காட்சிப்படம் தந்து கவிதை எழுத அழைத்த பூங்கோதைச்செல்வன் பாதம்
என்றும் பணிந்து பாடும் கல்லாதவன்!
தனிமரம்!!!!
/////////////////////
கார்கால மேகம் போல
கருகரு கூந்தல்தாரகை
கைதி என்ற போர்வையில்
காடையர்கள் கையில் சிக்கிய காயத்திரி
காணாமல் போன
வெள்ளைக்கொடி விவகாரம் போல
வெள்ளையுடையில் இரு விழி
கண்ணீர்த்துளிகள்!!!!
காட்சி கையால் வரைந்தது
கண்ணாகியும் கண்ணீர்விட்டாள்
கட்டியவன் கொலைக்கு
கானாத துணைவன்
கடலில் போன
கட்டுமரம் போல
கடல்கடந்தும்
கண்ணனின் கீதம் போல ஆத்மா
காற்றில் ஈழத்தில் இன்னும்
காந்தக்குழல் கையில் மீட்டி
கார்த்திகைப்பூக்கள் வருகைக்காக
கண்ணீர்ரில் பூஜிக்கும்
கவிதை ஓவியம் இதைக்
காணவாரீர்களோ ??ஈழக்கனவை
கழுத்தறுத்த கனவான்களே!
கவிதையாலே ..
கல்லில் செதுக்கிய நவீன கண்ணகி
காலிச்சிறையும், கண்டிச்சிறையும்,
காத்திருக்கின்றேன்!!! நந்திக்கடல் ஓரம்
காணமல் போகலாம் நானும் காலம்
கலியுகம்!
கருணாநிதியும் கடிதமும் போல என்
கண்ணீர்த்துளியும் காய்ந்து போகட்டும்
கடவுளுக்கும் கருணையுண்டா?
கவிதை பாடுங்கள்
கனவும் கலைந்தது கரிகாலன்
கண்சிமிட்டிய காந்தப்பூமியில்!
கடும் தவத்துடன் காத்திருக்கின்றேன்!
கையில் கிட்டாத சுவாசம் போல!



.jpg)



.jpg)