22 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-25


                                       

, இந்தத்  தொடருக்கும் தனிமரத்துக்கும் தொடர்பும் இல்லை என்பதனை மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.
   நட்புடன் தனிமரம் நேசன்!
///

அதிகாரம் இல்லாத மக்கள் குழுக்கள் சிலரை அதிகாரம்மிக்கவர் போல காட்டி வெடிகுண்டு மிரட்டலும் ,காடையர் தாக்குதலும் ,கைகுண்டு வீச்சும் செய்வதன் ஊடாக ஆட்சியில் இருந்து கொண்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதில் அரசியல்வாதிகள் ஆனந்த சுகம் பெறுகின்றார்கள் .

தங்களினால் உருவாக்கப்பட்டவர்கள் தம் சக்தி மீறி அரசியல் வடிவம் பெறும்போது அதனை முறியடிப்பதில் தலைவா என்ன தர்மம் சரணம் கச்சாமி என்ற புனித வார்த்தையை .

தாம் புகழ் பெற வேண்டி தம்போதனாவா என்று அரசியல் செய்ய வெளிக்கிட்ட தரங்கெட்ட புத்த பிக்குகளையும் தம் ஆளுமைக்குள் கொண்டுவர முயன்ற காட்சிகள் இனவாத இலங்கையிலும் இதிகாசமாக இருக்கின்றது .

இப்படித்தான்  மூவின மக்களும் சேர்ந்து வாழும் மலையக மண் பண்டாரவளையும் முன்னர் ஜே ஆர் ஆட்சியில் ஆடிக்கலவரம் கடந்து மறந்து போய் மறுமலர்ச்சியாக இருந்த சமூகத்திலும் சப்புமல் குமார மறுவடிவம் என்று வில்லும் ,வாளும் இலட்சினை போல சூடிய மக்கள் குழுவாக மலர்ந்த குழுத்தான் வீரவித்தான என்ற இயக்கம்.

 இந்த இயக்கம் நாளடைவில் இந்த பண்டாரவளை நகரத்திலும் பலம்மிக்கதோர் அமைப்பாக மாறியதில் பதவியில் இருந்த ஆட்சியாளர்களின் ஆலவட்டமும்,

 அதிக செல்வம் குவிந்த ஆபரணக்கடை ஒன்றின் பின் புலமும் அந்த நாட்களில் அவர்களுக்கு உந்து சக்தி  இது பல ஊடகத்தவர் அறிந்த உண்மை.அந்த சிங்கள இனவாதம் 

தமிழர் இரத்தம் குடிக்க பல காடையர்கள் ஒன்று குவிந்த இடம் தான் பிந்துணுவெவ புனர்வாழ்வு முகாம் .இந்த முகாமில் புலிகள் என்று இராணுவம் சந்தேகித்தவர்களுக்கும்  அப்பாவிகளாக தண்டிக்கப்பட்ட பலர் இருந்தார்கள்!


அந்த முகாம் இருக்கும் தொலைவான வழியில் இருக்கும் பல கடைகளுக்கு வாரம் ஒரு முறை வரும் வார சஞ்சிகைபோல  இந்த பிந்துணுவெவ பாதையோரமும் பல பக்கம் போய் வருவது விற்பனை விநியோகம் செய்வது பல விற்பனைப்பிரதிநிதிகளின்  தொழில் .

இந்த வீதிக்கு வழமையாக போவது போல காத்திருந்த போதுதான் அதிகாலையில் அந்த கயவர்கள் அப்படி ஒரு துயரத்தை தமிழர் மீது கட்டவிழத்து விட்ட செய்தி கேட்டு .



தன்  நண்பனும் ,ஊவா சமூகவானொலியில் ஒரு செய்திச் சேகரிப்பாளனாக இருந்த மலையக நண்பணுடன் .


ஐராங்கனி தடுத்தும் விளக்கு விட்டில்ப்பூச்சியை வா என்று அழைக்கும் கலங்கரைவிளக்கோ கப்பலை கிட்ட வராதே என்று கூறும் அதுபோல இனவாதம் தமிழர் என்றால் சந்தேகிக்கும் புலி என்று .



நீ போகாதே சேகர் உனக்கு இது கஸ்ரகாலம் அவள் பேச்சு கேளாமல் நேரில் பார்க்கச் சென்றான் சேகர்!


தொடரும்....
!

4 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன்...

K said...

தீவிரமான அரசியலுக்குள் தொடர் நகர்கிறது அண்ணா! மேலே சொல்லியிருக்கும் குறிப்பு பொருத்தமானதுதான் !!

தனிமரம் said...

தொடர்கிறேன்...//வாங்க தனபாலன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தீவிரமான அரசியலுக்குள் தொடர் நகர்கிறது அண்ணா! மேலே சொல்லியிருக்கும் குறிப்பு பொருத்தமானதுதான் !!//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் மாத்தியோசி ஜீவன்.