07 October 2011

நொந்து போகும் ஒர் இதயம்-4

அக்ரம் என்னுடன் வருவது உகந்தது அல்ல! ஏற்கனவே பிரபுவுக்கு நான் உதவுவதற்கு நேரம் ஒதுக்கிவிட்டேன் !

எனவே அவனை மெதுவாக பிரிந்து போக நினைக்கும் போது. இன்னொரு விற்பனை நண்பன் சுரேஸ் வந்தான் !

இருவரையும் கண்டவுடன் இங்க ஏன்ன விசேசம் தனிமரத்துடன் நிற்கிறாய் அக்ரம் ஏன் செக்(காசோலை)ஏதும் பவுன்ஸ் ஆகிட்டுதோ! (காசோலைக்கு வங்கியில் பணம் இல்லாட்டி திரும்பிவிடுவதைக் குறிக்கும்) இப்படித்தான் பலர் நண்பர்களின் முதல் உரையாடலாக இருக்கும் அப்போதைய நாட்களில்.


 அதன் பிறகுதான் சுகசேதி விசாரிப்புக்கள். ஏன் எனில் உள்ளூரில் இருந்த 16  விற்பனைபிரதி நிதிகளும் ஒரு ஒற்றுமையில் இருந்த பிரதேசம் அது!

 நட்புக்கு வெளிமாவட்டத்து விற்பனைப்பிரதி நிதிகளுக்கு சவால் விட்ட பகுதி அது .

இப்படி ஒற்றுமை வரக்காரணம் இரு விடயங்கள் .

ஒன்று அந்த குறுகிய பிரதேசத்திற்கு பல்தேசிய /சுதேசிய கம்பனிகளின் ஏகவினியோகஸ்தராக குறிப்பிட்ட நான்கு வர்த்தக நிறுவனங்களே பிரதானமாக இருந்தார்கள்!-!

அவர்களிடம் குறைந்தது 3வேற  வேற பல்தேசிய/சுதேசிய கம்பனிகளைப் பிரதிநிதிப்படுத்தும் விற்பனைப் பிரதிநிதிகள் ஒரே கூரையின் கீழ் வேலை செய்யும் போது இயல்பாக நட்பு வருவது சகயம் தானே!


2) இரண்டாவது அப்போதைய பாதுகாப்புச் சூழல் !

இந்தப்பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் திடீர் திடீர் என்று நடக்கும் பாதுகாப்புச் சுற்றிவலைப்பு!

 எதிர்பாராத மாற்றுக்குழுக்களின் துப்பாக்கிப்பிரயோகம்! என எப்போதும் ஒரு    எதிர்பாராத அச்சமான நிலையில் நண்பர்களிடையே குறுந்தகவல் பரிமாறுவது என எப்போதும் நட்பு இறுக்கமான நிலையில் இருக்கும் !

.சில எதிர்பாராத அவசரத்தில் பாதுகாப்புப் படையினர் வழங்கும் வதிவிட பாஸ் விடுபட்டுப் போய்விட்டால் விரைவாக எடுத்துவர ஒரு நண்பன் எப்போதும் தேவைதானே!

அதனால் பலர் தமக்கு வழங்கியிருக்கும் வதிவிடப்பாஸ் பிரதியை சமயங்களில் மற்றவர்களிடம் கொடுத்து வைத்திருப்போம்


 .மிகவும் நம்பிக்கையான நட்புக்களிடம்.

 ஏன் எனில் நகரின் நாலாபுறமும் எதிர் பாராமல் சுற்றிவலைத்தால் உடனடியாக ஒரு குறுந்தகவல் சேர்ப்பித்தால் இரானுவத்தின் தலையாட்டிப் பொம்மைகள் எங்கள் மீது வைக்கும் அன்புக் காதலில் இருந்து இது வெறும் ஈர்ப்புத்தான் எனச் சொல்லும் பருவக்கால காதல்போல் ஓடிவிடலாம்!

 இப்படிக் காதலில் தொலைந்து போன நண்பர்கள் சிலரை இது வரை நான் மீளவும் காணவில்லை!


தலையாட்டிப் பொம்மைகள் நகரை வழிமறித்தால் அன்றைய பகல்பொழுதுவரை கையில் இருக்கும் பத்திரிக்கையை எழுத்துக்கூட்டி வாசிக்கலாம்.

 அந்தளவுக்கு பொறுமையான  வேலைப்பாடுகள் நிறைந்து.

 இப்படி தாயகத்தில் சிலபாகத்தில்  சதாரனமான நிலை என்றாலும் இங்கே சில அப்பாவிகள் பாதுகாப்புப் படையின் சந்தேகத்தில் பிடிப்பட்டு தொலைந்து போனவர்கள் குடும்பத்தின் நிலையை எழுத நினைத்தால் இன்னொரு பாரதம் எழுதலாம் ஒவ்வொருத்தனும் !

இப்படியான தருனங்களில் பெண்கள் நிலமையை விபரிக்க நினைத்தால் துயரம் கண்ணை மூடுகின்றது !

அதுவும் இளம்பெண்கள் சகோதரமொழி தெரியாதவர்கள் சில இரானுவத்தின் காமக்கண்களுக்கும் பொருந்தாக் காமத்தின் வெறிக்கும் தீயில் இடப்பட்ட புழுவைப் போல் சொந்த நாட்டிலே படும் அவஸ்தையை பாட மீண்டும்  கோபக்கார பாரதி வரனும் !

நாங்கள் எல்லாம் உலக அழகிகள் நீங்கள் என்ன தான் கழுத்துப்பட்டி கட்டினாலும் எங்களுக்கு ஒரு கமெடி ஹீரோ தான் எனச் சீண்டிச்  செல்லும் சில சிட்டுக்கள் !

அண்ணே உந்த கோதாரி அறுப்பான் என்ன கேட்கின்றான் !

என காதோரம் மெல்லப்பேசும் போது  இன்னொரு அண்ணண் உறவு வந்து விடும்!

  சகோதரமொழி தெரியாத நம் தமிழ் இளவரசர்கள் பாடு சீதையை ராமன் வில்லுடைத்து மாலையிட்டு கைபிடித்த போது கையறு நிலையில் நின்ற மற்றநாட்டு  மன்னன் வாரிசு நிலையைப்போல்!

என்ன பலமான யோசனை தனிமரம் என்ற அக்ரம் என்னைச் சீண்ட இல் எனக்குத் தெரிந்தவர் ஒருவர் லாஜ்சில் வந்து நிற்கிரார்.

அவரைப் போய்ப் பார்க்கனும் நீ முன்னால் போ என்று சமயம் பார்த்து அவனை போகவிட்டு நான் முன்னே இருந்த லாஜ்சிற்குப் போனேன்!

அங்கு போகாமல் இருந்தால் அந்த பின் விளைவு நடந்து இராது!

  சிலநிமிடங்களில் நான் அங்கிருந்து வெளியேறிய பின்!

வெள்ளிக்கிழமை மதியத்தின் பின் வவுனியா நகரசபை பேருந்துக்கள் தனியார் பேருந்துக்கள்  அதிகம் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருகோணமலை,கண்டி என தூர இடங்களுக்குப் பயணிக்கும்!

 அதிக இரானுவத்தினர் ,தொழில் நிமித்தம் இங்கு கடமையில் இருக்கும் அரச உத்தியோகத்தோர் தனியார் துறையினர் எனப் பலரும் வெள்ளி மதியத்துடன் நகரைத்தாண்டிச் செல்வது  வார இறுதி விடுமுறை மற்றும்  பாஸ் என்கின்ற பாதுகாப்புக் காரணங்களின் செயலால்!

 அதனால் பலர் குடும்பங்களைப் பிரிந்தும்,
 சேர்ந்து இருக்க முடியாமலும் படும் அவஸ்த்தைகள் அதிகம்.

 நானும் வேலையை எப்போதும் 2 மணிக்கு முடுத்து விடுவேன் .

வவுனியாவில் இருக்கும் நான்கு தியேட்டரில் ஏதாவது ஒன்றில் 2.30 காட்சிக்கு உள்நுழைவது என் பொழுது போக்கு !

அதில் ஒரு அலாதிப் பிரியம் எனக்கு அப்போதைய காலகட்டத்தில்  !

.இப்போது தியேட்டர் போவதற்கே வெறுப்பாக இருப்பது ஒரு வேளை இப்போது அலுப்பரை டாக்குத்தர்கள் அதிகம் என்பதாலா?

 இல்லை ரசனை மாறிவிட்டதா என்று தெரிய வில்லை ?

அல்லது குடும்பத்தலைவன் என்ற பொறுப்புணர்ச்சியோ தெரியவில்லை!அந்த எண்ணத்தில் தான் கழுத்தில் இருந்த கழுத்துப் பட்டியை(புகையிலையை()  .

tie) கழட்டுவம் என்று கண்டி வீதியில் இறங்கும் போது எதிரே மொயூத் மோட்டார் வண்டியில் வந்தார்!

 என்ன மாத்தயா!
 எங்கட கடைப்பக்கம் வரவில்லை ?

நான்! உங்க கோளையாட்ட(உதவியாளர்) சென்னே!

 அவங்கட சாமான்கள் அனுப்பனும் என்று உங்களுக்குத் தெரியாதா?

இல்ல பாய் அவங்கள் மறந்திட்டாங்க போல இப்பவே பின்னால் வரவா பாய் நமக்கு ஒரு வேலையும் இல்லை .

அதுவரை பின்னால் தந்தையின் தோழில் கை வைத்த வண்ணம் இருந்தவள் பாத்திமா !

எனக்கு நன்கு அறிமுகம் ஆனவள் .என்னம்மா நீங்களும் இங்க வந்திட்டீங்களா ?

ஒம் நானா மன்னாரில் படிக்க முடியல அதுதான் இங்கு வந்தாச்சு!

 வாப்பா பக்கதில் இருந்தால் சந்தோஸம்தானே !

நீங்க போனகிழமை அங்க வரல ஆமா நான் கொழும்பு போனன்!

 ஓ அண்ணிட்டயா  ஓ நீங்க வேற அவங்க என் கூட வேலை செய்யிறவங்க !

பாத்திமாகடந்த முறை என் மேலிடத் தில் இருந்து விளம்பரத்துறையில் பணிபுரியும் சகோதரமொழி நங்கை வந்திருந்தால்!

 அவங்களும் நானும் ஒன்றாக சாப்பிட்டதும் ,இடங்களைச் சுற்றிக்காட்டியதும் பார்த்திமா என் துனைவி என்றே என்னிக்கொண்டிருக்கிறாள்!

 மற்றவர் பார்வையில் எப்படி இருந்தாலும். நாங்கள் ஒரு நிறுவனத்தில் வேறு வேறு பிரிவுகளில் பணிபுரிந்தாலும் நட்பாக இருப்பது சகோதரமொழி நங்கைகளின் நல்ல குணம்!

 அது பல  இடங்களில் நான் நேரடியாக உணர்ந்த பண்பு!பாத்திமா பிறகு எப்படிப்பள்ளிக்கூடம் இம் பருவாயில்ல !

இந்தவாரம் தானே தொடங்கியது! மவ பேசாமா இரு !

காக்கா வேலை செய்யனும்.!

கோளையாள்-சகோதரமொழி
சென்னேன்  -சொன்னேன் இஸ்லாமியரின் வட்டாரமொழி!

///:::::..::::


22 comments :

தனிமரம் said...

உறவுகளே யாராவது திரட்டிகளில் இணையுங்கோ!!இமைமூடவேண்டும்!

K.s.s.Rajh said...

திரட்டியில் இணைச்சாச்சு...கதை சுவாரஸ்யமாக போகுது பாஸ் இன்னும் பல மேட்டர்கள் வரும் போல

Yoga.s.FR said...

காலை வணக்கம்!நல்லாருக்கு

தனிமரம் said...

நன்றி ராச் இணைப்புக்கும் வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

காலை வணக்கம் யோகா ஐயா!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

கதை சூப்பர் பாஸ்

MANO நாஞ்சில் மனோ said...

தொடர் நட்பாகவும், சுவாரஸ்யமாகவும, கொஞ்சம் வலியாகவும் தொடர்கிறது!!!!

தனிமரம் said...

நன்றி வைரை சதீஸ் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் இணைவுக்கும்!

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணா  உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் .

Anonymous said...

தொடர் சுவாரஸ்யமாக நகர்கிறது...நேசன்..

Anonymous said...

தனிமரத்தின் சோக கதையா )

தனிமரம் said...

நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி கந்தசாமி வருகைக்கும் கருத்துக்கும்!இது நண்பன் தனிமரத்தின் சோகக் கதை ! நேசனின் அல்ல!

நிரூபன் said...

தொடர் நல்லா இருக்கு.
குடுத்து வைச்ச ஆளுங்கப்பா நீங்கள்.

சகோதர மொழிப் பொண்ணுங்க கூட நட்பாகி பணி நிமித்தம் ஊர் எல்லாம் சுற்றிப் பார்த்திருக்கிறீங்க.
ரசித்தே பாஸ்...

இம் முறை எழுத்துப் பிழைகளைத் திருத்த வில்லை. கொஞ்சம் கூடிய கவனம் செலுத்தினால் படிப்போருக்குச் சலிப்பிருக்காது அல்லவா

நிரூபன் said...

சுற்றி வளைப்பு விடயங்கள், பாஸ் நடை முறை எனப் பல கடந்த கால நிகழ்வுகளைக் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறது உங்கள் தொடர்

ம.தி.சுதா said...

ஃஃஃஃஅதனால் பலர் தமக்கு வழங்கியிருக்கும் வதிவிடப்பாஸ் பிரதியை சமயங்களில் மற்றவர்களிடம் கொடுத்து வைத்திருப்போம்ஃஃஃ

இது கூட எத்தனை தரம் ஆப்பு வச்சிருக்கு தெரியுமா?

வேண்டாப் பொண்டாட்டி எது பட்டாலும் குற்றம் மாதிரி அவையளுக்கு .... ... ... .. ...

Rathnavel Natarajan said...

வாழ்த்துக்கள் தனிமரம்.
இணைந்து விட்டோம் - நீங்கள் தனிமரம் அல்ல -
சோலை தான்.
உங்களது வளர்ச்சிக்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

Unknown said...

மாப்ள பல விஷயங்களை உணர்த்தி போகுது பதிவு நன்றி!

தனிமரம் said...

நன்றி நிரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும் !
தொழில் அப்படி அமைந்துவிட்டது அதனால்தான் அவர்களுடன் சில இடங்களை சுற்ற வேண்டி இருந்தது. முடிந்தளவு சுவாரசியமாகவும் எழுத்துப்பிழையையும் சரி செய்கின்றேன்!

தனிமரம் said...

நன்றி மதிசுதா வருகைக்கும் கருத்துரைக்கும் இந்த ஆப்பு பின்னால் சொல்லும் என்ன ஆச்சு என்று !என்ன செய்வது குற்றம் கண்டுபிடிக்கனும் என்று தானே அவர்கள் அலைவது!

தனிமரம் said...

நன்றி ரத்தனவேல் ஐயா வருகைக்கும் இணைவுக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் .உங்களின் ஆசிர்வாதம் தனிமரம் நிச்சயம் சோலையாகும்!

தனிமரம் said...

நன்றி விக்கியண்ணா வருகைக்கும் கருத்துக்கும்!