07 February 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..--1


தொடரின் நாயகிக்கு இன்று
தொடங்கும் இன்னொரு ஆயுசு!


தொலைவில் இருந்து
தொலைந்த நட்புக்காக
தொடுக்கின்றேன் வாழ்த்து மாலை
தொல்லைகள் நீங்கி நீடூழி வாழ்க.


                                                 ( நட்புக்காக தனிமரம் நேசன்.)


/////////////////////// இனி......
ஐரோப்பாவில் இருக்கும் சமத்துவ நாடாம் பாரிசில் 


!2012 இன் டிசம்பர் மாதத்தின் அந்திம  நாட்களில் பனிக்காலம். முகம்கள் எல்லாம் பனிக்குளிரில் இருந்து பாதுகாக்க பாதைசாரிகள் எல்லாம் நிலம் பார்த்து நடக்கும் பின் இரவில் பாரிசின் புறநகர் வீதியில் நேரம் பார்த்து பார்த்து நடக்கின்றான் குருவின் சிஸ்சியன் என்று சிலர் சொன்னாலும் உண்மையில் இந்த உலக வாழ்வில் ஒரு வழிப்போக்கன் என்று சிந்திக்கும் பரதன்.

.

பரதன் நினைப்பு எல்லாம் ஆன்மீகத்தில் அலையாக அடுத்த வாரம் புத்தாண்டில் இந்தியாவில் எப்படியும் அந்தக்குழந்தை போல முகம் பார்த்து மனம் விட்டு மகிழவேண்டும் என்ற ஜோசனை உள்ளவன்.



எந்தக்கட்சியுடன் கூட்டணி என்ற கவலையில்லை .எந்த தடங்களும் வரக்கூடாது விரத விதிமுறையில் .எப்போதும் எல்லாருக்கும் நல்லது செய்யப் போய் நடுவில் கெட்டவன் பேர் எடுப்பதை நண்பன் மட்டுமே அறிவான் .

அந்த நண்பன் ஈசனுக்கு நாளை பிறந்தநாள் .அவன் இலங்கையில் ஆனாலும் எப்போதும் முதல் வாழ்த்து என்னுடையதாகத்தான் இருக்கும் என்று எப்போதும் சொல்லும் ஈசனுக்கு என் நட்பில் எப்போதும் உயர்ந்த உள்ளம் கமல் போல எங்கே என் ஜீவனே என்று யாரைத்தேடிப்பிடிப்பானோ?? 

என்னையும் நட்பில் இருந்து விட்டுச் செல்வானோ?? என்ற கூட்டணி அரசியல் ஏதும் இல்லை நம்மிடம்..  இனம் அழியுது என்று கண்காணாமல் உண்ணாவிரதம் இருந்து சாட்சிக்கு புகைப்படம் எடுத்துவிட்டு.



 இலங்கை வேந்தனிடம் பால்ச்சோறு உண்டு மகிழும் வேடதாரிகள்  போலவோ ஆட்சிக்காக அன்னக்காவடிக்ளுக்கு தூது போகும் நிலைபோல் இல்லை நாம்!

 எனக்கும் ஈசனுக்கும் எப்போது நட்பு மலர்ந்தது நினைத்தாலே இனிக்கும் கல்லூரிக்காலத்திலா? இல்லை நெஞ்சம் எல்லாம் ஊடக ஆசையில் இதயராகம் மீட்டும் இந்த பின்னிரவில் இதயங்களுடன் வானலையில் வார்த்தை ஒலிகளின் யாசன் இவன் பரதன் என்று அறிவிப்புக்கனவில் அடுத்த கட்டம் வேலைதேடிச் சென்றதில் வேறுபாதையில் போனாலும் வீட்டுக்கு இன்னொருவன் போல இருந்த காலத்திலா?

 ஐய்யனே இப்படித்தான் நான் எதையோ சொல்ல வந்துவிட்டு எங்கேயோ சிந்திப்பது இது எனக்கு மட்டும் தானா இல்லை என் போன்றவர்களுக்குமா??

ஈசனுக்கு முதலில் அழைப்பு எடுக்க வேண்டும் இன்னும் இரண்டு நிமிடத்தில் இலங்கையில் நள்ளிரவு இப்ப முயன்றால்த்தான் கைபேசி அழைப்பில் பிடிக்கலாம் ஈசனை .

லைக்கா கைபேசியில் இருந்து  இணைப்பு எடுத்துத்தான் பரதன் இலங்கைக்கு.

 ஒரு நிமிடதில் உலகின் மூலை எல்லாம் உங்கள் குரலில் கேட்கும் இந்த அலைபேசிப் பரிவர்த்தணை லைக்கா மொபல்க்கம்பனியின் வண்டவாலங்கள் லண்டன் பாராள மன்றத்தில் எப்போது தண்டவாலம் ஏறுமோ அதுக்குள் நாம் இலகு கட்டணத்தில் இன்பம் காணுவோம் .

இப்ப எல்லாம் காசு மிச்சம் பிடிக்க படும்பாடு  அங்கு இருப்போர் எப்படி அறிவார்கள் வெளிநாடு போன்பின் வேண்டாத உறவாகிப்போச்சோ என்றுதானே! 


அலைபேசியில் ரிங்டோனில் ஒலித்தது. எடுடா விரைவாக நான் இன்று நேரத்துக்கு கோயிலுக்கு நுழைய வேண்டும்.


இன்னும் தவிக்கின்றேன்........ 

06 February 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-அறிமுகம்.

                                           
                                         
மீண்டும் உங்களுடன் இணையத்தில் கதை பேசும் ஆசையில் என் அன்பு நண்பன் முகநூலிலும் ,ஸ்கைப்பிலும் இந்தக்கதைக்கு நீயே இன்னும் சுருதி சேர் பரிஸ்சில் இருந்து தொடங்கு என்று என்மீது ஏதோ ஒரு நம்பிக்கையில் மனசைத் தொட்ட விடயத்தை மறைக்காமல் சொல்லியதை  மழைக்கும் பள்ளி செல்லாத மாங்காய் மடையன் வலையில் வாசகர்களுக்கும் அன்பின் வலைப்பதிவாளர்களுக்கும் மலையகத்தின் இன்னொரு கதையை மடைதிறக்கின்றேன் மாவிலாறு நீரணைபோல ))) அடுத்த பகிர்வாக.


"வாழ்வில் நாம் சந்திக்கும் முதல் மனிதனும் கடைசி மனிதரும் வாழ்க்கைகயில் ஆசானாக இருப்பார்கள் என்று கூறும் " சோபாசக்திபோல இந்த மலையகத்திலும் மலைபோல உயர்ந்த மனம் படைத்த பலர் இருக்கின்றார்கள் .

இணைய வளர்ச்சி போதாமை இன்னும் முன்னேற்றத்திட்டம் இல்லாமல் ,பல இளைய படைப்பாளிகள் இங்கும் இருக்கின்றார்கள் தெளித்தை ஜோசப்போல  இன்னும் பிரபல்யமாக வேண்டும் என்ற ஆசையில் .


இணைத்தள முகம் தெரியாமல் வசதி வாய்ப்பு இல்லாமல்  முத்தான கதைச்சொல்லிகள் காலாற நடக்கும் பூமி இந்த மண் .


இந்த வீதி பதுளையின் முகவரி  சொல்லும் பலருக்கு ஆனால் சிலருக்கு இங்கு ஏன் பிறந்தோம், வளர்ந்தோம், இடம்பெயர்ந்து வந்தோம் என்று மனதில் சஞ்சலம் ஊட்டும் .அப்படி சந்தோஸத்தையும் ,சஞ்சலத்தையும் சந்தித்த புள்ளியில் இருந்து வலையுறவுகளை சந்திக்க வருகின்றது . .


சத்தியமாக இதில் வரும் சம்பவங்களுக்கு சற்று கற்பனை கலந்து பாலில் கலந்த நீர் போல :)))!

நிஜத்தில் இந்த ஊரில் மும்மொழியும் முத்தமிடும் .கொஞ்சம் மந்தார மாலையில் மரங்களின் பின்னே மாந்தோப்பு போல நகருக்கு வெளியில்  இருக்கும் வெவ்வாள் பாக்கில்(வீல்ஸ்ப்பார்க்) .

மலையகத்தமிழிலும் ,சிங்களமொழியும் சிறுபான்மை ,பெரும்பான்மை பேதம் பார்ப்பது இல்லை பார்ப்பது அன்பின் ஆழத்தை அதிகம் .கொஞ்சம் அத்துமீறல் அது கருக்கலைப்பு என்று அதையும் மறைக்காமல் எழுத்தாணி பிடிக்கின்றேன் ..

இதில் வரும் சகோதரமொழி உரையாடல்கள்  கதை இயல்பை பாதிக்காது என்பது என் நிலை. தனிமரம் கல்லாதவன் இந்த சகோதர மொழியினை .

இந்த தொடருக்குள்ளும் எனக்குப்பிடித்த பாடல்கள் பல மொழியில் பார்த்ததும், கேட்டதும் .பதிவினூடே பகிர்ந்த வண்ணம் .  .


அப்பாவி என்னை அன்பில் இன்னும் வாழவைப்பீர்கள் .வலையில் வலம் வர என்ற நம்பிக்கையோடு இதுவரை  6  தொடர் பேசி இது 7வது   பயணத்தில்  நல்லதையும் ,கெட்டதையும் , தனிமரம் எல்லாம் எழுத என்னை ஊக்கிவிக்கும் என் நண்பணுக்கு உங்கள் அன்புச்சொல்லடிகள் ,கல்லடிகள் .சாணி பூசுதல், கழுவேற்றல் எல்லாம் காணிக்கையாக்கி கடன் தீர்க்கின்றேன்))))))) .


கண்டிப்பாக யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை காலப்பரப்பில் கேட்டதை பதிந்து என்னை வளப்படுத்துகின்றேன் .இன்னும் எழுதும் ஆசையில் முகநூலில் உள்ளடப்பில் வந்து யார் கதை மச்சான் என்று வம்பிலுத்தா வாங்கிவைத்து இருக்கும் சுறா சீடி சொந்தமுகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்:தைப்பொங்கல் வேட்டி ,சேலை போல!

எல்லாத்தொடரிலும் சொல்வது தான் இந்தக்கதைக்கும் தனிமரத்துக்கும் அதன் பின்னே பதிவெழுதும் (ஏதோ மொக்கை )நேசனுக்கும் தொடர்பு இல்லை.இல்லை இல்லைங்க .நேற்று ஓசியில் பார்த்த ஜில்லா மீது சத்தியம்.