எந்த செயல் பாட்டை செய்யும் போது. அதன் சிந்தனையை சிதறடிக்காமல் நாம் செய்யும் வேலையோடு ஒரு நண்பன் தொடர்ந்து செவியோரம் தமிழ் இசையைப் பரப்பி வரமுடியுமா ?
என்றால் ஆம் !
முகம் தெரியாத குயில்கள் வானொலி அலைவரிசை மூலம் நம் செவிகளுக்கு உடன் வரும் நட்சத்திரங்கள் .
அந்த வகையில் தாய் (இ.ஒ.கூ)வானொலியின் பிரிவுக்கு பிறகு என் இதயத்தில் இடம் பிடித்த வானொலிதான் லங்காசிரி FM!இனையத்தில் பல வானொலிகள் இன்று வலம் வந்துகொண்டு இருக்கின்ற இந்தக் கால நேரத்தில் .!
ஐரோப்பிய ,ஆசிய,கனடிய ,அரபுலகநேயர்களின் அதிக பிரியத்துக்குரிய வானொலியாக இருக்கும் லங்காசிரி.எப்.எம் தனது இரண்டாவது பிறந்த நாள் 9/3/2012 இன்று காண்கின்றது.
இதன் சேவை என் போன்ற வானொலிப் பிரியர்களுக்கு பல பணிகளுக்கு இடையிலும் மனநிறைவுகானும் வண்ணம் செயல் படுவதில் அதன் சேவைகள் தொடர வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
வானொலி நேயர்களின் முதல்வன் லங்காசிரி வாழ்க!
உன் சேவை இன்னும் பலருக்குத் தேவை .
ஆரம்பத்தில் இருந்து இணையத்தில் சீரான சேவையைத் தருவதுடன் .புதிய புதிய தொழில்நுட்பத்துடன் அடிக்கடி தன் தளத்தினை மாற்றியமைத்துக் கொண்டு நேயர்களுக்கு நல்ல நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டு வருகின்றது.
இந்த நிலையத்தின் சேவையை பாராட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அதன் ரசிகனாக நான் என்றும் ஆரம்பத்தில் இருந்து தினேஸின் குரலில் வரும் இமையும் இசையும் கேட்கும் ஒருவன்.
இனிய கவிதையும் கானமும் கலந்து பின்னிரவை மெளனம் பேசிக்கொண்டிருக்கும் தினேஸின் குரலில் இனிய மெல்லிசைகள் மனதை ஏங்கத்தில் ஆழ்த்தும் இன்னும் தினேஸ் தொடர்ந்து இமையும் இசையும் தொடரமாட்டாரா என்று.
இன்று இந்த நிகழ்ச்சி நேரமாற்றம் கண்டதால் அதிகம் கேட்க முடியாத நிலை.
வேலைத்தளத்தில் இருந்து வீடு செல்லும் வேலையில் வானொலியில் திங்கள் முதல் சனிக்கிழமைவரை இந்த நிகழ்ச்சி லண்டன் நேரம்- பின்னிரவு (10-12 ஒலித்த நிகழ்ச்சி இன்று 11-1 -மாற்றியதால் அதிகம் இணைந்திருக்க முடியாத நிலை.
அவர்கள் மீளவும் இந்த நிகழ்ச்சியை மாற்றியமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்...
லங்காசிரியில் பல நிகழ்ச்சிகள் வலம் வருகின்றது.
அதிகாலையில் மனதோடு ஒரு ராகம் தரும் தாட்சாயினின் குரலில் இனிமையான இடைக்காலப் பாடல்கள் அதிகாலை 6-8 மணிவரை நேயர்களை இசையில் தாலாட்டுது.
காலை 9மணியில் இருந்து 11மணிவரை வாழ்த்து நிகழ்ச்சியான வசந்த ராகம் ஆரம்பத்தில் செய்த நாகாவின் குரல் ஒரு புத்வேகம் தந்தது .
இன்று அவரின் இடத்தை சிவாவும்,கிருஸ்ணாவும்,ஜெய்யும் சேர்ந்து மாறிமாறி வருகின்றார்கள் .இவர்களுடன் பாரதியும் ,மதுமிதாவும் கலந்து சிறப்பாக தாயக நிகழ்வுகளையும் வாழ்த்துப்பாடல்கள் பத்திரிகைச் செய்திகளை காற்றலையில் தவலவிடுவதில் திறம்பட செய்கின்றார்கள்
..அவர்கள் வரும் நேரத்தில் உற்சாக நேரம் என்பதால் அதிகம் துள்ளிசைப் பாடல்கள் வருகின்றது. இன்னும் அரட்டை அரங்கம்.
மகளீர் உலகத்திற்கு தேவையான மருத்துவக்குறிப்பு முதல் சமையல் குறிப்பு வரை மகளிர் மட்டும் நிகழ்ச்சியும் மதியம் 2-4 ஒலிப்பரப்பாகுது .4 -6 வரை இனிய பாட்டுக்கள் மாலையில் மெட்டுப்போடு நிகழ்ச்சி பரவசமாக்கின்றது பாட்டுக்கு இல்லை லங்காசிரியில் தட்டுப்பாடு என்று இன்னும் பல நிகழ்ச்சிகள் வானொலியில் சிறப்பு நாட்களில் வலம் வருகின்றது.
மாலையில் 7மணி தொடக்கம் 9மணி வரை வரும் ஜாலி டைம் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் சுவாரசியமாக்கியவர்கள் ஆகாஸ்,தினேஸ்,பாரதி,உமா போன்றவர்கள் இப்போது அந்த நிகழ்ச்சிகள் இளையவர்களான சிவா,ஜெய்,கிருஸ்ணா, கார்த்திக் ,மதுமிதா தொடர இடையிடையே ஆகாஸ்,தினேஸ்,பாரதி கூட வந்து நிகழ்ச்சித் தொகுப்பு செய்வது பாராட்டத்தக்கது.
கானாவும் தேனாவும் தந்த நாகா விடை பெற்றபின் அதனை கிருஸ்ணா ரீமிக்ஸ்,மற்றும் குத்தாட்டப்பாடல்களை ஒலிபரப்பி இரவு நேரத்தில் 9 மணியில் இருந்து 10 மணிவரை நிகழ்ச்சியை வானொலியில் ஒலிக்கவிட்டு வலம் வருகின்றார்.
மாலை வேலையில் இந்த நிகழ்ச்சி மாற்றப்பட்டால் சிறப்பாக இருக்கும்.
பின்னிரவில் அமைதியான மனதுக்கு இதமான பாடல்கள் வலம் வந்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் எதிர்பார்ப்பு.
மதியம் -2 மணிக்கும் இரவு 9.30 மணிக்கும் ,காலை 8மணிக்கும் நாட்டு நடப்பு செய்திகளும் வலம் வருகின்றது.
இணையத்தில் 24 மணித்தியால நிகழ்ச்சியில் சனிக்கிழமையில் பாரதி செய்யும் சினி உலா 11-1 மணிவரை சினிமாப்பிரியர்களுக்கும் சேவை புரிகின்றது.
ஆரம்பத்தில் top 15 நிகழ்ச்சி இந்த நேரத்தில் ஒலித்தது .அதனை மாற்றியதால் புதிய பாடல் தேர்வில் எந்தப்பாடல் முன்னிலை வகிக்கின்றது என்று தெரிய முடியாது.
இப்போது வார இறுதியில் இரு நாட்களும் இந்த தேர்வு நிகழ்ச்சி வந்து செல்கின்றது அதனால் புத்தம் புதிய பாடல்களை கேட்டும் வாக்குகள் பதிவு செய்யவும் முடிகின்றது.
தினேஸ் ,பாரதியின் தொகுப்பில் இந்த நிகழ்ச்சியை வானொலியின் முதல்வன் லங்காசிரி நேயர்களுக்கு செவிக்கு விருந்தளிக்கின்றது.
சனிக்கிழமையில் நன்பகல் 1மணி முதல் அஸ்வின் ஆனந்த கொண்டு வரும் போட்டி நிகழ்சி மோதி விளையாடு .
வித்தியாசமான அறிவிப்பில் நேயர்களை போட்டியில் கலந்து கொண்டு பாடல்பரிசு பெறும் நிகழ்ச்சியாகும். பலர் போட்டி போட்டாலும் வெல்லுவதோ மிகவும் குறைந்தவர்கள் தான் .
அஸ்வின் ஆனந்தின் குரல் ஒரு கரகரப்பான பெரியவர் தோரனை கொடுத்தாலும் நிகழ்ச்சி ஜாலியானதாக இருக்கும்.
ரொபோட் அவர்கள் ஆரம்பத்தில் பின்னிரவு நிகழ்ச்சிகள் செய்தார் ஸ்டார் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது இப்போது அவரின் குரலினை கேட்க முடிவதில்லை.
முன்னர் தினேஸ் சனிக்கிழமையில் காலையில் 9-11 செய்த நிகழ்ச்சி தேடல் .
பல இலைமறை காயாக இருக்கும் இசைத்தேடலின் முகங்களை பாடல் ஊடே கொண்டு வந்தார்கள் .
இன்று அதன் தொய்வு நிலையை சீராக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு மீண்டும் பலரின் இறுவட்டுக்கள் காற்றலையில் கலக்கும் போது புதிய சரித்திரம் படைப்பார்கள் புதியவர்கள்.
இடையிடையே வார இறுதியில் வானொலி நடகங்களையும் சேர்த்தால் இன்னும் வானொலி நாடகப்பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
உமா செய்த பட்டிமன்றம் சனிக்கிழமையில் முதலில் தொடர்ந்த நிகழ்ச்சி அவரின் வெளியேறலுடன் அதுவும் தடைப்பட்டுவிட்டது.
அடுத்த நிகழ்ச்சி நேரமாற்றத்தில் இதனை கருத்தில் எடுப்பார்களா??
ஆகாஸ் ஞாயிறு இரவு செய்துவரும் திகில் நிகழ்ச்சி இப்போதும் தொடர்கின்றது .என் பணிமாற்றத்தால் கேட்க முடிவதில்லை .
ஆகாஸ் நேயர்களுடன் ஜாலிடைமில் இனைந்தால் !நிகழ்சி குதுகலமாக பலவிடயங்களை பகிர்ந்து கொள்வார் நிகழ்ச்சித் தொகுப்புக்கள் இன்னும் பலரைச் சென்றடைய இடையில் வரும் தொழிநுட்ப தடங்கள் தடையாக இருப்பதும் என் போன்ற நேயர்களின் துரதிஸ்டமே!
வானொலியின் முதல்வன் லங்காசிரி எப் எம் இன்னும் தடைகள் தாண்டி வர வேண்டுகின்றேன் காற்றலையில் நீங்கள் எங்களோடு காதோரம் தவழும் எங்கள் முகவரி .கடந்த வருட வாழ்த்து-இங்கேhttp://www.thanimaram.org/2011/03/fm.html
காற்றிலே வருகின்றாய் கானத்துடன்
கலங்கி நிற்கும் போதெல்லாம்
கனதியான பாட்டுக்கள் தந்து
பரவசமாக்கும் பாட்டுப்பெட்டி நீ எனக்கு
சிலருக்கு வானொலி எனக்கு வாழ்வுக்கு ஒலி
பாரிஸ் தேசத்தில் இருந்து
பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன் .
லங்காசிரி எப்.எம்.
பல்லாண்டு பல்லாண்டு பாடல்கள் தந்து பவனி வா என்று .
இந்தப் பாடல் போல-