26 August 2021

கவிதை.

 பார்த்தீர்களா

பத்திரிக்கை?

பால்மா  தட்டுப்பாடாம்!

பால்மாடுகளை 

பராமரிக்காமல் 

பட்டதாரி  திமிரில்

பலலட்சத்திற்கு  விற்று 

பாலைவனம்   போனவர்களில்

பார்வதியின்   பேரனும்

பால்வாங்க      கியூவில்

பச்சிளம்   குழந்தையுடன்!

பாணுக்கும்   நின்ற 

பழைய  தலைமுறை

பார்க்காத    காட்சிகள்

பார்க்கின்றேன்

பாரத  டிக்டாக்கில்

பால்ஊற்றும்  கட்டவுட்   காட்சியை!  

(யாவும்கற்பனை)





2 comments :

வலிப்போக்கன் said...

அருமை

தனிமரம் said...

நன்றிகள் வருகைக்கும் கருத்துரைக்கும் நண்பரே!