06 June 2017

காற்றில் வந்த கவிதைகள்-15

http://www.thanimaram.com/2017/05/14.html

 --------------------------------------------


பிரெஞ்சில் இருக்கும் குடிவகைகளிலில் கூட
பிரியமுடன்  பின்னிப்பினைய முடியாத
பிரியாத தனித்துவம் உன்
பிறை போன்ற வதன  அழகு! இப்படி எல்லாம்
பிதற்றுவதும் உன்மேலான நேசத்தில்
பிரியமான பிள்ளைத்தமிழே)))
----




கோடைகாலத்தில் வரும் 
ஆலைங்கட்டி மழைபோலவே
அமைதித்தனிமையில் உன்னை எண்ணியே
அழைகின்றது  நீ அறியாத என் 
ஆத்மா!/--
------------------------------------------

--வசந்தகாலத்தில்
 வாடவைத்துபோன பூவோன்று
வந்தே குளிர்காலத்தில் துளிர்க்கும்
வாசமில்லா லுனாமரம் போல 
வாழ்க்கை எப்படி ?என்ற
வார்த்தையுடன் மீண்டும்!
வந்தாவளுக்கு மொழி தெரியாது 
வாய்பேசாத குழந்தை போல
வாஞ்சையுடன் நிழல் பரப்பி!
வா ஒரு பாடல் இசைப்போம் இதழில்!

-/////


இயற்க்கையின் சீற்றம் ஒரு புறம்,
இறையாண்மை பேசும் கூட்டம் 
இன்னொரு சேலைகட்டி ,
இழந்து தவிக்கும் உறவுகள்
இழப்புப்பற்றி தேடாமல் 
இத்தனையும்  பார்த்து !
இணையத்தில் இமைகளில்
இருந்து இருசொட்டு நீர் 
இன்றைய பொழுது சிந்தியது!




---------------------------
கனவுகள் போல கருவில் சுமந்தவள்
காணாமல் போன மகனைத்தேடும்
கதைகள் பல இனவெறி வெற்றி என்ற
கழுத்தறுப்பு  செய்த கதைகள் எல்லாம்
கதை போல எழுதனும் 
கலங்கிய ஈழத்தாய் 
காணாமல் தேடுவோரின் குரலாய்!




4 comments :

Yaathoramani.blogspot.com said...

அற்புதம் மிக மிக அற்புதம்
காதலும் சோகமும்
இப்போது என்னுள்ளும்
மனம் தொட்ட கவிதைகள்
பகிர்வுக்க்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

இனிமையும் சோகமும் கலந்த கவிதை

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... ரசித்தேன்...

Nagendra Bharathi said...

அருமை