நிலமகளை மீட்க
நீண்டவர்கள் எல்லாம்
நீர்மகளில் மூழ்கினார்கள் என்று!
நீலிக்கண்ணீர் வடிக்கும்
நீலக்கட்சியும்,!
நீர்யாணையும்,
நிறம் மாறிய கொர்னா போல!
நீழல் மொட்டில்
நீர்வார்க்கும் பட்டுப்பாதைக்கு!
நிலவிலக்கு அளிப்பதாக
நீண்ட கட்டுரை எழுதிய
நிதியமைச்சரும்!
நிறுத்தக்கடவையில்
நீதி மீறியமைந்தன் ஊடே!
நிறுத்திவிட்ட குரல்கேட்டு
நிலவுக்காட்சி தடைப்பட்டதென்று
நீட்டி முழங்கினார்! முன்னால்
நிர்வாக ஆளுனர்!
நீயும் பார்தாயோ
நீந்தி வந்த கட்டுமரமே?
நியூசிலாந்து வானொலிக்காக
நீண்ட கதையில்
நீச்சல்வீரன்!
(யாவும்கற்பனை)
===================================
-(கவிதை வரவில்லையே?
கருவுற்ற காதலி
கவிதாவின் புலம்பல்
கண்டி எங்கும் கேட்டது
கதறலோ?கைவிரிப்போ!
கட்சியின் சின்னம்போல
கழுதையின் பேச்சுப்போல
கருநாகத்தின் தீண்டல்போல
கருட புராணத்தின்
கடைசிப்பக்கம் போல
களணி ஆற்றில்
கண்டெடுத்த பிணம்போல
கம்பளை கடுகதியும்
கவுண்டு போனசெய்தியோடு
கம்பீரக்குரலோடு
கடும் கொர்ணாவில்
களப்பலி என்ற
கட்டுப்பாட்டு வேலியில்
கவிதாவும் கண்ணயர்ந்தாள்
கவிதைக் காதலனைக் காணமல்!!
( யாவும்கற்பனை)
No comments :
Post a Comment