07 February 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..--1


தொடரின் நாயகிக்கு இன்று
தொடங்கும் இன்னொரு ஆயுசு!


தொலைவில் இருந்து
தொலைந்த நட்புக்காக
தொடுக்கின்றேன் வாழ்த்து மாலை
தொல்லைகள் நீங்கி நீடூழி வாழ்க.


                                                 ( நட்புக்காக தனிமரம் நேசன்.)


/////////////////////// இனி......
ஐரோப்பாவில் இருக்கும் சமத்துவ நாடாம் பாரிசில் 


!2012 இன் டிசம்பர் மாதத்தின் அந்திம  நாட்களில் பனிக்காலம். முகம்கள் எல்லாம் பனிக்குளிரில் இருந்து பாதுகாக்க பாதைசாரிகள் எல்லாம் நிலம் பார்த்து நடக்கும் பின் இரவில் பாரிசின் புறநகர் வீதியில் நேரம் பார்த்து பார்த்து நடக்கின்றான் குருவின் சிஸ்சியன் என்று சிலர் சொன்னாலும் உண்மையில் இந்த உலக வாழ்வில் ஒரு வழிப்போக்கன் என்று சிந்திக்கும் பரதன்.

.

பரதன் நினைப்பு எல்லாம் ஆன்மீகத்தில் அலையாக அடுத்த வாரம் புத்தாண்டில் இந்தியாவில் எப்படியும் அந்தக்குழந்தை போல முகம் பார்த்து மனம் விட்டு மகிழவேண்டும் என்ற ஜோசனை உள்ளவன்.



எந்தக்கட்சியுடன் கூட்டணி என்ற கவலையில்லை .எந்த தடங்களும் வரக்கூடாது விரத விதிமுறையில் .எப்போதும் எல்லாருக்கும் நல்லது செய்யப் போய் நடுவில் கெட்டவன் பேர் எடுப்பதை நண்பன் மட்டுமே அறிவான் .

அந்த நண்பன் ஈசனுக்கு நாளை பிறந்தநாள் .அவன் இலங்கையில் ஆனாலும் எப்போதும் முதல் வாழ்த்து என்னுடையதாகத்தான் இருக்கும் என்று எப்போதும் சொல்லும் ஈசனுக்கு என் நட்பில் எப்போதும் உயர்ந்த உள்ளம் கமல் போல எங்கே என் ஜீவனே என்று யாரைத்தேடிப்பிடிப்பானோ?? 

என்னையும் நட்பில் இருந்து விட்டுச் செல்வானோ?? என்ற கூட்டணி அரசியல் ஏதும் இல்லை நம்மிடம்..  இனம் அழியுது என்று கண்காணாமல் உண்ணாவிரதம் இருந்து சாட்சிக்கு புகைப்படம் எடுத்துவிட்டு.



 இலங்கை வேந்தனிடம் பால்ச்சோறு உண்டு மகிழும் வேடதாரிகள்  போலவோ ஆட்சிக்காக அன்னக்காவடிக்ளுக்கு தூது போகும் நிலைபோல் இல்லை நாம்!

 எனக்கும் ஈசனுக்கும் எப்போது நட்பு மலர்ந்தது நினைத்தாலே இனிக்கும் கல்லூரிக்காலத்திலா? இல்லை நெஞ்சம் எல்லாம் ஊடக ஆசையில் இதயராகம் மீட்டும் இந்த பின்னிரவில் இதயங்களுடன் வானலையில் வார்த்தை ஒலிகளின் யாசன் இவன் பரதன் என்று அறிவிப்புக்கனவில் அடுத்த கட்டம் வேலைதேடிச் சென்றதில் வேறுபாதையில் போனாலும் வீட்டுக்கு இன்னொருவன் போல இருந்த காலத்திலா?

 ஐய்யனே இப்படித்தான் நான் எதையோ சொல்ல வந்துவிட்டு எங்கேயோ சிந்திப்பது இது எனக்கு மட்டும் தானா இல்லை என் போன்றவர்களுக்குமா??

ஈசனுக்கு முதலில் அழைப்பு எடுக்க வேண்டும் இன்னும் இரண்டு நிமிடத்தில் இலங்கையில் நள்ளிரவு இப்ப முயன்றால்த்தான் கைபேசி அழைப்பில் பிடிக்கலாம் ஈசனை .

லைக்கா கைபேசியில் இருந்து  இணைப்பு எடுத்துத்தான் பரதன் இலங்கைக்கு.

 ஒரு நிமிடதில் உலகின் மூலை எல்லாம் உங்கள் குரலில் கேட்கும் இந்த அலைபேசிப் பரிவர்த்தணை லைக்கா மொபல்க்கம்பனியின் வண்டவாலங்கள் லண்டன் பாராள மன்றத்தில் எப்போது தண்டவாலம் ஏறுமோ அதுக்குள் நாம் இலகு கட்டணத்தில் இன்பம் காணுவோம் .

இப்ப எல்லாம் காசு மிச்சம் பிடிக்க படும்பாடு  அங்கு இருப்போர் எப்படி அறிவார்கள் வெளிநாடு போன்பின் வேண்டாத உறவாகிப்போச்சோ என்றுதானே! 


அலைபேசியில் ரிங்டோனில் ஒலித்தது. எடுடா விரைவாக நான் இன்று நேரத்துக்கு கோயிலுக்கு நுழைய வேண்டும்.


இன்னும் தவிக்கின்றேன்........ 

15 comments :

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்...
இதோ படிச்சிட்டு வாரேன்..

மகேந்திரன் said...

எல்லோருக்கும் நல்லவனாய் இருப்பது மிகவும் கடினம்..
அப்படி நல்லது செய்ய எத்தனிக்கையில் சில சிரமங்களும்
எதிரிகளும் உருவாவது இயல்பே...
அடிவருடி காலம் கழிப்பதைவிட ....
நம் கொள்கையில் உறுதியாக இருப்பது சாலச் சிறந்தது ..
என்று சொல்லிவரும் முதல் அத்தியாயம் மிக அருமை ..

மகேந்திரன் said...

பரதன்.. ஈசன்..
நல்ல அறிமுகம்...

Anonymous said...

வணக்கம்

தித்திக்கும் கவி வரிகளும் பரதன் ஈசன் என்ற பாத்திரத்தின் வழி எடுத்துச்சொல்லிய விதம் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

MANO நாஞ்சில் மனோ said...

அங்கு இருப்போர் எப்படி அறிவார்கள் வெளிநாடு போன்பின் வேண்டாத உறவாகிப்போச்சோ என்றுதானே! //

ஊருக்கு போகும் வலையில் அநேகர் இதேபோல கேட்பதுண்டு, ஹி ஹி என்று வெளிந்து சமாளிப்பது உண்டு.

நண்பனுக்கு வாழ்த்துக்கள்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//இப்ப எல்லாம் காசு மிச்சம் பிடிக்க படும்பாடு அங்கு இருப்போர் எப்படி அறிவார்கள் வெளிநாடு போன்பின் வேண்டாத உறவாகிப்போச்சோ என்றுதானே! //
உண்மைதான். உங்கள் உள்ளம் புரிகிறது

திண்டுக்கல் தனபாலன் said...

(தவிப்புடன்) சுவாரஸ்யமான ஆரம்பம்... தொடர்கிறேன்...

Unknown said...

நலமா,நேசரே?///ஆரம்பம் அமர்க்களம்!தற்காலிக வாழும் நாட்டுக்கும் பிறந்த நாட்டுக்கும் முடிச்சுப் போட்டு.........................நன்று!தொடரட்டும்,தொடர்வோம்!

தனிமரம் said...

எல்லோருக்கும் நல்லவனாய் இருப்பது மிகவும் கடினம்..
அப்படி நல்லது செய்ய எத்தனிக்கையில் சில சிரமங்களும்
எதிரிகளும் உருவாவது இயல்பே...
அடிவருடி காலம் கழிப்பதைவிட ....
நம் கொள்கையில் உறுதியாக இருப்பது சாலச் சிறந்தது ..
என்று சொல்லிவரும் முதல் அத்தியாயம் மிக அருமை ..//வணக்கம் மகி அண்ணா முதல் வருகைக்கு ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.

தனிமரம் said...

பரதன்.. ஈசன்..
நல்ல அறிமுகம்...//நன்றி ம்கி அண்ணா வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

வணக்கம்

தித்திக்கும் கவி வரிகளும் பரதன் ஈசன் என்ற பாத்திரத்தின் வழி எடுத்துச்சொல்லிய விதம் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

அங்கு இருப்போர் எப்படி அறிவார்கள் வெளிநாடு போன்பின் வேண்டாத உறவாகிப்போச்சோ என்றுதானே! //

ஊருக்கு போகும் வலையில் அநேகர் இதேபோல கேட்பதுண்டு, ஹி ஹி என்று வெளிந்து சமாளிப்பது உண்டு.//ம்ம் பலரின் நிலை இதுதான் அண்ணாச்சி.

நண்பனுக்கு வாழ்த்துக்கள்./நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் மனோ அண்ணாச்சி..

தனிமரம் said...

இப்ப எல்லாம் காசு மிச்சம் பிடிக்க படும்பாடு அங்கு இருப்போர் எப்படி அறிவார்கள் வெளிநாடு போன்பின் வேண்டாத உறவாகிப்போச்சோ என்றுதானே! //
உண்மைதான். உங்கள் உள்ளம் புரிகிறது//நன்றி முரளிதரன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

(தவிப்புடன்) சுவாரஸ்யமான ஆரம்பம்... தொடர்கிறேன்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நலமா,நேசரே?///ஆரம்பம் அமர்க்களம்!தற்காலிக வாழும் நாட்டுக்கும் பிறந்த நாட்டுக்கும் முடிச்சுப் போட்டு.........................நன்று!தொடரட்டும்,தொடர்வோம்!//நலம் யோகா ஐயா நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும்.