இஸ்ரேல் காட்டு மிராண்டி
இலங்கையும் கண்ணீர் விட்டதாம்!
இன்றைய முகநூலில்!
இனவாதத்தின் கூட்டாளி
இந்தியாவும் !
இரங்கல் கவிதைகள் எழுதுகிறது!
இன்னும் காசியில் இரத்தவாடை
இதயத்தில் குத்திய கை போல!
இணையத்தில் எழுத
இருட்டடைப்பு என்ற
இங்கிலாந்தின் ஊடகமும்,
இருமிக்கொண்டது!
இப்போது மணிலா நேரம்!
இது கொர்னா காலம்
இங்கே ஆர்ப்பாட்ட ஆதரவு
இன்னல்கள் என்ற
இறையாண்மைச் சட்டத்தின் பார்வையில்!
இப்படித்தானே?நாமும்!
இம்மாதத்தில் என்றோ ஒருபொழுது
இரந்து நின்றோம்!
இலங்கையின் கொடூர முகம்பார்!
இவை வரலாறு!
இந்தத் தொழில் நுட்பம்
இதற்கு முன் வந்திரிந்தால்!
இன்னும் விசாரணைப்படலம்
இறுதி கண்டிராது!
இப்படித்தான்!
இரணைப்புலி வானொலியும்
இரங்கல் பாட்டு இட்டு!
இடைவெளி விட்டு!
இன்னும் செய்தி வாசிக்கின்றது
இறந்து காலத்தின் குரலாக!
இங்கேயும் புத்தன் சிரிக்கின்றான்!
இனிய வெசாக் வாழ்த்துகள்!
இவ் வாரத்தில்
இனியும் குவியும்
இலங்கை டிவிட்டரில்
இதோ பசில்
இறங்கினார்!அமெரிக்காவில்!!
இன்னும் வரும்
இனிய இலங்கை பண்பலைகளில்
இடையில் விளம்பரம்
இந்தா சாத்திரம்
இவளும் தனிமரம் போல
இதையும் எழுதுவாயோ?)))!
!( யாவும்கற்பனை)
3 comments :
நன்றாக இருக்கிறது தனிமரம் நேசன்.....நீங்கள் பகிர்ந்திருக்கும் பாடலும் பொருத்தமான இனிய பாடல் ஆனால் சோகமான பாடல்
துளசிதரன்
கீதா
நன்றி கீதா அக்கா வருகைக்கும் கருத்துரைக்கும்.
மே மாதம் முள்ளிவாய்க்காலில்
தெரிந்த்து தக்காளி சட்னி
மே மாதம் காசாவில்
தெரிவது இரத்தமாம் ஊடகங்களுக்கு
Post a Comment