08 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-14

ஆற்றுக்கு நிறம் இல்லை., மொழியில்லை மதம் இல்லை ,ஆறு ஒரு தத்துவஞானி,கர்ணன் ஆற்றில்தான் கவசத்துடன் விடப்பட்டான்.

ராமனும் இலக்குவணனனும் மந்தாகினி நதியில் தான் தர்பணம் கொடுத்தார்கள்.

, ராம அவதாரத்தில் சரயு நதியில் கலப்பதுடன் ராம அவதாரம் முடிவதாக ஒரு செவிவழிக்கதை உண்டு

. சரயு நதியில் ராமன் பிதிர்க்கடன் கொடுத்தான்  என்ற ஐதீகத்தில்  அடிப்படையில் தான் இன்றும் திருவேனி சங்கமத்திம் ஐயப்ப பக்தர்கள் தம் முன்னோர்களுக்கு காசியிலும் ராமேஸ்வரத்திலும் பிதிர்க்கடன் கொடுக்க முடியாதவர்கள் வருடா வருடம் பம்பையில் தர்பணம் செய்வதை கானமுடியும் .

பம்பையின் புண்ணியமே என்று சரணகோஸம் போடும் ஐயப்ப பக்தர்களுக்கு இந்த பம்பையில் நீராடுவது முக்கிய விடயம் .(கேரளா தண்ணிச்சண்டையோடு முடிச்சுப் போட வேண்டாம் ஆன்மீகம் வேற)

ஆற்றில் வருநீரே ஆயுங்கால் அங்கில்லை
கூற்றின் கரைகாட்டும் கொள்வாயே ..... என்று இளையராஜாவின் வெண்பா கூறும்

.ஷிரிரங்கத்தில் முன்னர் இருந்த காவிரி ஆறு  இன்று வீட்டுமனைத் திட்டத்தால் மறைந்து விட்டதாக குருநாதர் சொல்லும் போதெல்லாம் ராகுலுக்கு தான் முதலில் பார்த்த ஆறுதான் ஞாபகம் வரும் முதல் காதல் போல.

 அதிகாலையில் தென்னக்கோன் மாமா எல்லாரையும் ஆற்றில் குளிக்க வாங்க என்று கூட்டிக்கொண்டு போவார்.
                                           தெய்யானாவலை ஆறு.
பல்லு மினுக்க அண்ணா பற்பொடி போய் தந்தா முத்தா பற்பொடி வந்தது. அண்ணா இனிக்கும் வாயில் வைத்தால் தந்த முத்தா பற்பொடி உறைக்கும்.

அதனை எடுத்துக்கொண்டு ஆற்றுக்குப் போகும் வழியில் அனோமாவோடு முடியைப்பிடித்து சண்டை போடுவது தனி இன்பம்.

 அந்த ஆற்றில் நாங்கள் குளிப்போம் அதுவரை ஊரில் பங்கஜம் பாட்டி,இல்லாவிட்டால்  ,மாமாமார் யாராவது கிணற்றில் வாளியில் அள்ளி ஊத்தித் தான்  குளிப்பது என்றாலும் தோய்வது என்றாலும் .

பதுளையில்  எப்போதும் தோய்வது தான் முறை .ஆற்றில் தலை நனையாமல் தப்புவது பலாப்பலத்தில் பிசின் ஒட்டாமல் வெட்டுவது போல!

 ஆற்றில் நாங்கள் ஒரு கரையில் குளிர்த்தால். விகாரை(கோயில்)யானை ஒரு புறம் குளிக்கும் .அங்குசத்தால் தட்டிவிடுவான் யானைப்பாகன்.

மூக்கையா அடுத்த வீட்டு  முதலாளி பண்டாரவின் அல்சேஸன் நாயை குளிர்ப்பாட்டுவார் .

இன்னொரு கரையில் ராகுலுடன் பல்லவியும் வருவாள் அடம்பிடித்து தானும் ஆற்றில் குளிர்க்கனும்  என்று .

ஆறு பெருக்கெடுக்கும் என்று வசந்தா மாமி தடுக்கும் போதெல்லாம் தென்னக்கோன் மாமா நான் இருக்கின்றன் பக்கத்தில். கவலையில்லாமல் விடுங்க .நோனா என்பார் .

அப்போதெல்லாம் நோனா என்பதன் அர்த்தம்புரியாத வயசு.

அனோமா  நடுவில் இறங்கி நீந்தும்போது ராகுல் கரையில் நீந்துவான் .

 ஆறு இழுத்துக்கொண்டு போய்விடுமோ என்ற பயம் தான் காரணம் .

தேவன் மாமா .இரவு நேரங்களில் ஆற்றுப் பாலம் தாண்டி வீடு வரும்போது ஒரு முறை  ஆறு பெருக்கு எடுத்த தால் அடுத்த கிராமத்தால் சுற்றிவந்ததைக் கதையாக சொன்ன போது மனதில் பதிந்து விட்டது ராகுலுக்கு.

.ஆனாலும் தென்னக்கோன் மாமா பயத்தைப் போக்கி கையினால் வெடிச்சத்தம் போடும் அழகே தனித்துவம்.

 இரு கையிலும் நெல்லைக் கோலி அள்ளுவது போல தண்ணீரை இழுத்து அடிக்கும் போது நீரில் இருந்து வரும் ஒலி கேட்டு புறாக்களும் கொக்கும் பறக்கும் .

ஆற்றில்  .மீன்கள் ஓடும் .அனோமா துவட்டக் கொண்டுவந்திருக்கும் துவாயில் மீன்பிடித்து விளையாடும் போது!  அவள் வழுக்கி விழுந்து மூக்கில் நீர் போய் தும்மும் போது தண்ணீருடன் கண்ணீரும் வரும். கூடவே மூக்குச் சளியும் வரும் .

ராணி சவற்காரம் போட்டு தென்னக்கோன் மாமா முதுகு உருட்டும் போது ஆற்றில் இருந்து கல்லு எடுத்து  ஊத்தை உருட்டி ஊத்தையை  போக்குவார் .

பிறகு அதே கல்லை பலகாலம் பயன்படுத்தினேன் ..

அனோமா சுரக்காயை  காயவைத்து எடுத்த தும்பினால் ராணி சவற்காரம் போட்டு ஊத்தை உருட்டுவாள் .

ராணி சவற்கார வாசமா அல்லது அருகில் யானை  ஆற்றில் விடும் கழிவு சாணி வாச
மா என்று மூளையைக் கிண்டிய போது பிஞ்சு மனதில் இனவாதம் இல்லை.

அப்போது எல்லாம் அழுமூஞ்சி இது என்று அவள்கூட பேசும் அளவுக்கு சகோதரமொழி கொஞ்சம் கொஞ்சம் பேசக்கற்றுக்கொண்டான் ராகுல்.

 காலையில் இருவரையும் பள்ளிக்கு கொண்டே விடுவார் தென்னக்கோன் மாமா மதியம் வந்து கூட்டிக்கொண்டு வருவதும் அவரே.

 தேவன் மாமா அவருக்கு கடையில் வெம்பிளிக் (கடல் பாம்பு ) கருவாடும் ,செத்தல்மிளகாய்,மாசிக்கருவாடும் கொடுத்துவிடுவார். அத்தோடு

 3ரோசஸ் சிகரட்டும் கொடுப்பார். மாமா.

 இந்த சிகரட்டுக்கு பின்னால் பஞ்சு இல்லை .இப்போது அது நடைமுறையிலும் இல்லை .விலைகுறைவு அன்நாட்களில் (இதில் ராகுல் செய்த தில்லுமுல்லு பின்னர் வரும்)அதையும் வாங்கிக் கொண்டு எங்களை இரு கையிலும் பிடித்துக் கொண்டு பாட்டுப் பாடிக்கொண்டு வருவார்.

 அவர் தியேட்டரில்  ரிக்கட் கிழிக்கும் வேலை செய்தவர்.

 கலவரத்தில்(83) அந்த தியேட்டர் எரிக்கப்பட்டது. பின் நாளில் இந்த இடத்தில் பல்பொருள் அங்காடி  கடைத்தொகுதி அமைக்கப்பட்டும் அது புத்துயிர் பெறவில்லை.

ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறி போதிக்கும் (தம்பாசல) இடம் .முத்தியங்கன ரஜாமகாவிகாரை

  .இது தேவநம்பிய திஸ்ஸனால் கட்டப்பட்ட பழமைவாய்ந்த விகாரை. நீண்ட விசாலமான இடத்தினைக்கொண்டது(இந்த விகாரை பற்றிய இன்னும் பலபார்வைகள் பின்னால் சொல்லுவான் ராகுல்.)
  சமய பாடத்திற்கு வெள்ளைச் சட்டை போட்டுக் கொண்டு போய் வருவாள் .

அங்கு புத்த பிக்குகள் நீதி போதனை செய்வார்கள் .

காலில் விழுந்து ஆசீர்வாதம் வேண்டுவாள்.

 என்னையும் சமயங்களில் தென்னக்கோன் மாமா கூட்டிக்கொண்டு போகும் போது நானும் அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவன்.

அந்த பிக்குகள் எல்லாம் ரோட்டில் எங்கு கண்டாலும் சினேகபூர்வமாக நலம் விசாரிப்பதும் ,அடிக்கடி பன்சாலைக்கு வரனும் என்று கூறிச் செல்வதும் நடைமுறை விடயங்கள் .

சில நாட்களில் இடுப்புத் தெரிய வெள்ளைப் மேல அங்கியும் மடித்துத் தைத்த   முன்னால் விரிந்த குஞ்சம் வைத்த பாவாடையும்  அணிந்து அவள்  வரும் போது சமாதானப்புறாவினைப் போல் இருப்பாள்.

 கையில் ஒரு கொப்பியுடன் வருவாள். நான் பால் டொபியை கையில் வைத்துக் காத்திருப்பேன்.

மழைக்காலத்தில் இங்கு ஆற்று நீர் மண்ணனின் வடிவத்தில் வரும்  .

பாதை எல்லாம் ஒரே சகதியாக இருக்கும். ரோட்டோரம் இருக்கும் சிறுகல்லு எடுத்து தண்ணியில் போட்டால்  தண்ணீர் தெறிக்கும் .

அப்படி வீசிய போது அது தெறித்து அனோமாவின் வெள்ளைச் சட்டையில் மண்சேறு பூசி  அவளை வீதி எங்கும் அழவைத்துப் பார்த்த காலத்தில் அவள் உண்மையில் யார் என்று தெரியாது. ராகுலுக்கு .

அதற்காக அவளிடம் வெற்றிலை கொடுத்து மன்னிப்புக்கேட்ட நாட்கள் மறக்கமுடியாது.

.பங்கஜம் பாட்டியைத் தவிர யாரும் ராகுலை கம்பினால் அடித்தது இல்லை. தேயிலைக்கம்பு முறித்து வசந்தாமாமி முதல்முதலில் அடித்த போதுதான் குறும்பு செய்தால் அடிவிழும் என்ற எண்ணம் பதிந்தது.

அதற்காக இரண்டு நாட்கள் கதைக்கவில்லை வசந்தா மாமியுடன்.

 பேரம்பலத்தாரின் வறட்டுப் பிடிவாதம் இவனுக்கு அப்படியே இருக்கு என்று அன்று திட்டவெளிக்கிட்டவா .காலம் உறவுகளின் முகத்தைக் காட்ட வெளிக்கிட்டது.

 .

மழைக்காலத்தில் சாக்கினை குடையாக போட்டுப் போவார்கள் சிலர்.

 பலர் கறுப்பு கைபிடி பிடுத்த பெரிய குடையோடு என் நேரமும் திரிவார்கள்.

 பிக்குவின் கைகளில் எப்போதும் குடையிருக்கும்.

மழைக்காலத்தில் குடை கொண்டு போகாத நாட்களில் அனோமாவுக்கு கண்டோஸ் கம்பனியின் அன்பளிப்பான நீலக்குடையுடன் நின்ற காலங்கள் மனதில் காமம் இல்லாத பருவம்.

குடையோடு காத்திருக்கின்றேன்
குடைகின்ற கேள்விகள் மனதுக்குள் மழையாக கூடவருவாளா ?குடைக்கம்பியாக குத்தி
விட்டுப்போவாலோ
குழம்பிப்போய் காத்திருக்கின்றேன் குற்றாலமழையில் !

தொடரும்.
/////
வெற்றிலை கொடுத்து மன்னிப்புக் கேட்பது சிங்களவர் சம்பிராதாயமுறை.


பால்டொபி/கிரி செயல்முறை கூறியிருந்தான் ராகுல் .தனிமரத்திற்கு நேரம் வரும் போது பதிவு இடுகின்றேன்

31 comments :

துரைடேனியல் said...

அருமையான படைப்பு. உங்கள் மலரும் நினைவுகள் அருமை. எனக்கும் நதிக்கரை ஞாபகங்கள் நிறைய உண்டு. நானும் ஆற்றங்கரையில் வளர்ந்தவன்தான். அவை பசுமை மாறா நினைவுகள். நாங்களும் காத்திருக்கிறோம். அடுத்த பகுதிக்கு.

Yoga.S. said...

வணக்கம் நேசன்!அருமையாக இருக்கிறது.யாராவது கோப்பிக்கு முந்தி விடுவார்களோ என்ற கவலையே இல்லாமல் பொறுமையாகப் படித்தேன்!கோப்பி வேண்டாம்,எனக்கும் ஒரு கண்டொஸ்,சில் வு பிளே!!!!!

அம்பலத்தார் said...

//ராணி சவற்கார வாசமா அல்லது அருகில் யானை ஆற்றில் விடும் கழிவு சாணி வாச
மா என்று மூளையைக் கிண்டிய போது பிஞ்சு மனதில் இனவாதம் இல்லை.//
அது ஒரு கனாக்காலம்

அம்பலத்தார் said...

//மழைக்காலத்தில் குடை கொண்டு போகாத நாட்களில் அனோமாவுக்கு கண்டோஸ் கம்பனியின் அன்பளிப்பான நீலக்குடையுடன் நின்ற காலங்கள் மனதில் காமம் இல்லாத பருவம்.// ஆகா மனதில காமம் இல்லை என்று சொல்லுறதை நம்புறம் - ஆமா ரொம்ப நல்லவர்

ஹேமா said...

முதல்ல நேசன் உண்மை சொல்லுங்கோ....அழகா ஒரு எழுத்துப்பிழைகூட இல்லாமல் யாரோ திருத்தித் தந்திருக்கினம்..சரியோ !

ஆரம்பமே நதிகள் பற்றிய அலசல் அருமை.ம்...ம் சொல்லிக் கதை கேட்கலாம் உங்களிடம்.அவ்வளவு சொல்லும் விதம் ரசனை.அந்த விகாரைக்கு நானும் போய் முழங்காலில் நின்று கும்பிட்டிருக்கிறேன்.பால்டொபி வாயில் ஒட்டி இனிக்குது !

ஹாலிவுட்ரசிகன் said...

இந்த முறை பதிவு அட்டகாசம் நேசன். அழகாக ஆற்றில் ஆரம்பித்து ராணி சோப், பல்பொடி வரை அழகாக விவரித்திருக்கிறீங்க.

நானும் வழக்கமாக போயாத் தினங்களில் மட்டும் நண்பர்களுடன் விகாரைக்கு செல்வது வழக்கம். அதற்குப் பல காரணங்கள் உண்டு. ;)

Yoga.S. said...

ஹாலிவுட்ரசிகன் said...

நானும் வழக்கமாக போயாத் தினங்களில் மட்டும் நண்பர்களுடன் விகாரைக்கு செல்வது வழக்கம். அதற்குப் பல காரணங்கள் உண்டு.///என்ன பெரிய சிதம்பர ரகசியம்?கலர்(வெறும் வெள்ளை வேறு!)பார்க்கப் போவேன் என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக சொல்லிவிட வேண்டியது தானே?ஹ!ஹ!ஹா!!!!!!!!

தனிமரம் said...

துரைடேனியல் has left a new comment on your post "மலையகத்தில் முகம் தொலைத்தவன்-14":

அருமையான படைப்பு. உங்கள் மலரும் நினைவுகள் அருமை. எனக்கும் நதிக்கரை ஞாபகங்கள் நிறைய உண்டு. நானும் ஆற்றங்கரையில் வளர்ந்தவன்தான். அவை பசுமை மாறா நினைவுகள். நாங்களும் காத்திருக்கிறோம். அடுத்த பகுதிக்கு.

தனிமரம் said...

வணக்கம் துரைடெலியல்.
உங்கள் பின்னூட்டம் ஏன் வலையில் ஒலிந்து கொண்டது என்று நான் அறியேன் என்றாலும் உங்கள் முதல் வருகைக்கு தனிமரம் பால்கோப்பி பரிசாக தருகின்றேன்.
ஆற்றுக்கருகில் வாழ்வது மிகவும் இதமான வாழ்க்கை காலம் சில நினைவுகளைக் கொடுக்கின்றது ராகுல் போல தனிமரம் வாழவில்லை இயற்கையோடு.
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா!
இன்று பால்கோப்பி விலைபோய்விட்டது.ஹீ ஹீ கண்டோஸ் என்பதே ஒரு விற்பனை மார்க்(அடையாளம்) உப்பாலியின் தயாரிப்பு ஆனால் சொக்கலேட் என்றாலே இலங்கையில் கண்டோஸ் என்று பழகிவிட்டோம்.டாஸ்மார்க் என்றால் வைன் சொப் என்பது போல! உப்பாலின் நிறுவனத்தில் பிற்காலத்தில் வேலை கேட்டு (விற்பனை பிரதிநிதிக்கு) நொந்த போது கையில் குடையிருக்கவில்லை கிரான்ஸ்பாசில். ஹீஹீ
நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும். 

தனிமரம் said...

வணக்கம் அம்பலத்தார்.
அது உண்மையில் கனக்காலம்தான் ராகுலுக்கு.ஹீ ஹீ

தனிமரம் said...

அம்பலத்தார்.
அது உண்மையில் ரொம்ப நல்லவன் ராகுல் தனிமரம் மாதிரி ஜொல்லுப்பார்ட்டி கிடையாது.
அவ்வ்வ்வ்வ். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

உண்மைதான் ஹேமா .என் பதிவுகளை என்  அம்மா தான் முதல் வாசகியாக இருந்து தொடர்ந்து திருத்திக் கொண்டு வாரா சில  நேரங்களில் என் அவசரத்தில் அதிகம் பிழை வந்து விடுகின்றது.ஹேமாவின்  கண்டுபிடிப்புக்கு ராணி சவற்காரம் அன்பளிப்புக் கொடுக்கின்றேன்.ஹீ ஹீ வாசம் அப்படியானது அந்தக்காலத்தில். 

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும். பால்டொபி/கிரி டொபி சுவைக்கு மாஸ் கண்டோஸ் கிட்டவராத பருவம் அது என்கிறான் ராகுல்.ஹீ

தனிமரம் said...

நன்றி ஹாலிவூட் ரசிகன் வருகைக்கும் கருத்துரைக்கும். 
ஹீ ஹீ பன்சாலைக்குப் போகும் பழக்கம் நல்லம் தான் போதனை கேட்களாம்.

தனிமரம் said...

ஹாலிவுட்ரசிகன் said...

நானும் வழக்கமாக போயாத் தினங்களில் மட்டும் நண்பர்களுடன் விகாரைக்கு செல்வது வழக்கம். அதற்குப் பல காரணங்கள் உண்டு.///என்ன பெரிய சிதம்பர ரகசியம்?கலர்(வெறும் வெள்ளை வேறு!)பார்க்கப் போவேன் என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக சொல்லிவிட வேண்டியது தானே?ஹ!ஹ!ஹா!!!!!!!! 
// யோகா ஐயா பையனுக்கு இன்னும் சுராங்கனி செட் ஆகல அப்ப எப்படி பப்ளிக்ளிக்கில் உண்மையைச் சொல்வது ஹீஹீ .

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஹா.. ஆற்றையும் அதில் குளித்ததையும் நினைக்க... ஆசையாக இருக்கே....

ஆற்றில் குளிப்பதும் ஒரு சுகம்தான், நான் குளித்ததில்லை.

முற்றும் அறிந்த அதிரா said...

அழகாகப் போகிறது தொடர்.. சடாரெனப் பர்த்ததும் அது “தெய்வானை ஆறு” என நினைச்சிட்டேன்:))

முற்றும் அறிந்த அதிரா said...

என்னவாம் யோகா அண்ணனுக்குக் கண்டோஸ் கேட்குதாமோ? கர்ர்ர்ர்ர்:))..

முற்றும் அறிந்த அதிரா said...

சிங்கள ஸ்கூல் யூனிஃபோமை மறந்திருந்தேன்... இப்போ உங்கள் படத்தில் பார்த்ததும் அப்படியே எல்லாம் பிளாஸ் பக்ல ஓடுது...:))

சசிகலா said...

குடையோடு காத்திருக்கின்றேன்
குடைகின்ற கேள்விகள் மனதுக்குள் மழையாக கூடவருவாளா ?குடைக்கம்பியாக குத்தி
விட்டுப்போவாலோ
குழம்பிப்போய் காத்திருக்கின்றேன் குற்றாலமழையில் !
திரும்ப திரும்ப படிக்க தூண்டும் வரிகள் .

தனிமரம் said...

வணக்கம் அதிரா அக்காள்!
ஆற்றில் குளித்து முகம் தொலையாமல் போய் விட்டதில் நீங்கள் தப்பி விட்டீர்கள் என்கிறான் ராகுல்.தனிமரமும் ஏதோ கொஞ்சம் ஆற்றில் உருண்டு இருக்கு.ஹீ ஹீ பேசிக்கொண்டு இருக்கும் போது யார் எருமை என்பது மீஈஈஈஈஈஈஈ!

தனிமரம் said...

அது தெய்வானை ஆறு இல்லை தெய்யானாவலை ஆறு என்று சொல்லப்படும்  பதுளையில் இருக்கும் ஒரு ஆற்றுவழி .ஆற்றில் குளிக்கப்போகாதீங்க மீஈஈஈஈஈஈ!நீர் பெருகி வந்துவிடும்!

தனிமரம் said...

அவருக்கு இந்த வயதிலும் கண்டோஸ் வேனுமாம்  அதிரா.
ராகுல் அந்த வயதில் 3.50  ரூபாய் கண்டோஸ் திருடிப்போக எவ்வளவு கஸ்ரப்பட்டு இருப்பான்!ஹீ ஹீ

தனிமரம் said...

அந்த சகோதரமொழி பள்ளிக்கூட உடை தனித்துவமான அழகு ஐயோ ஐயோ இது எல்லாம் ராகுல் சொன்னது தனிமரம் பார்த்தது இல்லையாம் ஈஈஈஈஈஈ!
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் அதிரா!

தனிமரம் said...

நன்றி சசிகலா அக்காள் வருகைக்கு.உங்களின் கவிதை ரசிப்புக்கும் நன்றி.

ஹேமா said...

யோகா அப்பா....உங்களுக்குக் கிடைக்காத ஒன்று எனக்கு நேசன் தந்திட்டார்.ராணி சோப்....எப்பிடி எப்பிடி !

Yoga.S. said...

ஹேமா said...

யோகா அப்பா....உங்களுக்குக் கிடைக்காத ஒன்று எனக்கு நேசன் தந்திட்டார்.ராணி சோப்....எப்பிடி எப்பிடி !
///இனியாச்சும் தீவாளி(தீபாவளி),வரியத்துக்கு(வருஷம்).......................!ஹி!ஹி!ஹி!!!!!!!

தனிமரம் said...

ஹேமா அக்காள் ஏதோ யோகா ஐயாவுடன் சண்டை போடுவதே என்று முடிவு செய்திட்டாபோல !ஹீ ஹீ

தனிமரம் said...

யோகா ஐயா இப்போது ஆற்றில் குளிப்பது போல இங்க குளிக்க எல்லாம் முடியாது தண்ணீர் வரி இருக்கு அத்தோடு சவற்காரம் போய் ஸாம்போ  வந்துவிட்டது !ஹீ ஹீ

மகேந்திரன் said...

வணக்கம் சகோ நேசன்
சகோதரி ஹேமா சொன்னது போல
எழுத்துப் பிழை இல்லாமல் படிப்பது
எவ்வளவு அழகாக இருக்குது தெரியுமா

பதிவை முழுமையாக படித்த எண்ணம்...
இதை அப்படியே கைகொள்ளுங்கள்.....