12 October 2011

விண்ணைத் தாண்டிய என் காதல் -3


கடல் எப்போதும் பல கதைகள் சொல்லும். கடல்லோரைக் கவிதையில் இருந்து கடற்கரைத்தாகம் வரை.


 பல தடம்பதித்து இருக்கின்றது தமிழ் சினிமாவில் .ஆனால் கடல்கரையை நாம் பார்க்கும் ஒவ்வொரு கனங்களும் சில சிந்தனையை கிளறிவிடும் தனிமையில் நான் பார்த்த  கடல் அலைகள் வாழ்வில் பொருளாதாரத்தில் எப்படி முன்னோறப்போறாய் என்று எனக்கு என் வாலிபத்தில் மோதி மோதி நீ போகும் பாதை சரியா என அலையலையாக வந்து என்னைச் சீண்டிய கொழும்பு கோல்பேஸ் கடலாக வந்து போகின்றது.


.பின் தொழில் தேடி கொஞ்சம் நிமிந்த போது  மீண்டும் என் தொலைந்த  கிராமத்து கடல்கரையில் புரண்டு கொஞ்சம் திருந்துவிட்டேன் என்று குக்குரல் இட்டபோது உன்னையாரு இங்க விட்டது.

 இது பாதுகாப்பு வலயம் என்று தெரியாதா? என தெரிந்த தமிழில் கேட்ட கடற்படைச் சிப்பாய்க்கு நமக்கும் சகோதரமொழி தெரியும் இது என் பூர்வீக இடம் இது நான் தவழ்ந்த இடம் என அவனுக்குச் சொல்லிக் காட்டிய என் வட
க்குத்தீவின் கடல்கரைவெளியை என்னால் பிரியமுடியுது இல்லை இந்த நிமிடம் வரை !.

தனிமரமாக எங்கே போனாலும் முதல் போவது கடல்கரைக்குத்தான். அது மழைக்காலம் என்றாலும், குளிர் காலம் ,அம்மாவாசை இரவு என்றாளும் பயணம் என்றாள் பீச் ஒரு
தீராததாகம் எனக்கு!


நாங்கள் கப்பல் வீட்டில் இருந்து பயணித்தது ஆழப்புழா கடற்கரைக்கு .

போகும் வழியில் நண்ணீர் ஏரியில் கப்பல் சுற்றுலா இருக்கின்றது. விரும்பியவர்கள் விரும்பிய படி சுற்றிக்காட்ட வசதியாக ஆழப்புழாவில் பல படகுகள் காத்திருக்கின்றது.

  வெளிநாட்டவர் பலர் கப்பலில் ஏறிப் போய்க்கொண்டிருந்தார்கள்.

 இப்படி நம்நாட்டிலும் வத்தளை- ஹொந்தல -எலகந்த -பக்கம் அழகாய் இருக்கின்றது.

 இங்கே கித்துல்கள்ளு விற்போருக்கும் மீன் விற்கும் மக்களுக்கும் அரசாங்கம் சுற்றுலா வழிமுறைகளை செய்து கொடுத்தால் இன்னும் வருமானம் ஈட்ட முடியும் ஆனால் திட்டம் போடும் சிந்தனையாளர்கள் ????!

 அதை நோட்டம் இட்டவாரே நாம் போனது சேட்டனுடன் ஆழப்புழா கடற்கரைக்கு!

மதிய வேளை அதிகமான கூட்டம் இல்லாமல் அழகுக்கடல் அமைதியாக தெளிந்த நீரோடை போல் இருக்கின்றது.

 நம்முடன் படகு வீட்டில் இருந்து வெளியோறியோரும் இங்கு வந்திருந்தார்கள் அவர்களும் லண்டனில் இருந்து சென்னை வந்து இங்கு வந்ததாக என்னுடன் கதைக்கும் போது கூறினார்கள்.

 அது ஏனோ நம்மவர்கள் எங்கு சந்தித்தாலும் தாயகம்பற்றி நினைவுகளையே சீண்டுகின்றார்கள்.

 பாதுகாப்பான நாட்டில் இருந்தாலும் மனதில் பாதுகாப்பாக இருப்பது தாயக நினைவுகள் என்பதாலா???


தத்துவம் புரிந்தவர்கள் கடல் ஒரு குரு என்கிறார்கள். பள்ளிகொண்டவன் பால்கடலில் பாம்பனையில் உறங்குவதாலா?

 அமைதியாக ஆழப்புழா கடற்கரை எங்களை அசுவாசப்படுத்தியது. கடல்கரையில் கொஞ்சம் கால்நனைத்து மஹாகவியின் கவிதையை சோதித்துப்பார்த்தோம் கடல் மீது சிறுநண்டு படம்கீற அதைவந்து அலைகொண்டு போவதை அவர் முன்னம் பாடியிருந்தார்.

 நாங்கள் மணலில் வீடுகட்டினோம் ஈழக்கனவைப் போல் அதுவும் கடல் அலை அடித்துச் சென்றது! மீண்டும் மீண்டும் முயண்ற போதும் சர்வதேசத்தின் சதிகள் நம்மை சீரலித்தது போல் கடல் அலை மண்ணை அழித்துவிட்டது!


 .நினைவுகள் பல தீண்ட முன்னே வயோதிபர் எங்களுக்கு வாழ்க்கையின் தத்துவத்தைப் போதித்துக் கொண்டிருந்தார்.

 மீனுக்கு வலை வீசிவிட்டு மிகவும் அமைதியாக காத்திருந்தார்.எனக்கு அவரின் பொறுமை மீது பொறாமையாக இருந்தது!

 புலம்பெயர்ந்து சில நிமிடங்களைக் கூட நிம்மதியாக சிந்திக்க முடியாத அளவு பொருளாதார சிக்கல் விரட்டியடிக்கும் போது அவர்
இப்படி ஒரு குருவினைப் போல் அமைதியாக இருக்கின்றாரே? என்று மனதில் என்னிக்கொண்டு நடந்தோம்!

 கடல் நீர் காலினைத் தாண்டி முழங்கால் வரை என் டவுசரை முத்தம் இட்டது.

 என்னவளோ இப்படியே ஊர் என்னத்தில் திரியுங்கோ பார்ப்போர் சிரிக்கட்டும் இந்த வயசிலும் இப்படியா ஒன்றில் குளிக்கனும் இல்லையென்றால் கரையில் நிற்கனும்.
 இது ரெண்டும் கெட்ட நிலை என்று என்னை சீண்டினால் சரி குளிப்பம் என்று ஒரு முடிவோடு என் இடிப்பில் இருந்த கடவுச்சீட்டை எடுத்து மனைவியிடம் கொடுத்துவிட்டு ஒரு முத்துக்குளியல் போட்டேன்!

 காலையில் கப்பல் குளியல் பின் சூரியகுளியல் என ஜாலியாக இருந்தது என்னவளோ இனியும் கடலில் நிற்க முடியாது வெய்யில் தலைக்கு ஏறுகின்றது !

என்ற போது சரிபோவம் என்று வெளிக்கிடவும் தான் சேட்டனுக்கு சாப்பாட்டு நேரம் காக்க வைத்துவிட்டது என்று தவறு புரிந்தது.

 அருகில் இருந்த ஹோட்டலில் சேட்டனைச் சாப்பிடச் சொல்லியிருந்தேன் அவர் எங்களுக்காக காத்திருப்பதாக சொன்னதால் நானும் கடலின் போதையில் அவரை மறந்து விட்டேன் !

நம் போன்றவர்களை ஏற்றிவந்த  மற்ற சாரதிகள்கூட அவரும் கும்மியடித்துக் கொண்டிருந்தார்.

 நாங்கள் போகவும் அவரும் எழும்பி வர அதுவரை வெய்யிலில் இருந்த ஆழப்புழாக் கடல்கரை தூறலுடம் மழையை வரவலைத்தது அதிகமாகுமோ என்று என்னும் போது சில நிமிடங்களில் மழைவிட்டு விட்டது!

 அங்கு இன்னொரு காட்சி நடந்தது அதைப் பாருங்களேன்!

 சிலர் நான் முன்னர் அரபுலகம் போகவெளிக்கிட்டபோது இப்படித்தான் ஊதாசினப்படுத்தினார்கள்.

 பின் என் ஆருயிர் நண்பனை நான் அனுப்பிய போதும் திட்டியவர்கள் இன்று அவனை போற்றுகின்றார்கள்.

 அவன் தான் எனக்கு விருப்பமான பாடல்களை தேடித்தரும் தொழில்நுட்ப வீரன்.

 நான் விரும்பும் பாடல்களை தனிமரத்திற்கு தந்து ஒத்தாசை புரிபவன். இதையும் பாருங்கள்!


நான் கேட்ட இந்தப்பாடலை பல வேலைப்பலுவிலும் எனக்கு உடனடியாக தந்தவன் இதோ பாடல்!


இந்தப்படம் பார்த்தோர் எத்தனை பேர் ?


அருமையான படம் என்பார்வையில்!
அங்கு இருந்து நாம் போனது தொடரும்!  Or

07 October 2011

நொந்து போகும் ஒர் இதயம்-4

அக்ரம் என்னுடன் வருவது உகந்தது அல்ல! ஏற்கனவே பிரபுவுக்கு நான் உதவுவதற்கு நேரம் ஒதுக்கிவிட்டேன் !

எனவே அவனை மெதுவாக பிரிந்து போக நினைக்கும் போது. இன்னொரு விற்பனை நண்பன் சுரேஸ் வந்தான் !

இருவரையும் கண்டவுடன் இங்க ஏன்ன விசேசம் தனிமரத்துடன் நிற்கிறாய் அக்ரம் ஏன் செக்(காசோலை)ஏதும் பவுன்ஸ் ஆகிட்டுதோ! (காசோலைக்கு வங்கியில் பணம் இல்லாட்டி திரும்பிவிடுவதைக் குறிக்கும்) இப்படித்தான் பலர் நண்பர்களின் முதல் உரையாடலாக இருக்கும் அப்போதைய நாட்களில்.


 அதன் பிறகுதான் சுகசேதி விசாரிப்புக்கள். ஏன் எனில் உள்ளூரில் இருந்த 16  விற்பனைபிரதி நிதிகளும் ஒரு ஒற்றுமையில் இருந்த பிரதேசம் அது!

 நட்புக்கு வெளிமாவட்டத்து விற்பனைப்பிரதி நிதிகளுக்கு சவால் விட்ட பகுதி அது .

இப்படி ஒற்றுமை வரக்காரணம் இரு விடயங்கள் .

ஒன்று அந்த குறுகிய பிரதேசத்திற்கு பல்தேசிய /சுதேசிய கம்பனிகளின் ஏகவினியோகஸ்தராக குறிப்பிட்ட நான்கு வர்த்தக நிறுவனங்களே பிரதானமாக இருந்தார்கள்!-!

அவர்களிடம் குறைந்தது 3வேற  வேற பல்தேசிய/சுதேசிய கம்பனிகளைப் பிரதிநிதிப்படுத்தும் விற்பனைப் பிரதிநிதிகள் ஒரே கூரையின் கீழ் வேலை செய்யும் போது இயல்பாக நட்பு வருவது சகயம் தானே!


2) இரண்டாவது அப்போதைய பாதுகாப்புச் சூழல் !

இந்தப்பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் திடீர் திடீர் என்று நடக்கும் பாதுகாப்புச் சுற்றிவலைப்பு!

 எதிர்பாராத மாற்றுக்குழுக்களின் துப்பாக்கிப்பிரயோகம்! என எப்போதும் ஒரு    எதிர்பாராத அச்சமான நிலையில் நண்பர்களிடையே குறுந்தகவல் பரிமாறுவது என எப்போதும் நட்பு இறுக்கமான நிலையில் இருக்கும் !

.சில எதிர்பாராத அவசரத்தில் பாதுகாப்புப் படையினர் வழங்கும் வதிவிட பாஸ் விடுபட்டுப் போய்விட்டால் விரைவாக எடுத்துவர ஒரு நண்பன் எப்போதும் தேவைதானே!

அதனால் பலர் தமக்கு வழங்கியிருக்கும் வதிவிடப்பாஸ் பிரதியை சமயங்களில் மற்றவர்களிடம் கொடுத்து வைத்திருப்போம்


 .மிகவும் நம்பிக்கையான நட்புக்களிடம்.

 ஏன் எனில் நகரின் நாலாபுறமும் எதிர் பாராமல் சுற்றிவலைத்தால் உடனடியாக ஒரு குறுந்தகவல் சேர்ப்பித்தால் இரானுவத்தின் தலையாட்டிப் பொம்மைகள் எங்கள் மீது வைக்கும் அன்புக் காதலில் இருந்து இது வெறும் ஈர்ப்புத்தான் எனச் சொல்லும் பருவக்கால காதல்போல் ஓடிவிடலாம்!

 இப்படிக் காதலில் தொலைந்து போன நண்பர்கள் சிலரை இது வரை நான் மீளவும் காணவில்லை!


தலையாட்டிப் பொம்மைகள் நகரை வழிமறித்தால் அன்றைய பகல்பொழுதுவரை கையில் இருக்கும் பத்திரிக்கையை எழுத்துக்கூட்டி வாசிக்கலாம்.

 அந்தளவுக்கு பொறுமையான  வேலைப்பாடுகள் நிறைந்து.

 இப்படி தாயகத்தில் சிலபாகத்தில்  சதாரனமான நிலை என்றாலும் இங்கே சில அப்பாவிகள் பாதுகாப்புப் படையின் சந்தேகத்தில் பிடிப்பட்டு தொலைந்து போனவர்கள் குடும்பத்தின் நிலையை எழுத நினைத்தால் இன்னொரு பாரதம் எழுதலாம் ஒவ்வொருத்தனும் !

இப்படியான தருனங்களில் பெண்கள் நிலமையை விபரிக்க நினைத்தால் துயரம் கண்ணை மூடுகின்றது !

அதுவும் இளம்பெண்கள் சகோதரமொழி தெரியாதவர்கள் சில இரானுவத்தின் காமக்கண்களுக்கும் பொருந்தாக் காமத்தின் வெறிக்கும் தீயில் இடப்பட்ட புழுவைப் போல் சொந்த நாட்டிலே படும் அவஸ்தையை பாட மீண்டும்  கோபக்கார பாரதி வரனும் !

நாங்கள் எல்லாம் உலக அழகிகள் நீங்கள் என்ன தான் கழுத்துப்பட்டி கட்டினாலும் எங்களுக்கு ஒரு கமெடி ஹீரோ தான் எனச் சீண்டிச்  செல்லும் சில சிட்டுக்கள் !

அண்ணே உந்த கோதாரி அறுப்பான் என்ன கேட்கின்றான் !

என காதோரம் மெல்லப்பேசும் போது  இன்னொரு அண்ணண் உறவு வந்து விடும்!

  சகோதரமொழி தெரியாத நம் தமிழ் இளவரசர்கள் பாடு சீதையை ராமன் வில்லுடைத்து மாலையிட்டு கைபிடித்த போது கையறு நிலையில் நின்ற மற்றநாட்டு  மன்னன் வாரிசு நிலையைப்போல்!

என்ன பலமான யோசனை தனிமரம் என்ற அக்ரம் என்னைச் சீண்ட இல் எனக்குத் தெரிந்தவர் ஒருவர் லாஜ்சில் வந்து நிற்கிரார்.

அவரைப் போய்ப் பார்க்கனும் நீ முன்னால் போ என்று சமயம் பார்த்து அவனை போகவிட்டு நான் முன்னே இருந்த லாஜ்சிற்குப் போனேன்!

அங்கு போகாமல் இருந்தால் அந்த பின் விளைவு நடந்து இராது!

  சிலநிமிடங்களில் நான் அங்கிருந்து வெளியேறிய பின்!

வெள்ளிக்கிழமை மதியத்தின் பின் வவுனியா நகரசபை பேருந்துக்கள் தனியார் பேருந்துக்கள்  அதிகம் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருகோணமலை,கண்டி என தூர இடங்களுக்குப் பயணிக்கும்!

 அதிக இரானுவத்தினர் ,தொழில் நிமித்தம் இங்கு கடமையில் இருக்கும் அரச உத்தியோகத்தோர் தனியார் துறையினர் எனப் பலரும் வெள்ளி மதியத்துடன் நகரைத்தாண்டிச் செல்வது  வார இறுதி விடுமுறை மற்றும்  பாஸ் என்கின்ற பாதுகாப்புக் காரணங்களின் செயலால்!

 அதனால் பலர் குடும்பங்களைப் பிரிந்தும்,
 சேர்ந்து இருக்க முடியாமலும் படும் அவஸ்த்தைகள் அதிகம்.

 நானும் வேலையை எப்போதும் 2 மணிக்கு முடுத்து விடுவேன் .

வவுனியாவில் இருக்கும் நான்கு தியேட்டரில் ஏதாவது ஒன்றில் 2.30 காட்சிக்கு உள்நுழைவது என் பொழுது போக்கு !

அதில் ஒரு அலாதிப் பிரியம் எனக்கு அப்போதைய காலகட்டத்தில்  !

.இப்போது தியேட்டர் போவதற்கே வெறுப்பாக இருப்பது ஒரு வேளை இப்போது அலுப்பரை டாக்குத்தர்கள் அதிகம் என்பதாலா?

 இல்லை ரசனை மாறிவிட்டதா என்று தெரிய வில்லை ?

அல்லது குடும்பத்தலைவன் என்ற பொறுப்புணர்ச்சியோ தெரியவில்லை!அந்த எண்ணத்தில் தான் கழுத்தில் இருந்த கழுத்துப் பட்டியை(புகையிலையை()  .

tie) கழட்டுவம் என்று கண்டி வீதியில் இறங்கும் போது எதிரே மொயூத் மோட்டார் வண்டியில் வந்தார்!

 என்ன மாத்தயா!
 எங்கட கடைப்பக்கம் வரவில்லை ?

நான்! உங்க கோளையாட்ட(உதவியாளர்) சென்னே!

 அவங்கட சாமான்கள் அனுப்பனும் என்று உங்களுக்குத் தெரியாதா?

இல்ல பாய் அவங்கள் மறந்திட்டாங்க போல இப்பவே பின்னால் வரவா பாய் நமக்கு ஒரு வேலையும் இல்லை .

அதுவரை பின்னால் தந்தையின் தோழில் கை வைத்த வண்ணம் இருந்தவள் பாத்திமா !

எனக்கு நன்கு அறிமுகம் ஆனவள் .என்னம்மா நீங்களும் இங்க வந்திட்டீங்களா ?

ஒம் நானா மன்னாரில் படிக்க முடியல அதுதான் இங்கு வந்தாச்சு!

 வாப்பா பக்கதில் இருந்தால் சந்தோஸம்தானே !

நீங்க போனகிழமை அங்க வரல ஆமா நான் கொழும்பு போனன்!

 ஓ அண்ணிட்டயா  ஓ நீங்க வேற அவங்க என் கூட வேலை செய்யிறவங்க !

பாத்திமாகடந்த முறை என் மேலிடத் தில் இருந்து விளம்பரத்துறையில் பணிபுரியும் சகோதரமொழி நங்கை வந்திருந்தால்!

 அவங்களும் நானும் ஒன்றாக சாப்பிட்டதும் ,இடங்களைச் சுற்றிக்காட்டியதும் பார்த்திமா என் துனைவி என்றே என்னிக்கொண்டிருக்கிறாள்!

 மற்றவர் பார்வையில் எப்படி இருந்தாலும். நாங்கள் ஒரு நிறுவனத்தில் வேறு வேறு பிரிவுகளில் பணிபுரிந்தாலும் நட்பாக இருப்பது சகோதரமொழி நங்கைகளின் நல்ல குணம்!

 அது பல  இடங்களில் நான் நேரடியாக உணர்ந்த பண்பு!பாத்திமா பிறகு எப்படிப்பள்ளிக்கூடம் இம் பருவாயில்ல !

இந்தவாரம் தானே தொடங்கியது! மவ பேசாமா இரு !

காக்கா வேலை செய்யனும்.!

கோளையாள்-சகோதரமொழி
சென்னேன்  -சொன்னேன் இஸ்லாமியரின் வட்டாரமொழி!

///:::::..::::