களுக்கு ஈடுஇணையாரும் இல்லை எனலாம்

வசந்தவிழாவுக்கு இசைவாக புறநகருக்கும் பாரிஸ் நகரத்துக்கும் இசைப்பாலம் போல போக்குவரத்துக்கள் எல்லாம் இலவசமாக சேவையாற்றுவது  தொடரும் ஒரு நிகழ்வு .

இவ்வாண்டும் இலவச சேவை பற்றிய காட்சி  விளம்பரங்கள் இங்கே பல ரயில்த்தரிப்பிடங்களிலில் காணமுடிகின்றது.

என்றாலும் மக்கள் இப்போது அதிகம் அங்காடிகளிலும், உணவகங்களிலும் காணமுடியவில்லை  ,பல உணவகங்கள் ஓட்டுவதை  நினைக்கும் போது தமிழரசுக்கட்சிக்கும் விரைவில் இதே நிலைதான் வரும் போல தோன்றுகின்றது))) .

இது இப்படி இருக்க .

தனிமரம் அடிக்கடி முகநூலிலும் , டிவிட்டரிலும் கவிதை எழுத ஆசைப்பட்டால் இடையில் இணைய வானொலிகள் களம் தருகின்றது வாங்க கவிதை எழுதலாம் !

நானும் கவிதை  போல சினேஹாவுடன்  ஒரு டுயட் பாடும் ஆசையில் ஓடோடி உழைத்து இலங்கையின் பாராளமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் வாகன இறக்குமதி வரிச்சலுகையில் ஒரு அவ்வுடிக்கார் வாங்க நினைத்தால் !என் முதலாளி விரைவில் வீட்டுக்கு அனுப்பிவிடுவதுக்கு வழிபார்ப்பதால் நானும் கொஞ்சம்  ஊசார இருக்கின்றேன் !முதல்வருக்கு ஆதரவுகொடுக்கும் மக்கள் போல )))


இப்படி எல்லாம் மனம் துள்ளி குதிக்க ஆசையில் கனவு காணலாம் என்றால் அதுக்கும் இப்போது திடீர் திடீர் என்று ரயில்ப்பயணம் தடைப்படுகின்றது விம்மலுடன் தொடர் போல )))

அதிகவெப்பத்தினால் இப்படி என்று அடிக்கடி அறிவிக்கின்றார்கள் ரயிலில் ஏறியமர்ந்தபின் .

இது என்ன மாயமோ ?நான் அறியேன் இலண்டனில் தொடர்மாடிக்குடியிருப்பு விபத்துக்கும் இந்தகுளிர்சாதன மின்கசிவுதான் காரணம் என்று ஊடகங்கள் சொல்வதை எல்லாம் கேட்க முடிவது ரயில் பயணத்தில் தான் அதனால் மீன்போல சிக்க மனம் இசையுதில்லை)))  ஒரு சின்ன பிளஸ்பேக்))

இப்படித்தான் ஒரு வசந்தகாலத்தில் நானும் பாரிசில் அவளைச்சந்தித்தேன்   .

முன்னம் சின்னவயதில் தாய் நாட்டில் அதுவரை அவளைப்பற்றி கொஞ்சம் தெரியும் என்றாலும் பாரிசில் பார்த்தது பருவ வயதில் .

பார்த்ததும் பிடித்தது சினேஹா படம் பார்த்த கொட்டஞ்சேனை ரீகல் திரையரங்கு போல விசாலமானது அவள் மனசு))) 

அவளுக்கு என்னைப்பிடிக்க வைக்கணும் என்று நான் பட்ட பாடு தனித்தொடர் எழுதனும் என்று ஆசை .

எப்படியாவது அவள் மனதில் ஓர் இடம் கிடைக்க வழிகாட்டுங்கள் என்று வெட்கம்விட்டு என் தேச உறவுகளிடம் கொசுவலையில்(gmail) ஊடக கெஞ்சியபோதும்!

 ஏனோ படித்ததிமிரில் இந்த பச்சைப்பிள்ளை காதலுக்கு கைகொடுக்கவில்லை பலர்.பட்டியல் இன்னும் நினைவில் இருக்கு))) எப்படியும் மனோகரா  பட வார்த்தை அடைந்தால் மகாலட்சுமி  இல்லையேல் மரணதேவதை என்ற முடிவுக்கு  வந்த போது முதலில் உதவியது நாற்று நீரூபன் தான் !

பாஸ் உங்களை புதிய உலகில் சஞ்சரிக்க வைக்கின்றேன். சினேஹாவை கைபிடிக்க வழிகாட்டுகின்றேன் வாருங்கள் தனிமரம் என்று வழிவிட்ட போது என் உலகு பரந்து விரிந்தது உஸ்சத் ஸ்தாயில். கஜல்பாடும் சினிவாஸ் போல 


  அதன் பின்  நீங்கள் பலர் அறிந்த ஓட்டவடை நாராயணன் முதல் பிரெஞ்சுக்காரன் வரை விடியவிடிய காதலிக்க வழிகேட்டு கவிதை, சிறுகதை ,தொடர்கதை ,நளபாகம் ,கும்மியடி கோலாட்டம்  என்று கும்மியபோது ஒரு சிலரின் நச்சுப்பார்வை சிறகு விரிக்க ))) பிரிவோம் சந்திப்போம் என்று தனிமரம் நண்பர்கள் போதும்!

 சிறகு  தளபதி வாந்தி வேண்டாம் வீதியில் விழுந்தாலும் என்று பிரிந்து போனாலும் உப்பிட்டவரை இன்றுவரை சிலரை நேசிக்க காரணம் இந்த சினேஹாதான்))) 


ஆனாலும் அவளுக்காக எத்தனை குத்து வாங்கினாலும் இன்னும் அவளின் புன்னகை போலவே தனிமரமும் சிலிர்க்கின்றேன் உன் உள்ளங்கையில் என் உயிரைத்தேடி))) 

அப்படி என்ன ரகசியம் /ஈர்ப்பு சினேஹாவிடம் என்று கேட்போருக்கு சொல்வது ஒன்றுதான் !

உடல்/உள்ளம் மெய்சோர்வுரும் போது என்னை இன்னும் துளிர்க்கவைப்பது ஆடம்பரம் அற்ற அமைதியும் மெல்லிய அலங்கார  இயல்பும் தான் .

இன்னும் இன்னும் அவளை அதிகம் பலருக்கு அறிமுகம் செய்யத் தூண்டுவது உன்னைநினைத்து படப்பாடல்  சில் சில் சில்லெல்லா காட்சி போல இயற்க்கை அழகுதான் ஆனாலும் தயவு செய்து சீனிவாஸ் இடம் இப்படி எல்லாம் தனிமரம் சொல்லுது என்று சொல்லிவிட வேண்டாம் !

சினேஹா அவளின் அப்பா அவர் அல்ல இயல்பு ஈர்புக்கு காரணம் டிரோன் பெர்னாண்டோ பற்றி அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹாமித் சொல்லி இருப்பதை கீழே பார்த்துக்கொண்டே வாங்க)))

 அழகான பணித்துளியை ரசிப்போம்))) சினேஹா என்பது இசைதாங்க))) சில் சில் என்று ஓடுவது இசை அன்றி வேறில்லை))




பாடல் இயற்றியது -ராஜ்குமார்.

8 comments :

Rajeevan Ramalingam said...

பிரான்சின் கோடை காலம் தொடக்கம், அழகான பனித்துளியே பாடல் வரை ஏகப்பட்ட சப்ஜெக்டுக்களைத் தொட்டு எழுதி இருக்கீங்க பாஸ்..!

RER B வெக்கை தாங்க முடியல..!!

கரந்தை ஜெயக்குமார் said...

இதோ காணொளி இணைப்பிற்குச் செல்கிறேன் நண்பரே

முற்றும் அறிந்த அதிரா said...

/////இப்படித்தான் ஒரு வசந்தகாலத்தில் நானும் பாரிசில் அவளைச்சந்தித்தேன் ////

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. சந்தித்தது மட்டும்தானே?:).. பரிஸ் காதல் தேசம் என்பது உண்மைதான் நேசன்.. காதலிக்க மட்டும் தான் அங்கு லாயக்கு:).. கலியாணம் குடும்பம் என்பதெல்லாம் ஊரிலிருந்து கூட்டி வந்து நடத்தினால்தான் உண்டு:).

முற்றும் அறிந்த அதிரா said...

//பார்த்ததும் பிடித்தது சினேஹா படம் பார்த்த கொட்டஞ்சேனை ரீகல் திரையரங்கு போல விசாலமானது அவள் மனசு)))//

ஹா ஹா ஹா இன்றைய பதிவில் ஓவரா சிரிக்க வைக்கிறீங்க நேசன்.. கொட்டாஞ்சேனை திரை அரங்கு அவ்ளோ அகலமோ? நாம் அந்த தியேட்டர் போனதில்லை.

நீங்க இன்னும் கொமெண்ட் செட்டிங் மாத்தவில்லை.. அதனால அதிக கொமெண்ட் போடாமல் போகிறேன்ன்.. ஏனெனில் ஒவ்வொரு தடவையும் புளொக் ஓபின் பண்ண வேண்டி வருது.. செட்டிங்கில் போய் கொமெண்ட் செட்டிங் மாத்தி விடுங்கோ.

தனிமரம் said...

அப்படி எல்லோரையும் சொல்லமுடியாது இங்கேயும் காதலித்து திருமணம் முடித்த பல ஜோடிகளை கண்டு இருக்கின்றேன் அதிரா! புரிந்துணர்வுதான் முக்கியம்))

தனிமரம் said...

தெற்கு கொழும்பு திரையரங்குகளில் அதிக விசாலமானது ரீகல் மட்டும் தான்)))

தனிமரம் said...

இப்போது மாற்றி இருப்பது சரியா என்று மீண்டும் நீங்கள் தான் சொல்லவேண்டும் பூசாரே))

முற்றும் அறிந்த அதிரா said...

இல்லயே நேசன்.. பழையமாதிரியேதான் இருக்கு, நீங்கள் மாத்தியபின் சேவ் கொடுக்க மறந்திட்டீங்கபோல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஸ்நேகா நினைப்பிலேயே இருந்தால் இப்பூடித்தான் ஆகும்:).., மாத்திவிட்டு சேஃப் சேஞ்சஸ் என இருப்பதையும் கிளிக் பண்ணோனும்... திரும்ப செய்யுங்கோ.. அதுவரை உங்களை விடப்போவதில்லை நான்.. விரட்டிக்கொண்டிருக்கப்போறேன்:).