30 May 2011

 கெயிட்டியும் நானும்!

திரைப்படம் என்ற மூச்சுக்காற்று என்னுடன் ஒட்டிக்கொண்ட ஒரு மலையட்டை போன்றது! அது இரத்தம் உறிஞ்சும். திரை பணத்தை ஆட்டை போடும்!
 1999 பிற்பகுதியில் ஒன்று கூடலிற்கு கொழும்புக்கு வந்திருந்தேன் !கொழும்பு வந்தாள் யாரைப் பார்க்கா விட்டாலும் இரண்டு நண்பர்களை தவற விட்டதில்லை ஒன்று கொச்சிக்கடை அந்தோனியார் ,மற்றவர்கள் கொழும்பில் இருக்கும் திரையரங்குகள்!. 
 பொழுது போக்கு என்ற சாதனத்தைத் தாண்டிய ரசிகன் நான் அதனால்தான் எல்லாவிதமான(தமிழ்,ஹிந்தி) படங்களையும் பார்ப்பேன்.
 இப்படியான தருனத்தில் ஒரு நாள் சனிக்கிழமை 2.30 காட்சிக்கு சீனு படம் பார்த்தோம் நானும் நண்பரும் .நண்பர் வெளிநாட்டுப் பயணத்திற்காக கொழும்பில் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். 
 இந்தப்படம் ஒரு சங்கீத வித்துவானின் கதையைச் சுற்றியது நமக்கு கார்த்திக்கின் நடிப்பைவிட தேவா வின் இசையை விட மாளவிக்கா எப்படி மனசுக்குள் (கார்த்திக்கின்)  வந்தா! என்பது தானே முக்கியம். இந்தப் படம் ஓடிய திரையரங்கு கொட்டாஞ்சேனை கெயிட்டி . இதைத்தாண்டித்தான் சீஹவுஸ்  போகனும் (சீஹவுஸ் நட்சத்திர விடுதி)இதை நான்  பிறகு ஒரு பதிவில் போடுவேன் .வார இறுதியில் மைந்தன் சிவாவின் நண்பர்கள் சிலர் இங்கு முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவதாக ஒரு பட்சி சொல்லுகிறது மாப்பூ நிஜமா?
 கெயிட்டிக்கு எதிரில் நவீன் செரமிக் காட்சியறை இருந்தது! 
..
படம் பார்த்துவிட்டு வெளியில் வருவதற்கு  காஸாவின் எகிப்தின் எல்லைக்கதவு திறந்துவிட்டது போல் நாங்களும் முண்டியடித்துக்கொண்டு வெளியில் வந்தாள் !ராஜாக்கள் எங்களை கூஜாக்களாக ஸகிலா படம்பார்கப் போனவர்களைப் பிடிக்கப் போன கலாச்சாரகாவலர் போல் பாதுகாப்பு சோதனை என்று இரானுவத்தினர்  வெளிக்கதவை மூடிவிட்டு விசாரனைப் படலத்தை தொடங்கினார்கள்!

அதுவரை மாளவிக்காவின் மயக்கத்தில் இருந்த நண்பன் .தன் இரட்டைக் குழந்தையில் ஒன்றை லாச்ஜில் கிடத்திப் போட்டு வந்திருந்தான். தேசிய அடையாள அட்டையும், பொலிஸ் பதிவு அட்டையும் தான் இந்தக் குழந்தைகள்! அவனிடம் அக்கனங்களில் தேசிய அடையாள அட்டை மட்டும் இருந்தது!

இரானுவத்தினர் ஒவ்வொருத்தராக பார்த்துக்கொண்டு  வெளியேற்றிக் கொண்டிருந்தனர். நண்பருக்கு ஊரில் உள்ள தெய்வங்கள் வந்துகொண்டிருந்தது துனைக்கு! என்ன செய்யலாம் என என்னிடம் கேட்டான் பொறு கதைக்களாம் ரூமில் யாரு இருப்பான் என கேட்ட போது இன்னொரு நண்பரின் கைபேசி இலக்கத்தின் ஊடே அவனின் நண்பரின் பெயரையும் சொன்னான் .
.
என்னிடம் எப்போதும் பணம் இருக்காமல் போகும்  பதிவுகள் சரியாக இருக்காமல் போகாது. விரைந்தவாரே இரானுவத்தினர் சோதனையிட்டனர் உடலில் உச்சி முதல் பாதம் வரை வெடிகுண்டு தேடியவர் முகத்தில் விழுந்தது மண்னே! இப்போது ஏற்படும் முதுகுவலிக்கு அவர்களின் உரம் ஏறிய கைகளின் மசாஜ் தேவைப் படுகிறது!


நண்பரை சோதனையிட்ட போது இவனுட்ட சொல்லுடா நான் வெளிநாடு போக வந்தனான் வெடிகுண்டு என்னிடம் இல்லை என்று பொலிஸ் பதிவு ரூமில் இருக்கு வந்தால் காட்டுவன் என்று! நண்பனுக்கு நான் என்னவோ யக்காசி அக்காசி என்ற எண்ணம் போல்!  அதுதான் வந்துபார் என்ற கூற்று பணியில் இருக்கும் போது பின் செல்ல முடியாது இதுதான் இரானுவ வீரர்களின் கடமை ஒழுங்கு உரிய இடத்தில்  எல்லா ஆதாரங்களும் இல்லை என்றாள் அவனை/அவளை கொண்டுவா(கொன்றுவா) இதுதான் இரானுவ நீதீ!  சகோதர மொழியில் நான் என்னவோ பண்டிதன் என்று நினைப்பு என் நண்பனுக்கு உண்மையில் மொழியைத்தாண்டி தமிழன் என்றாள் எல்லாரும் புலி ,பிரிவினைவாதி ,என்பது தானே அவர்களின் தீர்மானம். 
கெட்டதிலும் நல்லதுபோல் நான் (சகோதரமொழியில்) கூரினேன் அவன் நாளை மாலை வெளிநாடு போகின்றான்  இன்று சந்தோசமாக இருக்கனும் என்றுதான் படம் பார்க்க வந்தோம் இது சத்தியம்.! எனது புத்தரே! நான் சொல்வதை ஏறுக்கொள்  நான் சொல்வது உண்மை இப்படியான வாக்கியங்களை கூறும் போது அவர்களின் கண்களைப் பார்த்து கூறவேண்டும்  ஏனெனில் அவர்கள் இருப்பது மது போதையிலும் மல்(இதுகஞ்ஜா) தமிழில் என்கின்ற போதையிலும் தான் அதிகம்! இதை மறுக்கும் வலையுலகில் கொலை மிரட்டல் விடும் வீரபுருஸர்களுக்கு என் மூடப்பட்ட வரலாறுகளின் ஊடே தர்கம் புரிய நான் தயாராக இருக்கிரேன் ஆனால் போதிய நேரம் ஒதுக்குங்கள் ஏனெனில் நானும் புலம்பெயர் தேசத்தின் வலிகளை தனிமரமாக சுமக்கின்ரேன்! 

இதைப் புரிந்து கொண்ட இரானுவத்தினர் எங்கள் இருவரையும் போங்கள்   என்று வெளியில் விட்டார்கள் குவாந்தனாமோ சிறையில் இருப்பவர்களை பராக் ஓபாமா வெளியில் விட்டால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு ஆனந்தம் எமக்கு!

பின்னாளில் இத்திரையரங்கு மூடப்பட்டுவிட்டது இன்று எப்படி இருக்கு என்பது நானறியேன்!

5 comments :

ஹேமா said...

இராணுவம்...என்றவுடனே அங்கால என்ன நடந்திருக்குமோ என்று மூச்சிரைக்கப் படித்தேன்.புத்தர் காத்திட்டார் !

நிரூபன் said...

தியேட்டர் கால அனுபவங்களைச் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் ஆரம்பித்து, இறுதியில் த்ரிலிங்குடன் முடித்திருக்கிறீர்கள்.

Unknown said...

ஏலே இப்பிடி ஒரு தியேட்டர் இப்போ இல்லையே??
ஒரு வேலை நீங்க எல்லாம் பார்த்ததால இழுத்து மூடிட்டான்களோ/??ஹிஹி

தனிமரம் said...

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் !

தனிமரம் said...

நன்றி ஹேமா உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.