பலபாடல்கள் காற்றலையில் சங்கமித்தாலும் நேயர் மனதில் தங்கி இருப்பவை சிலதே!
அதிகமான பாடல்கள் நான் கேட்டது .இலங்கை ஒலிபரப்பின் பண்பலையில்தான் .அதனால் தான் என் பாடல்கள் ரசனையும் மாறுபடுகிறது.
சில நல்ல பாடல்கள் பல நிகழ்ச்சிகளில் நேயர்கள் விரும்பிக் கேட்பதில்லையா? இல்லை ஒலிபரப்பும் விதிமுறை என்ன என்று நான் அறியேன். என்றாலும் பல நல்ல பாடல்கள் அதிகம் காற்றலையில் கலக்கவில்லை என்ற ஆதங்கம் என்றும் உண்டு.
1997 இல் வெளியான பின் வரும் பாடல் ஒர் இனிய இசையும், பெண்ணின் எதிர்பார்ப்புக்களை ஒரு சேரச் சொல்லும்.
இக்காலத்தில் தேவா கானாவில் சந்தையை ஆக்கிரமித்து இருந்த போது !ஒரு புதியவர் ஶ்ரீனி என்பவர் இசையில் ஹரினி பாடியது
.அக்காலத்தில் இவர் திருமதி திப்பு ஆகவில்லை.
அதனால் தான் பாடலின் உள்ளூனர்வை தானும் உள்வாங்கி தன் குரல் மூலம் இப்படி உருகிப் பாடினார் என்பது என் சிந்தனை.
தமிழ் சினிமாவில் பாடல்கள் புனையும் கவிஞர்கள் அதிகம் ஆண்கள் என்பதால் பெண்களுக்கான காட்சியமைப்பில் பாடல் வரும் போது அதிகமாக மினக்கெடாமலும் ,காவர்ச்சியை முன்னிருத்தும் இயக்குனர்களால் ,நல்ல கவித்துவமான பெண்கள் சிந்தனையை எதிர்பார்ப்புக்களை பாடல் ஆக்குவது மிக அருமை.
அப்படியான சூழ்நிலையில் இருந்து இப்பாடல் முற்றிலும் வேறு படுகிறது.
ஒரு பெண் காதல் வசப்பட்டு அதை தன் வீட்டாருக்கு எப்படி ஆற்றுப்படுத்துவது என்று எண்ணும் வகையில் இப்பாடல் கவிதையாக்கப் பட்டிருக்கும்.
பின்னிரவில் தனிமையில் இப்பாடலை மீண்டும்மீண்டும் சிலதடவை கேளுங்கள் .!ஒரு மயில் இறகு வருடிவிடும்
.பாடலின் பின்னே இசையில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் மெல்லிய இசை (base drams) மீட்டிச் செல்ல, ஓகன் ஊடே ஒக்டோபாட்,அருன்மொழியிடம் கடன் வாங்கிய புல்லாங்குழல் இதில் ஒகனிலே வாசிக்கப்படுகிறது என்பது என் சிற்றறிவு.
சில இசைக்கருவிகளே கையாளப்பட்டிருக்கும் விதம் என்னை கவர்கிறது. பின்னர் ஶ்ரீனியின் இசையை இதுவரை நான் கேட்கவில்லை பெயர் மாற்றினாரோ தெரியாது
.
இப்பாடலை முதன் முதலில் வர்த்தக சேவையில் பகுதி நேர அறிவிப்பாளினி மதுராந்ததி சின்னத்தம்பி என்ற வானொலிக் குயில் தான் தன் விருப்பம் என்று இரவின் மடியில் நிகழ்ச்சியில் அறிமுகப் படுத்தியவர்
.
பின்னர் பல இஸ்லாமிய அறிவிப்பாளர்களும் தங்கள் விருப்பங்களில் சேர்த்துக் கொண்டார்கள்.அவர்கள் பலர் அறிவிப்பைத் தாண்டி பல கவிஞர்கள் என்பதால் போலும்!
அதிலும் சனிகாலையில் 8.30 இற்கு வரும் என் விருப்பத்தில் குறிஞ்சி பூத்தாப் போல் வரும் A.L.ஜாபீர்( இவர் யாழ் சேவையில் சுரேஸ் ஆனந்த் என்ற பெயரில் இருந்தார் இது கொசுறு தகவல்) தொடர்ந்து எடுத்துவருவார்
.அன்நேரங்களில் இப்பாடல் மீளவும் ஒலிக்காத என என்னியகாலம் அதிகம். ஒலிநாடா வேண்டும் அளவுக்கு பொருளாதாரம் முன்னோறவில்லை !
இப்படியான சிறப்பான கவிதையை வடித்தவர் யார் என்று தெரிய வில்லை. நீண்டகால தேடலின் பின் எதிர்பாராத விதமாக பாரிஸ் வந்த புதுதில் இந்த ஒலிநாடா. நீண்டகால நண்பனை கண்டால் இறுக அணைத்து சந்தோசப் படுவது போல் என் கைகளுக்கு கிட்டியது.
இன்று என் பின்னிரவு பயணங்களில் ஜொன்சியைத் தொடர்ந்து இப்பாடல் 7 வருடங்காலாக தாலாட்டுகிறது. ஒரு தோழியின் கவிதை சொல்லும்"
எனக்கு மட்டும் புரிகின்றமாதிரி
கிழிஞ்சலால் ஒட்டிய உன்முகம்
உனக்காக மாற்றிய உணவுகள்"
என்று சொல்லும் வார்த்தைகளில் இப்பாடலின் பிரதிபலிப்பும் ஒத்துப் போகின்றது.
இத்தனை சிறப்பான தமிழ்சினிமா படத்தின் பெயர் எனக்கே நீ ஆனாலும் பட்டலாந்த வதை முகாம் தீர்ப்புப் போல் இப்படமும் வரவேயில்லை. பாடலைக் கேட்போமா ஒலியாக மட்டும் கேளுங்கள் காட்சியை மறந்து நீண்டகாலமாக இப்பதிவை காத்திருக்கவைத்தேன் இதை வலை ஏற்றும் தொழில்நுட்பம் தெரியாமல் இப்பாடல் தேடலில் உதவிய அத்ம நண்பன் டெனில் ஹரிஹரனுக்கு
தனிமரத்தின் தாழ்மையான நன்றிகள்
