05 October 2014

வாங்கோ கவிதை எழுதுங்கோ பூங்கோதை !!


காட்சிப்படம் தந்து கவிதை எழுத அழைத்த பூங்கோதைச்செல்வன் பாதம்
என்றும் பணிந்து பாடும்  கல்லாதவன்!

                                          தனிமரம்!!!!

                                   /////////////////////

கார்கால மேகம் போல
கருகரு கூந்தல்தாரகை 
கைதி என்ற போர்வையில்
காடையர்கள் கையில் சிக்கிய காயத்திரி 
காணாமல் போன 
வெள்ளைக்கொடி விவகாரம் போல
வெள்ளையுடையில் இரு விழி 
கண்ணீர்த்துளிகள்!!!!
காட்சி கையால் வரைந்தது 
கண்ணாகியும் கண்ணீர்விட்டாள்
கட்டியவன் கொலைக்கு
கடும் நீதி கேட்டு காந்தி தேசத்தில் !

கானாத துணைவன்
கடலில் போன 
கட்டுமரம் போல
கடல்கடந்தும் 
கண்ணனின் கீதம் போல ஆத்மா 
காற்றில் ஈழத்தில் இன்னும் 
ஐநா காற்றில் கேள்வியாய் இசைக்கும்!!!


காந்தக்குழல் கையில் மீட்டி
கார்த்திகைப்பூக்கள் வருகைக்காக
கண்ணீர்ரில் பூஜிக்கும்
கவிதை ஓவியம் இதைக்
காணவாரீர்களோ ??ஈழக்கனவை
கழுத்தறுத்த கனவான்களே!
கவிதையாலே ..
கல்லில் செதுக்கிய நவீன கண்ணகி 
கார்நாடக சிறைபோல இல்லை!


காலிச்சிறையும், கண்டிச்சிறையும்,
காத்திருக்கின்றேன்!!! நந்திக்கடல் ஓரம்
காணமல் போகலாம் நானும் காலம்
கலியுகம்!
கருணாநிதியும் கடிதமும் போல என் 
கண்ணீர்த்துளியும் காய்ந்து போகட்டும்
கடவுளுக்கும் கருணையுண்டா?
கவிதை பாடுங்கள் 
கனவும் கலைந்தது கரிகாலன் 
கண்சிமிட்டிய காந்தப்பூமியில்!
கடும் தவத்துடன் காத்திருக்கின்றேன்!

கையில் கிட்டாத சுவாசம் போல!
/////////////////
காட்சிக்கு கானம் இது.

8 comments :

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பொருத்தமான கவிதைகள்.
கவிதையில் கோடிட்டுக் காட்டும் சோகம் கண்களை ஈரமாக்குகிறது.

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஹா.. கவிஞர் நேசன் வாழ்க...
பெண் கண்ணீர் விட்டவுடன் , காடையர் கையில் சிக்கிட்டா என முடிவெடுத்திட்டீங்களே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அதுக்குள் கண்டியையும் கொண்டு வந்திட்டீங்க...

சூப்பர் அசத்திட்டீங்க கவிஞர் நேசனுக்கு அரோகரா!!!

reverienreality said...

நலமா நேசரே ?

வீட்டில் தங்கை நலம் தானே...? விசேஷம் -:) உண்டா...?


வலைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு...யோகா அய்யா நலமா?

கருவாச்சி...ஹேமா கவிதாயினி...சகோதரி ஏஞ்சலின் ,,,எல்லாரையும் மிஸ் பண்றேன்....ரொம்ப...

கொஞ்சம் வேலைப்பளு...நிறைய பயணம்...


மறுபடி வருகிறேன்...

ரெவெரி

தனிமரம் said...

பொருத்தமான கவிதைகள்.
கவிதையில் கோடிட்டுக் காட்டும் சோகம் கண்களை ஈரமாக்குகிறது.

6 October 2014 07:52//நன்றி முரளிதரன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஆஹா.. கவிஞர் நேசன் வாழ்க...//ஏன்ன் இந்தக்கொலவெறி!ஹீ

பெண் கண்ணீர் விட்டவுடன் , காடையர் கையில் சிக்கிட்டா என முடிவெடுத்திட்டீங்களே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அதுக்குள் கண்டியையும் கொண்டு வந்திட்டீங்க...//ஆமா போகம்பர இன்னும் நினைவில்!ஹீ

சூப்பர் அசத்திட்டீங்க கவிஞர் நேசனுக்கு அரோகரா!!! அன்ன ஓரா என்று காதில் கேட்குது! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! ன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் அதிரா!

7 October 2014 08:39 Delete//

தனிமரம் said...

நலமா நேசரே ?// நல்ல சுகம் அண்ணாச்சி!

வீட்டில் தங்கை நலம் தானே...? விசேஷம் -:) உண்டா...?மகனுடன் பொழுது போகின்றது!


வலைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு...யோகா அய்யா நலமா?ஐயா கொஞ்சம் வ்லைப்பக்கம் ஓய்வு!

கருவாச்சி...ஹேமா கவிதாயினி...சகோதரி ஏஞ்சலின் ,,,எல்லாரையும் மிஸ் பண்றேன்....ரொம்ப...

கொஞ்சம் வேலைப்பளு...நிறைய பயணம்...


மறுபடி வருகிறேன்...

ரெவெரி//மீண்டும் வாங்க காத்து இருக்கின்றோம் நீண்ட காலத்தின் பின் சந்திச்சது சந்தோஷம் ரெவெரி!மீண்டும் சந்திப்போம்

Thulasidharan V Thillaiakathu said...

கட்டியவன் கொலைக்கு
கடும் நீதி கேட்டு காந்தி தேசத்தில் !// சுடும் வரிகள்!

தாங்களா எங்கள் கவிதைகளை மழை என்று சொன்னீர்கள்?! அப்படியென்றால் தங்கள் கவிதைகளை என்னவென்று வர்ணிக்க வேண்டும்!?

எல்லக் கவிதைகளிலுமே இழையோடும் சோகம் மனதைக் கொல்லுகின்றது. நீங்கள் எல்லாம் இப்படி எழுதும் போது நாங்கள் எங்கே நண்பரே! நிச்சயமாகத் தொடர்கின்றோம்!

saamaaniyan said...

பாரதிதாசன் அவர்களின் வலைப்பூவின் மூலம் உங்கள் தளம் அறிந்தேன்... இனி தொடருவேன்...

படங்களுக்கு பொருத்தமான, நெஞ்சை சுடும் சோகம் கொண்ட கவிதைகள் அனைத்தும் அருமை.

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

எனது புதிய பதிவு : தமிழர் என்றோர் இனமுண்டு...

http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post.html

தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி