23 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-26

மக்களுக்காக .மக்களின் அபிவிருத்திக்காக தாய்நிலத்திற்காக சேவை செய்கின்றோம் என்று மாகாணசபைத்தேர்தலிலும் ,பாராளமன்றத்திலும் வேட்டிகட்டியும் கேட்டுப்போட்டும் கதிரையில் குந்தியிருக்க கூப்பாடு போட்டும் கோமாளிகள் எல்லாம் .

குறிப்பிட மறந்த ஒருவிடயம் தேசியத்துக்காக தோள்கொடுத்தோரம் இனவாத சந்தேகத்தில் சங்கிலிப்பிணைப்பாக விலங்கிட்டு, விசாரணையில்லாமலும் ,விடுதலையில்லாமலும் ,விதியையையும் ,சதியையும் ,எண்ணி வாழ்வு இழந்து .வாலிபம் இழந்து ,வாடியிருக்கும் சிறைக்கைதிகளின் சந்தோஸ விடுதலையை சற்று ஓங்கி உரைக்காமல்!

 இந்தியாவுக்கு உடுக்கடிக்கின்றோம். கனடாவில் கொடிபிடிக்கின்றோம் என்று ஊடகத்துக்கு ஊறுகாய் போட்டும் கூட்டம் .

நம் தேசத்திற்கு கிடைத்த சாபம் !!


சட்டம் தெரிந்தவர்கள்,சாமாதான வேடத்தில் சர்வதேசம் பார்த்தவர்கள் எல்லாம் பார்க்க மறந்தது. இலங்கையில் பல சிறைகளில் வாடும் அப்பாவித் தமிழர்களை இந்த பயங்கரவாதம் என்ற சொல்லின் பின்.

 சிங்கள் இனவாதம் சீரழித்த தமிழர்களின் இரத்தவாடையில் இறந்து போன யுவதிகள் ,ஆடவர்கள் ,குடும்பத்தலைவர்கள் ,தலைவிகள் பற்றி எல்லாம் பரபரப்பாக எழுதவேண்டிய ஊடகம் எழுதியது எல்லாம் அயல்தேசத்து நடிகர் வருகையையும் ,நடிகை வருகையையும் ,கேட்டாள் சினிமா சூட்டிங்க தான் இங்கே இப்ப முக்கியசெய்தி என்று  சொல்வார்கள் கேட்டாள் அனுபவஸ்தர்களாம்!


 முன்னம் எழுதிய விதியோ ?இல்லை ஊடக ஆசையோ ?முந்திச் செல்ல சேகரும் ,நண்பணுடன் சேர்ந்து  பிந்துணுவெவ சென்றநிலையில் ஊடங்கள் என்று படம்பிடிக்க வருவோர்களுக்கு .காடையர்களும் ,இனவாத இராணுவமும் ,உதைகொடுத்துக்கொண்டு இருந்தார்கள் இதுதான்  அன்று நடந்த நிஜம் .

அதை படம்பிடித்த என் நண்பன் ராஜுவும்  தாக்கப்பட்டான்.உள்ளூரில் இருந்த பொலிஸ் சட்டத்தை பாதுகாக்கவேண்டியவர்கள் காத்துக் கொண்டு இருந்து காடையர்களின் அட்டுழியம் கைமீறி எங்கே தங்கள் பதவி கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சம் அன்றி வேறில்லை.


. நீண்ட நேர கலவரம் முடிந்துவிட்டது என்று ஊடரங்கு சட்டம் போட்டுச் சொன்னாலும் பலர் வீதியில் அடிபட்டும் .உயிர் பிரிந்தும் போன நிலையில் உதவிக்கு பதுளையில் இருந்து வந்த இராணுவமும் ,பொலிசும் வீதியில் பலரை கேள்வி இன்றி தமிழர் என்ற காரணத்தாள் கைது செய்து கொண்டுபோனது .

பதுளைச்சிறைக்கும் ,கண்டியில் இருக்கும் போகம்பரை சிறைக்கும் விடுப்புப் பார்க்கப் போன சேகருக்கும் வேலியில் போன ஓண்னை வேட்டியில் பிடித்துவிட்ட கதை போல விடுதலைப்புலிகள் உளவாளி என்ற பட்டத்துடன் விலங்கிட்டது .

இனவாத இராணுவம் எத்தனை  தரம்  சேகர் விசாரணையில் நான் ஒரு விற்பனைப்பிரதிநிதி பல்தேசியக்கம்பனியின் ஒரு ஊழியன் இது நிஜம் என்று சொன்னாலும் ஏறாது இராணுவத்துக்கு இருப்பது அதிகம் போதையில் தானே !இனவாத காற்றில் இருந்து கொள் சில மாதம் விசாரணை இன்றி என்று அனுப்பிய இடம்தான் போகப்பரைச்சிறை .

விசாரணைக்கு கூப்பிடவும் இல்லை .விடியல்காலை பேப்பரும்  வரவில்லை வெளியார் பார்வையாளர்களாக வருகையும் பதிவு இல்லாமல் இருந்தான் சிறையில் சேகர்!

.தொடரும்.....

22 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-25


                                       

, இந்தத்  தொடருக்கும் தனிமரத்துக்கும் தொடர்பும் இல்லை என்பதனை மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.
   நட்புடன் தனிமரம் நேசன்!
///

அதிகாரம் இல்லாத மக்கள் குழுக்கள் சிலரை அதிகாரம்மிக்கவர் போல காட்டி வெடிகுண்டு மிரட்டலும் ,காடையர் தாக்குதலும் ,கைகுண்டு வீச்சும் செய்வதன் ஊடாக ஆட்சியில் இருந்து கொண்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதில் அரசியல்வாதிகள் ஆனந்த சுகம் பெறுகின்றார்கள் .

தங்களினால் உருவாக்கப்பட்டவர்கள் தம் சக்தி மீறி அரசியல் வடிவம் பெறும்போது அதனை முறியடிப்பதில் தலைவா என்ன தர்மம் சரணம் கச்சாமி என்ற புனித வார்த்தையை .

தாம் புகழ் பெற வேண்டி தம்போதனாவா என்று அரசியல் செய்ய வெளிக்கிட்ட தரங்கெட்ட புத்த பிக்குகளையும் தம் ஆளுமைக்குள் கொண்டுவர முயன்ற காட்சிகள் இனவாத இலங்கையிலும் இதிகாசமாக இருக்கின்றது .

இப்படித்தான்  மூவின மக்களும் சேர்ந்து வாழும் மலையக மண் பண்டாரவளையும் முன்னர் ஜே ஆர் ஆட்சியில் ஆடிக்கலவரம் கடந்து மறந்து போய் மறுமலர்ச்சியாக இருந்த சமூகத்திலும் சப்புமல் குமார மறுவடிவம் என்று வில்லும் ,வாளும் இலட்சினை போல சூடிய மக்கள் குழுவாக மலர்ந்த குழுத்தான் வீரவித்தான என்ற இயக்கம்.

 இந்த இயக்கம் நாளடைவில் இந்த பண்டாரவளை நகரத்திலும் பலம்மிக்கதோர் அமைப்பாக மாறியதில் பதவியில் இருந்த ஆட்சியாளர்களின் ஆலவட்டமும்,

 அதிக செல்வம் குவிந்த ஆபரணக்கடை ஒன்றின் பின் புலமும் அந்த நாட்களில் அவர்களுக்கு உந்து சக்தி  இது பல ஊடகத்தவர் அறிந்த உண்மை.அந்த சிங்கள இனவாதம் 

தமிழர் இரத்தம் குடிக்க பல காடையர்கள் ஒன்று குவிந்த இடம் தான் பிந்துணுவெவ புனர்வாழ்வு முகாம் .இந்த முகாமில் புலிகள் என்று இராணுவம் சந்தேகித்தவர்களுக்கும்  அப்பாவிகளாக தண்டிக்கப்பட்ட பலர் இருந்தார்கள்!


அந்த முகாம் இருக்கும் தொலைவான வழியில் இருக்கும் பல கடைகளுக்கு வாரம் ஒரு முறை வரும் வார சஞ்சிகைபோல  இந்த பிந்துணுவெவ பாதையோரமும் பல பக்கம் போய் வருவது விற்பனை விநியோகம் செய்வது பல விற்பனைப்பிரதிநிதிகளின்  தொழில் .

இந்த வீதிக்கு வழமையாக போவது போல காத்திருந்த போதுதான் அதிகாலையில் அந்த கயவர்கள் அப்படி ஒரு துயரத்தை தமிழர் மீது கட்டவிழத்து விட்ட செய்தி கேட்டு .



தன்  நண்பனும் ,ஊவா சமூகவானொலியில் ஒரு செய்திச் சேகரிப்பாளனாக இருந்த மலையக நண்பணுடன் .


ஐராங்கனி தடுத்தும் விளக்கு விட்டில்ப்பூச்சியை வா என்று அழைக்கும் கலங்கரைவிளக்கோ கப்பலை கிட்ட வராதே என்று கூறும் அதுபோல இனவாதம் தமிழர் என்றால் சந்தேகிக்கும் புலி என்று .



நீ போகாதே சேகர் உனக்கு இது கஸ்ரகாலம் அவள் பேச்சு கேளாமல் நேரில் பார்க்கச் சென்றான் சேகர்!


தொடரும்....
!