10 June 2017

காற்றில் வந்த கவிதைகள்- 16.

முன்னர் இங்கே-http://www.thanimaram.com/


கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன்.




---------------------------------

கீறல் விழுந்த ஒலிநாடா போல
கிறுக்கிய உன் வார்த்தைகள்
கிடுகிடு என இன்னும் இதயத்தில்
கிளரிச்செல்கின்றது ஓயாத வலிகளாக!
கிறுக்கன் இவனுக்கு
கிளிண்டன் வீட்டிலும்
கிடைக்காது ஒரு தகுதி!
/////
--------------------------------------------------------------
வசந்தகால வருகையில்,
வளையோசை வாங்கி
வருகின்ற வழி எங்கும்
வானவில் போல  நின் வதனம்
வருடும் காதல் சொல்லி!
வந்திடு என் காதலியே என்று
வருடிக்கொள்ள  வருகின்றது 
விருப்பம் !வருமா வசந்தம்!

----

உன்னை என்றும் நேசிப்பதில் தான்
உருகிப்போகும் நெய் போல என் இதயமும்
உதிரும் பூவோடு உனக்காய் 
உச்சிப்பொழுதிலும் காத்திருக்கிறது !நீயோ
உதறிப்போக உருப்படியான காரணம்
உதவுமா என்று தேடுவதுதான் 
உண்மையில் மென்வலு அரசியலோ?


/////

பெளர்ணமியில் கூட உன்னையே
பெளத்திரமாக பேசவும்,
பெளதிக வாழ்வில் நீயே
பெரும் கவிஞர்களுக்கு எல்லாம்
பொக்கிஷம் போல 
பொங்கும் தேவதையே  நிலா!
பொங்கட்டும் பரவசப்பாடல்கள்!

///
வருவேன் என நீயும் 
வரக்கூடாது என்றும் நானும்
வளைந்து போகும்  வீதியில் இன்றும்
வழிக்காட்டியே வானொலிகள் எல்லாம் 
வாசம் கடந்து வாழ்வதும் எல்லாம்
வடிவான தமிழிலில் வழுக்காகிலாத  தமிழில்
வரிவடிவம் எவர் எழுதுவாரோ!
வந்தேறு நாட்டில்  வாசம் மறவாத
வடிகட்டின முட்டாள்)))!
வருவேன் பட்டதாரியாக))
வயசு போனபின்))!


5 comments :

Yaathoramani.blogspot.com said...

மனதை தென்றலாய் வருடிச்
செல்லும்படியாய் மிக இயல்பான
வார்த்தைகளுடன் காதலின்
ஆழம்காட்டிப் போகும் கவிதைகள்
அருமையிலும் அருமை
வாழ்த்துக்களுடன்...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

முற்றும் அறிந்த அதிரா said...

பல நேரங்களில் இந்த லிங் திறக்க ரைம் எடுக்கிறது நேசன்... அதனாலயே வராமல் விட்டு விடுவதுண்டு...

அழகாக எழுதுறீங்க உணர்ச்சி பூர்வமாக இருக்கு எழுத்துக்கள்.

முற்றும் அறிந்த அதிரா said...

//வருவேன் என நீயும்
வரக்கூடாது என்றும் நானும்//

அழகிய வரிகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

அழகிரிய வரிகள்
ரசித்தேன் நண்பரே
நன்றி