29 July 2011

சிறப்பு நாள்!!!


இந்துக்களின் சிறப்பு நாட்களில் இன்று வரும் 30/07/2011 ஆடி அமாவாசை மிகவும் புனிதமான தினம்!

 தந்தையை இழந்தவர்கள் அவர்களின் ஆத்மா சாந்தியடையவும் மீண்டும் பிறாவா சொர்க்கத்தில் தில்லைக் கூத்தனின் பாதத்தில் சரணாகதியடைய வேண்டியும். விரதம் இருக்கும் நாள்.!

கங்கையிலும், கடலிலும் நீராடி தர்பணம் செய்வதும் ஆலயங்களில் சிறப்பு பூசையில் கலந்தும் தந்தையின் வீடுபேறுக்கு பிண்டம்,எள்ளும் தண்ணீரும் இறைத்து அவர்களுடனான பந்த பாசம் நீங்கி அவர்களை உறவு நிலையில் இருந்து விடுவிக்கும்  திருநாளில் பலர் சிவன் வீற்றிருக்கும் கோயில்களில் சிறப்பாக கலந்து கொண்டு தீபம் ஏற்றுதல், கிரிகைகள்  போன்றவை செய்வார்கள்!

தாயகத்தில்  இது ஒரு இந்துக்களின்  வழிபாட்டுக்குரிய தினம் என எல்லோரும் போற்றியது ஒரு காலம்.!

 இன்று புதிய தலைமுறையினர் அப்பன் சாவதெப்ப அமாவாசை பிடிப்பது எப்ப என்று எங்கள் பாட்டிமாரின் முதுமொழியை. வழிமொழிவது போல்  இச்சிறப்பு நாள் பற்றிய ஆர்வம் அற்றவர்களாகவும், இவையாவும் ஒரு பித்தல் ஆட்டம் என எண்ணுவது போல் இருக்கின்றனர். !

நம் இதிகாசங்களும் இலக்கியங்களும் ஆடியில் வரும் அமாவாசையின் புனிதங்களை புடம் போட்டு வைத்திருக்கிறார்கள்.

மாதம் ஒரு முறை
வரும் அமாவாசையை  தந்தையை இழந்தவர்கள் விரதம் இருக்க முடியாமல் இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு நாளில் .உங்களை இவ்வுலகிற்கு அவதரிக்க மூலகாரணமானவருக்கு நீங்கள் செய்யும் கைமாற்றாக இன்நாள் இருக்கின்றது.

கம்பராமயணத்தில் ராமனும் இலக்குமணனும்  விஸ்வாமித்திரின் முன் தம் தந்தை தசதரனுக்கு புண்ணிய நதியாம் சரயு நதியில்  தர்பணம் செய்வதை விளக்கமாக காணலாம்.

 இன்றும் சபரிமலை செல்லுவோர் புனித நதியான திரிவேணி சங்கமத்தில் முன்னோர்களை நினைத்து தர்பணம் செய்வதைக் காணமுடியும்!

இந்துக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய சிறப்பான நாளாக ஆடி அமாவாசை இருக்கின்றது.
கடலில் நீராடி கடற்கரையில் பூசை செய்வதற்கு வசதியான இடங்களாக கீரிமலை, முகத்துவாரம் போன்ற இடங்கள் இருக்கின்றன.

கீரிமலையில் விரதம் இருப்பவர்களுக்கு பலர் அன்னதானம் இடுவதை கானலாம்.

நிரூபனின் பதிவு ஒன்றில் ஒருவர் எனக்கும் கூறினார் !நீ செய்த முற்பயன் தப்பித்தாய் என்று! அது இப்பதிவுக்கு ஒத்துவரும்.

 முற்பயன் தான் நானும் என தந்தைக்கு கருமவினை தீர்க்க பலகாலம் பாதுகாப்பு சிறைவைக்கப் பட்ட கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தையும் .அதன் அண்டிய விசாலமான கீரிமலைக்கடல் பரப்பிற்கும் வாழ்வில் முதன்முதலில் !சமாதான ஒப்பந்தம் வழிவிட ,கடலில் நீராடி ,சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டது.  என் இரத்த உறவுகளுக்கு கிடைக்காத வரம் எனக்கு மட்டும் கிடைத்தது முற்பயன் தானே என்று பொருள் கொள்ள முடியும்.!

ஆடிமாதம் வந்தால் அமவாசைக்கு  கடலுக்கு போய் நீராட புலம் பெயர்ந்த பின்  ஒரு முறை தான் சந்தர்ப்பம் கிடைத்தது. (கடல் இருக்கும் தூரம் 400 மைல் )

பின் பல தடைகளும் தடங்களுமாக இன்நாள் கடந்து செல்கின்றது.

இப்புனித நாள் அதிகாலையில்  வீட்டில் தோய்ந்து விட்டு வேலைக்கு ஓடுவதில் .இப்போதைய நாட்கள் கடக்கின்றது.

எப்போதாவது ஒரு ஆடி அமாவாசைக்கு மீண்டும் கீரிமலைக்குப் போகனும் இதுவும் மதத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒரு சாமானியனின் கனவே!

24 July 2011

கருணைக் கொலை!!

சில பாடல் வரிகள் என்னை மிகவும் இசை வெறியனாக்கின்றது. பலதடவை ஒலிநாடா தேய்ந்து போகும் வரை விடுவதில்லை. இதுவும் ஒரு நோய்தான் !என்ன செய்வது இசை இல்லாத பொழுதுகள் !எனக்கு பால்கோப்பி அருகில் இல்லாத அந்திமாலைப் பொழுது போன்றது.

நண்பர்கள் இசையைப் பற்றி பேசவெளிக்கிட்டால் அரசியல் பிரச்சாரத்தைவிட அதிகம் பேசுவேன் .அவர்களுடன்.

இப்போது பல நன்பர்கள் குடும்பம் குடித்தனம் என்று போய்விட்டாலும் !என் இசைக்காதல் மாறாமல் போகின்ற யாழ்தேவி போன்றது! அங்கங்கே தரித்தாலும் கோட்டையில் முடிகின்ற பயணம் போல் !

இப்படி ஒரு நாள் அங்கிருந்து நான் போனது. கிங்ஸ்லி திரையரங்கிற்கு. பல தடவை இப்படிப் போனலும் 2002 இல் காதலர்தினத்தன்று வெளியான படம்தான் உள்ளம் கொள்ளை போகுதே படம் .

இது சுந்தர் C இயக்க பிரபுதேவா கார்த்திக் அஞ்சலி நடிப்பில் வெளியான இனிய காதல் படம்.இளையராஜாவின் மூத்தவாரிசு கார்த்திக்ராஜா இசையில் தந்தையின் முத்திரையை தன் பாணியில் பின்னியிருப்பார்.
 நல்ல இசையமைப்பாளர் முன்னனிக்குப் போகாதது அதிஸ்டம் இன்னும் கை கொடுக்கவில்லை .

எல்லாப் பாடலும் பிரமாதம். எனக்கு மிகவும் பிடித்த இப்பாடல் ஒரு சோகமானது .சோகத்தை பிரபு தேவாவின் நடிப்பு உண்மையில் மகேந்திரன் ஒரு பேட்டியில் கூறியது போல் தமிழில் இயல்பான சிறப்பான நடிகர் பிரபு தேவா மட்டும் என்றார்.

அதை இப்படம் நிரூபித்திருந்தது.

பாடலைப் புனைந்தவர் இன்று இரட்டைப் பயணம்போகும் பா.விஜய். இவர் ஆரம்பத்தில் வீரியமான வர்த்தைகளை எழுதினார் .இப்போது அதிகம் வால்பிடிக்கிறார் ஒரு அரசியல் சாக்கடைக்கு என்பது என் தீர்மானம் .

கலைஞன் என்பவன் சுதந்திரமாக இருந்தால் வெற்றியை தொடமுடியாது .அரசியல் வாதிகளுக்கும் அன்னக்காவடி தூக்கனும் என்பதனூடாகவே தனக்கானஇடத்தைத் தக்கவைக்க முடியும் என்று இருக்கிறது இவரின் செயல்பாடுகள் .

குறுகிய காலத்தில் பல பாடல்களை புனைவதிலும் பலநூல்கள் எழுதுவதிலும் இவர் உண்மையில் வித்தககவி தான் .என்பதை நிரூபிக்கும் இவரை ஆரம்பத்தில் எனக்கு அதிகம் பிடித்தது .இப் போது கொஞ்சம் சலிப்பைக்கொடுக்கிறது .என்றாலும் நல்ல நூல்கள் வந்தால் வேண்டுவது இவருடையது தான் முதலில் .

இப்பாடலில் சில வரிகள் சர்ச்சையைத் தரக்கூடியதாக இருக்கிறது. காதல் துயரத்தை அவர் யேசு தாங்கிய சிலுவையுடன் ஒப்பீடுசெய்த வரிகள் கொஞ்சம் வித்தியாசமான வார்த்தைஜாலம்.

ரயில்பயணமும் காதலும் ஒன்றா ?என என்னும் இடம் கொஞ்சம் என்னை சலசலக்க வைக்கின்றது.!
சிலுவை சுமந்தானே அவனிங்கு காதலை சுமந்திருந்தால் ! காதலின் வலியை வார்த்தையின் வாய் வழி சொல்வானா!

இந்த வரிகளை பின் இரவில் கொஞ்சம் தனிமையில் கேளுங்கள் .கவிதையின்ஆழமான உணர்வும் காதலின் வலியும் புரியும்.

இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் எனக்கு இலங்கை வானொலி அறிவிப்பாளர் S.ராபீக் ஞாபகம் வரும் .அவரின் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாகும் கருத்தாளம்மிக்க பாடல்களையும், அரிதாகப் பாடியவர்களின் பாடல்களையும் தன் விருப்பம் தொகுப்பில் முத்தாக தருவார்.

மறந்து போன பல பாடல்களை இவர் எனக்கு ஞாபகம் ஊட்டுவதால் இவரின் நிகழ்ச்சிக்காக வானொலிக்கு அருகில் காத்திருந்த தருனங்கள் இனிமையானவை.

நேயர்களிடம் இருவரிக் கவிதையைக் கொடுத்து முடித்து வைக்கும் படி கேட்பார் .அந்த முடிவுகள் பலரின் கற்பனையை உள்வாங்கி முடிவில் வித்தியாசமான முடிவான கவிதையைத் தருவார்!

அதே போல் நிகழ்ச்சியில் குரலினை காலநேரத்திற்கு ஏற்றமாதிரி மாற்றி வசிகரிக்கக்கூடியவர் .இவர் குரல் ஆளுக்கும் குரலுக்கும் சம்மந்தம் இல்லை .

இவரை வர்த்தகசேவையின் வர்த்தக உலாவிலும் கொழும்பில் விவேகானந்தா மேட்டில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியிலும் நேரடியாக பார்த்துப் பேசக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி எனக்கு என்றும் உண்டு. இப்போது போல் அன்நாட்களில் புகைப்படம் எடுக்கும் கருவி என்னிடம் இல்லை. அவருடன் கைகுலுக்கிய பொழுதினை பொக்கிஸமாக வைத்திருக்க !

என்றாலும் இன்னும் உருவம் கண்ணுக்குள்ளும், குரல் காதோரமும் ஒலிக்கின்றது இன்னமும்

இரவின் மடியில் அவர் உதிர்த்த" நீ எப்போதும் என்னை ஆளுவாய் எனநினைத்தேன்!
நீயோ !கானல் நீராக்கி கலைந்து போனாய்!

"கவிதையைத் தொடர்ந்து தான். நான் இந்தப் பாடலுக்கு அடிமையானே!

புலம் பெயர்ந்தாளும் அவரின் குரலில் இந்தப் பாடல் வருவது போல் பின் நாளில் இதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் காட்சியும் கானமும்மாக கேட்கின்றேன் ஏதோ ஒரு வலி உணர்வைத் தருகின்றது !பாடலின் இசை இரவில் கேட்கும் போது புல்லாங்குழலும் ஓகனும் போட்டி போட்ட இடையில் இந்த ஒக்டோபாட் இசை வரும் சிலதுளிகள் நெஞ்சில் அறைவதைப் போல் இருக்கும்.

உன்னிக்கிருஸ்னன் குரலில் ஒரு தனி சோகம் எப்போதும் இருக்கும் வார்த்தையை ஆழ்ந்து அச்சரமாக ரசித்துப் பாடக்கூடியவர் .எனக்கு அவரின் பிடித்த பலபாடலில் இதுவும் ஒன்று .என் தெரிவு உங்களுடன் கலக்கின்றது!