06 February 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-அறிமுகம்.

                                           
                                         
மீண்டும் உங்களுடன் இணையத்தில் கதை பேசும் ஆசையில் என் அன்பு நண்பன் முகநூலிலும் ,ஸ்கைப்பிலும் இந்தக்கதைக்கு நீயே இன்னும் சுருதி சேர் பரிஸ்சில் இருந்து தொடங்கு என்று என்மீது ஏதோ ஒரு நம்பிக்கையில் மனசைத் தொட்ட விடயத்தை மறைக்காமல் சொல்லியதை  மழைக்கும் பள்ளி செல்லாத மாங்காய் மடையன் வலையில் வாசகர்களுக்கும் அன்பின் வலைப்பதிவாளர்களுக்கும் மலையகத்தின் இன்னொரு கதையை மடைதிறக்கின்றேன் மாவிலாறு நீரணைபோல ))) அடுத்த பகிர்வாக.


"வாழ்வில் நாம் சந்திக்கும் முதல் மனிதனும் கடைசி மனிதரும் வாழ்க்கைகயில் ஆசானாக இருப்பார்கள் என்று கூறும் " சோபாசக்திபோல இந்த மலையகத்திலும் மலைபோல உயர்ந்த மனம் படைத்த பலர் இருக்கின்றார்கள் .

இணைய வளர்ச்சி போதாமை இன்னும் முன்னேற்றத்திட்டம் இல்லாமல் ,பல இளைய படைப்பாளிகள் இங்கும் இருக்கின்றார்கள் தெளித்தை ஜோசப்போல  இன்னும் பிரபல்யமாக வேண்டும் என்ற ஆசையில் .


இணைத்தள முகம் தெரியாமல் வசதி வாய்ப்பு இல்லாமல்  முத்தான கதைச்சொல்லிகள் காலாற நடக்கும் பூமி இந்த மண் .


இந்த வீதி பதுளையின் முகவரி  சொல்லும் பலருக்கு ஆனால் சிலருக்கு இங்கு ஏன் பிறந்தோம், வளர்ந்தோம், இடம்பெயர்ந்து வந்தோம் என்று மனதில் சஞ்சலம் ஊட்டும் .அப்படி சந்தோஸத்தையும் ,சஞ்சலத்தையும் சந்தித்த புள்ளியில் இருந்து வலையுறவுகளை சந்திக்க வருகின்றது . .


சத்தியமாக இதில் வரும் சம்பவங்களுக்கு சற்று கற்பனை கலந்து பாலில் கலந்த நீர் போல :)))!

நிஜத்தில் இந்த ஊரில் மும்மொழியும் முத்தமிடும் .கொஞ்சம் மந்தார மாலையில் மரங்களின் பின்னே மாந்தோப்பு போல நகருக்கு வெளியில்  இருக்கும் வெவ்வாள் பாக்கில்(வீல்ஸ்ப்பார்க்) .

மலையகத்தமிழிலும் ,சிங்களமொழியும் சிறுபான்மை ,பெரும்பான்மை பேதம் பார்ப்பது இல்லை பார்ப்பது அன்பின் ஆழத்தை அதிகம் .கொஞ்சம் அத்துமீறல் அது கருக்கலைப்பு என்று அதையும் மறைக்காமல் எழுத்தாணி பிடிக்கின்றேன் ..

இதில் வரும் சகோதரமொழி உரையாடல்கள்  கதை இயல்பை பாதிக்காது என்பது என் நிலை. தனிமரம் கல்லாதவன் இந்த சகோதர மொழியினை .

இந்த தொடருக்குள்ளும் எனக்குப்பிடித்த பாடல்கள் பல மொழியில் பார்த்ததும், கேட்டதும் .பதிவினூடே பகிர்ந்த வண்ணம் .  .


அப்பாவி என்னை அன்பில் இன்னும் வாழவைப்பீர்கள் .வலையில் வலம் வர என்ற நம்பிக்கையோடு இதுவரை  6  தொடர் பேசி இது 7வது   பயணத்தில்  நல்லதையும் ,கெட்டதையும் , தனிமரம் எல்லாம் எழுத என்னை ஊக்கிவிக்கும் என் நண்பணுக்கு உங்கள் அன்புச்சொல்லடிகள் ,கல்லடிகள் .சாணி பூசுதல், கழுவேற்றல் எல்லாம் காணிக்கையாக்கி கடன் தீர்க்கின்றேன்))))))) .


கண்டிப்பாக யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை காலப்பரப்பில் கேட்டதை பதிந்து என்னை வளப்படுத்துகின்றேன் .இன்னும் எழுதும் ஆசையில் முகநூலில் உள்ளடப்பில் வந்து யார் கதை மச்சான் என்று வம்பிலுத்தா வாங்கிவைத்து இருக்கும் சுறா சீடி சொந்தமுகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்:தைப்பொங்கல் வேட்டி ,சேலை போல!

எல்லாத்தொடரிலும் சொல்வது தான் இந்தக்கதைக்கும் தனிமரத்துக்கும் அதன் பின்னே பதிவெழுதும் (ஏதோ மொக்கை )நேசனுக்கும் தொடர்பு இல்லை.இல்லை இல்லைங்க .நேற்று ஓசியில் பார்த்த ஜில்லா மீது சத்தியம்.


12 comments :

Unknown said...

நம்பிட்டோம்!அதான்.........உங்களுக்கு இந்தத் தொடரில் சம்பந்தமே இல்லை,என்பதை!///'சுறா' சி.டீ.வாங்கி வச்சிருக்கிறீங்களா?ஐயோ பாவம்!///'ஜில்லா' ஓசியில கூட பாக்க முடியாதே?ஐயோ பாவம்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

கருத்தாடல் சிறப்பாக உள்ளது.. வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

இப்போதே ஆவல் அதிகரித்து விட்டது... தொடர வாழ்த்துக்கள்...

ஆத்மா said...

வாழ்த்துக்கள் அண்ணா
தொடருங்கள்

அம்பாளடியாள் said...

vaalthukkal sakotharaa thodarungal kathaiyum mikach chirappaaka vizhangaddum .

Unknown said...

நொடங்கு முன்னே இவ்வளவு பீடிகை தேவையா! தொடருங்கள்! தொடர்வோம்!

தனிமரம் said...

நம்பிட்டோம்!அதான்.........உங்களுக்கு இந்தத் தொடரில் சம்பந்தமே இல்லை,என்பதை!///'சுறா' சி.டீ.வாங்கி வச்சிருக்கிறீங்களா?ஐயோ பாவம்!///'ஜில்லா' ஓசியில கூட பாக்க முடியாதே?ஐயோ பாவம்!//வாங்க யோகா ஐயா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.சீடி வாங்கிய பாவி நான்!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம்

கருத்தாடல் சிறப்பாக உள்ளது.. வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இப்போதே ஆவல் அதிகரித்து விட்டது... தொடர வாழ்த்துக்கள்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

வாழ்த்துக்கள் அண்ணா
தொடருங்கள்//நன்றி ஆத்மா வருகைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

vaalthukkal sakotharaa thodarungal kathaiyum mikach chirappaaka vizhangaddum .//நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

நொடங்கு முன்னே இவ்வளவு பீடிகை தேவையா! தொடருங்கள்! தொடர்வோம்!//நன்றி புலவர் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.