31 May 2011

 ரசித்த படத்தின் பின்னே நானும்!

திரைப்படம் என்ற ரயில் பயணம் என்னை எல்லா இடங்களுக்கும் சுமந்து செல்கிறது .மேத்தாவின் கவிதையில் சொல்வது போல் இருட்டில் நிழலைத்தேடி ஓடும் மனம் என்ற வரிகள் எனக்குப் பிடித்தது.படம் பார்த்துக் கெட்டுப் போனவர்கள் வரிசையில் உன்னையும் சேர்க்கனும் என்று என் நண்பர்கள் திட்டும் அளவுக்கு நானும் சினிமா என்ற சக்கரத்தில் வளையமாக இருந்திருக்கிறேன்!

சகோதரமொழி நண்பர்களுடன் ஏற்பட்ட நட்பு தமிழ் திரையைத்தாண்டி ஹிந்திப் பக்கம் தாவிச்சென்றது!1980 இல் இருந்த ரசனையும் 1990 இன் பிற்பகுதியில் அதிகமான காதலை மட்டும் அரைத்த வண்ணம் இருந்த தமிழ் சினிமாவின் வெறுப்பும்  என்பதும் ஒருகாரணம்!

அவர்களுக்கு சகோதரமொழியில் வரும் படங்களை தாண்டி ஹிந்திக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் நாடறிந்தது இந்த மயக்கம் அசின் வரை பத்திக்கிச்சு!

நான் அதிகம் சாருக்கானின் படங்களை விரும்பிப் பார்ப்பேன் .என் அபிமான நடிகரும், கூட இந்த வரிசையில் கொழும்பில் பணியில் இருந்த போது ஒரு படத்தை வெற்றி கரமாக 60 காட்சிகள் திரையரங்கில் பார்த்தவன் நான் !வீனாப்போன ரசிகன் என்ற பட்டம்தந்தால் ஏறுக்கொள்வேன்!அந்தப் படம்!

தில் தோ பாஹல் ஹைய்(dil to pahal hai) சாருக்கானின் வெற்றிப் படவரிசையில் இது ஒரு முத்து .அழகான காதல் கதை நால்வரின் காதலை ஒவ்வொரு காட்சியும் ரசித்துப் பார்க்க வைத்த இயக்கம் யாஸ்சோப்ராவின் கைவண்ணம் ,படப்பிடிப்பு, நடிப்பு எல்லாம் பிடிக்கும் எனக்கு இப்படப் பாடல்கள் என்றும் என்கூடவரும் தாலாட்டு!

ஹிந்தியில் புகழ்பெற்றவர்கள் காதாநாயகர்கள் இருவர், மூவர் சேர்ந்து ஒன்றாக நடிப்பார்கள் இங்கே விஜய்காந்தும் ரஜனியும் சேர்ந்து நடிக்க மாட்டினம்!

இப்படம் கொழும்பில் லிபர்ட்டி மெஜிக் சிட்டி, கிரான்பாஸ் அசோக்கா மருதானை சென்றல் என சுற்றுவட்டாரங்களில் வெற்றிகரமாக ஓடியது யாஸ்சோப்ராவின் தயாரிப்பில் இக்காவியம் வெளிவந்தது சாருக்கானுடன் அக்சைக் குமாரும் போட்டிக்காக சில காட்சியில் வந்து போவார்!

 எப்போதுமே பிடித்த மாதுரிடிக்சித் ,கரிஸ்மாகபூர் என முக்கிய கதாப்பாத்திரங்கள் கதைக்கு உயிர் கொடுத்தவர்கள் .நிஜத்தில் இக்கதையில் வரும் கரிஸ்மா ஏற்ற பாத்திரம் என் நண்பி ஒருவரின் உண்மை நிலை!

உத்தம் சிங் இப்படத்திற்கு அற்புதமாக இசை அமைத்திருந்தார் .ராஜாவிற்குப் பிறகு இவரின் இசை என்னை கட்டிப்போட்டு துள்ளிக்குதிக்க வைத்தது .காலத்தின் கோலம் நல்ல இசையமைப்பாளர் பரிதாபகரமாக படுகொலை செய்யப்பட்டார்!ஹிந்தியுலகில் இவரின் இழப்பு பேரிழப்பு வெற்றிப்படியில் ஏறும் போது அந்தக் கொடுமையான மரணம் வந்துவிட்டது! 
இவரின் இசையை பின்னாலில் லவ்டுடே சிவா காதல் சுகமானது படத்திற்கு" அடி சுகமா சுகமா சுடிதாரே" பாட்டுக்கு சுட்டுப் போட்டிருந்தார்!

ஆறு பாடலும் பிரபல்ய மாகியிருந்தது இரண்டு பாடல் சகோதரமொழி வானொலியான சிரச வில் பாடல் தரவரிசையில் top 20 ஞாயிறு இரவு 10மணி தொடக்கம் 12மணிவரையில்  இடம் பெறும் நிகழ்ச்சியில் தொடர்ந்து 1,2 இடங்களை பெற்று முதல்தரவரிசையில் ஒருவருடம் நீடித்தது இது ஒரு சாதனையான விடயம் அன்நாட்களில் !!
தில் தோ பாகல்கேயும், ஹரரே ஹரகுச்சு கோகயா கோகின்ன பேரானா , பாடல்களை உச்சரிக்காத சகோதர மொழி வாலிப உள்ளங்கள் அன்று கிடையாது!நீண்டதூர   பேரூந்துப்பயணங்களில் ஒலிநாடா அறுந்து போகும் வரை ஒலிக்கும்,
அந்தளவுக்கு  வானொலியிலும் ஒலித்து ஒய்ந்தது.ஹரிஹரன் இப்படத்தில் titile பாடலை மிக இயல்பாக பாடி அதிகமாக வடஇந்தியாவில் பிரபல்யமாகியிருந்தார் பிறகுதான் தமிழில் புகழின் உச்சிக்குப் போனார். 
வட இந்தியாவின் இசைக்குயில் லதாமங்கேஸ்கர் இதில் இருபாடல் பாடியிருப்பார் .ஒருபாடலின் இடையே அவரின் ஹம்மிங் தமிழில் ஜொன்சியிக்குப் பிறகு அதிகம் கவர்ந்தது .கரிஸ்மாவின் ஒருதலைக் காதலுக்கு இசைவாக வரும் பாடலில் இந்த ஹம்மிங் இசைக்குயிலின் குரல் ஊடாக முன்னால் நண்பனின் முன்னால் தோழியின் நினைவு வந்து போகிறது.

இன்னொருபாடல் மழையில் பாடுவார்கள் இதை தமிழில் அறிந்தும் அறியாமல் படத்தில் இரண்டாவது ஹீரோவிற்கு கொடுத்து மூலப்பாடல் காட்சியை கொத்துப் பரோட்டாவாக்கியிருப்பார்கள்!

படத்தில் கரிஸ்மாகபூர் நடிப்பில்  ஒரு காட்சியில் அவரின் காலில் ஏற்படும் நரம்பு விலகும் காட்சியில் கமரா அவரின் காலைச் சுற்றி ஓடும் சில கனங்களில் காட்டும் பாவனை மயூரி படத்திற்குப் பின் என்னை மிகவும் பாதித்தது .வெற்றியடையும் போதுவரும் தடங்கள் ஆண்மாவை உலுக்கும் அப்படித்தான் இதில். கரிஸ்மா பரம்பரை நடிப்பில் தன் தந்தையை நிரூபித்திருப்பார்!

மதுரிடிக்சித்தின் நடிப்பை சொல்ல இரண்டு பதிவு போடலாம்! ஏற்ற பாத்திரத்தை  பானுப்பிரியா போல் சிறப்பாக செய்யக்கூடியவர் .இவரும் சன்சய்தத்தும் நிஜத்தில் ஜோடி சேரப் போவதாக அன்நாளில் நாளிதழ்கள் பத்திவெச்சது!
சாருக்கானின் நடிப்பை குறும்பை, ரசித்துப்பார்த்தேன்!

இவர்களைத் தாண்டி இப்படத்தில் அக்சைக்குமார் வந்துபோகும் காட்சி செய்யும் தியாகம் என் முன்னால் நண்பனுடன் காலிமுகத்திடலில்  மாலையில் தோன்றிய வாக்குவாதம் இரவு கொழும்பு-12 இல் வந்து சேரும் வரை.  இரு மொழிகளில் ஆட்டோக்காரன் காதை மூடிக்கொள்ளும் அளவுக்கு  நீண்டது. என் நட்புக்கு  முடிவுரை எழுதிய கனங்கள்..!

இப்படிபல விடயங்கள் இப்படத்தோடு  என் நினைவில் வந்து போகிறது .எப்போதும் மனதிற்குள்  சிலரை நினைக்கும் போது என் அலுமாரியில் இப்படத்தை தேடி எடுத்து சில காட்சிகள்  ரசித்தால் சில வருடங்கள் பின்னோக்கிப் போகிறது மனசு!

இப்படத்திற்கு தமிழில் யாரோ ஒருவர் யாருக்காகவோ எங்கேயும் எப்போதும் காத்திருப் பார்களாம்! காலம் சரியாகத்தான் மொழி பெயர்த்திருக்கு போல்!

30 May 2011

 கெயிட்டியும் நானும்!

திரைப்படம் என்ற மூச்சுக்காற்று என்னுடன் ஒட்டிக்கொண்ட ஒரு மலையட்டை போன்றது! அது இரத்தம் உறிஞ்சும். திரை பணத்தை ஆட்டை போடும்!
 1999 பிற்பகுதியில் ஒன்று கூடலிற்கு கொழும்புக்கு வந்திருந்தேன் !கொழும்பு வந்தாள் யாரைப் பார்க்கா விட்டாலும் இரண்டு நண்பர்களை தவற விட்டதில்லை ஒன்று கொச்சிக்கடை அந்தோனியார் ,மற்றவர்கள் கொழும்பில் இருக்கும் திரையரங்குகள்!. 
 பொழுது போக்கு என்ற சாதனத்தைத் தாண்டிய ரசிகன் நான் அதனால்தான் எல்லாவிதமான(தமிழ்,ஹிந்தி) படங்களையும் பார்ப்பேன்.
 இப்படியான தருனத்தில் ஒரு நாள் சனிக்கிழமை 2.30 காட்சிக்கு சீனு படம் பார்த்தோம் நானும் நண்பரும் .நண்பர் வெளிநாட்டுப் பயணத்திற்காக கொழும்பில் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். 
 இந்தப்படம் ஒரு சங்கீத வித்துவானின் கதையைச் சுற்றியது நமக்கு கார்த்திக்கின் நடிப்பைவிட தேவா வின் இசையை விட மாளவிக்கா எப்படி மனசுக்குள் (கார்த்திக்கின்)  வந்தா! என்பது தானே முக்கியம். இந்தப் படம் ஓடிய திரையரங்கு கொட்டாஞ்சேனை கெயிட்டி . இதைத்தாண்டித்தான் சீஹவுஸ்  போகனும் (சீஹவுஸ் நட்சத்திர விடுதி)இதை நான்  பிறகு ஒரு பதிவில் போடுவேன் .வார இறுதியில் மைந்தன் சிவாவின் நண்பர்கள் சிலர் இங்கு முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவதாக ஒரு பட்சி சொல்லுகிறது மாப்பூ நிஜமா?
 கெயிட்டிக்கு எதிரில் நவீன் செரமிக் காட்சியறை இருந்தது! 
..
படம் பார்த்துவிட்டு வெளியில் வருவதற்கு  காஸாவின் எகிப்தின் எல்லைக்கதவு திறந்துவிட்டது போல் நாங்களும் முண்டியடித்துக்கொண்டு வெளியில் வந்தாள் !ராஜாக்கள் எங்களை கூஜாக்களாக ஸகிலா படம்பார்கப் போனவர்களைப் பிடிக்கப் போன கலாச்சாரகாவலர் போல் பாதுகாப்பு சோதனை என்று இரானுவத்தினர்  வெளிக்கதவை மூடிவிட்டு விசாரனைப் படலத்தை தொடங்கினார்கள்!

அதுவரை மாளவிக்காவின் மயக்கத்தில் இருந்த நண்பன் .தன் இரட்டைக் குழந்தையில் ஒன்றை லாச்ஜில் கிடத்திப் போட்டு வந்திருந்தான். தேசிய அடையாள அட்டையும், பொலிஸ் பதிவு அட்டையும் தான் இந்தக் குழந்தைகள்! அவனிடம் அக்கனங்களில் தேசிய அடையாள அட்டை மட்டும் இருந்தது!

இரானுவத்தினர் ஒவ்வொருத்தராக பார்த்துக்கொண்டு  வெளியேற்றிக் கொண்டிருந்தனர். நண்பருக்கு ஊரில் உள்ள தெய்வங்கள் வந்துகொண்டிருந்தது துனைக்கு! என்ன செய்யலாம் என என்னிடம் கேட்டான் பொறு கதைக்களாம் ரூமில் யாரு இருப்பான் என கேட்ட போது இன்னொரு நண்பரின் கைபேசி இலக்கத்தின் ஊடே அவனின் நண்பரின் பெயரையும் சொன்னான் .
.
என்னிடம் எப்போதும் பணம் இருக்காமல் போகும்  பதிவுகள் சரியாக இருக்காமல் போகாது. விரைந்தவாரே இரானுவத்தினர் சோதனையிட்டனர் உடலில் உச்சி முதல் பாதம் வரை வெடிகுண்டு தேடியவர் முகத்தில் விழுந்தது மண்னே! இப்போது ஏற்படும் முதுகுவலிக்கு அவர்களின் உரம் ஏறிய கைகளின் மசாஜ் தேவைப் படுகிறது!


நண்பரை சோதனையிட்ட போது இவனுட்ட சொல்லுடா நான் வெளிநாடு போக வந்தனான் வெடிகுண்டு என்னிடம் இல்லை என்று பொலிஸ் பதிவு ரூமில் இருக்கு வந்தால் காட்டுவன் என்று! நண்பனுக்கு நான் என்னவோ யக்காசி அக்காசி என்ற எண்ணம் போல்!  அதுதான் வந்துபார் என்ற கூற்று பணியில் இருக்கும் போது பின் செல்ல முடியாது இதுதான் இரானுவ வீரர்களின் கடமை ஒழுங்கு உரிய இடத்தில்  எல்லா ஆதாரங்களும் இல்லை என்றாள் அவனை/அவளை கொண்டுவா(கொன்றுவா) இதுதான் இரானுவ நீதீ!  சகோதர மொழியில் நான் என்னவோ பண்டிதன் என்று நினைப்பு என் நண்பனுக்கு உண்மையில் மொழியைத்தாண்டி தமிழன் என்றாள் எல்லாரும் புலி ,பிரிவினைவாதி ,என்பது தானே அவர்களின் தீர்மானம். 
கெட்டதிலும் நல்லதுபோல் நான் (சகோதரமொழியில்) கூரினேன் அவன் நாளை மாலை வெளிநாடு போகின்றான்  இன்று சந்தோசமாக இருக்கனும் என்றுதான் படம் பார்க்க வந்தோம் இது சத்தியம்.! எனது புத்தரே! நான் சொல்வதை ஏறுக்கொள்  நான் சொல்வது உண்மை இப்படியான வாக்கியங்களை கூறும் போது அவர்களின் கண்களைப் பார்த்து கூறவேண்டும்  ஏனெனில் அவர்கள் இருப்பது மது போதையிலும் மல்(இதுகஞ்ஜா) தமிழில் என்கின்ற போதையிலும் தான் அதிகம்! இதை மறுக்கும் வலையுலகில் கொலை மிரட்டல் விடும் வீரபுருஸர்களுக்கு என் மூடப்பட்ட வரலாறுகளின் ஊடே தர்கம் புரிய நான் தயாராக இருக்கிரேன் ஆனால் போதிய நேரம் ஒதுக்குங்கள் ஏனெனில் நானும் புலம்பெயர் தேசத்தின் வலிகளை தனிமரமாக சுமக்கின்ரேன்! 

இதைப் புரிந்து கொண்ட இரானுவத்தினர் எங்கள் இருவரையும் போங்கள்   என்று வெளியில் விட்டார்கள் குவாந்தனாமோ சிறையில் இருப்பவர்களை பராக் ஓபாமா வெளியில் விட்டால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு ஆனந்தம் எமக்கு!

பின்னாளில் இத்திரையரங்கு மூடப்பட்டுவிட்டது இன்று எப்படி இருக்கு என்பது நானறியேன்!