04 March 2012

கொழும்புக்கு வாரீயா??

கொழும்பு தலைநகர வாழ்க்கை ஒரு ராமாயணம் போல பல பாடங்களை அனுபவரீதியாக கற்றுத்தந்த நகரம் .

.உறவுகளின் முகத்திரை ,தொழில் தேடும்படலம்,நல்ல நண்பர்களின் சுகதுக்கங்கள்,வாழ்க்கையின் கனவுகளுக்கும் கற்பனைக்கும் இடைப்பட்ட யதார்த்த வாழ்வு எல்லாவற்றையும் பரந்து விரிந்த இந்த மாநாகரம் மனதில் வாழ்க்கை என்றால் என்ன என்பதை போதித்த போதி மரம்.

தொழில் தேடி வந்த பின் கொழும்பின் பயம் தெளிந்தது .காரணம் கிடைத்தது விற்பனைப்பிரதிநிதி வேலை  அது பல்தேசியக் கம்பனி கொழும்பின் பல பாதைகளை பொடிநடையாக நடந்தே பலருக்கு பொருட்கள் விற்பது( புகையிலை விற்பது ஊருக்குள் விற்பனைப்பிரதிநிதி என்றால் இப்படித்தான் நக்கல் பண்ணூவார்கள் இப்போது மாறிவிட்டதாக நண்பர்கள் சொல்கின்றார்கள்)  

இந்த வேலையின் விளைவால் வந்தது பல முதிர்ச்சியான அனுபவங்கள் தான் இன்றும் தனிமரத்தை வழிநடத்தும் ஆசான்!

அப்படிச் சென்ற நேரங்களில் சந்தித்த இந்த நண்பர் ஈஸ்வர் (இவர் தனக்கு வைத்துக்கொண்டது )இசைப்பேழை வெளியிட வேண்டும் என்ற ஆர்வத்தில் அப்போது இருந்தார்

. வார இறுதியில் இவரின் வாடகை அறைக்குப் போய் காத்திருந்தால்!

 இதோ வாரன் என்பார் வரமாட்டார் கேட்டால் இசையமைப்பாளர் கணேஸ் அவர்களுடன் இருக்கின்றேன் என்று தொலைபேசியை தொல்லை பேசியாக்கிவிட்டு இருப்பார்.

கோபப்பட்டு திட்டிவிட்டு என் இருப்பிடத்திற்கு வந்த நாட்கள் அதிகம்.


 ஒய்வான பொழுதுகளில் கல்கிசை,தெகிவளை  கடற்கரை ஓரங்களில்  இருக்கும் உல்லாசவிடுதியின் ஓரங்களில் சந்ததித்தால் .

இசைபற்றியதும் , அரசியல் ,வாழ்வின் அடுத்த நிலை பற்றிய தேடலாக இருக்கும் இந்த நேரத்தில் நண்பர் தான் எழுதியிருக்கும் பாடலை பாடிக்காட்டுவார்.

காட்சி அமைப்பு இப்படி இருக்கணும் என்று பாலகுமார் மூக்குடைத்தது போல இந்தக் காட்சியில் என்று கையில் இருக்கும் கிளாஸ் உடைத்தநாட்கள் அதிகம்.

 அப்படி இருக்கும் போது இவர் நவீன இசைபற்றி பேச நானோ மெல்லிசையின் தீவிர ரசிகன் .இப்படி இருந்தால் நல்லம் என்றால் உனக்கு இசைபற்றி தெரியாது என்று சண்டைக்கு வருவார்.

 உனக்கு வேனும் என்றால் பாட்டு எழுத சந்தர்ப்பம் தருகின்றேன் என்பார்.

ஏதோ நான் கிறுக்கிய ஏழுத்துக்களை இதயசங்கமம் நிகழ்ச்சி (இ.ஒ.கூ)தாங்கி வந்து இருக்கின்றது. அந்த நேரத்தில் .

அதுவும் இல்லாமல் ஏதோ எழுதுறான் என்று அன்று  ஒத்துக்கொண்டான் .அவனா  சொன்னான்? இல்லை அன்று  கையில் இருந்த ரையின் (gin)அப்படிச் சொன்னதா தெரியாது .

சந்திக்க நிற்கும் நேரத்தில் ஐராங்கனி கண்டால் அன்று கஞ்சிதான். இன்று இரவு அப்ப சிவராத்திரிதான்   எனக்கு .

நீங்கள் வந்து படுக்க விடிந்துவிடும் இரவு சத்தமாக பாட்டைப்போடூவீங்க  .நான் வேலைக்குப் போகணும் என்று  ஒப்பாரி வைப்பாள். அருகில் வாடகைக்கு குடியிருக்கும் சகோதரமொழி நங்கை.

 சண்டைதான்  அவளுடன் சில நாட்கள் என்றாலும் என் கைமோதிரத்துடன் போனவள் பார்க்க இங்கே-http://www.thanimaram.org/2011/06/blog-post_7624.html
.சிங்களவரின் வீட்டில் தான் வாடகை அறை எடுத்திருந்தான் ஈஸ்வர் .

அதன் பின் நான் புலம்பெயர்ந்து விட்டேன்.

இடையில் ஒருநாள் தொலைபேசியில் தான் பாடல்கள் பதிவு செய்துவிட்டேன் .இரு பாடலுக்கு காட்சியும் அமைத்துவிட்டேன். ஒலிப்பேழை வெளியீடு செய்யப்போறன் என்றான்.

 நானும் அப்படியா !ஒலிப்பேழை வெளியிட்டால் எத்தனை பேர் ஈழத்து இசையைக்கேட்க ஆர்வமாக இருக்கினம் .,ஊக்கிவிக்கத் தயக்கம்  ,வெட்டித்தனம்  இது ,நம்கலைஞர்களுக்கு திறமை போதாது என்றுதானே உபதேசம் செய்வார்கள் .

உழைக்கும் பணத்திற்குக் கேடு என்றேன் .தொலைபேசியைத் துண்டிந்துவிட்டான் .

சில வாரத்தில் ஒரு  இறுவட்டு அனுப்பியிருந்தார். நீ (nee). .தான் வெளியீடு செய்துவிட்டதாகவும் .

இந்தப்பாடலை முடிந்தால் .இங்கு இருந்து அன்நாட்களில் ஒலி/ஒளிபரப்பாக்கப்பட்ட தமிழ் ஒலியில்  ஒலி/ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியான ஒளிக்கீற்றுக்கு கொடுத்துவிடு என்ற.


  .. நானும் கொடுத்த நேரம் அந்த நிலையம் சேவையை முடக்கிவிட்டது

.பாடல் ஒலி/ஒளி ஒளிபரப்பாகவில்லை.

நேற்று வேற ஒரு இசைபேழையைத் தேடும் போது இந்தப்பாடல் கையில் கிடைத்தது . இப்பேழையில்  12 பாடல்கள்  வெளிவந்துள்ளது இரண்டு பாடல் மட்டும் ஒலி/ஒளியாக  செய்துள்ளார் ஈஸ்வர்.




அதனை உங்களுடன் பகிர்கின்றேன் பாடலுக்கு குரல் கொடுப்பதுடன் காட்சிக்கு நடனம் அமைத்து பாடல்வரியும் தீட்டியிருப்பவர் ஈஸ்வர் .

அவரோடு சேர்ந்து குரல் கொடுப்பதுடன் நடனத்தில் கூடவருவது சதீஸ்


. இந்தக்காட்சிகளில் தோன்றும் சகோதரமொழி நங்கைகள் சின்னத்திரை மற்றும் விளம்பர காட்சியில் நடிப்பவர்கள்.

தனிமரத்தின் வலையில் ரசியுங்கள்-:

43 comments :

Yoga.S. said...

வணக்கம் நேசன்!பாடல் கேட்கவில்லை.பின்னர் கேட்பேன்!"அந்த" நோனாவை இன்னும் மறக்கவில்லை போலும்?ஹி!ஹி!ஹி!!!!!!!!

Yoga.S. said...

இன்று ஞா...யிற்றுக்....கிழமை பால்கோப்பி குடிக்கக் கூடாது!செற் ஒண்டு......................!

Yoga.S. said...

அதிரா போல் இடைவெளி விட்டு (ஞா...யிற்றுக்....கிழமை) எழுதியிருக்கிறேன்!

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா
பாடலைக் கேளுங்கள் .ஹீ ஹீ அந்த நோனா என்ற மோதிரத்தை அல்லவா கொண்டு போட்டாள்.ஹீ ஹீ மறக்கத்தான் முடியுமா ?மாற்றுமோதிரம் இல்ல. 

தனிமரம் said...

வீட்டுக்காரி பத்திரகாளியாகிவிடுவாள் செட் என்றால் !ஹீ ஹீ குட்டு வாங்க தலையில் முடியில்ல ஹீஹீ ஹீ!

தனிமரம் said...

ஐயோ யோகா ஐயா !
பூனையம்மா மாதிரி எல்லாம் என்னால் பதில் போடமுடியாது எழுத்துப்பிழை அதிகம் வரும் ஹீ ஹீ . நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் ஞாயிறு என்றாலும் முதல் பால்கோப்பி உங்களுக்குத்தான். 

K said...

வணக்கம் நேசன் அண்ணா! பொன் திமோஷ்! அத்தொந்தே சில்வூ ப்ளே!

K said...

கொழும்பு தலைநகர வாழ்க்கை ஒரு ராமாயணம் போல பல பாடங்களை அனுபவரீதியாக கற்றுத்தந்த நகரம் .//////

சீதையைக் கண்டீர்களா?

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஆஆஆஆ.. கொழும்புக்கோ?.. மீயும்...மீயும்.. வாறேன்:)).

தலைப்பைப் பார்த்ததும், ஏதோ தண்ணிக்கப்பல் ஃபிரீயாப் போகுதாக்கும், உடனே ஒரு கோனர் சீட் பிடிச்சு, அதில யோகா அண்ணனையும், ஓசியில கூட்டிக்கொண்டு போகலாம், ஏனெண்டால் அவர் போய் 8 வருஷமாச்சாம்...:)) இதைக்கூட நாம் செய்யாட்டில் உயிரோட இருந்தும் என்ன பலன்? எண்டெல்லாம் யோசிச்சூஊஊஊஊ ஓடி வந்தால்..

இங்கின வேற என்னவோ எல்லோ சொல்றீங்கள்.. நில்லுங்கோ... படிச்சிட்டு வாறேன்.....

முற்றும் அறிந்த அதிரா said...

//ஏதோ நான் கிறுக்கிய ஏழுத்துக்களை இதயசங்கமம் நிகழ்ச்சி (இ.ஒ.கூ)தாங்கி வந்து இருக்கின்றது. அந்த நேரத்தில் .//

ஒழுங்காக இல்லையென்றாலும் இடையிடை நிகழ்ச்சி கேட்ட நினைவிருக்கு.

முற்றும் அறிந்த அதிரா said...

அதுசரி ஏன் ஐராங்கனியைக் கைவிட்டனீங்க?.. இப்போ இருந்திருந்தால்.. கஜூனா பீச்சுக்குக் கூட்டிப்போயிருக்கலாமெல்லோ..:)

முற்றும் அறிந்த அதிரா said...

இரு பாடல்களும் கேட்டேன், பரவாயில்லை.

முற்றும் அறிந்த அதிரா said...

//Yoga.S.FR said...
(கள்ள)பூனைக்குட்டி பால் குடிக்கிறது கேள்விப்பட்டிருக்கிறன்!பால்கோப்பி குடிக்கிறது இண்டைக்குத்தான் கேள்விப்படுறன்!////"அவ"வுக்கு வேண்டிய ஆக்கள் ஆரோ திரும்ப முடியாத இடத்துக்குப் போய்விட்டார்களாம்.ரெண்டு நாளா சிலவன் இல்ல.அந்த அம்மாவுக்காக நாங்களும் மன்றாடுவோம்////

எங்கத்தைய கதையை எங்கின காவிக்கொண்டு வந்து கதைக்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

நான், நியூசில... பிரான்சில வெள்ளம் எனச் சொன்னதும்:), அதிலதான் யோகா அண்ணன் காணாமல் போயிட்டார் எனத் தேடினால்... அவர் என்னைச் சிலமன் இல்லை எனத் தேடியிருக்கிறார் அவ்வ்வ்வ்வ்வ்வ்:))

முற்றும் அறிந்த அதிரா said...

நல்லவேளை இம்முறை எனக்குப் பால்கோப்பி இல்லை:))..எனக்கு கோப்பி பிடிக்காது.. அதை அப்பூடியே யோகா அண்ணனிடம் கொடுங்கோ:). எனக்கு ஒரு ஸ்ரோங் நெஸ்டமோல்ட் பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)).

//Yoga.S.FR said...
அதிரா போல் இடைவெளி விட்டு (ஞா...யிற்றுக்....கிழமை) எழுதியிருக்கிறேன்///

வெல் டன்:)). விரைவில “மியாவ்” சொல்லவும் பழகிடுவீங்கள்:))

K said...

நான், நியூசில... பிரான்சில வெள்ளம் எனச் சொன்னதும்:), ////////

பாருங்க மணிக்கு என்ன ஏது ஆச்சுதுன்னு கவலைப்படேலைத்தானே?

பிறகு சங்கிலிக்கு ஒரு முடிவு கிடைக்காது சொல்லிப்போட்டன்! :-)

முற்றும் அறிந்த அதிரா said...

//பாருங்க மணிக்கு என்ன ஏது ஆச்சுதுன்னு கவலைப்படேலைத்தானே?

பிறகு சங்கிலிக்கு ஒரு முடிவு கிடைக்காது சொல்லிப்போட்டன்! :-)//

சே...சே..உங்களைத் தேடாமல் விட்டிடுவமோ(சங்கிலிக்கு ஒரு முடிவு கிடைக்கும்வரை:))).

அது நீங்க எக்ஸ்பிரஸ் ரெயினில... கழுத்தில “பளபள” எனப் புதுச் சங்கிலியோட:) இருந்து...”ஆருக்கோ” மொபைலுக்குள்ளால பின்னூட்டம் போட்டத்தை பார்த்தாட்கள் எனக்கு சொன்னதாலதான் நான் தேடேல்லை:))... அ-து ஐஐஐஐஐ..விட்னஸ்:))..

பிரான்ஸ்சில வெள்ளம், புஅய்ல் அடிக்குதோ இல்லையோ... நாங்கள் உங்களைப் ஃபலோ பண்ணிக்கொண்டுதானிருப்பம்.. வேணுமெண்டால் வள்ளி மேல கற்பூரம் கொழுத்திச் சத்தியம் பண்ணட்டோ?:).....

உஸ்ஸ் கையை விட்டா என் சங்கிலியின் கதி?:)

K said...

பிரான்ஸ்சில வெள்ளம், புஅய்ல் அடிக்குதோ இல்லையோ... நாங்கள் உங்களைப் ஃபலோ பண்ணிக்கொண்டுதானிருப்பம்.. வேணுமெண்டால் வள்ளி மேல கற்பூரம் கொழுத்திச் சத்தியம் பண்ணட்டோ?:).....////////

ஐயோ, இந்தக் கொடுமய கேட்க ஆளில்லையோ? வள்ளிக்கு மேல கற்பூரம் கொழுத்தப் போறாவாம்!:-))

பாவம் வள்ளி! அநியாயமா நெருப்புல எரியப் போறா!

அதுசரி பூஸாருக்கு ஃபேஸ்புக் அலர்ஜியோ? இண்டைக்கு முழுக்க ஃபேஸ்புக்குல தேடி “ ஆதிராமுல்லை” எண்டு ஒரு பேர் வந்திச்சு! நானும் அங்கயும் ஏதாவது பொறுக்கலாம் எண்டு வலு கலாதியா, ஆராய்ஞ்சு பார்த்தன்!

வைரமுத்துவோட நிண்டு எடுத்த படம்கூட போட்டிருந்திச்சு! நானும் நல்லா நம்பீட்டன்!

பிறகுதான் சொல்லிச்சினம்! அது பூஸார் இல்லையாம்! - நல்ல காலம் நான் அந்த ஃபேஸ்புக்குல ஒண்டையும் களவெடுக்கேலை! :-))

முற்றும் அறிந்த அதிரா said...

// ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

ஐயோ, இந்தக் கொடுமய கேட்க ஆளில்லையோ? வள்ளிக்கு மேல கற்பூரம் கொழுத்தப் போறாவாம்!:-))

பாவம் வள்ளி! அநியாயமா நெருப்புல எரியப் போறா!///

ஹா..ஹா..ஹா.. அபச்சாரம்..அபச்சாரம்:)).. உப்பூடியெல்லாம் சொல்லப்பூடாது சாமிக்குத்தமாகிடும், பிறகு சாமி கண்ணைக் குத்திடுமாம்:)))... நல்லவேளை ஏற்கனவே கண்ணாடி போட்டிட்டியள்:)).. எதுக்கும் ஒரு சேஃப்ட்டிக்காக வள்ளி தெய்வானையின் கஸ்பண்ட்டை விழுந்து கும்பிடுங்கோ:))

முற்றும் அறிந்த அதிரா said...

ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

அதுசரி பூஸாருக்கு ஃபேஸ்புக் அலர்ஜியோ? இண்டைக்கு முழுக்க ஃபேஸ்புக்குல தேடி “ ஆதிராமுல்லை” எண்டு ஒரு பேர் வந்திச்சு! நானும் அங்கயும் ஏதாவது பொறுக்கலாம் எண்டு வலு கலாதியா, ஆராய்ஞ்சு பார்த்தன்!

வைரமுத்துவோட நிண்டு எடுத்த படம்கூட போட்டிருந்திச்சு! நானும் நல்லா நம்பீட்டன்!

பிறகுதான் சொல்லிச்சினம்! அது பூஸார் இல்லையாம்! - நல்ல காலம் நான் அந்த ஃபேஸ்புக்குல ஒண்டையும் களவெடுக்கேலை! :-))/////

ஹாஹ்ஹாஅஹ்ஹ்ஹ்..ஹா..ஹா.....ஹாஹ்ஹாஹ்ஹ்ஹாஆ...(இது நான் விழுந்து விழுந்து சிரிக்கிறேன் எண்டு அர்த்தம்:))...

உது தேவையோ?:) நான் என் பக்கத்தில இருக்கிறன், அதைவிட்டுப்போட்டு எதுக்கு வதனப்புத்தகம் எல்லாம் கிழறிக்கொட்டினனீங்க? ஒருவேளை திருவருட் செல்வன் சாமிப்படம்:) பார்த்த எபெக்ட்டா இருக்குமோ?:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

நல்லவேளை அங்கின களவெடுக்காட்டிலும்:)) பின்னூட்டம் ஏதும் அவசரப்பட்டு போட்டிடவில்லைத்தானே?:))...

என் பக்கத்தில இப்போ கமெரா பூட்டியிருக்கூஊஊஊஊஉ:))

முற்றும் அறிந்த அதிரா said...

விரைவில் தோப்பாகப்போகிற தனிமரம் அவர்கட்கு:

உங்கட புளொக்கின் எழுத்துக்களின் கலரை கொஞ்சம் டார்க் ஆக்குங்கோ.. அதாவது.. post a comment என்பது கண்ணுக்கு தெரியுதே இல்லை.. நான் பலதடவை ஏதும் வைரசாக்கும் என ரீ- பிரெஷ் பண்ணிப் பண்ணி.. கடைசியில தற்செயலாக அதில் கேர்சர் முட்டுப்பட்டதும்தான் தெரிஞ்சுது...

இப்படி இன்னும் எத்தனைபேர் பின்னூட்டம் போட முடியாமல் கஸ்டப்படுகிறார்களோ தெரியவில்லை.. கொஞ்சம் கவனியுங்கோ...

தனிமரம் said...

இப்போ ஓகே ஆதிரா, உங்கள் தகவலுக்கு மிகவு நன்றிகள்

தனிமரம் said...

வணக்கம் மணிசார் !
இன்று புதுமையான ஞாயிறுதான். பெரியவர்கள் எல்லாம் தனிமரத்தைத் தேடி வருவது நானும் காத்திருந்தேன் இன்று உங்களின் வரவு மகிழ்ச்சி சார்!

தனிமரம் said...

சீதை மட்டுமா ?சகுனி மற்றும் கோசலை,என எல்லாரையும் பார்த்தேன் !ஹீ ஹீ

தனிமரம் said...

வாங்கோ மீ படிச்சிட்டீங்களா ?பாடல் பார்த்தீங்களா ??இவர் ஒரு நண்பர் ஹீ ஹீ!

தனிமரம் said...

இதய சங்கமம் பல விடயங்களை அன்நாட்களில் சொன்ன நிகழ்ச்சி . !

தனிமரம் said...

ஐராங்கனியை கைவிடல ஆனால் கைபிடிக்காவிட்டாலும் நல்ல தோழி இன்னும் டூபாயில் இருக்கின்றாள்!

தனிமரம் said...

நன்றி பாடம் கேட்டதற்கு அந்தப்பாடகரிடம் சொல்லிவிடுறன் இங்கு தான் இருக்கின்றார் பாரிசில்!ஹீ ஹீ

தனிமரம் said...

உங்கள் தகவல் மூலம் தான் தெரியும் மழை வெள்ளம் என்று நாங்க கீழ்தளத்தில் வேலை செய்வதால் தெரியாது.!

தனிமரம் said...

யோகா ஐயா எல்லாம் பழகிவிடுவார் , ஆனால் சகோதர மொழிக்கு மட்டும் தண்ணிகாட்டுவார் .ஹீ ஹீ

தனிமரம் said...

மணிசார் இந்த சங்கிலி மாட்டர் முடியாதா ?? தங்கம் நம்மக்கும் வேனும் சாமியோ!

தனிமரம் said...

மணிசார் சங்கிலியை கொடுங்க சாமி ஆதிரா அழுகின்றா.மீயாவ்வ்வ்வ்வ்

முற்றும் அறிந்த அதிரா said...

///தனிமரம் said...
ஐராங்கனியை கைவிடல ஆனால் கைபிடிக்காவிட்டாலும் நல்ல தோழி இன்னும் டூபாயில் இருக்கின்றாள்!///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... நன் நினைச்சேன் கைவிட்டுவிட்டீங்களாக்கும் என... நட்பு தொடர வாழ்த்துக்கள்.

இப்போ நல்ல வடிவாத் தெரியுது.. போஸ்ட் எ கொமெண்ட்...

தனிமரம் said...

நன்றி மணிசார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி அதிரா  வருகைக்கும் கருத்துரைக்கும்.

முற்றும் அறிந்த அதிரா said...

//தனிமரம் said...
மணிசார் சங்கிலியை கொடுங்க சாமி ஆதிரா அழுகின்றா.மீயாவ்வ்வ்வ்///

சே..சே... நான் அழமாட்டன்:)... ஏனெண்டால் சாமிக்கு நேர்ந்து விட்டிருக்கிறன்.... அந்தச் சங்கிலி போட்டிருப்பவருக்கு.. தமிழ் ஒழுங்கா எழுத வரப்பூடாதென:))

நான் ஆதிரா இல்லை.. அதிரா.

தனிமரம் said...

தோழி எப்போதும் தோழிதான் என் மனைவிக்கும் தெரியும் அவளை. ஹீஹீ நாங்க றொம்ப நல்ல மச்சான் இல்லஅவளுக்கு !ஹீ ஹீ

தனிமரம் said...

நேந்து விட்டா எல்லாம் சரியாகுமா அதிரா இப்படித்தான் எங்க பாட்டியும் ஊருக்கு என்னை நேர்ந்து விட்டுச்சு ஹீ ஹீ பங்கஜம் பாட்டியா கொக்கா!

முற்றும் அறிந்த அதிரா said...

//தனிமரம் said...
தோழி எப்போதும் தோழிதான் என் மனைவிக்கும் தெரியும் அவளை. ஹீஹீ நாங்க றொம்ப நல்ல மச்சான் இல்லஅவளுக்கு !ஹீ ஹீ//

அதுக்காக உப்பூடிச் சிரிக்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

தனிமரம் said...

எப்போதும் தோழிதான் என் மனைவிக்கும் தெரியும் அவளை. ஹீஹீ நாங்க றொம்ப நல்ல மச்சான் இல்லஅவளுக்கு !ஹீ ஹீ//

அதுக்காக உப்பூடிச் சிரிக்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 
// தனிமரம் என்றால் ஓடும் போது என் நல்லா மச்சாள் ஓடமாட்டாள். அதிரா ஹீ

Yoga.S. said...

athira said...
உங்கட புளொக்கின் எழுத்துக்களின் கலரை கொஞ்சம் டார்க் ஆக்குங்கோ.. அதாவது.. post a comment என்பது கண்ணுக்கு தெரியுதே இல்லை.. நான் பலதடவை ஏதும் வைரசாக்கும் என ரீ- பிரெஷ் பண்ணிப் பண்ணி.. கடைசியில தற்செயலாக அதில் கேர்சர் முட்டுப்பட்டதும்தான் தெரிஞ்சுது... ////என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?வைரஸ் எண்டீனம்,கேர்சர் எண்டீனம்.ரீ- பிரெஷ் எண்டீனம்.எனக்கெண்டா ஒண்டும் புடிபடுகுதில்ல.வைரவா பிளீஸ் ஹெல்ப் மீ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தனிமரம் said...

இல்லை.. நான் பலதடவை ஏதும் வைரசாக்கும் என ரீ- பிரெஷ் பண்ணிப் பண்ணி.. கடைசியில தற்செயலாக அதில் கேர்சர் முட்டுப்பட்டதும்தான் தெரிஞ்சுது... ////என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?வைரஸ் எண்டீனம்,கேர்சர் எண்டீனம்.ரீ- பிரெஷ் எண்டீனம்.எனக்கெண்டா ஒண்டும் புடிபடுகுதில்ல.வைரவா பிளீஸ் ஹெல்ப் மீ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 
// நானும் புரியாமல்தான்  சங்கிலி கிடைக்குமா என்று முருகனின் அண்ணணுக்கு சரணம் போடுறன் யோகா ஐயா!

ஹேமா said...

அட...இங்க பார்டா....இங்கயும் சங்கிலிக் கும்மி நடந்திருக்கு.எனக்குத் தெரியாமல் போச்சே.நேசன் பழங்கஞ்சிகூடத் தரமாட்டார்.அடுத்த பதிவைப் பாக்கிறன் !

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.பால்கோப்பி தருவன் கவலை வேண்டாம்.பழங்கஞ்சியும் பச்சைமிளகாயும் சின்ன வெங்காயமும் கலந்து குடித்தால் எந்த கோக்கக்கோலாவும் கிட்ட நிற்குமா??