//////////////////
தமிழ்மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் அண்ணா என்கின்ற அண்ணாத்துரையின் வருகையும் ,எழுச்சியும் புதிய பாதையை காட்டியது ஒரு புறம் என்றால்! உணர்ச்சி அரசியலைத்தூண்டியதில் முதல் இடம் அண்ணாவுக்கே !
அவரின் இதயம் கடன் கேட்டவர் எல்லாம் பின் வந்த ஆட்சியை எப்படி கரைசேர்த்த ஊழல்வாதிகள்! பேச்சுத் திறமைகள்,உண்ணாவிரத நாடகம் எல்லாம் ஊடகங்கள் பேசியது கடந்தகாலங்கள்.
அதே போல ஈழத்தில் எங்கள் அண்ணா என்று ஒருவரை அன்புடன் நேசித்துடன்,அவரின் வழியில் எத்தனை ஒப்பற்ற உயிர்த்தியாகங்கள் எல்லாம் எம் வீரமறவர்கள் செய்த வரலாற்றுக்கதைகள் எல்லாம் இன்னும் முழுமையாக பதியப்படவில்லை ஈழத்து இலக்கிய மேடையில் !
அது போல பெரியண்ணன் என்றாலே இலங்கை அரசியலில் எப்போதும் ஒரு சந்தேகக்குறியீடு எப்போதும் இருக்கும் சிங்களக் கட்சிகளிடம். இது ஜெயவர்த்தனமுதல் இன்றைய நல்லாட்சிவரை தொடரும் ஒரு இராஜதந்திரம் .
அண்ணா என்றாலே ஒரு திமிர்த்தனம் /அல்லது மூத்தவர் என்ற பட்டொளியை காலம் பலருக்கு தலைக்கு மேலே வீசும் ஒளிக்கதைகள் எல்லாம் இலக்கணப்பிழை என்று ஈழத்து இலக்கியம் முத்திரை குத்தும் குரலற்றவன் குரல் என்கின்றது.
இவை எல்லாம் விரைவில் அலசலாம் முதல்வர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மாணம் போல. இப்படித்தான் அவன் அண்ணா ஒரு நிமிடம் என்ற மறுமுணையில் அழைத்தவன் யார் ?என்பதை அறியும் ஆவலில் யாழவன் நீதிமன்றம் இனவாதிகளுக்கு கொடுக்கும் உடனடி சலுகை நிபந்தனை விடுதலை போல சொல்லுங்க நீங்க யார் ?
அண்ணா நான் கந்தன் ஸ்டோர்ஸ் மகன் நிலாந்தன் .நினைவு இருக்கா?
ஓ முகநூலில் எழுதுவோர் என்றாலே எல்லோரும் கழிப்பிடத்தில் கீறுவோர் வெறும் வெற்றுப்பதர்கள் என்ற அந்த எலக்கிய புத்திசீவிக்களில் நீ ஒருவனில்லை என்று புரியுது !))
உங்களுக்கு எப்போதும் எலக்கிய குசும்பு தான் .திருந்தவே மாட்டீங்களா?
எப்படி நிலாந்தன் ?கெட்டவன் என்றால் தானே திருந்துவுதற்கு !
அண்ணா யார் அந்த புன்னகை இளவரசி? பாரிசில் உங்கள் வாழ்க்கையையே மாற்றிய வித்தகி ? இங்கே இருந்த போது ஜொல்லுவிட்ட உங்களின் இன்னொரு முகம் பற்றி தம்பி போல நான் மல்லி பேசலாமோ? பொதுவெளியில் !
உங்களின் மொழிநேசிப்பு எல்லாம் ஒழித்து !ஏன் ஆன்மீகம் எல்லாம் போறீங்க என்று தெரிஞ்சுகொள்ளாலாமா? உங்களுக்கு ஆட்சேபனையில்லை இல்லை என்றால்!
என்னது தெரிஞ்சுகொல்லப்போறியோ?)) மடக்கிவிடுவீங்களே )))
ஆனால் அண்ணா !நிச்சயம் உங்களிடம் சொல்லப்படாத ஒரு கதை நிச்சயம் இருக்கு இருக்கும் பூம்பாறையில் பொட்டு வைத்த பூங்குருவி யார்?
அதை பொதுவெளி முகநூலில் கேட்கமுடியவில்லை ?நீங்கள் முன்னர் வழிகாட்டிய பலர் இப்போது விற்பனைப்பிரதியில் இருந்து மாகாண அதிகாரிகளாகிவிட்டார்கள் !
அதைவிடு நீ எப்படி இருக்கின்றாய் தம்பி பார்த்து பல வருஷங்கள்!
ஆமா நீங்கள் இங்கு இருந்து புலம் பெயர்ந்து போனபின் ஒரு தொடர்பையும் பேணுவதில்லையே?
தாயக உறவுகளுடன் ஏன் இந்த பாராமுகம் என்று எல்லாம் கேட்கும் தகுதி எனக்கில்லை ! போரின் முடிவின் பின் அப்பாவி மக்களுக்கு ஆற்றுப்படுத்த ,பொருளாதார சுயதேவைகள் , திருத்திய திட்டமிட்ட சீரமைப்புக்கள் என எதுக்கும் உதவி செய்யாத பல புலம்பெயர் அமைப்புக்கள் போல !
ஆனால் நான் உங்களை அழைத்தது மிகமுக்கியமான ஒரு உதவியை கேட்டுப் பெறுவதுக்குத்தான் அண்ணா !
என்ன தம்பி !நீ உங்க அப்பாவின் பணத்துக்கு முன் நான் எல்லாம் வெறும் சாதாரண விற்பனைப்பிரதிநிதி மட்டும் தான் ! புலம்பெயர்தேசத்தில் இன்னும் அன்றாடம் காட்சி தான் என்னிடம் இருப்பது தன்னநம்பிக்கை லுனா மரம் போல நினைவுகள் அன்றி வேறில்லை !
எப்போதும் உங்க அப்பாவின் கடின உழைப்பு இன்னும் நினைவிருக்கு ஆனஸ்ட் ராஜ் படம் தேவன் போல அல்ல ))
. உங்களுக்கு சினிமாப்படத்தில் பரீட்சை வைத்தால் சிறப்பு பரிசு கிடைக்கும்! ஏன் இந்த குசும்பு நிலாந்தன் !
அப்பா எப்படி இருக்கின்றார் ? அப்பா இப்ப சித்தசுவாதீனமாகிவிட்டார் ? ஏன் என்னாச்சு எல்லாம் எங்க அண்ணா கமலேஸ்சினால்!
விரைந்து வரும் விம்மல்--------....
4 comments :
நிச்சயம் உங்களிடம் சொல்லப்படாத ஒரு கதை நிச்சயம் இருக்கு இருக்கும்
நானும் அப்படித்தான் நினைக்கிறேன் நண்பரே
தொடருங்கள் தொடர்கிறேன்
அண்ணா என்ற சொல்லை பல தளங்களில், பல கோணங்களில் எழுதியவிதம் நன்று பாஸ்
தொடர்கிறேன்...
சொல்லப்படாத கதை நிறைய இருக்கும் போலயே.....
Post a Comment