05 July 2011

கலைப்பயணத்திற்கு! கைகொடுப்போம்

அன்பு நெஞ்சங்களே !
இந்த தனிமரம் வலையில் இது ஒரு பிரச்சாரம். அட நீயுமா?
 கட்சி தொடங்கிவிட்டாய் ?

கோடி கோடியாய் தேர்தலுக்கு செலவழித்த கருணாநிதியின் பிரச்சாரத்தையும், நவீன துட்டைகை மன்னன் வெற்றி நமதே என்று நாட்டை சுடுகாடாக்கிய பிரச்சாரத்தையும் ,தன் எதிர்கால பதவிக்காக பாலியல் குற்றச்சாட்டில் பத்திரிகை முகப்பை    தாங்கிவரும் பிரச்சாரங்களையும் பார்த்த பின்புமா?

 இந்த ஆசை என்று  நீங்கள் கேட்பது புரிகிறது?

 ஒரு பதிவை ஒழுங்காக எழுத்துப் பிழையில்லாமல் போடத்தவித்துக் கொண்டிருந்தாலும்.
 உங்களுடன் உரிமையுடன் சில நிமிடங்கள்!

கோடைகால வெய்யிலில் நீங்கள் வெளியிடங்கள் போவீர்கள். உறவினர்கள் வந்து செல்லத் தொடங்கும் இந்த பாடசாலை விடுமுறை நேரத்தில்.

  பாரிஸ் இயற்கையை ரசிக்க வரும் உறவுகளுக்கு சின்னத்திரை நாடகங்களைப் போட்டு கொலை வெறியை தூண்டாமல்.

 நம் இளைய சமுதாயத்திற்கும் நம் உறவுகளுக்கும் இனிய நாட்களாக அமையும் வண்ணம் .பாரிஸ் மாநகரில் ஒரு காவியமாக திரையிடப்படும் நம்மவர் படைப்பு தீராநதி .

இதை உங்களுக்கு மிகுந்த தடைகளைக் கடந்து  படலைக்குப் படலை புகழ் மன்மதன் வெளியீடு செய்கின்றார் .
உறவுகளுக்கு கைகொடுப்போம் .
நம் சினிமா தாகத்திற்கு தீராநதி ஒரு மடை திறந்து விடட்டும் .

வரும் சனி/ஞாயிறு(9/7,10/7/2011)  இரு தினங்கள் நம் உறவுகள் கண்டுகளிக்க 4 மணிக்கும், 6மணிக்கும் என இருகாட்சிகள் என இருதினங்களும் திரையிடப்படுகிறது .

மங்காத்தா, வேலாயுதம் ரசிகர்களே அவர்களுக்கு மட்டும் மாலைபோட்டு சூடம் ஏற்றும் உங்களிடம்.

 தனிமரத்தின் தாழ்மையான அவசியமான வேண்டுகோள் .
உறவுகள் படைசூழ வந்து தீராநதியில் கொண்டாடுங்கள்.
 உங்களின் தூயரங்களை ,இன்னொரு முகத்தை திரையில் காணுங்கள் .போவோமா லாக்கூனோ கத்சுமன் சினிமா திரை அரங்கிற்கு.

 இதோபடத்தின் சில முன் காட்சிகள் .


நன்றி நண்பன்  பாஸ்கிக்கு(மதன்) வழிப்போக்கனுக்கும் மதிப்புக்கொடுத்தற்கு .உன் பயணம்வெற்றி  பெற எட்ட இருந்து வாழ்த்தும் ஒரு ரசிகன் . அவரின் படைப்பை முன்னோட்டம் காட்டும் சில காட்சிகள் கீழே.

19 comments :

Anonymous said...

ம்ம்ம் நம்மவர்கள் படைப்புக்களும் வளர வாழ்த்துக்கள் ...

தனிமரம் said...

நன்றி கந்தசாமி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் உண்மையில் மதனின் பொருளாதார கஸ்ரம் நானும் உணர்ந்து இருக்கிறேன் அவர் கலைக்காக தன் வலிகளை இதுவரை சொன்னதில்லை சொல்ல நினைத்தால் அதிகமான பதிவு போடலாம் இது நான் அவரிடம் கண்டது.

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மக்கா.....

MANO நாஞ்சில் மனோ said...

நடக்கட்டும் நடக்கட்டும்'ய்யா.....

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணா! உங்கள் வருகைக்கு.

தனிமரம் said...

படம் பார்க்க ஆவலுடன் இருக்கின்றேன் பார்த்ததும் ஒரு பதிவுடன் வருவேன் குற்றாலம் கூதுகளித்த அருவாள் அண்ணா!

காட்டான் said...

நல்லாதான் இருக்கு மாப்பிள ஆனா இந்த மதன் இருக்கிறாரே உழைக்கும் காசல்லாம் இதுக்கே செலவழித்தால்..! நாளை இவர் என்ன செய்வாரெண்டு தெரியல என்ர அப்புச்சி அடிக்கடி சொல்லுவா தனக்கு பிந்தான் தானமும் தர்மமும் என்று உண்மையாவா மாப்பிள..?

சுதா SJ said...

நல்ல பதிவு, வாழ்த்துக்கள்

தனிமரம் said...

நன்றி துஷ்யந்தன் .

Bibiliobibuli said...

அட! நான் படலைக்குப் படலை மன்மதனின் ரசிகை! :))).

அவரின் ஓர் குறும்படம் கூடப் பார்த்திருக்கிறேன். புலத்துவாழ்க்கையை வெளிப்படுத்திய விதம் அருமையாய் இருந்தது. நானும் கிடைத்தால் இங்கே பார்க்க முயற்சிக்கிறேன்.

தனிமரம் said...

நன்றி ஆதவன் உண்மையான கலைஞன் பொருள் தேடுவது இல்லை கலைத்தாகம் இருப்போர் இப்படித்தான் சீரலிந்தார்கள் என பலர் சொல்லக்கேள்வி.

தனிமரம் said...

நன்றி ரதி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நிச்சயம் பலநாடுகளில் இப்படம் வெளியாக்குவதற்கு மதன் முயன்று கொண்டிருக்கிறார்.எங்களின் புலம்பெயர் இன்னொரு முகத்தை இது பிரதிபலிக்கிறது.

vidivelli said...

unkaL pathivukalum valara vaalththukkal....

vidivelli said...

nalla pathivu sako
unkal pathivukalum valara vaalththukkal..

தனிமரம் said...

நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் விடிவெள்ளி!

ஹேமா said...

இந்தப் படம் நிச்சயம் இங்கும் வருமென நம்புகிறேன்.பார்க்க ஆவல்.GTV ல் அடிக்கடி விளம்பரம் பார்க்கிறேன்.

தனிமரம் said...

நிச்சயம் வரும் ஹேமா புலத்தின் இன்னும் ஒரு சீரலிவைக் காட்டும் படைப்பு.

நிரூபன் said...

வணக்கம் சகோ,

புலம் பெயர் வாழ்வின் பல்வேறு பட்ட பரிணாமங்களை இப் படம் தாங்கி வரும் என்பதற்குச் சான்றாக, உங்கலின் அறிமுகப் பதிவி இருக்கிறது,

இப் படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அதே நேரம் இப் படம் பற்றிய உங்களின் விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறேன்.

தனிமரம் said...

நன்றி நிரூ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நிச்சயம் விமர்சனப்பதிவு விரைவில் வரும்.