09 March 2012

 இசைக்கும் நண்பனுக்கு ஒரு பிறந்தநாள்  வாழ்த்துக்கள்

எந்த செயல் பாட்டை செய்யும் போது. அதன் சிந்தனையை சிதறடிக்காமல் நாம் செய்யும் வேலையோடு ஒரு நண்பன் தொடர்ந்து செவியோரம் தமிழ் இசையைப் பரப்பி வரமுடியுமா ?
 என்றால் ஆம் !

முகம் தெரியாத குயில்கள் வானொலி அலைவரிசை மூலம் நம் செவிகளுக்கு உடன் வரும் நட்சத்திரங்கள் .

அந்த வகையில் தாய்  (இ.ஒ.கூ)வானொலியின் பிரிவுக்கு பிறகு என் இதயத்தில் இடம் பிடித்த வானொலிதான் லங்காசிரி FM!இனையத்தில் பல வானொலிகள் இன்று வலம் வந்துகொண்டு இருக்கின்ற  இந்தக் கால நேரத்தில் .!

ஐரோப்பிய ,ஆசிய,கனடிய ,அரபுலகநேயர்களின் அதிக பிரியத்துக்குரிய  வானொலியாக இருக்கும் லங்காசிரி.எப்.எம் தனது இரண்டாவது பிறந்த நாள் 9/3/2012  இன்று காண்கின்றது.

இதன் சேவை என் போன்ற வானொலிப் பிரியர்களுக்கு பல  பணிகளுக்கு இடையிலும் மனநிறைவுகானும் வண்ணம் செயல் படுவதில் அதன் சேவைகள் தொடர வேண்டும் என வாழ்த்துகின்றேன்.

வானொலி நேயர்களின் முதல்வன் லங்காசிரி வாழ்க!
 உன் சேவை இன்னும் பலருக்குத் தேவை .

ஆரம்பத்தில் இருந்து இணையத்தில் சீரான சேவையைத் தருவதுடன் .புதிய புதிய தொழில்நுட்பத்துடன் அடிக்கடி தன் தளத்தினை மாற்றியமைத்துக் கொண்டு நேயர்களுக்கு நல்ல நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டு வருகின்றது.

இந்த நிலையத்தின் சேவையை பாராட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அதன் ரசிகனாக  நான் என்றும் ஆரம்பத்தில் இருந்து தினேஸின் குரலில் வரும்  இமையும் இசையும் கேட்கும் ஒருவன்.

இனிய கவிதையும் கானமும் கலந்து பின்னிரவை மெளனம் பேசிக்கொண்டிருக்கும் தினேஸின் குரலில் இனிய மெல்லிசைகள் மனதை ஏங்கத்தில் ஆழ்த்தும் இன்னும் தினேஸ் தொடர்ந்து இமையும் இசையும் தொடரமாட்டாரா என்று.
 இன்று இந்த நிகழ்ச்சி நேரமாற்றம் கண்டதால்  அதிகம் கேட்க முடியாத நிலை.

வேலைத்தளத்தில் இருந்து வீடு செல்லும் வேலையில் வானொலியில் திங்கள் முதல் சனிக்கிழமைவரை இந்த நிகழ்ச்சி  லண்டன் நேரம்- பின்னிரவு (10-12  ஒலித்த நிகழ்ச்சி இன்று 11-1 -மாற்றியதால் அதிகம் இணைந்திருக்க முடியாத நிலை.

 அவர்கள் மீளவும் இந்த நிகழ்ச்சியை மாற்றியமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்...

லங்காசிரியில் பல நிகழ்ச்சிகள் வலம் வருகின்றது.

 அதிகாலையில் மனதோடு ஒரு  ராகம் தரும் தாட்சாயினின் குரலில் இனிமையான இடைக்காலப் பாடல்கள் அதிகாலை 6-8 மணிவரை  நேயர்களை இசையில் தாலாட்டுது.

காலை  9மணியில் இருந்து 11மணிவரை வாழ்த்து நிகழ்ச்சியான வசந்த ராகம்  ஆரம்பத்தில் செய்த நாகாவின் குரல் ஒரு புத்வேகம் தந்தது .

இன்று அவரின் இடத்தை சிவாவும்,கிருஸ்ணாவும்,ஜெய்யும் சேர்ந்து மாறிமாறி வருகின்றார்கள் .இவர்களுடன் பாரதியும் ,மதுமிதாவும் கலந்து சிறப்பாக தாயக நிகழ்வுகளையும் வாழ்த்துப்பாடல்கள் பத்திரிகைச் செய்திகளை காற்றலையில் தவலவிடுவதில் திறம்பட செய்கின்றார்கள்

..அவர்கள் வரும் நேரத்தில் உற்சாக நேரம் என்பதால் அதிகம் துள்ளிசைப் பாடல்கள் வருகின்றது. இன்னும் அரட்டை அரங்கம்.

மகளீர் உலகத்திற்கு தேவையான மருத்துவக்குறிப்பு முதல் சமையல் குறிப்பு வரை மகளிர் மட்டும் நிகழ்ச்சியும்  மதியம் 2-4 ஒலிப்பரப்பாகுது .4 -6 வரை இனிய பாட்டுக்கள் மாலையில் மெட்டுப்போடு நிகழ்ச்சி பரவசமாக்கின்றது  பாட்டுக்கு இல்லை லங்காசிரியில் தட்டுப்பாடு என்று இன்னும் பல நிகழ்ச்சிகள் வானொலியில் சிறப்பு நாட்களில் வலம் வருகின்றது.

மாலையில் 7மணி தொடக்கம் 9மணி வரை வரும் ஜாலி டைம் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் சுவாரசியமாக்கியவர்கள்  ஆகாஸ்,தினேஸ்,பாரதி,உமா போன்றவர்கள் இப்போது அந்த நிகழ்ச்சிகள் இளையவர்களான சிவா,ஜெய்,கிருஸ்ணா, கார்த்திக் ,மதுமிதா தொடர இடையிடையே ஆகாஸ்,தினேஸ்,பாரதி கூட வந்து நிகழ்ச்சித் தொகுப்பு செய்வது பாராட்டத்தக்கது.

கானாவும் தேனாவும் தந்த நாகா விடை பெற்றபின் அதனை கிருஸ்ணா ரீமிக்ஸ்,மற்றும் குத்தாட்டப்பாடல்களை ஒலிபரப்பி இரவு நேரத்தில் 9 மணியில் இருந்து 10 மணிவரை நிகழ்ச்சியை வானொலியில் ஒலிக்கவிட்டு வலம் வருகின்றார்.

மாலை வேலையில் இந்த நிகழ்ச்சி மாற்றப்பட்டால் சிறப்பாக இருக்கும்.

 பின்னிரவில் அமைதியான மனதுக்கு இதமான பாடல்கள் வலம் வந்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் எதிர்பார்ப்பு.

மதியம் -2 மணிக்கும் இரவு 9.30 மணிக்கும்  ,காலை 8மணிக்கும் நாட்டு நடப்பு செய்திகளும்  வலம் வருகின்றது.

இணையத்தில் 24 மணித்தியால நிகழ்ச்சியில் சனிக்கிழமையில் பாரதி செய்யும் சினி உலா 11-1 மணிவரை சினிமாப்பிரியர்களுக்கும்  சேவை புரிகின்றது.

 ஆரம்பத்தில் top 15 நிகழ்ச்சி இந்த நேரத்தில் ஒலித்தது .அதனை மாற்றியதால் புதிய பாடல் தேர்வில் எந்தப்பாடல் முன்னிலை வகிக்கின்றது என்று தெரிய முடியாது.

இப்போது வார இறுதியில் இரு நாட்களும் இந்த தேர்வு நிகழ்ச்சி வந்து செல்கின்றது அதனால் புத்தம் புதிய பாடல்களை கேட்டும் வாக்குகள் பதிவு செய்யவும் முடிகின்றது.

தினேஸ் ,பாரதியின் தொகுப்பில் இந்த நிகழ்ச்சியை வானொலியின் முதல்வன் லங்காசிரி  நேயர்களுக்கு செவிக்கு விருந்தளிக்கின்றது.

சனிக்கிழமையில் நன்பகல் 1மணி முதல் அஸ்வின் ஆனந்த கொண்டு வரும் போட்டி நிகழ்சி மோதி விளையாடு .

வித்தியாசமான அறிவிப்பில் நேயர்களை போட்டியில் கலந்து கொண்டு பாடல்பரிசு பெறும் நிகழ்ச்சியாகும். பலர் போட்டி போட்டாலும் வெல்லுவதோ மிகவும் குறைந்தவர்கள் தான் .

அஸ்வின் ஆனந்தின் குரல் ஒரு கரகரப்பான  பெரியவர் தோரனை கொடுத்தாலும் நிகழ்ச்சி ஜாலியானதாக இருக்கும்.

ரொபோட் அவர்கள் ஆரம்பத்தில் பின்னிரவு நிகழ்ச்சிகள் செய்தார் ஸ்டார் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது இப்போது அவரின் குரலினை கேட்க முடிவதில்லை.

முன்னர் தினேஸ் சனிக்கிழமையில் காலையில் 9-11 செய்த நிகழ்ச்சி தேடல் .

பல இலைமறை காயாக இருக்கும் இசைத்தேடலின் முகங்களை பாடல் ஊடே கொண்டு வந்தார்கள் .

இன்று அதன் தொய்வு நிலையை சீராக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு மீண்டும் பலரின் இறுவட்டுக்கள் காற்றலையில் கலக்கும் போது புதிய சரித்திரம் படைப்பார்கள் புதியவர்கள்.

 இடையிடையே வார இறுதியில் வானொலி நடகங்களையும் சேர்த்தால் இன்னும் வானொலி நாடகப்பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.

உமா செய்த பட்டிமன்றம்  சனிக்கிழமையில் முதலில்  தொடர்ந்த நிகழ்ச்சி அவரின் வெளியேறலுடன் அதுவும் தடைப்பட்டுவிட்டது.

அடுத்த நிகழ்ச்சி நேரமாற்றத்தில் இதனை கருத்தில் எடுப்பார்களா??

ஆகாஸ் ஞாயிறு இரவு செய்துவரும்  திகில் நிகழ்ச்சி இப்போதும் தொடர்கின்றது .என் பணிமாற்றத்தால் கேட்க முடிவதில்லை .

ஆகாஸ் நேயர்களுடன் ஜாலிடைமில் இனைந்தால் !நிகழ்சி குதுகலமாக பலவிடயங்களை பகிர்ந்து கொள்வார்  நிகழ்ச்சித் தொகுப்புக்கள் இன்னும் பலரைச் சென்றடைய இடையில் வரும் தொழிநுட்ப தடங்கள் தடையாக இருப்பதும் என் போன்ற  நேயர்களின் துரதிஸ்டமே!

வானொலியின் முதல்வன் லங்காசிரி எப் எம் இன்னும் தடைகள் தாண்டி வர வேண்டுகின்றேன் காற்றலையில்  நீங்கள் எங்களோடு காதோரம்  தவழும் எங்கள் முகவரி .கடந்த வருட வாழ்த்து-இங்கேhttp://www.thanimaram.org/2011/03/fm.html

காற்றிலே வருகின்றாய் கானத்துடன்
கலங்கி நிற்கும் போதெல்லாம்
 கனதியான பாட்டுக்கள் தந்து
 பரவசமாக்கும் பாட்டுப்பெட்டி நீ எனக்கு
சிலருக்கு வானொலி எனக்கு வாழ்வுக்கு ஒலி

பாரிஸ் தேசத்தில் இருந்து
பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன் .
லங்காசிரி எப்.எம்.
பல்லாண்டு பல்லாண்டு பாடல்கள் தந்து பவனி வா என்று .

இந்தப் பாடல் போல-

40 comments :

ஹேமா said...

நானும் இடைக்கிடை கேட்பதுண்டு லங்காஸ்ரீயை.நிகழ்சிகள் அழகாகத் தொகுக்கிறார்கள்.ஆனால் அங்கு சில நேயர்களின் குடைச்சல்தான் எரிச்சல் வரவைக்கும்.நல்ல குரல்வளமுள்ள அறிவிப்பாளர்கள்.நானும் ரசித்திருக்கிறேன்.ரசிக்கிறேன் !

என் குழந்தைநிலாவை லங்காஸ்ரீயில் இணைத்திருக்கிறார்கள்.கவனித்திருக்கிறீர்களா நேசன் !

யோகா அப்பா....எனக்குத்தான் இண்டைக்குப் பால் கோப்பி !

ஹேமா said...

அட வாழ்த்துச் சொல்ல மறந்திட்டேனே.என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கோ நேசன் !

Yoga.S. said...

வணக்கம் நேசன்!வானொலி கேட்பதே இல்லை.எப்படியோ சேவை உங்களுக்கும்,மற்றும் கேட்போருக்கும் திருப்தியளிப்பதெனில் நல்லதே!என்னுடைய வாழ்த்துக்களும்!///ஹேமா,பால்கோப்பி குடித்து தென்பாக பின்னூட்டமிட வாழ்த்துகிறேன்!ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!

Yoga.S. said...

ஹேமா said...

யோகா அப்பா....உங்களுக்குக் கிடைக்காத ஒன்று எனக்கு நேசன் தந்திட்டார்.ராணி சோப்....எப்பிடி எப்பிடி????
///இனியாச்சும் தீவாளி(தீபாவளி),வரியத்துக்கு(வருஷம்).......................!ஹி!ஹி!ஹி!!!!!!!

Admin said...

"லங்காசிரி எப்.எம்"

என்றொன்றை இப்போதுதான் கேள்விப் படுகிறேன்..உங்கள் மூலமாக நானும் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறேன்.

தனிமரம் said...

வாங்க ஹேமா இன்று பால் கோப்பி உங்களுக்குத்தான்.

தனிமரம் said...

என்ன செய்வது சில நேயர்கள் ஆவல் மிகுதியால் அலப்பரையாக்கின்றார்கள். ஆனாலும் எனக்கு பாடல் கேட்டால்  போதும் வேலை செய்யனுமே! நிலாச் செல்லத்தை கவனிக்க வில்லை பிளாக்கில் பார்த்தேன்.முடியை கடன் வாங்கப்போறன் எனக்கு சங்கிலி வேண்டாம்!ஹீ ஹீ  இங்கு கறுப்பிகளுக்கு முடிதான் விற்கமுடியும் நகையல்ல! ஹீ ஹீ
நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வாழ்த்துக்கு நன்றி ஹேமா!

தனிமரம் said...

வாழ்த்துக்கு நன்றி யோகா ஐயா!
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்!

தனிமரம் said...

வாழ்த்துக்கு நன்றி மதுமதி.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்!

KANA VARO said...

எனக்கும் வானொலிக்குமான உறவு யாழ்ப்பாணத்துடனேயே முடிந்துவிட்டது எனலாம். ஏனெனில் கொழும்பில் வானொலியில் வேலை செய்தாலும் எங்காவது காற்று வாக்கில் தான் வானொலி கேட்பதுண்டு. ஒரு ரசிகனாக கேட்கும் சந்தோசம் தனி. அந்த சந்தோசத்தில் தான் நீங்களும் பதிவிட்டிருக்கிறீர்கள்.

ஹேமா said...

நேசன்...பாத்தீங்களே அப்பா யோகான்ர நக்கலை...நல்ல வேளை நான் வரேக்க புளொக் நாறுது எண்டு சொல்லாம விட்டார்.ஆளை பாருங்கோ !

தனிமரம் said...

உண்மைதான் நேயராக இருப்பதே தனிச்சுகம் தான் அறிவிப்பாளராகி நொந்து போனவர் என் நண்பர் .வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வரோ.

தனிமரம் said...

இன்று யோகா ஐயாவுக்கு வடையும் கிடைக்கவில்லை பால்கோப்பியும் கிடைக்காத கவலையில் நக்கல் பேசுகின்றார்.ஹீ ஹீ அவரும் ராணி சோப்பு வாங்கிப் போனார் ஜெயந்தியிடம் கொடுக்க ஆனால் அதற்குள் மாம்பலச் சந்தியில் பனைக்கூடல் கண்டுவிட்டார் உடனே அந்தப்பக்கம் போனதில் அந்த அன்றி  இந்தப்பக்கமா வெளிநாடு போய்டா அக்காச்சி!ஹீ ஹீ

Yoga.S. said...

தனிமரம் said...

இன்று யோகா ஐயாவுக்கு வடையும் கிடைக்கவில்லை பால்கோப்பியும் கிடைக்காத கவலையில் நக்கல் பேசுகின்றார்.ஹீ ஹீ அவரும் ராணி சோப்பு வாங்கிப் போனார் ஜெயந்தியிடம் கொடுக்க ஆனால் அதற்குள் மாம்பலச் சந்தியில் பனைக்கூடல் கண்டுவிட்டார் உடனே அந்தப்பக்கம் போனதில் அந்த அன்றி இந்தப்பக்கமா வெளிநாடு போய்டா அக்காச்சி!ஹீ! ஹீ!!!////அந்தப் பிள்ளையின் பெயர் ஜெயந்தி அல்ல!இருப்பினும் ஜெயந்தி எனக்கும் பிடித்த பெயரே!அப்பெயரை உச்சரித்தமைக்கு நன்றி,நேசன்!ஹ!ஹ!ஹா!!!!!!!!!!(குறிப்பு:மாம்பழம் சந்தியில் பனைமரம் கிடையாது.எங்கள் அரியாலைக் காணியில் அநேகம் பனைமரங்கள் உண்டு.இப்போது யார் தறித்து ஏற்றிக் கொண்டு போனார்களோ?)

தனிமரம் said...

இன்று யோகா ஐயாவுக்கு வடையும் கிடைக்கவில்லை பால்கோப்பியும் கிடைக்காத கவலையில் நக்கல் பேசுகின்றார்.ஹீ ஹீ அவரும் ராணி சோப்பு வாங்கிப் போனார் ஜெயந்தியிடம் கொடுக்க ஆனால் அதற்குள் மாம்பலச் சந்தியில் பனைக்கூடல் கண்டுவிட்டார் உடனே அந்தப்பக்கம் போனதில் அந்த அன்றி இந்தப்பக்கமா வெளிநாடு போய்டா அக்காச்சி!ஹீ! ஹீ!!!////அந்தப் பிள்ளையின் பெயர் ஜெயந்தி அல்ல!இருப்பினும் ஜெயந்தி எனக்கும் பிடித்த பெயரே!அப்பெயரை உச்சரித்தமைக்கு நன்றி,நேசன்!ஹ!ஹ!ஹா!!!!!!!!!!(குறிப்பு:மாம்பழம் சந்தியில் பனைமரம் கிடையாது.எங்கள் அரியாலைக் காணியில் அநேகம் பனைமரங்கள் உண்டு.இப்போது யார் தறித்து ஏற்றிக் கொண்டு போனார்களோ?) 
-/நான் ஊரைச் சொல்லாமல்தான் கிட்ட இடத்தைச் சொன்னேன்.ஹீ ஹீ யோகா ஐயா மாட்டிக் கொண்டார் ஹா ஹா.பனைமரம் தறித்தவர் தளபதி  பத்திரமாக கழி தின்கிறார்! சரத் !நானும் மாம்பழச் சந்தியில் கடலை போட்டம் ஒருகாலத்தில் ஹீ ஹீ 

தனிமரம் said...

பிடித்தவர்கள் பெயரை உச்சரிக்கும் போது ஒரு சந்தோஸம் தான்.யோகா ஐயாவை சந்தோஸப்படுத்தினால் இன்றைய நாள் நல்ல நாளே !

Yoga.S. said...

தனிமரம் said...

நானும் மாம்பழச் சந்தியில் கடலை போட்டம் ஒருகாலத்தில் ஹீ ஹீ///நீங்க தான அது?உங்களால தான் இருவத்தஞ்சு வரியத்துக்கு முன்னால ஊரை விட்டு ஓட வேண்டியதாப் போச்சு!(அவல் எண்டு நினைச்சு உரலை இடிச்சுப் போட்டாங்கள்,ஹி!ஹி!ஹி!!!)

தனிமரம் said...

தனிமரம் said...

நானும் மாம்பழச் சந்தியில் கடலை போட்டம் ஒருகாலத்தில் ஹீ ஹீ///நீங்க தான அது?உங்களால தான் இருவத்தஞ்சு வரியத்துக்கு முன்னால ஊரை விட்டு ஓட வேண்டியதாப் போச்சு!(அவல் எண்டு நினைச்சு உரலை இடிச்சுப் போட்டாங்கள்,ஹி!ஹி!ஹி!!!)

முற்றும் அறிந்த அதிரா said...

லங்கா சிறி எஃப் எம் நானும் இடைக்கிடை கேட்பதுண்டு. பின்னேரம் 4-6 ஆங்கிலம் கலப்பில்லாத தமிழில் ஒரு நிமிடம் உரையாட வேண்டும் எனும் நிகழ்ச்சி வைக்கிறார்கள்... எனக்கும் அதில் பங்குபற்ற ஆசை.. ஆனா நேரம் ஒழுங்காக கிடைப்பதில்லை.

முற்றும் அறிந்த அதிரா said...

ஹேமாவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

யோகா அண்ணனுக்கு பால்கோப்பி கிடைக்கவிடாமல் பண்ணினத்துக்காக:))..

ஓ அரியாலையோ?:)) நான் ஒன்றையும் இங்கின படிக்கேல்லை:)).. நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)

Yoga.S. said...

athira said...

ஹேமாவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

யோகா அண்ணனுக்கு பால்கோப்பி கிடைக்கவிடாமல் பண்ணினத்துக்காக:))..

ஓ அரியாலையோ?:)) நான் ஒன்றையும் இங்கின படிக்கேல்லை:)).. நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)///இந்த நல்ல மனசுக்கு ஒரு குறையும் வரப்பிடாது,ஆண்டவனே!

Yoga.S. said...

அரியாலையில காணி இருக்கெண்டு தான் சொன்னனான்,ஹி!ஹி!ஹி!!!!!!

தனிமரம் said...

வணக்கம் அதிரா!
நீங்களும் வானொலியைக் கேட்பதில் சந்தோஸமே! எனக்கு தினேஸின் இமையும் இசையில் பாடல் கேட்க ஆசை ஆனால் சமையல்கட்டில் பிரெஞ்சுக்காரி விடமாட்டால் வெளியில் போக !ஹீ ஹீ

தனிமரம் said...

ஹேமா அக்காச்சியை இப்படி கடிக்கலாமா?? யோகா ஐயா நித்திரையால் எழும்பவில்லை அந்த நேரத்தில் பால்கோப்பி ஆறிப்போச்சு! ஹீ ஹீ
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும். அவர் இடத்தை நானும் சொல்லவில்லை ஹீ ஹீ

தனிமரம் said...

ஹேமா அக்காளுக்கு பால்கோப்பிக்கு  போட்டுக்கொடுத்த மனசு நல்ல மனசாம் யோகா ஐயா இப்படி வஞ்சகம் செய்யலாமோ????அப்பம் கிடைக்காது என்றாலும்.

தனிமரம் said...

அதிரா அக்காள் யோகா ஐயா காணி இருக்காம் .ஆனால் உறுதி வைத்திருக்கிறாரா ??என்று ஒரு டவுட்டு இல்ல யாரும் இல்லாத காணியை வெளிநாட்டுக்குப் போனவர் சொத்தை தன் பெயரில் சாட்டுதல் செய்யுறாரோ??(இப்ப அப்படித்தானாம் நடக்கு ஊரில்)

Yoga.S. said...

தனிமரம் said...

அதிரா அக்காள் யோகா ஐயா காணி இருக்காம் .ஆனால் உறுதி வைத்திருக்கிறாரா ??என்று ஒரு டவுட்டு இல்ல யாரும் இல்லாத காணியை வெளிநாட்டுக்குப் போனவர் சொத்தை தன் பெயரில் சாட்டுதல் செய்யுறாரோ??(இப்ப அப்படித்தானாம் நடக்கு ஊரில்)////பிளான் விளங்குது!ஒண்டும் புடுங்கேலாது.கொஞ்சம்,கொஞ்சமா கதை விட்டு காணி எங்கை இருக்குது எண்டு விவரமா அறிஞ்சு,மெசேஜ் அங்க பாஸ்பண்ணி அம்பாளிக்கிற பிளான் தான?விடமாட்டான் ம...............தாற்றை மோன்!!!!!உறுதி மட்டுமில்ல,உருப்படியான ஆக்களும் இருக்கீனமாக்கும்!!!!!

தனிமரம் said...

அதிரா அக்காள் யோகா ஐயா காணி இருக்காம் .ஆனால் உறுதி வைத்திருக்கிறாரா ??என்று ஒரு டவுட்டு இல்ல யாரும் இல்லாத காணியை வெளிநாட்டுக்குப் போனவர் சொத்தை தன் பெயரில் சாட்டுதல் செய்யுறாரோ??(இப்ப அப்படித்தானாம் நடக்கு ஊரில்)////பிளான் விளங்குது!ஒண்டும் புடுங்கேலாது.கொஞ்சம்,கொஞ்சமா கதை விட்டு காணி எங்கை இருக்குது எண்டு விவரமா அறிஞ்சு,மெசேஜ் அங்க பாஸ்பண்ணி அம்பாளிக்கிற பிளான் தான?விடமாட்டான் ம...............தாற்றை மோன்!!!!!உறுதி மட்டுமில்ல,உருப்படியான ஆக்களும் இருக்கீனமாக்கும்!!!!! 
// ஹா ஹா யோகா ஐயா அதிரா கேட்டா ஏன் ஆட்டுக்இறைச்சியைச் சமைத்துக்கொண்டு பாரிஸில் தனிமரமாக இருக்கிறீயல். ஊரில் போய் அப்பக்கடை போடலாம் கூடவே பால்கோப்பியும் விற்கலாம் என்று அதுதான் ஊரில் காணி இருந்தா அயல் நாட்டுக்காரர் வீடுகட்டித் தருகின்றனராம் .இதுதான் பிளான் இப்ப புரியுது யோகா ஐயா ஆற்ற ..,மோன் என்று ..ஹீ ஹீ உருப்படியான ஆட்களை மகிந்தர் பார்த்துக் கொள்ளூவார் !ஹீ உறுதியை நான் பார்த்துக் கொள்கின்றேன் 

Yoga.S. said...

தம்பி வேணாம்,நல்லாயில்லை!சொல்லிப்போட்டன்,ஓம்!!!!!!ஹி!ஹி!ஹி!!!!!!!!(சமாளிப்பம்,உண்மையாவே "அவற்றை"ஆக்கள வச்சு ஏதும் செய்துபோட்டால்?)எல்லாமா எட்டு வீடும் காணியும்"அவயளின்ரை"கொன்றோள்ள இருக்கு!பாப்பம்.

தனிமரம் said...

தம்பி வேணாம்,நல்லாயில்லை!சொல்லிப்போட்டன்,ஓம்!!!!!!ஹி!ஹி!ஹி!!!!!!!!(சமாளிப்பம்,உண்மையாவே "அவற்றை"ஆக்கள வச்சு ஏதும் செய்துபோட்டால்?)எல்லாமா எட்டு வீடும் காணியும்"அவயளின்ரை"கொன்றோள்ள இருக்கு!பாப்பம். // என்ன செய்வது யோகா ஐயா ஊரில் பல பேரின் காணி அவையின் பாதுகாப்பு வலயம் அல்லவா!  (அவையளுக்கு கொழுத்த தெரியும் வேலியையும் வீட்டையும் கட்டும் துயரம் நமக்குத்தானே தெரியும்)!

ஹேமா said...

ம்...அழுதிடுவேன்.அதிரா...மணி வந்தா எனக்காகக் கதைப்பார்.பூஸாரை வச்சுக் கடிக்க வைக்கிறீங்களோ.உங்களுக்கும் யோகா அப்பாக்கும் பொறாமை.நான் நித்திரை முழிச்சு வாறனான் நேசன் தாற பால்கோப்பி குடிக்க.அடுத்த முறை முதலாவதா வந்தா பாலப்பமும் தாறதா சொல்லியிருக்கிறார்.பாப்பம் ஆருக்கெண்டு !

Yoga.S. said...

சரி,சரி விடுங்கோ!பாலப்பம் உங்களுக்குத்தான்!(ஆர் சுர்றதோ?கடையில வாங்கிறதா இருக்கும்,எனக்கு வேணாம்!)எனக்கு அதிரா லண்டன் போகேக்கை சுட்டுத் தருவா!!!!ஹ!ஹ!ஹா!!!!!!!!!!

ஹேமா said...

யோகா அப்பா நீங்க என்ர பக்கம் இல்லை.அதிரா பழைய பாண் போட்டு அப்பம் சுட்டுத்தருவா.சாப்பிடுங்கோ.போங்கோ உங்களோட கோவம் நான்.கண்ணக் கட்டிக் கோவம்.பாம்பு வந்து கொத்தும்....அங்கால தெரியேல்ல !

தனிமரம் said...

ம்...அழுதிடுவேன்.அதிரா...மணி வந்தா எனக்காகக் கதைப்பார்.பூஸாரை வச்சுக் கடிக்க வைக்கிறீங்களோ.உங்களுக்கும் யோகா அப்பாக்கும் பொறாமை.நான் நித்திரை முழிச்சு வாறனான் நேசன் தாற பால்கோப்பி குடிக்க.அடுத்த முறை முதலாவதா வந்தா பாலப்பமும் தாறதா சொல்லியிருக்கிறார்.பாப்பம் ஆருக்கெண்டு ! 
//ஹா ஹா ஹேமா அக்காள் பாலப்பம் வேனுமோ அதற்கு பங்கஜம் பாட்டி ஊரில் இருந்து வரனும் வேனும் என்றால் புட்டிங்(இது போர்த்துக்கல் சுவையூட்டி) செய்து தரலாம்!ஹீ 

தனிமரம் said...

பழைய பாண் போட்டு அப்பம் சுட்டுத்தருவா.சாப்பிடுங்கோ.போங்கோ உங்களோட கோவம் நான்.கண்ணக் கட்டிக் கோவம்.பாம்பு வந்து கொத்தும்....அங்கால தெரியேல்ல ! 
// யோகா ஐயாவுக்கு அப்பத்துக்குள் தங்கச் சங்கிலி கொடுப்பா அதிரா அக்காள் என்று எண்ணம் போல  ஹேமா.
/கிட்டப்போனால் உன்னை விட்டு விட்டுக் கொத்தும் வீட்டீல் யாரும் இல்லை கீரி வந்தால் ஒடும் கிடங்குப் பக்கம் போகும் குடி கெடுக்கும் பாம்பு என்று பங்கஜம் பாட்டி செவி வழிக்கதை என்று சென்னதாக ராகுல் செல்லுறான் தனிமரம் படிக்கவில்லை ஹேமா அக்காள்!ஹீ ஹீ

தனிமரம் said...

சரி,சரி விடுங்கோ!பாலப்பம் உங்களுக்குத்தான்!(ஆர் சுர்றதோ?கடையில வாங்கிறதா இருக்கும்,எனக்கு வேணாம்!)எனக்கு அதிரா லண்டன் போகேக்கை சுட்டுத் தருவா!!!!ஹ!ஹ!ஹா!!!!!!!!!! // 
//யோகா ஐயா. 
லண்டன் காரர்கள் வீட்டில் சமைப்பது குறைவு இங்க சரி நானே சமையல் செய்து தருவன் என்ன அப்பம் சுட புளிக்க வைக்க அதிக நேரம் செல்லும் அதைவிட லாச்சப்பல் போன எல்லாம் விரைவில் கிடைக்கும் ஹீ ஹீ

Yoga.S. said...

ஹேமா said...

யோகா அப்பா நீங்க என்ர பக்கம் இல்லை.அதிரா பழைய பாண் போட்டு அப்பம் சுட்டுத்தருவா.சாப்பிடுங்கோ.போங்கோ உங்களோட கோவம் நான்.கண்ணக் கட்டிக் கோவம்.பாம்பு வந்து கொத்தும்....அங்கால தெரியேல்ல !///"அங்கால தெரியேல்ல".தூரப்பார்வையா இருக்குமோ?அங்கால தெரியாட்டி,கண் டாக்குத்தரத்தான் பாத்து கொன்சல்ட் பண்ண வேணும்!ஐரோப்பாவில டிரெக்டா கண்ணாடிக்குத்தான் எழுதுவினம்!"அங்கை"மாதிரி கண்ணுக்கை விட சொட்டு மருந்தெல்லாம் தராகீனம்.நான் போட்டிருக்கிறன்,ஹி!ஹி!ஹி!!!!

தனிமரம் said...

அப்ப கண்ணாடி யோகா ஐயாவா இப்ப ?ஹீ ஹீ

Yoga.S. said...

தனிமரம் said...

அப்ப கண்ணாடி யோகா ஐயாவா இப்ப ?ஹீ ஹீ!///என்ன,ஹீ?ஹீ??கண்பார்வை மங்கல் எண்டா கண்ணாடி போடத்தானே வேணும்?அதிலயும் ஒரு லுக் இருக்கு,தெரியுமோ????????ஐ லைக் தற்.