----
பொதுத்தளத்தில் சேவையாற்ற வருபவர்கள் மீது எப்போதும் ஒரு அரசியல்க்குற்றச்சாட்டு இருக்கும் .தன் தேர்தல் தொகுதிக்கு அதிகமாக நிதிப்பாதீட்டை வழங்குகின்றார், தன் தேர்தல் தொகுதி வியாபாரிகளுக்கு சலுகை வழங்குகின்றார் , தன் ஊர் வளர்ச்சிக்கு இயற்கையின் செயல்பாட்டை மீறிச்செயல்ப்படுகின்றார் என்றெல்லாம் !ஆனால் யதார்த்தம் என்பது இது வெறும் இதோ ஆட்சிகலைகின்றது என்ற ஊடகச்செய்தியாக மட்டும் இருக்கும்.
தன் தேர்தல் தொகுதிப்பக்கமே போகாத பலர் இன்றும் இருக்கின்றார்கள் நல்லாட்சியில் !ஆனால் திடீர் திடீர் என்றுவரும் சுறாவளி முன்னெச்சரிக்கை போல எப்போதாவது புதிய யாப்பு விரைவில் வருகின்றது, அதில் தேனும் ,பாலும் தெவிட்டாத சங்கீதம் போல தெள்ளு தமிழில் பாடுவது போல !
ஆங்கிலத்திலும் இந்தச்சட்டத்தின் பிரகாரம் இதோ மென்வலுப்பாய்கின்றது என்று உரைக்கும் எந்த அரசியல்வாதியும் மக்களின் அன்றாட பிரச்சனைகு முகம் கொடுப்பதில்லை விமான நிலையத்தில். பாதுகாப்புக்கு அஞ்சி பின் கதவால் ஓடும் பிரமுகர் போல !
தம் தேவைகளுக்காக பிரதேசவாதம் என்னும் நச்சுக்கருவியை தீட்டும் எந்த அரசியல்வாதியும் நின்று நிலைத்தது இல்லை இலங்கை தேர்தல்மேடையில்!
வடக்கு சிறந்தது ,கிழக்கு உயர்ந்தது, மேற்கு அதிஉச்சம் ,தெற்கில் ஆண்ட பரம்பரை என்ற குறுநிலவாதம் எல்லாம் முட்டை அப்பம் போல சிரிப்பொழிமட்டுமே !சீர்திருத்தம் இருப்பதில்லை .
அப்படித்தான் ரஸ்யாவின் சிந்தனையிலும் மொஸ்கோ உயர்ந்தது, உக்கிரைன் தாழ்ந்தது ,போலந்து அரசியல்சகுனி, மெசிடோனியா வளர்ச்சியில்லாதது லித்தினியா, ருமேனியா எல்லாம் திருடர்கலின் கூடம் என்று குற்றப்பரம்பரை போல அச்சு ஊடகம் மாதொருபாகன் போல திசை திருப்பும் .
அதுவும் ஐரோப்பிய ஊடகத்தில் ருமேனியா,போலந்து , என்றாலே அதிகம் லண்டன்,பாரிஸ், காவல்துறையும்,புலனாய்வு துறையும் போட்டி போட்டு கண்கொத்திப்பறவை போல நோக்கும் செயல் தனி ஒருவன் படம் போல !
ருமெனியர்கள்,போலந்து நாட்டவர்கள் வீரதீர திருட்டுக்களின் செயல்களும் ,இரவு விடுதியின் நடனத்தின் ஊடே போதை வஸ்த்து வினியோகம் ,பாலியல் மோசடிச் செயல்பாடுகள் என்பனவும் கிலிகொள்ளச்செய்வது வெகு இயல்பானது!என்றாலும் !
அதனால் லித்துனியாவும் அதிகம் இந்த போதைவஸ்த்துக் குழுக்களிடம் தம் சந்ததியை மீட்க அதிகம் போராடுகின்றது இன்றுவர இலங்கையின் பாதால உலகத்தவர்களின் செயல்பாடு போல !
அறிவியல் சுற்றுலாவை மேம்படுத்தும் லித்துனியாவின் செயல்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்குவது போல இலங்கையில் இருந்து பல மாணவர்களும் உயர்கல்வியைத்தொட இங்கே பயணிப்பது அதிகரிக்கும் நிலையில் !
இலங்கை மாணவர்கள் சிலர் போதைவஸ்த்து கடத்தல் , பாலியல் சேவை மோசடி செயல்பாட்டில் ஈடுபட்ட விடயங்களை இலங்கை காவல்துறை பொதுவில் சொன்னாலும் !ஊடகம் அதிகம் கண்டுகொள்வதில்லை நீலத்திமிங்கில விளையாட்டு போல!
இப்படியான நிலையில் தான் லித்துனியாவில் மாணவர்கள் குழுவுக்கு இடையில் ஏற்பட்டகைகலப்பில் இலங்கை மாணவர்கள் சிலர் பாதிக்கப் பட்டார்கள் !அதில் கமலேஸ்சும் எதிர்பாராத நிகழ்வாக பாதிக்கப்பட்டான் லித்தினியா சென்ற ஒருவாரத்தில் !
படிக்க வந்த ஊரில் காயப்படுவதும் வேலைக்கு போன ஊரில் காதல் கொள்வதும் !இலங்கைக்கு மட்டும் என்ன விதிவிலக்கா ? தாளம் படம் போல அதுவும் நிலாந்தன் சொல்லிய துரோகி என்ற வார்த்தைகள் அரசியலில் சூடுபோக்கும் கம்பளி ஆடை போல !
படிக்க வந்த ஊரில் காயப்படுவதும் வேலைக்கு போன ஊரில் காதல் கொள்வதும் !இலங்கைக்கு மட்டும் என்ன விதிவிலக்கா ? தாளம் படம் போல அதுவும் நிலாந்தன் சொல்லிய துரோகி என்ற வார்த்தைகள் அரசியலில் சூடுபோக்கும் கம்பளி ஆடை போல !
அந்த கைகலப்பில் ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சரின் மகனும் காயம் அடைந்த நிலையில் அங்கு நடந்த விபத்தினை ஆராயும் செயல்பாட்டில் திடீர் என்று இலங்கையின் புலாய்வுத்துறையில் இருந்து லித்துனியா சென்றவர் அசங்க ரத்னாயக்க!
அவரை சந்தித்த விடயம் எல்லாம் கமலேஸ் ஏனோ பொதுவில் யாருக்கும் சொல்லவில்லை! என்னோடு மட்டும் பேசியதன் ரகசியம் சாருமதியை அவன் சந்திக்கவேண்டிய ஆர்வத்தில் அடுத்தகட்டமாக தேவைப்படும் பணப்பிரச்சனைக்கு தீர்வுகிட்டும் என்ற நம்பிக்கை நல்லெண்ணம் !
தொடரும்.....
8 comments :
தொடர்கிறேன்நண்பரே
இலங்கை அரசியல் மட்டுமல்ல ! உலக அரசியலும்... நன்று தொடர்கிறேன் நண்பரே...
ஒவ்வொரு நாட்டின் அடையாளத்தை படத்தின் தலைப்பை கொண்டு விளக்கியது சிறப்பு..இருந்தாலும் தாங்கள் குறிப்பிட்ட எந்தப் படத்தையும் நான் பார்க்கவில்லை நண்பரே
எப்படி இதையெல்லாம் கோர்வையாக்கி எழுதுறீங்க நேசன்... உங்களிடம் நிறையப் புதைந்து கிடக்கிறது.. எழுதுங்கோ.
தொடருங்கள் நேசன் மிகவும் அழகாக தொகுத்து எழுதியுள்ளீர்கள்.
தொடருங்கள் நேசன் மிகவும் அழகாக தொகுத்து எழுதியுள்ளீர்கள்.
வணக்கம் நேசன் !
அரசியல் களத்தில் கற்ற
..அறிஞனாய்ப் பலவும் சொன்னாய்
பரவசம் ஆனேன் நானும்
..படித்ததும் அதிர்ந்து போனேன்
இரவலாய்க் கிடைத்த வாழ்வில்
..இனிமைகள் மட்டும் காணின்
அரனுளம் என்றும் ஆன்றோர்
..அடிதொழுந் தாட்சி செய்யும் !
அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துகள் நேசன்
Post a Comment