07 July 2011

புதிதான வாழ்விற்கு வழி சொல்லனும்!!

இசையும் ,கவிதையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்பது பல  நல்ல பாடல்களைக் கேட்கும் போது ஊர்ஜிதமாகும் உண்மை!

பலபாடல்கள் காற்றலையில் சங்கமித்தாலும்  நேயர் மனதில் தங்கி  இருப்பவை சிலதே!

அதிகமான பாடல்கள் நான் கேட்டது .இலங்கை ஒலிபரப்பின் பண்பலையில்தான் .அதனால் தான் என் பாடல்கள் ரசனையும் மாறுபடுகிறது.
 சில நல்ல பாடல்கள் பல நிகழ்ச்சிகளில் நேயர்கள் விரும்பிக் கேட்பதில்லையா? இல்லை ஒலிபரப்பும்  விதிமுறை என்ன என்று நான் அறியேன். என்றாலும் பல நல்ல பாடல்கள் அதிகம் காற்றலையில் கலக்கவில்லை என்ற ஆதங்கம் என்றும் உண்டு.

1997 இல் வெளியான பின் வரும் பாடல் ஒர் இனிய இசையும், பெண்ணின் எதிர்பார்ப்புக்களை ஒரு சேரச் சொல்லும்.

இக்காலத்தில் தேவா கானாவில் சந்தையை ஆக்கிரமித்து இருந்த போது !ஒரு புதியவர் ஶ்ரீனி என்பவர்   இசையில்  ஹரினி பாடியது
.அக்காலத்தில் இவர் திருமதி திப்பு ஆகவில்லை.

 அதனால் தான் பாடலின் உள்ளூனர்வை தானும் உள்வாங்கி தன் குரல் மூலம் இப்படி உருகிப் பாடினார் என்பது என் சிந்தனை.

தமிழ் சினிமாவில் பாடல்கள் புனையும் கவிஞர்கள் அதிகம் ஆண்கள் என்பதால் பெண்களுக்கான காட்சியமைப்பில் பாடல் வரும் போது அதிகமாக மினக்கெடாமலும் ,காவர்ச்சியை முன்னிருத்தும் இயக்குனர்களால் ,நல்ல கவித்துவமான பெண்கள் சிந்தனையை எதிர்பார்ப்புக்களை பாடல் ஆக்குவது மிக அருமை.

 அப்படியான சூழ்நிலையில் இருந்து இப்பாடல் முற்றிலும் வேறு படுகிறது.

ஒரு பெண் காதல் வசப்பட்டு அதை தன் வீட்டாருக்கு எப்படி ஆற்றுப்படுத்துவது என்று எண்ணும் வகையில் இப்பாடல் கவிதையாக்கப் பட்டிருக்கும்.

பின்னிரவில் தனிமையில் இப்பாடலை மீண்டும்மீண்டும் சிலதடவை கேளுங்கள் .!ஒரு மயில் இறகு வருடிவிடும்

.பாடலின் பின்னே இசையில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் மெல்லிய இசை (base drams) மீட்டிச் செல்ல, ஓகன் ஊடே ஒக்டோபாட்,அருன்மொழியிடம் கடன் வாங்கிய புல்லாங்குழல் இதில் ஒகனிலே வாசிக்கப்படுகிறது என்பது என் சிற்றறிவு.

 சில இசைக்கருவிகளே கையாளப்பட்டிருக்கும் விதம் என்னை கவர்கிறது. பின்னர் ஶ்ரீனியின் இசையை இதுவரை நான் கேட்கவில்லை பெயர் மாற்றினாரோ தெரியாது
.
இப்பாடலை முதன்  முதலில் வர்த்தக சேவையில் பகுதி நேர அறிவிப்பாளினி மதுராந்ததி சின்னத்தம்பி என்ற வானொலிக் குயில் தான் தன் விருப்பம் என்று இரவின் மடியில் நிகழ்ச்சியில் அறிமுகப் படுத்தியவர்
.
பின்னர் பல இஸ்லாமிய அறிவிப்பாளர்களும் தங்கள் விருப்பங்களில் சேர்த்துக் கொண்டார்கள்.அவர்கள் பலர் அறிவிப்பைத் தாண்டி பல கவிஞர்கள் என்பதால் போலும்!

 அதிலும் சனிகாலையில் 8.30 இற்கு வரும் என் விருப்பத்தில் குறிஞ்சி பூத்தாப் போல் வரும் A.L.ஜாபீர்(  இவர் யாழ் சேவையில் சுரேஸ் ஆனந்த்  என்ற பெயரில் இருந்தார் இது கொசுறு தகவல்) தொடர்ந்து எடுத்துவருவார்

.அன்நேரங்களில் இப்பாடல் மீளவும் ஒலிக்காத என என்னியகாலம் அதிகம். ஒலிநாடா வேண்டும் அளவுக்கு  பொருளாதாரம் முன்னோறவில்லை !


இப்படியான சிறப்பான கவிதையை வடித்தவர் யார் என்று தெரிய வில்லை. நீண்டகால தேடலின் பின்      எதிர்பாராத விதமாக பாரிஸ் வந்த புதுதில் இந்த ஒலிநாடா.  நீண்டகால நண்பனை கண்டால்  இறுக அணைத்து சந்தோசப் படுவது போல் என் கைகளுக்கு கிட்டியது.

இன்று என் பின்னிரவு பயணங்களில்  ஜொன்சியைத் தொடர்ந்து இப்பாடல் 7  வருடங்காலாக தாலாட்டுகிறது. ஒரு தோழியின் கவிதை சொல்லும்"
 எனக்கு மட்டும் புரிகின்றமாதிரி
கிழிஞ்சலால் ஒட்டிய உன்முகம்
 உனக்காக மாற்றிய உணவுகள்"
  என்று சொல்லும் வார்த்தைகளில் இப்பாடலின் பிரதிபலிப்பும் ஒத்துப் போகின்றது.

இத்தனை சிறப்பான தமிழ்சினிமா படத்தின் பெயர் எனக்கே நீ ஆனாலும் பட்டலாந்த வதை முகாம் தீர்ப்புப் போல் இப்படமும் வரவேயில்லை. பாடலைக் கேட்போமா ஒலியாக மட்டும்  கேளுங்கள் காட்சியை மறந்து நீண்டகாலமாக இப்பதிவை காத்திருக்கவைத்தேன் இதை வலை ஏற்றும் தொழில்நுட்பம் தெரியாமல் இப்பாடல் தேடலில் உதவிய அத்ம நண்பன் டெனில் ஹரிஹரனுக்கு

தனிமரத்தின் தாழ்மையான  நன்றிகள்

18 comments :

சுதா SJ said...

இப்பாடலை இப்போதுதான் நான் முதன்முறையாக கேக்குறேன்
ஹும்.. சூப்பர் மேலோடி பாஸ்

தனிமரம் said...

நன்றி துஷ்யந்தன் உங்கள் வருகைக்கு சிலநல்ல முத்துக்கள் பலரைச் சென்று சேர்வதில்லை நேரம் இருந்தால் பலதடவை கேளுங்கள் இன்னொரு உணர்வு பிறக்கும் பிறகு என்ன கிஸாந்தினி  போல் இன்னும் பலர் வருவார்கள் .

Mathuran said...

அருமையான பாடல்... இதுநாள்வரை இந்தப்பாடலை கேட்டதில்லை....
இப்படியொரு பாடலை இவ்வளவு நாட்கள் தவறவிட்டுவிட்டோமே என்று வருத்தமாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி பாஸ்

தனிமரம் said...

நன்றி மதுரன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். இந்த நன்றிகள் இப்பாடலை கேட்கவைத்த அந்த முகம் தெரியாத வர்த்தகசேவை/தென்றல் குயில்களுக்குத்தான் நான் சொல்லனும்.

maruthamooran said...

வாழ்த்துக்கள் நேசன்....!


////அதிலும் சனிகாலையில் 8.30 இற்கு வரும் என் விருப்பத்தில் குறிஞ்சி பூத்தாப் போல் வரும் A.L.ஜாபீர்( இவர் யாழ் சேவையில் சுரேஸ் ஆனந்த் என்ற பெயரில் இருந்தார் இது கொசுறு தகவல்) தொடர்ந்து எடுத்துவருவார்////

ஆமா........!

தனிமரம் said...

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.மருதமூரான்  தனிமரத்துடன் இனைந்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

காட்டான் said...

அருமையான பதிவு மாப்பிள வாழ்த்துக்கள்...

தனிமரம் said...

நன்றி ஆதவன் வருகைக்கும் கருத்துக்கும்.

அம்பாளடியாள் said...

அருமையான பதிப்பு வாழ்த்துக்கள் சகோதரம்!.......

தனிமரம் said...

நன்றி அம்பாளடியாள் உங்கள்  வருகைக்கும் கருத்துக்கும்.

நிரூபன் said...

வணக்கம் சகோ,

வித்தியாசமான முறையில் ஒரு பாடல் அறிமுகத்தைத் தந்திருக்கிறீங்க.

சுரேஷ் ஆனந்தின் நிகழ்ச்சி முன்னோட்டங்கள் எப்போதுமே சிறப்பானவை..

காற்றோடு கலந்து காதுகளைத் தழுவி இதயப் பரப்பெல்லாம்................


இதே போல
தெவிட்டாத பாடல்கள் தரும் தேனருவி...

என்றும் சிறப்பாகச் சொல்லுவார்.

அவரையும் உங்கள் பதிவில் நினைவூட்டியமைக்கு நன்றி.

நிரூபன் said...

இந்தப் பாடலை ஏற்கனவேயும் கேட்டிருக்கிறேன். ஆனால் ஹரினி தான் இப் பாடலைப் பாடினார் என்பது தெரியாதிருந்தது..

பாடல் பற்றி பல்வேறு தகவல்களைத் தேடிப் பிடித்து, எம் மனங்களினை இப் பாடல் வருடும் வகையில் வர்ணனைகள் கோர்த்து, பதிவேற்றியிருக்கிறீங்க.

நன்றி சகோ.

தனிமரம் said...

வணக்கம் நிரூ 
உண்மையில் A.L ஜாபீர்/சுரேஸ் ஆனந்த குரலில் எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு பலதடவை அவரின் நிகழ்ச்சியில் தொலைபேசி ஊடாக பாட்டுக்கேட்டிருக்கிறேன் பல வர்த்தக உலாவில் அவருடன் நேரடியாக உரையாடி என் ஆவலைத் தீர்த்து இருக்கிறேன்.
அவர் விடை பெறும் வார்த்தைகள் மகிழ்வூட்டும் விடிகின்ற காலைப் பொழுது  இனிதாய் மலர எல்லோருக்கும் பொதுவான இறைவனை என்ற இடத்தில் அவர்குரல் நச் சென்று இருக்கும் ,
நல்ல பண்பான கவிஞர் .

தனிமரம் said...

நன்றி நிரூ 
சிலபாடல்கள் இன்னும் தெவிட்டாத கானங்கள் ஹரினியின் குரல் ஒரு வித்தியாசமானது பிடித்ததை நண்பர்களுடன் பகிர்வதில் ஆனந்தம்.

vidivelli said...

nalla meloadi ..
supper paadal...
valththukkal,,,

தனிமரம் said...

நன்றி விடிவெள்ளி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் உங்கள் தமிழ் எழுத்துருவில் தொழில்நுட்பக் கோளாரா சகோ?

காட்டான் said...

என்ன புதுசு புதுசா பாட்டெல்லாம் கொண்டு வாராய் அதுவும் வெளிவராத படம்ன்னு வேற சொல்லுராய் என்ன இந்தியாவில எடிட்டிங் ரூமில வேலை செய்தாயோ மாப்பிள

தனிமரம் said...

நல்ல பாடல் பலரை சென்றடையனும் என்ற ஆவல் தொழில்நுட்பத்தில் நண்பர்கள் உதவி கிட்டியதில் கொஞ்சம் வித்தியாசமான பதிவை கொண்டுவந்தேன் ஆதவன்.