06 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-13

யாழ்ப்பாணத்தமிழ் மட்டும் தான் ஈழத்தில் இருக்கு என்று பெருமைப்படுவது எங்கனம். ஏன் மேட்டுக்குடி பேராசிரியர்கள் வரலாற்றை இப்படி இருட்டிப்பு செய்கின்றார்கள் .

கிழக்கு மாகாண தமிழ் எப்படி இனிமை மலையகத்தமிழ் இன்னொரு வகை நாதம் பேசும். இப்படி இருக்கும் போது வரலாறுகள் இப்படி பெருமையாக யாழ்ப்பாணம் என்று மட்டும். மற்ற தேசத்தவர்களுக்கு  கூறமுடியும். இதுவும் அறிவு மோசடியே என்று கேட்கும் எஸ்.பொன்னத்துரையின் வரலாற்றில் வாழ்தல் போல( ப.161)தான்  !

ராகுலும்   அந்தப்பாடசாலையில் பயிலச்சென்ற போது. படிப்பித்த ஆசிரியர் மட்டக்களப்பு.

 அருகில் என்னோடு இருந்து படித்தவன் சுகுமார் .அந்த நாட்களில் மலையகத்தில் கோப்பிச் செடிபோய் தேயிலைச் செடி நட்டு வளர்க்கப்பட்டதில்  .ஊவாவின் முக்கிய நகரமான பதுளையும் ஒரு பகுதி .


அந்த தேயிலைக்கு தன் இரத்தம் பாய்ச்சியவர்களின் வம்சம் இவன்.
 என பெருமையாக சொல்லக்கூடியவன் .

என் நட்புப் பயணத்தில் கடல்கடந்தாலும் காலம் எல்லாம் அவனின் அன்புக்கு கடனாளியல்லவா?

 அழுத ராகுலிடம் என் பெயர் சுகுமார். அப்புறம் நீ ஏன் அழுகின்றாய் .

பேந்து சொல்லுறன் இப்ப  ரீச்சர் பார்க்கிறாங்க என்றான் ராகுல்.  

அவர்களுக்கு மொழி புரிதலில் முதலில் குழப்பந்தான்.

ராகுல் பாட்டியிடம் மீண்டும் போகமாட்டமா ? ஊரில் என்றால் வடலிக்கால் ஓடிவிடலாம். இங்க முன்னுக்கு ஒரே தார்ரோட்டு .

பின் பக்கம் புத்தவிகாரை இருக்கு .எங்க ஊரில் ஐயனார் கண்டு தோப்புக்கரணம் போட்ட நினைவுகள் .அலைக்களிக்க .

ராகுல் நல்ல பிள்ளையாம். ரீச்சர் சொல்லுறமாதிரி  நல்லாய்ப்படிக்கணும்.

என்று தலையைத் தடவிய போது தன் தாயின் எண்ணம் வந்தது.

 ஏன் அம்மா பாட்டி கேட்டதற்கு ஓம் என்று இங்க அனுப்பினா? அண்ணாவையும் தம்பியையும் தன்னோடு வைத்திருந்தா? எப்படி ஊருக்குப் போகலாம்? என்று நினைவுகள் அலையடித்த போது மணி அடித்தது. பள்ளி முடிந்துவிட்டது என்று.

 வெளியில் வந்த போது தென்னக்கோன் மாமா காத்திருந்தார் .ராகுலைக்கூட்டிக்கொண்டு போக.

வாங்க துரை நல்ல படிச்சீங்களா ?அவரின் சகோதரமொழி புரியாமல் சிதம்பர சக்கரம் பார்த்தவனின் நிலைபுரிந்து. அவரே தமிழில் கேட்டார் .ராகுல் நல்லா படித்தீங்களா?

 மாமா என்ன அனுப்பினார் கூட்டியரச் சொல்லி.
எப்படி ரீச்சர் ?பிள்ளைக்கு அடிச்சாவா??

இல்லை மாமா .பிள்ளை நடந்து வரூவீங்களா ?மாமா தோழில் தூக்கவா.

 ஐய்யா யாணை வருகின்றது இந்த யாணையில் ஏறணுமா மருமகனே ?

. ஓம் மாமா .

கொஞ்சம் இருங்கோ.

 அவரும் அந்த கோயில் யாணையில் ராகுலை ஏற்றி  விட்டார் . அதில்  வலம் வந்தபோது .அவனுக்கு பயமும் பரவசமும் சேர்ந்து கொண்டது .

மாட்டு வண்டியில் போனவன், ஆட்டின் மேல் ஏறியிருந்து முதுகு குப்புற விழுந்து பங்கஜம் பாட்டியிடம் அடிவாங்கியவன்.

 யாணை மேல்  ஏறும் வரம் கிடைத்ததில் பாட்டியின் நினைவு மறந்து போச்சு.

தென்னக்கோன் மாமா வீட்ட கூட்டிக்கொண்டு போனார் .அது மலையடிவாரத்தில் இருக்கும் வீடு .

பதுளை விவசாயம் வன்னியைப்போல சிறுபோகம் ,பெரும் போகம், என இருபோகம்.

 ஏர் பூட்டி உழுத  சோதிமாமா நினைவுக்கு வந்தது ஜயந்த மாமா எருமைமாடு பூட்டி பலகையில் நின்று உழுத போது.

ஊரில் மாட்டுக்கு சால் காட்டுவது ,ராகுலும் அவன் அண்ணனும் தான் .

அதற்கு ஒரு சோடி சீனிபணிஸ் வாங்கித் தருவார் சோதிமாமா .

பள்ளிபோக முன்னர் வயல் உழுது போட்டுத்தான் போகணும் .

அந்த பாடசாலை அதிபர் கூட அவரின் அடுத்த காணியை உழது போட்டு ஊர்கிணற்றில் குளிர்த்துவிட்டு.

கலப்பையைக் கொண்டு வந்து பாட்டிவீட்டு வேலியில் சாய்த்துவிட்டுப்  போவார்.

 இடையில் ஒரு நாள் அதிபர் அடித்தார் என்றதுக்காக .

அவரின் நுகத்தில் இருந்த தடியை ஒளித்துவிட்டவன்.

பாவம் அதிபர் அதிகாலை இருட்டில் வாய்க்காலில் எங்கோ தொலைத்துப் போட்டன் என்று நினைத்து பூவரசம் தடியை போட்டு மாடு பூட்டினதை .

எங்கள் காணிக்குள் இருந்து எட்டி எட்டிப்பார்த்த நிகழ்ச்சி ஞாபகத்தில் வந்து போனது

. இன்று யார் ஏர் பிடிக்கின்றார்கள் ? வெளிநாட்டுக் காசும், யுத்தமும்  எங்கள் ஆம்பிள்ளைகளை சோம்போறிகளாக மாற்றுது.!

  ஜயந்த மாமா கலப்பையில் பலகை போட்டு. அதில் ஏறி நிற்க. எருமைமாடு இழுத்துக்கொண்டு போனது.

 ராகுல் எருமைமாடு பார்த்ததே அங்கே தான் .அதன் பிறகு எருமை என்று அவனையும் பின்னாலில் திட்டிய போதெல்லாம் ஜயந்தமாமா ஞாபகம் வரும்.

. விவசாய அந்த நிலத்தைத் தாண்டி வீடு வருவது ஒரு சுகமான பயணம் .

ஜயந்தமாமா எப்போதும் மகே பனா என்ற போது சகோதரமொழி அப்போது புரியாது .

தென்னக்கோன் மாமா சொல்வார் நீ என்ற மருமகன் என்று ஜயந்த மாமா சொல்லுறார்  .

அவர் என்  மகன்  நீ என்ற பேர்த்தியைக் கட்டுவியா ?என்ற போது அவன் அன்று சிரித்தது இன்னும் ஞாபகம் இருக்கு ராகுலுக்கு .

அங்கே தான் ஜயந்தமாமா வீட்டில் அவளைப்பார்த்தேன்.

தாமரைப்பூப் போல அவள் காது
 மணலை மீன்போல இரு விழிகள்
அருவிச் சத்தகம் போல அவள் நெற்றி இருபக்கம் சீவிய தலைமுடி
கிளியின் வடிவில் கூர்மையான மூக்கு.
அல்லிக் கொடி போல சிறிய இடை அரசமரத்தின் தளிர் போல அவள் கன்னம் நெற்குருத்தைப்போல இரு தளிர் கொண்ட இதல்கள்
.நேற்று ஈர்ன்ற மாட்டுக்கன்று போல அவள் கைகள் .
சலங்கை போல அவள் விரல்கள். கமுகைப்போல அவள் கால்கள்
 மெல்ல நடந்தால் பொன்னியின் செல்வனில் வரும் பூங்குழலிபோல
 அவள் தான் அனோமா  தென்னக்கோனின் பேர்த்தி .
அவளைப் பார்க்கும் போது .அவளுக்கு நான் மூப்பு 2 வயதால்.

 சிரிமாவின் புண்ணியத்தில் சீத்தையில் ஒரு சட்டை. பூப்போட்ட வடிவத்தில் போட்டிருந்தால் .

ஏதேதோ சொல்லுவாள் மொழி புரியாத போது .சிரிப்பதைத் தவிர வேற என்ன செய்ய  முடியும் ராகுலால் .

அவள் தான் சகோதரமொழியை எழுதக் கற்றுக் கொடுத்தால் கையைப்பிடித்து இரட்டைரூல் கொப்பியில் .இப்படித்தான் அயன்ன எழுதோணும் என்று சொல்லித் தந்தவள்.

அதன் பின்புதான் சகோதர மொழிபடிக்க மேலதிக  வகுப்புக்குப் போனது.

.ஓயா மகோ யாழுவோ அய்யே. என்பாள் கன்னத்தில் குழிவில .

அவளின் நட்பினால் தான் பாட்டியிடம் போகும் ஆசையே இல்லாமல் போனது.

 ஜயந்த மாமா இருவருக்கும் உப்புப்போட்ட மாங்காய் வெட்டித்தருவார் .

ராகுலுக்கும் கொடுத்துப்பழகனும் என்று சொல்லுவார் .

தென்னக்கோன் மாமா என் விரலில் ஒவ்வொன்றை மடித்து எக்காய் ,தெக்காய் என்று இலக்கம் எழுதவும் பேசவும் சொல்லித்தந்தவர்.

 .எங்கே போவதென்றாலும் தாய் தந்தையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வேண்டணும் என்ற நடைமுறையை கற்றுத்தந்த குரு.

 இன்றும் ராகுலும் சரி அதைக்கடைப்பிடிக்கின்றான் .

அவர்கள் வீட்டுக்கு அருகில் தான் ஈசன் மாமா வாடகை வீடு எடுத்திருந்தார்

. எங்கள் வாழ்வு முதலில் தொடங்கியது அந்த செங்கல்லினால் செய்த வீட்டில் இருந்து தான்.




தொடரும்.

/////////////////////////////////////////////////////////////////////
பேந்து-பிறகு யாழ் வட்டாரமொழி
அப்புறம்- பிறகு-மலையக  வட்டார மொழி
கலப்பை,நுகம்,-விவாசாய உபகரணம்.
மகே bவனா-எனது மருமகன்
எக்காய்-1
தெக்காய்-2

27 comments :

Yoga.S. said...

வணக்கம் நேசன்!இன்று,"கோப்பி வித் நேசன்".அருமை!இரண்டொரு எழுத்துப் பிழைகள் மட்டுமே,இன்று!வாழ்த்துக்கள்!நிரூபனின் வழிகாட்டலில் நன்றாகவே வர்ணிக்கிறீர்கள்!(அந்தச்"சின்னப் பெட்டை"யை,)ஹ!ஹ!ஹா!!!!!!!

Yoga.S. said...

சிரிமாவின் புண்ணியத்தில் சீத்தையில் ஒரு சட்டை. பூப்போட்ட வடிவத்தில் போட்டிருந்தாள்./////சிறிமா காலம்,1970-1977. அப்படியென்றால்????????????????

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா.
இன்று பால்கோப்பி உங்களுக்குத் தான்.எழுத்துப்பிழை சொல்வழி கேட்குது இல்லை.நன்றி உங்களின் பாராட்டுக்கு. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.!

தனிமரம் said...

சிரிமாவின் ஆட்சி போய் இருந்தாலும் சிரிமாவின் கொள்கைகள் அந்த வட்டாரத்தில் பின்பற்றினார்கள் என்று சொல்வதா அல்லது சிரிமாவின் வாக்கு வங்கிகள் அவர்கள் என்பதா? அதனால் அவ்வாறு ஒரு குறீயீட்டைக் கொடுத்தேன் இனி வரும் காலத்தில் எப்படி ராகுலுக்கும் சிரிமாமீதும் அவரின் புத்திரிமீதும் ஈர்ப்பு வந்தது என்பதை தொடரும் பகுதியில் கானலாம். என்பதை தாழ்மையாக இங்கே பதிவு செய்கின்றேன்.கதையின் காலகட்டம் 1987 இல் தான் பயணிக்கின்றது.

முற்றும் அறிந்த அதிரா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இண்டைக்குப் பால் கோப்பி யோகா அண்ணனுக்கோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

முற்றும் அறிந்த அதிரா said...

அதென்ன அது சொல்லி வச்சதுபோல.. எல்லோரும் சகோதரமொழி சகோதரிகளை விழுந்து எழும்பி வர்ணிக்கிறீங்க:))... அங்க அம்பலத்தார்.. இந்த வயசிலயும்... விட்டேனோ பார் என சயந்தாவோ என்னவோவாம்:))... செல்லம்மா அன்ரிக்கும் தெரியாமல் வர்ணிச்சிருக்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

முற்றும் அறிந்த அதிரா said...

யாணை இல்லை, அது யானை////

றீச்சர் ஓடிவா ந்க்க ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊஊஉ.. எங்கிட்டயேவா:)).

முற்றும் அறிந்த அதிரா said...

உண்மைதான் ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஏன் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதப் பாசை இருக்கும்... ஒவ்வொன்றும் புரிந்துகொள்ளக் கஸ்டமாக இருப்பினும் பழகிட்டால் இனிமை.

முற்றும் அறிந்த அதிரா said...

உங்கள் தொடர் படிக்க, என்னவோ மனதில் சொல்லமுடியாத ஒரு சோகம் உருவாகுது... அழகாக நகர்த்துறீங்க தொடருங்க... இம்முறை ஐராங்கனியின் சிலமனைக் காணேல்லை:))

தனிமரம் said...

வணக்கம் பூசாரே!
யோகா ஐயா கொஞ்சம் முந்திவிட்டார் பந்திக்கு.ஹீ ஹீ

தனிமரம் said...

என்ன செய்வது சகோதரமொழி நங்கைகள் கூடத்தானே ஜொல்லுவிட்டது அதிகம் நம்ம வளர்ந்த இடம் அப்படி என்று ராகுல் சொல்லுறான்.நான் எல்லாம் பழகியது கொழும்பில் தான் அதிகம் சகோதர மொழி மங்கைகள் கூட.வேலை செய்தது..

தனிமரம் said...

இந்த எழுத்துப்பிழைக்கு எல்லாம் கருக்கு மட்டையால் தலையில் அடிக்கக் கூடாது அதிரா அப்போது அடிவிழும்போது தலையில் கிப்பி முடி. இப்ப டோப்பா முடிதான் போடனும் ரீச்சர் ஹீ ஹீஆமா யானையா/ஆனையா சரி கொஞ்சம் குழப்பம் தான்!

தனிமரம் said...

ஆரம்பத்தில் மொழிப்பிரஜோகம் தடுமாற்றம் வருவது இயல்புதான்.எனக்கும் பல இடங்களில் இப்படி நேர்ந்து இருக்கு.

தனிமரம் said...

ராகுலின் விருப்பத்தை எழுதுகின்றேன் நான் எப்போதும் ஜாலியானவன் .ஐராங்கனி இங்கு வரமாட்டா இது ராகுலின் ஏரியா தனிமரத்தின் அல்ல. நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.

சசிகலா said...

. இன்று யார் ஏர் பிடிக்கின்றார்கள் ? வெளிநாட்டுக் காசும், யுத்தமும் எங்கள் ஆம்பிள்ளைகளை சோம்போறிகளாக மாற்றுது.!
வருந்தக் கூடிய ஒன்று அருமையான பகிர்வு .

மகேந்திரன் said...

அந்தச் சின்னப் பெண்ணை வர்ணித்த விதம்
மிக அழகு சகோதரரே..
ரசித்தேன்...

மகேந்திரன் said...

விவசாயி சேற்றில் இறங்க தயங்கக் கூடாது..
நாமும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்..
இல்லையேல்
நாம் நாளை சோற்றில் கைவைக்க முடியாது......
என்று அழுத்தமாக சொல்லி இருக்கிறீர்கள்..

மகேந்திரன் said...

உங்க பதிவு படித்து எனக்கு ஈழ தமிழ் நடை
மீது தனிக் காதல் பிறந்துவிட்டது நேசன்...

தனிமரம் said...

நன்றி சசிகலா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம் மகேந்திரன் அண்ணா!
உங்களை என் வர்ணனை வசிகரித்து இருந்தால் இந்த சின்னவன் மிக்க சந்தோஸப்படுகின்றேன் நான் கிறுக்குவது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது என்ற ஆர்வத்தில்.

தனிமரம் said...

விவசாயிதான் முதுகெலும்பு அவர்கள் இல்லையேல் நாம் வெறும் பதர்கள் தான்.

தனிமரம் said...

ஈழநடை பிடித்திருந்தால் அந்த தேசத்தின் மைந்தனாக பெருமைப்படுகின்றேன். இந்த சின்னவன்.ஈழம் சொல்ல மறந்த சில தகவலை இந்த தொடரில் அலசிக்கொண்டு வருகின்றேன். உங்களின் பின்னூட்டங்கள் தொடரை முழுமை பெறவைக்கும் அண்ணா.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஈழநடை பிடித்திருந்தால் அந்த தேசத்தின் மைந்தனாக பெருமைப்படுகின்றேன். இந்த சின்னவன்.ஈழம் சொல்ல மறந்த சில தகவலை இந்த தொடரில் அலசிக்கொண்டு வருகின்றேன். உங்களின் பின்னூட்டங்கள் தொடரை முழுமை பெறவைக்கும் அண்ணா.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

ஹேமா said...

நேசன் யார் சொன்னது யாழ் தமிழ்மட்டும்தான் அழகு என்று.திருகோணமலை,மட்டக்களப்பு,தீவுப்பகுதி,மலைநாட்டுப்பக்கம் என்று பார்த்தால் ஒவ்வொன்றுக்கும் இசைபோல ஒவ்வொரு அழகு !

பதிவில் நிறையப் பிடிச்சது ஸ்ரீமான்ர புண்ணியத்தில சீத்தைச்சட்டை போட்ட சின்னப் பெட்டைக்குச் சொன்ன வர்ணனைதான்.அப்பாடி....என்ன ஒரு ரசிப்பு !

எழுத்துப்பிழை....கொலைவெறி.
ல் - ள் சொல்லின் அர்த்தத்தையே மாத்திப்போடுது நேசன் !

தனிமரம் said...

வணக்கம் ஹேமா.மூத்த பேராசிரியர்கள் இருவர் தமிழக சஞ்சிகைக்கு கொடுத்த பேட்டியின் சாரத்தை கடந்தவாரம் படித்துக்கொண்டிருந்தேன் அப்போது அவரிப் பேட்டியில் ஈழம்பற்றிய பார்வையில் யாழ்ப்பாணம் தாண்டிய அவரின் பார்வையைப் பார்க்க முடியவில்லை அதனல் தான் இப்படி ஒரு கருத்து அதில் வைத்தேன்.
வர்ணிப்புப் பிடித்திருக்கு பலருக்கு சந்தோஸம்.என்ன செய்ய நானும் எழுத்துப்பிழையை தவிர்க்க முயல்கின்றேன் முடியவில்லை. பொறுத்தருள்க .அக்காச்சி! 
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

Unknown said...

தொடர்கிறேன்...

Anonymous said...

அனோமா ஏறக்குறைய என் சிறு வயது மகள் போல CUTEஆ இருக்காங்க...கொள்ளை அழகு...

தொடருங்கள் நேசரே...