23 March 2021
அஞ்சலிகள் அன்பு நண்பனே!
இந்த வீட்டில் தான்
இனித்தனிமரம் தங்கனும்
இலங்கை வந்தால் என்றாயே!
இறுதியாக இசைந்துண்ட உணவு!
இப்போதும் சுவைக்கின்றது நண்பா!
இனி என்ன கலியாணகோலம்
இணைந்த கைகள் என்றாயே?
இப்படம் எடுப்பதும்
இவன் உங்கள் என்ற குரலுக்கும்
இடையில் தான் நம்முகங்கள்
இணைத்த பாடல்கள்
இணையம் என்று!
இருந்து இருக்கலாம்
இந்த அரபுலக மண்ணில்
இனி ஒரு தொழில் என்று
இலங்கை போனாயே!
இன்றும் கலியாணபுகைப்படம் எடுக்க
இந்த பஸ்ஸில் ஏன் போனாய்!
இன்னும் கண்ணுக்குள் நீயடா!
இனி எந்த அழைப்பில் வருவாயோ?
இனிய சினேஹிதனே!
இதோ என்நூலும் வருகின்றது என்றேனே!
இருண்ட இரவுப்பொழுதில்!
இருந்தாலும்
இதையும் சொல்லேண்டா
இப்பவும் சினேஹா
இன்னும் தனிமரமோ
இருடா
இணைப்பில்
இன்னும் பேசுவோம்
இனிய ஞாயிறு என்றோமே!
இம் இதில்தான் எத்தனை சுகமடா!
இனி எப்படி?);;;
இந்தப்பொழுது விடியாமலே இருந்து இருக்கலாம்!20/03/2021
Subscribe to:
Post Comments
(
Atom
)
5 comments :
ஓ உங்கள் ஊர் நண்பனோ நேசன்,? என்ன ஆச்சு?
ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறேன்.
கடந்த சனிக்கிழமை(20/3/21 பசறையில் இருந்து பதுளை நோக்கிப்புறப்பட்ட பஸ் வீதிவிபத்தில் என் நட்பும் உயிர்பிரிந்தான்! ஆதிரா!);;
தங்களின் நண்பருக்கு ஆழ்ந்த இரங்கல்..........
ஆழ்ந்த இரங்கல். பஸ் விபத்தா? நானும் இலங்கை தான். விபரம் தருவீர்களா?
ஆழ்ந்த இரங்கல். பஸ் விபத்தா? நானும் இலங்கை தான். விபரம் தருவீர்களா?/20/03/2021 பதுளை பசரை வீதி பஸ் விபத்தில் உயிர் நீத்த 15 பேரில் என் நட்பும் ஒருவர்! இலங்கை ஊடகத்தில் பல செய்திகள் கடந்தமாததில் வந்தது சகோ!
Post a Comment