அரைக்கம்பத்தில் பறக்கும்
அரசகொடி போல!
அகதியின் மனதிலும்
ஆடிப்பட்டம் போல!
ஆனந்தம் நாயகியே!
அவித்து இறக்கிய
ஆட்டிறைச்சிச்சுவை போல!
அந்த தேசமும்
அங்கர்தேடி
அழிந்துபோன
அரச கஜானாவில்!
அரை ஆடைக்கும் தடை!
அங்கர் வியாபாரி வீட்டிக்குள்
அடுக்காத அப்பன்
அரைமுழக்கயிற்றில் தொங்குவேன்! என்றவன்
அடக்கமானா செய்தி
அட்டையில் கொர்னா என்று
அழுத்தி எழுதிய உன்முகத்தயும்!
அதே அன்றும், இன்றும்,இசையில்
அடுத்தபாடலாய்!
அசையும் எனகாத்திருந்தேன்!
ஆமிக்காரன் மிச்சம் வைத்த
அறுநாக்கொடியில் ஐந்துபவுனும்
அறுத்துப்போனான் அடையான்!
அரங்கில் காணமல்போனோர் வழக்கு
அடுத்தவாரம் வரும் என்ற
அவசர செய்திஊடே!
அரச கொட்டகையில் சிறிவாத்தியும்!
அனைத்துலகில்
அகதியும் அடுத்த வேலைதேடி!
அந்தி நேரத் தென்றலுடன்
அத்தனைக்கும் ஆசைப்படு!
அடுத்த படம் ஓடும் தியேட்டரில்!
அறிக்கையுடன் அண்ணர் சம்மந்தர்!
அன்னத்தில் போட்டியிட்டவரும்
ஆணைக்கட்சியில் தாவுவோர்
அடுத்த பட்டியலும்
அடிவயிற்றில் அழுத்தியது !
அண்டங் காகம் அவசராம்
அடேய் அது என்வளவு
அத்துமீறி அதிகாலையில்
அந்தப்பனையில் உரமிட்டவன்
அடுத்த வழக்கு எல்லைச்சண்டையாய்
அந்த விதானையார் வீட்டில்!
அடுத்த கதை எழுதும்
அவர் எங்க??
:::::::::::::::::::::::::::::::::::::::::::)))))
(யாவும்கற்பனை)
1 comment :
கற்பனை அல்ல நிஜம்...
Post a Comment