24 July 2011

கருணைக் கொலை!!

சில பாடல் வரிகள் என்னை மிகவும் இசை வெறியனாக்கின்றது. பலதடவை ஒலிநாடா தேய்ந்து போகும் வரை விடுவதில்லை. இதுவும் ஒரு நோய்தான் !என்ன செய்வது இசை இல்லாத பொழுதுகள் !எனக்கு பால்கோப்பி அருகில் இல்லாத அந்திமாலைப் பொழுது போன்றது.

நண்பர்கள் இசையைப் பற்றி பேசவெளிக்கிட்டால் அரசியல் பிரச்சாரத்தைவிட அதிகம் பேசுவேன் .அவர்களுடன்.

இப்போது பல நன்பர்கள் குடும்பம் குடித்தனம் என்று போய்விட்டாலும் !என் இசைக்காதல் மாறாமல் போகின்ற யாழ்தேவி போன்றது! அங்கங்கே தரித்தாலும் கோட்டையில் முடிகின்ற பயணம் போல் !

இப்படி ஒரு நாள் அங்கிருந்து நான் போனது. கிங்ஸ்லி திரையரங்கிற்கு. பல தடவை இப்படிப் போனலும் 2002 இல் காதலர்தினத்தன்று வெளியான படம்தான் உள்ளம் கொள்ளை போகுதே படம் .

இது சுந்தர் C இயக்க பிரபுதேவா கார்த்திக் அஞ்சலி நடிப்பில் வெளியான இனிய காதல் படம்.இளையராஜாவின் மூத்தவாரிசு கார்த்திக்ராஜா இசையில் தந்தையின் முத்திரையை தன் பாணியில் பின்னியிருப்பார்.
 நல்ல இசையமைப்பாளர் முன்னனிக்குப் போகாதது அதிஸ்டம் இன்னும் கை கொடுக்கவில்லை .

எல்லாப் பாடலும் பிரமாதம். எனக்கு மிகவும் பிடித்த இப்பாடல் ஒரு சோகமானது .சோகத்தை பிரபு தேவாவின் நடிப்பு உண்மையில் மகேந்திரன் ஒரு பேட்டியில் கூறியது போல் தமிழில் இயல்பான சிறப்பான நடிகர் பிரபு தேவா மட்டும் என்றார்.

அதை இப்படம் நிரூபித்திருந்தது.

பாடலைப் புனைந்தவர் இன்று இரட்டைப் பயணம்போகும் பா.விஜய். இவர் ஆரம்பத்தில் வீரியமான வர்த்தைகளை எழுதினார் .இப்போது அதிகம் வால்பிடிக்கிறார் ஒரு அரசியல் சாக்கடைக்கு என்பது என் தீர்மானம் .

கலைஞன் என்பவன் சுதந்திரமாக இருந்தால் வெற்றியை தொடமுடியாது .அரசியல் வாதிகளுக்கும் அன்னக்காவடி தூக்கனும் என்பதனூடாகவே தனக்கானஇடத்தைத் தக்கவைக்க முடியும் என்று இருக்கிறது இவரின் செயல்பாடுகள் .

குறுகிய காலத்தில் பல பாடல்களை புனைவதிலும் பலநூல்கள் எழுதுவதிலும் இவர் உண்மையில் வித்தககவி தான் .என்பதை நிரூபிக்கும் இவரை ஆரம்பத்தில் எனக்கு அதிகம் பிடித்தது .இப் போது கொஞ்சம் சலிப்பைக்கொடுக்கிறது .என்றாலும் நல்ல நூல்கள் வந்தால் வேண்டுவது இவருடையது தான் முதலில் .

இப்பாடலில் சில வரிகள் சர்ச்சையைத் தரக்கூடியதாக இருக்கிறது. காதல் துயரத்தை அவர் யேசு தாங்கிய சிலுவையுடன் ஒப்பீடுசெய்த வரிகள் கொஞ்சம் வித்தியாசமான வார்த்தைஜாலம்.

ரயில்பயணமும் காதலும் ஒன்றா ?என என்னும் இடம் கொஞ்சம் என்னை சலசலக்க வைக்கின்றது.!
சிலுவை சுமந்தானே அவனிங்கு காதலை சுமந்திருந்தால் ! காதலின் வலியை வார்த்தையின் வாய் வழி சொல்வானா!

இந்த வரிகளை பின் இரவில் கொஞ்சம் தனிமையில் கேளுங்கள் .கவிதையின்ஆழமான உணர்வும் காதலின் வலியும் புரியும்.

இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் எனக்கு இலங்கை வானொலி அறிவிப்பாளர் S.ராபீக் ஞாபகம் வரும் .அவரின் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாகும் கருத்தாளம்மிக்க பாடல்களையும், அரிதாகப் பாடியவர்களின் பாடல்களையும் தன் விருப்பம் தொகுப்பில் முத்தாக தருவார்.

மறந்து போன பல பாடல்களை இவர் எனக்கு ஞாபகம் ஊட்டுவதால் இவரின் நிகழ்ச்சிக்காக வானொலிக்கு அருகில் காத்திருந்த தருனங்கள் இனிமையானவை.

நேயர்களிடம் இருவரிக் கவிதையைக் கொடுத்து முடித்து வைக்கும் படி கேட்பார் .அந்த முடிவுகள் பலரின் கற்பனையை உள்வாங்கி முடிவில் வித்தியாசமான முடிவான கவிதையைத் தருவார்!

அதே போல் நிகழ்ச்சியில் குரலினை காலநேரத்திற்கு ஏற்றமாதிரி மாற்றி வசிகரிக்கக்கூடியவர் .இவர் குரல் ஆளுக்கும் குரலுக்கும் சம்மந்தம் இல்லை .

இவரை வர்த்தகசேவையின் வர்த்தக உலாவிலும் கொழும்பில் விவேகானந்தா மேட்டில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியிலும் நேரடியாக பார்த்துப் பேசக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி எனக்கு என்றும் உண்டு. இப்போது போல் அன்நாட்களில் புகைப்படம் எடுக்கும் கருவி என்னிடம் இல்லை. அவருடன் கைகுலுக்கிய பொழுதினை பொக்கிஸமாக வைத்திருக்க !

என்றாலும் இன்னும் உருவம் கண்ணுக்குள்ளும், குரல் காதோரமும் ஒலிக்கின்றது இன்னமும்

இரவின் மடியில் அவர் உதிர்த்த" நீ எப்போதும் என்னை ஆளுவாய் எனநினைத்தேன்!
நீயோ !கானல் நீராக்கி கலைந்து போனாய்!

"கவிதையைத் தொடர்ந்து தான். நான் இந்தப் பாடலுக்கு அடிமையானே!

புலம் பெயர்ந்தாளும் அவரின் குரலில் இந்தப் பாடல் வருவது போல் பின் நாளில் இதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் காட்சியும் கானமும்மாக கேட்கின்றேன் ஏதோ ஒரு வலி உணர்வைத் தருகின்றது !பாடலின் இசை இரவில் கேட்கும் போது புல்லாங்குழலும் ஓகனும் போட்டி போட்ட இடையில் இந்த ஒக்டோபாட் இசை வரும் சிலதுளிகள் நெஞ்சில் அறைவதைப் போல் இருக்கும்.

உன்னிக்கிருஸ்னன் குரலில் ஒரு தனி சோகம் எப்போதும் இருக்கும் வார்த்தையை ஆழ்ந்து அச்சரமாக ரசித்துப் பாடக்கூடியவர் .எனக்கு அவரின் பிடித்த பலபாடலில் இதுவும் ஒன்று .என் தெரிவு உங்களுடன் கலக்கின்றது!

37 comments :

நிரூபன் said...

கருனைக் கொலை!!//

பாஸ், இது கருணைக் கொலை என்று வந்தால் அர்த்தம் அதிகம் தொனிக்கும்.

Mathuran said...

உள்ளம் கொள்ளை போகுதே பாடல்கள் மட்டுமல்லஇ படமும் எனக்கு பிடித்ததுதான்

ப்ளாக்கர் மற்றும் தளங்களுக்கான அழகிய பனர்கள்

Mathuran said...

பாடலாசிரியர் பா.விஜய் பற்றிய கருத்து 100% உண்மை

தனிமரம் said...

நன்றி நிரூ மீண்டும் ஒரு பிழையை திருத்திவிட்டீர்கள்! கொலை அதிகம் செய்கின்றேன்! புரிகின்றது அர்த்தம்!

தனிமரம் said...

நன்றி மதுரன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
நான் இதற்கு முன் இந்தப் பாடலை கேட்டிருக்கிறேன்
ஆயுனும் தங்கள் விளக்கத்துக்குப்பின் இப்பாடலைக் கேட்பது என்பது
புது அனுபவமாய் இருக்கிறது.
எனது பதிவுக்கு வருகை புரிந்தமைக்கும் வாழ்த்துக்கள்
தெரிவித்தமைக்கும் நன்றி.தொடரந்து சந்திப்போம்

கவி அழகன் said...

ஒரு பாட்டை போட்டு இப்படி பாடுபடுதியிருக்கிங்க
உங்க இசை வெறிய பாராட்டுகின்றேன்

தனிமரம் said...

நன்றி ரமனி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி கவி அழகன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

ஹேமா said...

எனக்கும் பிடித்தபாடல் நேசன்.உங்கள் விளக்கம் பாடலை இன்னும் விரும்பவைக்கிறது !

தனிமரம் said...

நன்றி ஹேமா உங்கள் வருகைக்கு உண்மையில் இப்பாடல் சிறப்புமிக்கது காதலின் தோல்விகளை ஆற்றுப்படுத்துவது என்று சொல்ல முடியும்!

ம.தி.சுதா said...

ஃஃஃஃசிலுவை சுமந்தானே அவனிங்கு காதலை சுமந்திருந்தால் ! காதலின் வலியை வார்த்தையின் வாய் வழி சொல்வானா!

இந்த வரிகளை பின் இரவில் கொஞ்சம் தனிமையில் கேளுங்கள் .கவிதையின்ஆழமான உணர்வும் காதலின் வலியும் புரியும்.ஃஃஃஃ

உண்மை தான் சகோதரா ரொம்பவே மனதை நெருடும் இடம் அது..

ம.தி.சுதா said...

தங்களது பதிவகளின் ரசனையும் காத்திரத் தன்மையும் வர வர அதிகரிப்பதையிட்டு அன்புடன் கூடிய சிறு பொறாமை...

வாழ்த்துக்கள் சகோதரா.. வாழ்த்துக்கள்..

தனிமரம் said...

சிலதை சொல்லக்கூடிய வார்த்தைகள் இல்லை மதிசுதா கவிஞர்கள் மிகவும் அனுபவித்து எழுதுவது நமக்காகத்தான் போலும்!

தனிமரம் said...

நன்றி மதி எல்லாம் உங்களுடையதும் நிரூவுடையதும் வழிகாட்டல்தான் ஏதோ தனிமரம் மொக்கைப் பதிவுகளைப் போடுகின்றது நன்றிகள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

காட்டான் said...

மதி சுதாவிற்கு என்ன ஆச்சு...
நீங்களும் கவுண்டாச்சா..!!?
வாழ்துக்கள்... வாழ்த்துக்கள் மதி!!!!!!!

தனிமரம் said...

தம்பி மதி பாவம் காட்டான் அவரை கும்மாதீர்கள் அதற்குத்தான் இருக்கிறார் yoga.fr தாத்தா அவரைக் கும்முங்கள்!

காட்டான் said...

ஏனப்பா என்ர கேள்விக்கு நீ மறு மொழி சொல்வதில்லைன்னு முடிவெடுத்து விட்டாயா..!

Unknown said...

அழகிய பகிர்வுக்கு நன்றி மாப்ள!

தனிமரம் said...

நன்றி விக்கி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

ஆகுலன் said...

முதல் தரம் உங்கள் தளம் வந்தபோது உங்களை நான் பின்தொடர மறந்து விட்டேன்..அதனால் தான் உடனடியாக வரமுடியவில்லை...இனி தொடர்ந்து வருவேன் பிந்திய கருத்துக்கு மன்னிக்கவும்.....

ஆகுலன் said...

நான் இது வரை கேட்காத பாடல் நல்லா இருக்குது நானும் மிகப்பெரிய இசை ரசிகன் அதிலும் மேலோடி பாடல்கள்தான் என் விருப்பம்......

எனக்கு ஒரு கேட்ட பழக்கம் ஒரு பாட்டு ஒருதடவை கேட்டு பிடித்து விட்டது என்றால் அன்று முழுவதும் அந்த பாடல் தான்.....

மதுரை சரவணன் said...

padaludan ungkal isai rasanaiyaiyum serththu rasiththen... vaalththukkal

தனிமரம் said...

நன்றி ஆகுலன் உங்கள் வருகைக்கும் பின் தொடர்தலுக்கும் !மன்னிப்பு எதற்கு நண்பர்கள் இடையே!
சிலபாடல்களை பல சமயங்களில் கேட்கும் போது புதுப்புது உணர்வுகள் கிடைக்கும் கொஞ்சம் ரசனையை மாற்றிப்பாருங்கள் புரிந்து கொள்வீர்கள்!

தனிமரம் said...

நன்றி மதுரை சரவணன் அண்ணா உங்களின் வாழ்த்துக்கு !

vidivelli said...

நண்பர்கள் இசையைப் பற்றி பேசவெளிக்கிட்டால் அரசியல் பிரச்சாரத்தைவிட அதிகம் பேசுவேன் .அவர்களுடன்.

இப்போது பல நன்பர்கள் குடும்பம் குடித்தனம் என்று போய்விட்டாலும் !என் இசைக்காதல் மாறாமல் போகின்ற யாழ்தேவி போன்றது! அங்கங்கே தரித்தாலும் கோட்டையில் முடிகின்ற பயணம் போல் !

உங்கள் பதிவைப்பார்க்கவே புரியுது சகோ..
இசைப்பிரியனென்று...
நல்ல பதிவு..
நல்ல பாடல்..
பதிவிற்கு வாழ்த்துக்கள்..

தனிமரம் said...

நன்றி விடிவெள்ளி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

அம்பாளடியாள் said...

முழுசா வாசிக்க முடியவில்லை பகிர்வுக்கு நன்றி
பின்னர் வாசித்து கருத்திடுகின்றேன் வாழ்த்துக்கள் சகோ.....

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு இனி தொடர்ந்து வருவேன்.

தனிமரம் said...

நன்றி அம்பாளடியாள் உங்கள் வருகைக்கு!

தனிமரம் said...

நன்றி வேடங்தாங்கல் கருன் உங்கள் வருகைக்கும் இனைவுக்கும்!

செங்கோவி said...

நல்ல பகிர்வு சகோ. இதே படத்தில் வரும் ‘கவிதைகள் சொல்லவா’ இன்னும் டாப்!

செங்கோவி said...

//Nesan சொன்னது…
நன்றி நிரூ மீண்டும் ஒரு பிழையை திருத்திவிட்டீர்கள்! கொலை அதிகம் செய்கின்றேன்! புரிகின்றது அர்த்தம்!//

இன்னும் அப்படியே இருக்கு..என்னன்னு பாருங்க பாஸ்.

தனிமரம் said...

நன்றி செங்கோவி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்  இப்போது சீரமைத்துவிட்டேன்! தொழில்நுட்பங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை . தனிமரம் அடிக்கடி நண்பர்களை துணைக்கு அழைக்கிறது.

நிரூபன் said...

ஒரு காலத்தில் நானும் இப் பாடலுக்கு ரசிகனாக இருந்தேன் பாஸ்,
பதிவில் திருத்தம் தெரிகிறது.
விமர்சனம், நீங்கள் வர்ணிக்கும் விதம்,
பாடலை உங்களின் வாழ்க்கையோட்டத்தோடு ஒப்பிட்டு விளக்கம் கூறுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, வரவேற்கிறேன் பாஸ்.
தொடர்ந்தும் வித்தியாசமான பதிவுகளால் எம்மையெல்லாம் மகிழ்வியுங்கள்.

தனிமரம் said...

 நன்றி நிரூபன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்! எனக்கு எப்போதும் பிடிக்கும் பாடல் இது!மலர்மாலையாக மாறிடவே நினைத்தேன் மலர்வலயமாய் நான் மாறினேன் வரிகள் மிகவும் ரசித்துக் கேட்கும் வரிகள்!

கவி அழகன் said...

அழகாக அனுபவித்து எழுதியுள்ளீர்கள்