08 March 2011
காற்றில் லங்காசிறி fm
உலகெங்கும் இனையத்தில் தமிழ்வளர்க்கும் லங்காசிறி fm இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இது லண்டனை தளமாகக்கொண்டு உலகெங்கும் கைபேசியில் நேயர்கள் கேட்டு மகிழும்வண்ணம் வசதியுடன்,இனையத்தளமூலமும் சேவைபுரிகின்றது சிறப்பாண அறிவிப்பாளர்கள் ஆகாஸ்,தினேஸ்,நாகா,மயூரன்,ரோபேட்,பெண் அறிவிப்பாளர்களான பாரதி,உமா,தாட்சாயினி ஆகியோர் சிறப்பாக வானொலியில் நேயர்களுக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள் .காலைப்பொழுதில் ஓலிக்கும் வணக்கம் லங்காசிறி பல்சுவை அம்சத்துடன் வலம்வருகிறது.சமய அறிவுரைகள் நீதிக்கதைகள் என்பதுடன் காதுக்கு இனிய காணங்களுடன் ரோபேட் தொகுத்தளிக்கிறார் காலையில் ஐரோப்பிய நேயர்களுக்கு இது காலைத்தேனீர் என்பது என்கருத்து.அதனைத்தொடர்ந்து பலநிகழ்ச்சிகள் வலம்வருகிறது தொலைபேசி மூலம்பாடல் கேட்கும் வண்ணம் இனைப்புக்கள் உள்வாங்கப்படுகிறது,அறிவிப்பாளருடன் இரண்டு நிமிடம் தூயதமிழில் உரையாடி விரும்பும் பாடலை பரிசாக பெறும் நிகழ்ச்சியை ஆகாஸ்,பாரதி,சிறப்பாக குதுகலத்துடன் நடத்துகிறார்கள்,வாரநாட்களில் இரவில் தினேஸ் தொகுத்தளிக்கும் இமையும் இசையும் இனிய கவிதைகளுடனும் அமைதியான பாடல்களுடன் எம்மை தாலாட்டுகிறார்.செவ்வாய்க்கிழமை இமையும் இசையும் நேயர்களின் காட்சியும் காணமும் பிரதியாக எழுதியனுப்பப்பட்ட வற்றில் சிறப்பானவை தினேஸ்சின் இனிய குரலில் வானொலியில் காற்றில் வருகிறது.வார இறுதியில் மொனம் பேசுகிறது நேயர்களின் இதயத்தில் உறங்கும் இன்பதுன்பங்களை காற்றில் கரையவைக்கிறது.மாலையில் ஓலிக்கும் பார்ட்டி டையிம் நிகழ்ச்சி நேயர்களிடம் உற்சாகமான வரவேற்பை பெற்றுவருகிறது என்பதற்கு நேயர்கள் அதிகமான இனைப்பை மேற்கொள்கிறார்கள் அறிவிப்பாளர்களுடன் ஜாலியாக உரையாடுவதை செவிமடுக்கும் என்னால் அறுதியிட்டுக்குறமுடியும்,மயூரன்,ஆகாஸ்,பாரதி,உமா ,சுவைபட நேயர்களுடன் அறிவிப்பு செய்கிறார்கள்,சனிக்கிழமையில் தினேஸ்,பாரதி தொகுத்தளிக்கும் top15 அண்மையில் வெளியான புதிய பாடல்களை தரவரிசைப்படுத்தும் நிகழ்ச்சி புதியபாடல்பிரியர்களுக்கு செவிக்கு இனியது.சனிகாலையில் தாட்சாயினி தொகுத்தளிக்கும் வணக்கம் லங்காசிறி கதம்பமாலை மிகவும் பாராட்டக்கூடிய பயனுள்ள தகவல்களை தாங்கி வானொலியில் வலம் வருகிறது. வாரஇறுதியில் சினிமா கிசுகிசு நிகழ்ச்சி சினிமா தகவல்களை பகிருகிறது நேயர்களுடன்.போக்குவரத்தில் இதனுடன் இனைந்திருக்க முடியும் வண்ணம் கைபேசியில் வானொலி ஓலிபது லங்காசிறியாகத்தான் இருக்கும் காற்றில் தமிழ் வழக்கும் வானொலியை இன்னும் பலசுவையான நிகழ்ச்சிகள் மூலம் பலகோடி நேயர்களை சென்றடைய வாழ்த்துகிறேன். இனிய தமிழில் காற்றில் காதோடு கவிபாடும் வானொலியே நீ நீண்ட ஆயிலுடன் வாழ வாழ்த்துகிறேன்.
06 March 2011
Karakattam.
______ ....,. நமது கலைகளில் ஓன்றான கரகாட்டத்தைப் பற்றி தமிழ்சினிமாவில் அதிகம் காட்சிப்படுத்தப்படவில்லை என்பது என் அபிப்பிராயம் நான் பார்த்த சினிமாவில் கங்கைஅமரன் கரகாட்டக்காரன் படத்தில் மிகவும் திறம்பட கரகத்தின் நடனவகையை ஆபாசம் இல்லாமல் அவர்கள் வாழ்க்கையை சோகம்களை,துயரங்களை மிகவும் ரசிக்க கூடியவாறு கலையை மற்றவர்கள் புரியும் வண்ணம் இயக்கியிருந்தார்.ராமராஜான் மிகவும் புகழ்பெற்றதும் இந்தகலையை கஸ்ரப்பட்டு கற்று ஆடி நடித்ததும் மக்கள் கலையை பொதுத்தளத்திற்கு கொண்டு வந்ததாலும் மிகவும் அடித்தட்டு மக்களுக்கு ஜனரஞ்சப்படுத்தப்பட்டதாலும் என்பேன்.பின் கஸ்தூரிராஜா சிலபடங்கள் செய்தார் குஸ்பு நடித்த நாட்டுப்புறப்பாட்டு,சிவாஜி ,முரளி நடித்த என் ஆசை ராசாவே, படங்கள் ஓரளவு கரகம்பற்றி தமிழ்சினிமாவிற்கு புதிய கதைக்களத்தை திறந்தது. பின் இக்கரகம் குத்தாட்டக்காட்சியாகவே தினிக்கப்பட்டு எமது கலை ஜனரஞ்சகம் என்ற போர்வையில் சீரலிகப்படுகிறது.புரதானகலைகளில் இதுவும் ஓன்று பரதம் பற்றி சிலப்பதிகாரத்தில் மாதவியை அறிமுகம் செய்யும் போது அழகாக இலங்கோ அடிகள் விளக்கியுள்ளார் (நாட்டுக். -கூத்து முனைவர் -மொனகுரு).இன்று இக்கலை மறக்கப்பட்டு வருகிறது.சின்னத்திரையின் வருகை நம்கலைகளை நூதசாலைக்கும் ஆய்வு செய்யப்படுவதற்கும் என சீரலித்துவிட்டது. இன்னும் சிலகலைஞர்கள் இதை சேவையாகவும்,மூச்சாகவும்,கருதுவதால்தான் சென்னைச் சங்கமம் மூலமாகவோ,கிராமங்களில் கோயில் திருவிழாக்களிலும் சரி கானக்கூடியதாக இருக்கிறது.புரதான நம்கரகம் சரி மற்றைய கலைகள் சரி குளிர் அறையில் இருந்து கொள்கைவகுப்பர்களால் சீரலிக்கப்படுகிறது. பிரென்ஞ்சு மக்கள் தம்கலை கலாச்சாரத்திற்கு கொடுக்கும் மதிப்பும்,மரியாதையும் பார்க்கும் போது நம்சீரலிவை எப்படி பதியவைக்கப் போறோம் எதிர்கால சந்ததிக்கு!
Subscribe to:
Posts
(
Atom
)