வந்தேறுதேசத்தில்
வசந்த வாசல் போல
வாட்டி எடுத்தரொட்டி போல
வகிபாக காதல் வசந்தமே!
வழிமாறிய ரயில்த்தடங்கள் போல
வாழ்த்துகள் !!!இனிய
வாழ்க்கை துணையுடன்
வாழ்வாங்கு வடக்கு அரசியல்போல
வாஞ்சனையின்றி
வலுவுடன் வளரட்டும் உன்
வாழ்க்கை! நீ
வழிமாறிப்போனாலும் என்
வாசலில் ஒரு வெண்ணிலா போல
வந்தரிசி போட்டு வாழ்த்த
வழிகள் எங்கும் கொர்னா
வாசல் மூடிவஞ்சிக்கின்றது
வணக்கத்துக்குரிய காதலியே!
வாழைமரம் போல
வருடங்கள் ஓடி
வழிமேல் காத்திருந்து
வராத அரசியல்தீர்வு போலவே
வங்குரோத்து வழிப்போக்கன் இவனும்
வசதியில்லாத வாரிசு!
வடநாட்டுப்பட்டம்
வைத்திய தொழிலில்
வாங்காத ஊதாரி!
வட்டார அரசியல் தாண்டி
வளரும் நடிகைபோல
வளவளப்புடன் உன்னை
வசியம் செய்தவன் முகம்காண
வாய்ப்புத் தாராத
வடிவேலனையும்! நிந்திக்கின்றேன்!!
வளரும் சிறுதொழில் முகவர்போர்வையில்
வட்டமேசையில்!
வந்துபாட!
வானொலிகளுக்கும் ,
வாயில் முகக்கவசம் போல
வாயில்ச் சோதனைகள்
வடக்கு இலண்டலில்
வசதியாணவர்கள் கூட
வரவில்லையாம்! கேட்டியோசங்கதி
வைப்பரில் ,
வருகின்றது, கொசுவலைப்புதினங்கள்,
வாட்சாப்பகிர்வு என்று,
விரும்புகின்றேன் நாயகிக்கும்
வியாபாரி மகனுக்கும்
விருப்பத்துடன் மணநிகழ்வு!
வாழ்த்துவோர் பட்டியலில்
வரதராஜப் பெருமாளின்
வடமாகாணச்சபை உறுப்பினரும்
வடிவாய்ச்சிரிப்பது போல!
வதிரி அச்சக அழைப்பிதழ் பார்த்து
வருகிற மாகணச்சபைத் தேர்தல்களும்
வசதிபடைத் தோர்களுக்கு
வழிகாட்ட பிராத்திக்கின்றேன்!
வந்துபோன ஜெய்சங்கர்போல
வழிப்போக்கன் இவனும்
வாழ்க வளமுடன்
வாழ்வில் 16 உம் பெற்று
வந்தேறு தேசத்தில்
வளரட்டும் உன் சந்ததிகள்!
(யாவும்கற்பனை)
1 comment :
நிகழ்வும் கற்பனையாக மாறிவிட்டதோ....??
Post a Comment