29 July 2011

சிறப்பு நாள்!!!


இந்துக்களின் சிறப்பு நாட்களில் இன்று வரும் 30/07/2011 ஆடி அமாவாசை மிகவும் புனிதமான தினம்!

 தந்தையை இழந்தவர்கள் அவர்களின் ஆத்மா சாந்தியடையவும் மீண்டும் பிறாவா சொர்க்கத்தில் தில்லைக் கூத்தனின் பாதத்தில் சரணாகதியடைய வேண்டியும். விரதம் இருக்கும் நாள்.!

கங்கையிலும், கடலிலும் நீராடி தர்பணம் செய்வதும் ஆலயங்களில் சிறப்பு பூசையில் கலந்தும் தந்தையின் வீடுபேறுக்கு பிண்டம்,எள்ளும் தண்ணீரும் இறைத்து அவர்களுடனான பந்த பாசம் நீங்கி அவர்களை உறவு நிலையில் இருந்து விடுவிக்கும்  திருநாளில் பலர் சிவன் வீற்றிருக்கும் கோயில்களில் சிறப்பாக கலந்து கொண்டு தீபம் ஏற்றுதல், கிரிகைகள்  போன்றவை செய்வார்கள்!

தாயகத்தில்  இது ஒரு இந்துக்களின்  வழிபாட்டுக்குரிய தினம் என எல்லோரும் போற்றியது ஒரு காலம்.!

 இன்று புதிய தலைமுறையினர் அப்பன் சாவதெப்ப அமாவாசை பிடிப்பது எப்ப என்று எங்கள் பாட்டிமாரின் முதுமொழியை. வழிமொழிவது போல்  இச்சிறப்பு நாள் பற்றிய ஆர்வம் அற்றவர்களாகவும், இவையாவும் ஒரு பித்தல் ஆட்டம் என எண்ணுவது போல் இருக்கின்றனர். !

நம் இதிகாசங்களும் இலக்கியங்களும் ஆடியில் வரும் அமாவாசையின் புனிதங்களை புடம் போட்டு வைத்திருக்கிறார்கள்.

மாதம் ஒரு முறை
வரும் அமாவாசையை  தந்தையை இழந்தவர்கள் விரதம் இருக்க முடியாமல் இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு நாளில் .உங்களை இவ்வுலகிற்கு அவதரிக்க மூலகாரணமானவருக்கு நீங்கள் செய்யும் கைமாற்றாக இன்நாள் இருக்கின்றது.

கம்பராமயணத்தில் ராமனும் இலக்குமணனும்  விஸ்வாமித்திரின் முன் தம் தந்தை தசதரனுக்கு புண்ணிய நதியாம் சரயு நதியில்  தர்பணம் செய்வதை விளக்கமாக காணலாம்.

 இன்றும் சபரிமலை செல்லுவோர் புனித நதியான திரிவேணி சங்கமத்தில் முன்னோர்களை நினைத்து தர்பணம் செய்வதைக் காணமுடியும்!

இந்துக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய சிறப்பான நாளாக ஆடி அமாவாசை இருக்கின்றது.
கடலில் நீராடி கடற்கரையில் பூசை செய்வதற்கு வசதியான இடங்களாக கீரிமலை, முகத்துவாரம் போன்ற இடங்கள் இருக்கின்றன.

கீரிமலையில் விரதம் இருப்பவர்களுக்கு பலர் அன்னதானம் இடுவதை கானலாம்.

நிரூபனின் பதிவு ஒன்றில் ஒருவர் எனக்கும் கூறினார் !நீ செய்த முற்பயன் தப்பித்தாய் என்று! அது இப்பதிவுக்கு ஒத்துவரும்.

 முற்பயன் தான் நானும் என தந்தைக்கு கருமவினை தீர்க்க பலகாலம் பாதுகாப்பு சிறைவைக்கப் பட்ட கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தையும் .அதன் அண்டிய விசாலமான கீரிமலைக்கடல் பரப்பிற்கும் வாழ்வில் முதன்முதலில் !சமாதான ஒப்பந்தம் வழிவிட ,கடலில் நீராடி ,சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டது.  என் இரத்த உறவுகளுக்கு கிடைக்காத வரம் எனக்கு மட்டும் கிடைத்தது முற்பயன் தானே என்று பொருள் கொள்ள முடியும்.!

ஆடிமாதம் வந்தால் அமவாசைக்கு  கடலுக்கு போய் நீராட புலம் பெயர்ந்த பின்  ஒரு முறை தான் சந்தர்ப்பம் கிடைத்தது. (கடல் இருக்கும் தூரம் 400 மைல் )

பின் பல தடைகளும் தடங்களுமாக இன்நாள் கடந்து செல்கின்றது.

இப்புனித நாள் அதிகாலையில்  வீட்டில் தோய்ந்து விட்டு வேலைக்கு ஓடுவதில் .இப்போதைய நாட்கள் கடக்கின்றது.

எப்போதாவது ஒரு ஆடி அமாவாசைக்கு மீண்டும் கீரிமலைக்குப் போகனும் இதுவும் மதத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒரு சாமானியனின் கனவே!

25 comments :

ஆகுலன் said...

எனக்குதான் வடை........
அல்லது கறுப்பு காப்பி......

ஆகுலன் said...

மாதம் ஒரு முறை
வரும் அமாவாசையை தந்தையை இழந்தவர்கள் விரதம் இருக்க முடியாமல் இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு நாளில் .உங்களை இவ்வுலகிற்கு அவதரிக்க மூலகாரணமானவருக்கு நீங்கள் செய்யும் கைமாற்றாக இன்நாள் இருக்கின்றது.

இது எல்லோராலும் ஒத்து கொள்ள வேண்டிய விடயம்......

ஆகுலன் said...

ஓட்டு தான் போட முடியவில்லை..பிறகு வாறன்...பதிவை இட்டலியில் இனையுங்கோ....

Unknown said...

ஆமா சிறப்பான நாள் அப்பாக்களுக்கு!
தமிழ்மணம் செட் ஆகிருச்சு,..மிச்சம்?

தனிமரம் said...

வாங்க ஆகுலன் முதலில் பால்கோப்பிதான் தருவன்! இன்று விரதம் வடை எல்லாம் மதியம்தான். கறுப்புக் கோப்பி நித்திரையை விரட்டிவிடுமாம் உங்கள் உறக்கம் என்னால் கெடக்கூடாது! ஆகவே பால்கோப்பிதான் நல்லம்!

தனிமரம் said...

ஒத்துக் கொள்வது தனிப்பட்ட கருத்தாகும்! சகோ!

தனிமரம் said...

இண்ட்லியில் இனைத்திருக்கின்றேன் தமிழ்-10 தொழில்நுட்பம் என்னக்குப் பிடிபடவில்லை யாராவது உதவுங்கோ!
நன்றி ஆகுலன் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

இண்ட்லியில் இனைத்திருக்கின்றேன் ,தமிழ்-10 தொழில்நுட்பம் என்னக்குப் பிடிபடவில்லை யாராவது உதவுங்கோ!
நன்றி மைந்தன் சிவா வருகைக்கும் கருத்துரைக்கும்!

Anonymous said...

எனக்கு கூட இந்த நாள் நினைவில்லை .நினைவூட்டியதற்கு நன்றி நண்பா ...

ஹேமா said...

நேசன்....ஆடி அமாவாசை என்றால் விரதமும் அதையொட்டி காத்தோட்டிக்காய் பற்றியிம் கதைத்துக்கொண்டார்கள் வானொலியில்.எங்கள் சம்பிரதாயங்கள்தான் எத்தனை.
அத்தனைக்கும் காரணமும் இருக்கிறது !

அடுத்து இனிக் கீரிமலைக்குப் போகலாமா நாங்கள் என்பது கேள்விக்குறிதான்.கடலை எட்டிப் பார்க்கவே ஆமிக்கரானோடு போய் எட்டிப்பார்த்துவிட்டு மட்டும் வரலாம் என்றார்கள் ஊர் போய் வந்தவர்கள்.சரியான் விபரம் தெரியவில்லை !

சக்தி கல்வி மையம் said...

இப்போதுதான் தைகள் தளம் தேடி வந்தேன்.. இனி தொடர்ந்து வருவேன் சகோ..

தனிமரம் said...

இந்த நாள் நான் எங்கிருந்தாலும் மறக்க மாட்டன் கந்தசாமி! அதிக வேலைப்பளுவில் வரும் விசேஸநாட்கள் மறந்து போய்விடுவது இயல்புதான் சகோ நண்பர்களுக்கு முன்கூட்டியே கூறிவிடுவேன் இந்த ஆண்டு என் வலை நண்பர்களுக்கும் அதைச் செய்திருக்கின்றன் கூகிளின் உபயத்தில்!

தனிமரம் said...

நன்றி ஹேமா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் .
இப்போது இரானுவமயப்படுத்தல் பலபகுதிகளில் நடப்பதாகத்தான் செய்திகள் வருகின்றது . சுதந்திரமாக போகும் போது கீரிமலையை எட்டிப்பார்ப்போம் அதுவரை ஆசையாகவே இருக்கட்டும் நினைப்பு!

தனிமரம் said...

வாருங்கள் கருன் பால்கோப்பி தயாராக இருக்குது. தனிமரம் தொடர்ந்து  காத்திருக்கும் கருத்துக்களுக்கு! நன்றி வருகைக்கு! 

கூடல் பாலா said...

ஆடி அமாவாசையின் சிறப்பை அழகாய் எடுத்துரைத்துள்ளீர்கள் .......நன்றி தலைவா !

தனிமரம் said...

 நன்றி கூடல்பாலா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்! 

நிரூபன் said...

வணக்கம் பாஸ், நீங்கள் அருமையாக, ஆடி அமாவாசை பற்றி விளக்கமளித்துள்ளீர்கள்.
பதிவில் வார்த்தைகள் கிரமமாக வந்து விழுந்திருக்கின்றன,
உங்களின் உணர்வுகளோடு, என் உணர்வுகளையும், இந் நாளில் பகிர்ந்து கொள்கிறேன் பாஸ்.

Mathuran said...

ஆடி அமாவாசை பற்றிய ஒரு சிறப்பான பகிர்வு...

தனிமரம் said...

 நன்றி நிரூபன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்! 

தனிமரம் said...

 நன்றி மதுரன்  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்! 

காட்டான் said...

மாப்பிள என்னாச்சு..!? 
ஏதும் பிரச்சனைன்னா சொல்லு காட்டான் குரூப் இருக்கு..!?
அப்படி இல்லாட்டா 15,17,18,போன்ற இலக்கங்கள் இருக்கு நீ ஒரு போன் போட்டா வீட்ட வருவாங்கள்..!

தனிமரம் said...

 நன்றி காட்டான் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்! பிரச்சனை தமிழ்-10 இனைப்பதில் அதுக்கு குரூப் இருந்தால் கூறுங்கள் அழைக்கலாம்! நீங்கள் தந்த இலக்கம் அவசர உதவி மையங்கள் ! அவற்றுக்கு இன்னும் காலம் இருக்கு பயன்படுத்த!

ஆகுலன் said...

தமிழ் 10 நல்லா வேலை செய்யுது..ஆனால் நம்ம இட்டலித்தான் ஏதோ மக்கர் பண்ணுது.....

தனிமரம் said...

ஆகுலன் எனக்கு இண்ட்லி சரியாக அமைகின்றது தமிழ்-10 மீண்டும் மீண்டும் முதல் பக்கம் செல் என்கின்றது இதற்கு தீர்வு என்னவாக இருக்கும் கொஞ்சம் விளக்குவீர்களா சகோ!

காட்டான் said...

தம்பி ஆகுலன் தனிமரம் ஏதோ கக்கிறார் அதற்காக நீங்கள் போய் அமாவாசை விரதம் இருந்து விடாதீர்கள்...!!??

அப்பாக்கள் உயிரோடு இருக்கும்போது.. அந்த விரதங்கள் செய்ய கூடாது...! அப்பாக்களுக்கு நாங்கள் நன்றியை வேறு விதமாக காட்டலாம்.. அவர்கள் உயிரோடு இருக்கும்போது..!!!?