06 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-13

யாழ்ப்பாணத்தமிழ் மட்டும் தான் ஈழத்தில் இருக்கு என்று பெருமைப்படுவது எங்கனம். ஏன் மேட்டுக்குடி பேராசிரியர்கள் வரலாற்றை இப்படி இருட்டிப்பு செய்கின்றார்கள் .

கிழக்கு மாகாண தமிழ் எப்படி இனிமை மலையகத்தமிழ் இன்னொரு வகை நாதம் பேசும். இப்படி இருக்கும் போது வரலாறுகள் இப்படி பெருமையாக யாழ்ப்பாணம் என்று மட்டும். மற்ற தேசத்தவர்களுக்கு  கூறமுடியும். இதுவும் அறிவு மோசடியே என்று கேட்கும் எஸ்.பொன்னத்துரையின் வரலாற்றில் வாழ்தல் போல( ப.161)தான்  !

ராகுலும்   அந்தப்பாடசாலையில் பயிலச்சென்ற போது. படிப்பித்த ஆசிரியர் மட்டக்களப்பு.

 அருகில் என்னோடு இருந்து படித்தவன் சுகுமார் .அந்த நாட்களில் மலையகத்தில் கோப்பிச் செடிபோய் தேயிலைச் செடி நட்டு வளர்க்கப்பட்டதில்  .ஊவாவின் முக்கிய நகரமான பதுளையும் ஒரு பகுதி .


அந்த தேயிலைக்கு தன் இரத்தம் பாய்ச்சியவர்களின் வம்சம் இவன்.
 என பெருமையாக சொல்லக்கூடியவன் .

என் நட்புப் பயணத்தில் கடல்கடந்தாலும் காலம் எல்லாம் அவனின் அன்புக்கு கடனாளியல்லவா?

 அழுத ராகுலிடம் என் பெயர் சுகுமார். அப்புறம் நீ ஏன் அழுகின்றாய் .

பேந்து சொல்லுறன் இப்ப  ரீச்சர் பார்க்கிறாங்க என்றான் ராகுல்.  

அவர்களுக்கு மொழி புரிதலில் முதலில் குழப்பந்தான்.

ராகுல் பாட்டியிடம் மீண்டும் போகமாட்டமா ? ஊரில் என்றால் வடலிக்கால் ஓடிவிடலாம். இங்க முன்னுக்கு ஒரே தார்ரோட்டு .

பின் பக்கம் புத்தவிகாரை இருக்கு .எங்க ஊரில் ஐயனார் கண்டு தோப்புக்கரணம் போட்ட நினைவுகள் .அலைக்களிக்க .

ராகுல் நல்ல பிள்ளையாம். ரீச்சர் சொல்லுறமாதிரி  நல்லாய்ப்படிக்கணும்.

என்று தலையைத் தடவிய போது தன் தாயின் எண்ணம் வந்தது.

 ஏன் அம்மா பாட்டி கேட்டதற்கு ஓம் என்று இங்க அனுப்பினா? அண்ணாவையும் தம்பியையும் தன்னோடு வைத்திருந்தா? எப்படி ஊருக்குப் போகலாம்? என்று நினைவுகள் அலையடித்த போது மணி அடித்தது. பள்ளி முடிந்துவிட்டது என்று.

 வெளியில் வந்த போது தென்னக்கோன் மாமா காத்திருந்தார் .ராகுலைக்கூட்டிக்கொண்டு போக.

வாங்க துரை நல்ல படிச்சீங்களா ?அவரின் சகோதரமொழி புரியாமல் சிதம்பர சக்கரம் பார்த்தவனின் நிலைபுரிந்து. அவரே தமிழில் கேட்டார் .ராகுல் நல்லா படித்தீங்களா?

 மாமா என்ன அனுப்பினார் கூட்டியரச் சொல்லி.
எப்படி ரீச்சர் ?பிள்ளைக்கு அடிச்சாவா??

இல்லை மாமா .பிள்ளை நடந்து வரூவீங்களா ?மாமா தோழில் தூக்கவா.

 ஐய்யா யாணை வருகின்றது இந்த யாணையில் ஏறணுமா மருமகனே ?

. ஓம் மாமா .

கொஞ்சம் இருங்கோ.

 அவரும் அந்த கோயில் யாணையில் ராகுலை ஏற்றி  விட்டார் . அதில்  வலம் வந்தபோது .அவனுக்கு பயமும் பரவசமும் சேர்ந்து கொண்டது .

மாட்டு வண்டியில் போனவன், ஆட்டின் மேல் ஏறியிருந்து முதுகு குப்புற விழுந்து பங்கஜம் பாட்டியிடம் அடிவாங்கியவன்.

 யாணை மேல்  ஏறும் வரம் கிடைத்ததில் பாட்டியின் நினைவு மறந்து போச்சு.

தென்னக்கோன் மாமா வீட்ட கூட்டிக்கொண்டு போனார் .அது மலையடிவாரத்தில் இருக்கும் வீடு .

பதுளை விவசாயம் வன்னியைப்போல சிறுபோகம் ,பெரும் போகம், என இருபோகம்.

 ஏர் பூட்டி உழுத  சோதிமாமா நினைவுக்கு வந்தது ஜயந்த மாமா எருமைமாடு பூட்டி பலகையில் நின்று உழுத போது.

ஊரில் மாட்டுக்கு சால் காட்டுவது ,ராகுலும் அவன் அண்ணனும் தான் .

அதற்கு ஒரு சோடி சீனிபணிஸ் வாங்கித் தருவார் சோதிமாமா .

பள்ளிபோக முன்னர் வயல் உழுது போட்டுத்தான் போகணும் .

அந்த பாடசாலை அதிபர் கூட அவரின் அடுத்த காணியை உழது போட்டு ஊர்கிணற்றில் குளிர்த்துவிட்டு.

கலப்பையைக் கொண்டு வந்து பாட்டிவீட்டு வேலியில் சாய்த்துவிட்டுப்  போவார்.

 இடையில் ஒரு நாள் அதிபர் அடித்தார் என்றதுக்காக .

அவரின் நுகத்தில் இருந்த தடியை ஒளித்துவிட்டவன்.

பாவம் அதிபர் அதிகாலை இருட்டில் வாய்க்காலில் எங்கோ தொலைத்துப் போட்டன் என்று நினைத்து பூவரசம் தடியை போட்டு மாடு பூட்டினதை .

எங்கள் காணிக்குள் இருந்து எட்டி எட்டிப்பார்த்த நிகழ்ச்சி ஞாபகத்தில் வந்து போனது

. இன்று யார் ஏர் பிடிக்கின்றார்கள் ? வெளிநாட்டுக் காசும், யுத்தமும்  எங்கள் ஆம்பிள்ளைகளை சோம்போறிகளாக மாற்றுது.!

  ஜயந்த மாமா கலப்பையில் பலகை போட்டு. அதில் ஏறி நிற்க. எருமைமாடு இழுத்துக்கொண்டு போனது.

 ராகுல் எருமைமாடு பார்த்ததே அங்கே தான் .அதன் பிறகு எருமை என்று அவனையும் பின்னாலில் திட்டிய போதெல்லாம் ஜயந்தமாமா ஞாபகம் வரும்.

. விவசாய அந்த நிலத்தைத் தாண்டி வீடு வருவது ஒரு சுகமான பயணம் .

ஜயந்தமாமா எப்போதும் மகே பனா என்ற போது சகோதரமொழி அப்போது புரியாது .

தென்னக்கோன் மாமா சொல்வார் நீ என்ற மருமகன் என்று ஜயந்த மாமா சொல்லுறார்  .

அவர் என்  மகன்  நீ என்ற பேர்த்தியைக் கட்டுவியா ?என்ற போது அவன் அன்று சிரித்தது இன்னும் ஞாபகம் இருக்கு ராகுலுக்கு .

அங்கே தான் ஜயந்தமாமா வீட்டில் அவளைப்பார்த்தேன்.

தாமரைப்பூப் போல அவள் காது
 மணலை மீன்போல இரு விழிகள்
அருவிச் சத்தகம் போல அவள் நெற்றி இருபக்கம் சீவிய தலைமுடி
கிளியின் வடிவில் கூர்மையான மூக்கு.
அல்லிக் கொடி போல சிறிய இடை அரசமரத்தின் தளிர் போல அவள் கன்னம் நெற்குருத்தைப்போல இரு தளிர் கொண்ட இதல்கள்
.நேற்று ஈர்ன்ற மாட்டுக்கன்று போல அவள் கைகள் .
சலங்கை போல அவள் விரல்கள். கமுகைப்போல அவள் கால்கள்
 மெல்ல நடந்தால் பொன்னியின் செல்வனில் வரும் பூங்குழலிபோல
 அவள் தான் அனோமா  தென்னக்கோனின் பேர்த்தி .
அவளைப் பார்க்கும் போது .அவளுக்கு நான் மூப்பு 2 வயதால்.

 சிரிமாவின் புண்ணியத்தில் சீத்தையில் ஒரு சட்டை. பூப்போட்ட வடிவத்தில் போட்டிருந்தால் .

ஏதேதோ சொல்லுவாள் மொழி புரியாத போது .சிரிப்பதைத் தவிர வேற என்ன செய்ய  முடியும் ராகுலால் .

அவள் தான் சகோதரமொழியை எழுதக் கற்றுக் கொடுத்தால் கையைப்பிடித்து இரட்டைரூல் கொப்பியில் .இப்படித்தான் அயன்ன எழுதோணும் என்று சொல்லித் தந்தவள்.

அதன் பின்புதான் சகோதர மொழிபடிக்க மேலதிக  வகுப்புக்குப் போனது.

.ஓயா மகோ யாழுவோ அய்யே. என்பாள் கன்னத்தில் குழிவில .

அவளின் நட்பினால் தான் பாட்டியிடம் போகும் ஆசையே இல்லாமல் போனது.

 ஜயந்த மாமா இருவருக்கும் உப்புப்போட்ட மாங்காய் வெட்டித்தருவார் .

ராகுலுக்கும் கொடுத்துப்பழகனும் என்று சொல்லுவார் .

தென்னக்கோன் மாமா என் விரலில் ஒவ்வொன்றை மடித்து எக்காய் ,தெக்காய் என்று இலக்கம் எழுதவும் பேசவும் சொல்லித்தந்தவர்.

 .எங்கே போவதென்றாலும் தாய் தந்தையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வேண்டணும் என்ற நடைமுறையை கற்றுத்தந்த குரு.

 இன்றும் ராகுலும் சரி அதைக்கடைப்பிடிக்கின்றான் .

அவர்கள் வீட்டுக்கு அருகில் தான் ஈசன் மாமா வாடகை வீடு எடுத்திருந்தார்

. எங்கள் வாழ்வு முதலில் தொடங்கியது அந்த செங்கல்லினால் செய்த வீட்டில் இருந்து தான்.




தொடரும்.

/////////////////////////////////////////////////////////////////////
பேந்து-பிறகு யாழ் வட்டாரமொழி
அப்புறம்- பிறகு-மலையக  வட்டார மொழி
கலப்பை,நுகம்,-விவாசாய உபகரணம்.
மகே bவனா-எனது மருமகன்
எக்காய்-1
தெக்காய்-2

04 March 2012

கொழும்புக்கு வாரீயா??

கொழும்பு தலைநகர வாழ்க்கை ஒரு ராமாயணம் போல பல பாடங்களை அனுபவரீதியாக கற்றுத்தந்த நகரம் .

.உறவுகளின் முகத்திரை ,தொழில் தேடும்படலம்,நல்ல நண்பர்களின் சுகதுக்கங்கள்,வாழ்க்கையின் கனவுகளுக்கும் கற்பனைக்கும் இடைப்பட்ட யதார்த்த வாழ்வு எல்லாவற்றையும் பரந்து விரிந்த இந்த மாநாகரம் மனதில் வாழ்க்கை என்றால் என்ன என்பதை போதித்த போதி மரம்.

தொழில் தேடி வந்த பின் கொழும்பின் பயம் தெளிந்தது .காரணம் கிடைத்தது விற்பனைப்பிரதிநிதி வேலை  அது பல்தேசியக் கம்பனி கொழும்பின் பல பாதைகளை பொடிநடையாக நடந்தே பலருக்கு பொருட்கள் விற்பது( புகையிலை விற்பது ஊருக்குள் விற்பனைப்பிரதிநிதி என்றால் இப்படித்தான் நக்கல் பண்ணூவார்கள் இப்போது மாறிவிட்டதாக நண்பர்கள் சொல்கின்றார்கள்)  

இந்த வேலையின் விளைவால் வந்தது பல முதிர்ச்சியான அனுபவங்கள் தான் இன்றும் தனிமரத்தை வழிநடத்தும் ஆசான்!

அப்படிச் சென்ற நேரங்களில் சந்தித்த இந்த நண்பர் ஈஸ்வர் (இவர் தனக்கு வைத்துக்கொண்டது )இசைப்பேழை வெளியிட வேண்டும் என்ற ஆர்வத்தில் அப்போது இருந்தார்

. வார இறுதியில் இவரின் வாடகை அறைக்குப் போய் காத்திருந்தால்!

 இதோ வாரன் என்பார் வரமாட்டார் கேட்டால் இசையமைப்பாளர் கணேஸ் அவர்களுடன் இருக்கின்றேன் என்று தொலைபேசியை தொல்லை பேசியாக்கிவிட்டு இருப்பார்.

கோபப்பட்டு திட்டிவிட்டு என் இருப்பிடத்திற்கு வந்த நாட்கள் அதிகம்.


 ஒய்வான பொழுதுகளில் கல்கிசை,தெகிவளை  கடற்கரை ஓரங்களில்  இருக்கும் உல்லாசவிடுதியின் ஓரங்களில் சந்ததித்தால் .

இசைபற்றியதும் , அரசியல் ,வாழ்வின் அடுத்த நிலை பற்றிய தேடலாக இருக்கும் இந்த நேரத்தில் நண்பர் தான் எழுதியிருக்கும் பாடலை பாடிக்காட்டுவார்.

காட்சி அமைப்பு இப்படி இருக்கணும் என்று பாலகுமார் மூக்குடைத்தது போல இந்தக் காட்சியில் என்று கையில் இருக்கும் கிளாஸ் உடைத்தநாட்கள் அதிகம்.

 அப்படி இருக்கும் போது இவர் நவீன இசைபற்றி பேச நானோ மெல்லிசையின் தீவிர ரசிகன் .இப்படி இருந்தால் நல்லம் என்றால் உனக்கு இசைபற்றி தெரியாது என்று சண்டைக்கு வருவார்.

 உனக்கு வேனும் என்றால் பாட்டு எழுத சந்தர்ப்பம் தருகின்றேன் என்பார்.

ஏதோ நான் கிறுக்கிய ஏழுத்துக்களை இதயசங்கமம் நிகழ்ச்சி (இ.ஒ.கூ)தாங்கி வந்து இருக்கின்றது. அந்த நேரத்தில் .

அதுவும் இல்லாமல் ஏதோ எழுதுறான் என்று அன்று  ஒத்துக்கொண்டான் .அவனா  சொன்னான்? இல்லை அன்று  கையில் இருந்த ரையின் (gin)அப்படிச் சொன்னதா தெரியாது .

சந்திக்க நிற்கும் நேரத்தில் ஐராங்கனி கண்டால் அன்று கஞ்சிதான். இன்று இரவு அப்ப சிவராத்திரிதான்   எனக்கு .

நீங்கள் வந்து படுக்க விடிந்துவிடும் இரவு சத்தமாக பாட்டைப்போடூவீங்க  .நான் வேலைக்குப் போகணும் என்று  ஒப்பாரி வைப்பாள். அருகில் வாடகைக்கு குடியிருக்கும் சகோதரமொழி நங்கை.

 சண்டைதான்  அவளுடன் சில நாட்கள் என்றாலும் என் கைமோதிரத்துடன் போனவள் பார்க்க இங்கே-http://www.thanimaram.org/2011/06/blog-post_7624.html
.சிங்களவரின் வீட்டில் தான் வாடகை அறை எடுத்திருந்தான் ஈஸ்வர் .

அதன் பின் நான் புலம்பெயர்ந்து விட்டேன்.

இடையில் ஒருநாள் தொலைபேசியில் தான் பாடல்கள் பதிவு செய்துவிட்டேன் .இரு பாடலுக்கு காட்சியும் அமைத்துவிட்டேன். ஒலிப்பேழை வெளியீடு செய்யப்போறன் என்றான்.

 நானும் அப்படியா !ஒலிப்பேழை வெளியிட்டால் எத்தனை பேர் ஈழத்து இசையைக்கேட்க ஆர்வமாக இருக்கினம் .,ஊக்கிவிக்கத் தயக்கம்  ,வெட்டித்தனம்  இது ,நம்கலைஞர்களுக்கு திறமை போதாது என்றுதானே உபதேசம் செய்வார்கள் .

உழைக்கும் பணத்திற்குக் கேடு என்றேன் .தொலைபேசியைத் துண்டிந்துவிட்டான் .

சில வாரத்தில் ஒரு  இறுவட்டு அனுப்பியிருந்தார். நீ (nee). .தான் வெளியீடு செய்துவிட்டதாகவும் .

இந்தப்பாடலை முடிந்தால் .இங்கு இருந்து அன்நாட்களில் ஒலி/ஒளிபரப்பாக்கப்பட்ட தமிழ் ஒலியில்  ஒலி/ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியான ஒளிக்கீற்றுக்கு கொடுத்துவிடு என்ற.


  .. நானும் கொடுத்த நேரம் அந்த நிலையம் சேவையை முடக்கிவிட்டது

.பாடல் ஒலி/ஒளி ஒளிபரப்பாகவில்லை.

நேற்று வேற ஒரு இசைபேழையைத் தேடும் போது இந்தப்பாடல் கையில் கிடைத்தது . இப்பேழையில்  12 பாடல்கள்  வெளிவந்துள்ளது இரண்டு பாடல் மட்டும் ஒலி/ஒளியாக  செய்துள்ளார் ஈஸ்வர்.




அதனை உங்களுடன் பகிர்கின்றேன் பாடலுக்கு குரல் கொடுப்பதுடன் காட்சிக்கு நடனம் அமைத்து பாடல்வரியும் தீட்டியிருப்பவர் ஈஸ்வர் .

அவரோடு சேர்ந்து குரல் கொடுப்பதுடன் நடனத்தில் கூடவருவது சதீஸ்


. இந்தக்காட்சிகளில் தோன்றும் சகோதரமொழி நங்கைகள் சின்னத்திரை மற்றும் விளம்பர காட்சியில் நடிப்பவர்கள்.

தனிமரத்தின் வலையில் ரசியுங்கள்-: