24 April 2021

கவிதை போல கிறுக்கல்!

எரிக்கின்ற தேசத்தில் 
எண்ணெயில் கலப்படம்
 எடுத்த பருப்பில் 
எங்கும் கதைகள் 

எவர் கைது என்று

 எலக்கிய வித்தகர்கள்
 எந்தமணியோ என்றார்கள்? 
எவனோ ஒருத்தன்! 
எவன் தலைவன் என்று? 
எவன்பொண்ட்டாடி என்று
 எச்சில் துப்பியதையும்! 
எல்லோரும் கைதட்ட !
எங்கள் ஆட்சியின் 
எந்தக்கொர்னாவும் இல்லை
 என்று எச்சம் தோண்டும் திணைக்களமும்,
 எல்லைதாண்டிய ஆடாவடி!
 எவற்றையும் பேசாத ஊடகம்
, எவனோ விளையாட்டை 
எப்போதும் காட்டும்!
 எங்கள் தேசம் என்று
 எவன் கொண்டாடுவானோ
 எங்களுக்கும் புதுவருஷம் என்று! (யாவும் கற்பனை)///

____________________________________________________________



 கனவுகண்டேன் தோழி 
காற்றில் காணாமல் 
 காகதிற்கு பேர்போன 
 கடும் உழைப்பாளிகள் குரல் போல 
கடைமாறிய கடிதம் போல
 கடும் பணியிலும்! 
கடும் தவம் போல 
காத்திருந்து கண்ணயராமல்! 
கற்றவர்கள்
 கடுமையாக தயாரித்த 
கதிரைத்தலைவர் யாப்பு போல!
 கணவருடன் கலந்ததால் 
கன்னியிழப்பு போல
 கருவுண்டான காட்சிப்படங்களும்
 கண்டாயாமே கனணி ஒலி/ஒளிபரப்பாக
 கண்டியில் கொலையும் 
கழுத்து நீந்திவந்த 
களனிகங்கையும் 
கற்பனையாகியதாம்!
 கதிரவன் நாளிழதலில்! 
கடும் கொர்னா என்ற
 கடுதாசி ஊடே !



கருச்சிதைவும் நடந்த
 கதை கடந்த ரயிலில் வந்தடி
 கடந்து போன காதலி போல
 கண்ணீருடன்! கடந்துபோகும் சமாதாணப்புறாவுக்கும் 
கலர் உண்டோ?!!
கலைக்கதிர் நிரூபர் 
கந்தானையில் இருந்து
 கடும் தணிக்கைக்கும் ஊடே! 


 யாவும் கற்பனை)

1 comment :

வலிப்போக்கன் said...

கற்பனையாக தெரியவில்லை..அருமை