12 October 2011

விண்ணைத் தாண்டிய என் காதல் -3


கடல் எப்போதும் பல கதைகள் சொல்லும். கடல்லோரைக் கவிதையில் இருந்து கடற்கரைத்தாகம் வரை.


 பல தடம்பதித்து இருக்கின்றது தமிழ் சினிமாவில் .ஆனால் கடல்கரையை நாம் பார்க்கும் ஒவ்வொரு கனங்களும் சில சிந்தனையை கிளறிவிடும் தனிமையில் நான் பார்த்த  கடல் அலைகள் வாழ்வில் பொருளாதாரத்தில் எப்படி முன்னோறப்போறாய் என்று எனக்கு என் வாலிபத்தில் மோதி மோதி நீ போகும் பாதை சரியா என அலையலையாக வந்து என்னைச் சீண்டிய கொழும்பு கோல்பேஸ் கடலாக வந்து போகின்றது.


.பின் தொழில் தேடி கொஞ்சம் நிமிந்த போது  மீண்டும் என் தொலைந்த  கிராமத்து கடல்கரையில் புரண்டு கொஞ்சம் திருந்துவிட்டேன் என்று குக்குரல் இட்டபோது உன்னையாரு இங்க விட்டது.

 இது பாதுகாப்பு வலயம் என்று தெரியாதா? என தெரிந்த தமிழில் கேட்ட கடற்படைச் சிப்பாய்க்கு நமக்கும் சகோதரமொழி தெரியும் இது என் பூர்வீக இடம் இது நான் தவழ்ந்த இடம் என அவனுக்குச் சொல்லிக் காட்டிய என் வட
க்குத்தீவின் கடல்கரைவெளியை என்னால் பிரியமுடியுது இல்லை இந்த நிமிடம் வரை !.

தனிமரமாக எங்கே போனாலும் முதல் போவது கடல்கரைக்குத்தான். அது மழைக்காலம் என்றாலும், குளிர் காலம் ,அம்மாவாசை இரவு என்றாளும் பயணம் என்றாள் பீச் ஒரு
தீராததாகம் எனக்கு!


நாங்கள் கப்பல் வீட்டில் இருந்து பயணித்தது ஆழப்புழா கடற்கரைக்கு .

போகும் வழியில் நண்ணீர் ஏரியில் கப்பல் சுற்றுலா இருக்கின்றது. விரும்பியவர்கள் விரும்பிய படி சுற்றிக்காட்ட வசதியாக ஆழப்புழாவில் பல படகுகள் காத்திருக்கின்றது.

  வெளிநாட்டவர் பலர் கப்பலில் ஏறிப் போய்க்கொண்டிருந்தார்கள்.

 இப்படி நம்நாட்டிலும் வத்தளை- ஹொந்தல -எலகந்த -பக்கம் அழகாய் இருக்கின்றது.

 இங்கே கித்துல்கள்ளு விற்போருக்கும் மீன் விற்கும் மக்களுக்கும் அரசாங்கம் சுற்றுலா வழிமுறைகளை செய்து கொடுத்தால் இன்னும் வருமானம் ஈட்ட முடியும் ஆனால் திட்டம் போடும் சிந்தனையாளர்கள் ????!

 அதை நோட்டம் இட்டவாரே நாம் போனது சேட்டனுடன் ஆழப்புழா கடற்கரைக்கு!

மதிய வேளை அதிகமான கூட்டம் இல்லாமல் அழகுக்கடல் அமைதியாக தெளிந்த நீரோடை போல் இருக்கின்றது.

 நம்முடன் படகு வீட்டில் இருந்து வெளியோறியோரும் இங்கு வந்திருந்தார்கள் அவர்களும் லண்டனில் இருந்து சென்னை வந்து இங்கு வந்ததாக என்னுடன் கதைக்கும் போது கூறினார்கள்.

 அது ஏனோ நம்மவர்கள் எங்கு சந்தித்தாலும் தாயகம்பற்றி நினைவுகளையே சீண்டுகின்றார்கள்.

 பாதுகாப்பான நாட்டில் இருந்தாலும் மனதில் பாதுகாப்பாக இருப்பது தாயக நினைவுகள் என்பதாலா???


தத்துவம் புரிந்தவர்கள் கடல் ஒரு குரு என்கிறார்கள். பள்ளிகொண்டவன் பால்கடலில் பாம்பனையில் உறங்குவதாலா?

 அமைதியாக ஆழப்புழா கடற்கரை எங்களை அசுவாசப்படுத்தியது. கடல்கரையில் கொஞ்சம் கால்நனைத்து மஹாகவியின் கவிதையை சோதித்துப்பார்த்தோம் கடல் மீது சிறுநண்டு படம்கீற அதைவந்து அலைகொண்டு போவதை அவர் முன்னம் பாடியிருந்தார்.

 நாங்கள் மணலில் வீடுகட்டினோம் ஈழக்கனவைப் போல் அதுவும் கடல் அலை அடித்துச் சென்றது! மீண்டும் மீண்டும் முயண்ற போதும் சர்வதேசத்தின் சதிகள் நம்மை சீரலித்தது போல் கடல் அலை மண்ணை அழித்துவிட்டது!


 .நினைவுகள் பல தீண்ட முன்னே வயோதிபர் எங்களுக்கு வாழ்க்கையின் தத்துவத்தைப் போதித்துக் கொண்டிருந்தார்.

 மீனுக்கு வலை வீசிவிட்டு மிகவும் அமைதியாக காத்திருந்தார்.எனக்கு அவரின் பொறுமை மீது பொறாமையாக இருந்தது!

 புலம்பெயர்ந்து சில நிமிடங்களைக் கூட நிம்மதியாக சிந்திக்க முடியாத அளவு பொருளாதார சிக்கல் விரட்டியடிக்கும் போது அவர்
இப்படி ஒரு குருவினைப் போல் அமைதியாக இருக்கின்றாரே? என்று மனதில் என்னிக்கொண்டு நடந்தோம்!

 கடல் நீர் காலினைத் தாண்டி முழங்கால் வரை என் டவுசரை முத்தம் இட்டது.

 என்னவளோ இப்படியே ஊர் என்னத்தில் திரியுங்கோ பார்ப்போர் சிரிக்கட்டும் இந்த வயசிலும் இப்படியா ஒன்றில் குளிக்கனும் இல்லையென்றால் கரையில் நிற்கனும்.
 இது ரெண்டும் கெட்ட நிலை என்று என்னை சீண்டினால் சரி குளிப்பம் என்று ஒரு முடிவோடு என் இடிப்பில் இருந்த கடவுச்சீட்டை எடுத்து மனைவியிடம் கொடுத்துவிட்டு ஒரு முத்துக்குளியல் போட்டேன்!

 காலையில் கப்பல் குளியல் பின் சூரியகுளியல் என ஜாலியாக இருந்தது என்னவளோ இனியும் கடலில் நிற்க முடியாது வெய்யில் தலைக்கு ஏறுகின்றது !

என்ற போது சரிபோவம் என்று வெளிக்கிடவும் தான் சேட்டனுக்கு சாப்பாட்டு நேரம் காக்க வைத்துவிட்டது என்று தவறு புரிந்தது.

 அருகில் இருந்த ஹோட்டலில் சேட்டனைச் சாப்பிடச் சொல்லியிருந்தேன் அவர் எங்களுக்காக காத்திருப்பதாக சொன்னதால் நானும் கடலின் போதையில் அவரை மறந்து விட்டேன் !

நம் போன்றவர்களை ஏற்றிவந்த  மற்ற சாரதிகள்கூட அவரும் கும்மியடித்துக் கொண்டிருந்தார்.

 நாங்கள் போகவும் அவரும் எழும்பி வர அதுவரை வெய்யிலில் இருந்த ஆழப்புழாக் கடல்கரை தூறலுடம் மழையை வரவலைத்தது அதிகமாகுமோ என்று என்னும் போது சில நிமிடங்களில் மழைவிட்டு விட்டது!

 அங்கு இன்னொரு காட்சி நடந்தது அதைப் பாருங்களேன்!

 சிலர் நான் முன்னர் அரபுலகம் போகவெளிக்கிட்டபோது இப்படித்தான் ஊதாசினப்படுத்தினார்கள்.

 பின் என் ஆருயிர் நண்பனை நான் அனுப்பிய போதும் திட்டியவர்கள் இன்று அவனை போற்றுகின்றார்கள்.

 அவன் தான் எனக்கு விருப்பமான பாடல்களை தேடித்தரும் தொழில்நுட்ப வீரன்.

 நான் விரும்பும் பாடல்களை தனிமரத்திற்கு தந்து ஒத்தாசை புரிபவன். இதையும் பாருங்கள்!


நான் கேட்ட இந்தப்பாடலை பல வேலைப்பலுவிலும் எனக்கு உடனடியாக தந்தவன் இதோ பாடல்!


இந்தப்படம் பார்த்தோர் எத்தனை பேர் ?


அருமையான படம் என்பார்வையில்!
அங்கு இருந்து நாம் போனது தொடரும்!  Or

23 comments :

K.s.s.Rajh said...

பயண அனுபவம் பற்றி அழகாக அதுவும் இடைக்கிடையில் உவமை கலந்து எழுதியிருக்கும் உங்கள் எழுத்து நடை சூப்பர் பாஸ்..

அப்பறம் சிந்தாமல் சிதறாமல் என்ன ஒரு அற்புதமான படம்..

K.s.s.Rajh said...

பாஸ் திரட்டிகளில் இணைச்சாச்சி..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .

Anonymous said...

பயண அனுபவம்...காணொளி அருமை...

kobiraj said...

அருமையான பயணக் கட்டுரை நிறைய விஷயம் அறிந்து கொண்டேன்

கோகுல் said...

மஹாகவியின் கவிதையை சோதித்துப்பார்த்தோம் கடல் மீது சிறுநண்டு படம்கீற அதைவந்து அலைகொண்டு போவதை அவர் முன்னம் பாடியிருந்தார்.

/

அருமை!சுகானுபவ பயண அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!

நிரூபன் said...

கடலோடு கலந்த நினைவுகளை அழகுற மீட்டி அதற்கேற்றாற் போல பாடலும் தந்திருக்கிறீங்க.

நிரூபன் said...

எனக்கும் சற்று முன் கிடைத்த பாடல் பிடிக்கும் பாஸ்..

நிரூபன் said...

கோகுல் கூறியது...
மஹாகவியின் கவிதையை சோதித்துப்பார்த்தோம் கடல் மீது சிறுநண்டு படம்கீற அதைவந்து அலைகொண்டு போவதை அவர் முன்னம் பாடியிருந்தார்.//

அடடா....இந்தப் பாடலும் கோகுல்லுத் தெரியுமா

Yoga.s.FR said...

வணக்கம்,நேசன்!பயணக் கட்டுரை அருமையாகப் போகிறது.வாழ்த்துக்கள்!

தனிமரம் said...

நன்றி ராச் பதிவை இணைத்தற்கும் கருத்துரைக்கும் வருகைக்கும்!

தனிமரம் said...

நன்றி நண்டு@நொரண்டு  கருத்துரைக்கும் வருகைக்கும்!

தனிமரம் said...

நன்றி ரெவெரி உங்கள்  கருத்துரைக்கும் வருகைக்கும்!

தனிமரம் said...

நன்றி கோபிராச்  உங்கள்  கருத்துரைக்கும் வருகைக்கும்!

தனிமரம் said...

நன்றி கோகுல்  உங்கள்  கருத்துரைக்கும் வருகைக்கும்!

தனிமரம் said...

நன்றி நிரூபன்  உங்கள்  கருத்துரைக்கும் வருகைக்கும்!

தனிமரம் said...

அருமையான பாடல் நிரூ!

தனிமரம் said...

கோகுல் நீண்ட வாசிப்புமிக்கவர் சகோ!

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா ஒரே பயணமா இருக்கு ம்ம்ம் நல்லாயிருக்குய்யா அசத்துங்க...!!!

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா !
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்!

தனிமரம் said...

இந்தமுறை நீண்ட விடுமுறையில் போய் இருந்தேன் அண்ணாச்சி அதுதான் ஒரே சுற்றுலா துனைவியுடன் !
நன்றி வருகைக்கும் கருத்துக்கும் மனோ அண்ணா!

மாய உலகம் said...

பயண அனுபவத்தை ரசிச்சு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.. நானும் இன்னும் அந்த படம் இன்னும் பார்க்கவில்லை... நீங்கள் சொல்லியதை பார்த்தால் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.. பார்க்கிறேன் நண்பரே

தனிமரம் said...

நன்றி மாய உலகம் வருகைக்கும் கருத்துரைக்கும்!